என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    • பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் குளம் ஆக்கிரமிப்புகள் பிடியில் சிக்கியுள்ளது.
    • கலெக்டர் மகாபாரதி உத்தரவின்படி அரியாபிள்ளை குளம் தூர்வாரும்பணி போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.

    சீர்காழி:

    சீர்காழி, சிதம்பரம் நெடுஞ்சாலையில் அரியாபிள்ளைகுளம் அமைதுள்ளது.

    பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் ஆக்கிரமிப்புகள் பிடியில் சிக்கியுள்ள இந்த குளத்தை நகராட்சி நிர்வாகம் அழகுப்படுத்தி தூர்வாரி, நடைபாதை அமைத்திட அரசு மூலம் ரூ.1.11கோடி நிதி ஒதுக்கீடு பெற்று பணிகள் தொடங்கி நடைபெறுகிறது.

    ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பால் பணி தடைப்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவின்படி மீண்டும் அரியாபிள்ளை குளம் தூர்வாரும்பணி போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்று வந்ததது.

    இந்நிலையில் குளம் தூர்வாரும் பணியினை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    பணிகள் தடையின்றி மேற்கொள்ளவும், விரைந்து குளத்தினை அழகுப்படுத்தி நடைபாதை அமைக்கும் பணிகளை துரிதப்படுத்தினார்.

    ஆய்வின்பது நகராட்சி ஆணையர் வாசுதேவன், நகர்மன்ற தலைவர் துர்காராஜசேகரன், பொறியாளர் சித்ரா ஆகியோர் உடனிருந்தனர்.

    முன்னதாக சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை இணை ஆணையர் ஸ்ரீலேகா, மஞ்சுளா, ஒன்றிய ஆணையர் இளங்கோவன், ஒன்றிய பொறியாளர்கள் கலையரசன், தெய்வானை, ஆகியோருடன் கலந்துரையாடி ஆலோசனை நடத்தினார்.

    • எடமணல் அரசு உயர்நிலைப்பள்ளியில் விளையாட்டு போட்டிகள் நடந்தது.
    • மாணவர்கள் தடகளம், நீளம் தாண்டுதல் உட்பட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள எடமணல் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளியின் சார்பாக 6 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.

    பள்ளி தலைமை ஆசிரியர் முருகன் நிகழ்விற்கு தலைமை வகித்தார்.

    உதவி தலைமை ஆசிரியர் கீதா வரவேற்புரையாற்றினார். ஊராட்சி மன்ற தலைவர் எஸ். பரிமளா செல்வராஜ் மாணவர்களுக்கான விளை யாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்து சிறப்பித்தார்.

    பள்ளி மாணவ மாணவியர் தடகளம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல் உட்பட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டனர்.

    வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர், பள்ளி மேலாண்மை குழு தலைவர் கலைவாணி, பள்ளி மேலாண்மை குழு துணை தலைவர் சவீதா, பத்திரிக்கையாளர் என்.பிரசன்ன வெங்கடேசன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமு மற்றும் பள்ளி மேலாண்மைகுழு உறுப்பி னர்கள் ஆகியோர் பரிசுகள் வழங்கி மாணவர்களை பாராட்டினர்.

    விழா ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    போட்டியின் நடுவர்களாக உடற்கல்வி ஆசிரியர்கள் ரமேஷ், ராஜ துரை, சக்தி, ராம் சதீஷ்குமார், நேதாஜி, விவேகானந்தன் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு போட்டிகளை நடத்தினர் போட்டி ஏற்பாடுகளை பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர், செல்வராஜன் மற்றும் விஜய மீனாட்சி ஆகியோர் செய்திருந்தனர்.

    • திருவெண்காட்டில் ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வர சுவாமி கோயில் அமைந்துள்ளது.
    • விழாவின் 12 ஆம் நாள் முக்கிய நிகழ்வான தெப்போற்சவம் நடைபெற்றது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருவெண்காட்டில் ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வர சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் காசிக்கு இணையான ஆறுகோயில்களில் முதன்மையான கோயிலாகும்.

    இந்த கோயிலில் சிவனின் முக்கண்ணிலிருந்து முன்று பொறிகள் விழுந்து முக்குளங்களாக மாறியதாக புராண வரலாறுகள் கூறுகின்றன.

    இத்தலத்தில் கல்வி மற்றும் தொழில் வளர்ச்சிக்கான முதற்கடவுளாக விளங்கும் புதன் பகவான் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்து வருகிறார்.

    சிவனின் ஜந்து முகங்களில் ஒன்றான அகோரமுகம் இங்கு அகோர முர்த்தியாக தனிசன்னதி கொண்டு விளங்குகிறார். சுவேதாரண்யேஸ்வர ஸ்தலத்தில் எமனை சுவேதாரண்யேஸ்வரர் எவ்வாறு சம்காரம் செய்தாரோ அவ்வாறு எதிரிகளை இராமன் சம்காரம் செய்தான் என வால்மீகி இராமயணத்தில் இத்திருக்கோயிலின் தொன்மையை விளக்கியுள்ளார்.

    இந்த கோயிலின் ஆண்டு இந்திரப்பெருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 4-ம் தேதி தொடங்கியது.

    விழாவின் 12 ஆம் நாள் முக்கிய நிகழ்வான தெப்போற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. தெப்போற்சவத்தை முன்னிட்டு கோயிலில் இருந்து சுவாமி அம்பாள் புறப்பட்டு தெப்பத்தில் எழுந்தருளினர்.

    இதனை அடுத்து சுவாமி அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து தெப்பம் புறப்பட்டு திருக்குளத்தை 5 முறை வலம் வந்தது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி அம்பாளை தரிசனம் செய்தனர். தெப்போற்சவத்தை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

    • மயிலாடுதுறை மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.
    • வட மாநில தொழிலாளர்களை அமர வைத்து ஒருமைப்பாட்டை மேம்படுத்து வகையில் திமுக சார்பில் சமபந்தி உணவு பரிமாறினர்.

    தரங்கம்பாடி:

    தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் துன்புறுத்தப்படுவதாக எழுந்த புரளியைத் தொடர்ந்து, அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    பல்வேறு மாவட்டங்களில் வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளனர்.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் குடும்ப குடும்பமாக வசித்து வருகின்றனர்.

    அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் திமுக சார்பில் வட மாநில தொழிலாளர்களுக்கு ஒருமைப்பாட்டு சமபந்தி நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் வட மாநில தொழிலாளர்களுக்கு மாலை போட்டு சால்வை அணிவித்து கௌரவித்தார்.

    தொடர்ந்து வட மாநில தொழிலாளர்களை அமர வைத்து ஒருமைப்பாட்டு சமபந்தி விருந்தாக ஒருமைப்பாட்டை மேம்படுத்து வகையில் திமுக சார்பில் சமபந்தி உணவு பரிமாறினர்.

    இதில் மாவட்ட துணைச் செயலாளர் செல்வமணி, நகர செயலாளர் குண்டுமணி, திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • வனச்சரகம் சார்பாக ஆமைகள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • கடல் ஆமைகள் பாதுகாப்பு குறித்து மாணவ-மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே, கடலோர கூழையார் கிராமத்தில் சீர்காழி வனச்சரகம் சார்பாக ஆமைகள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    சீர்காழி வனச்சரகர் ஜோசப் டேனியல் தலைமையில் கூழையார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமில் வன உயிரின ஆராய்ச்சியாளர் டாக்டர் சிவகனேசன் கலந்து கொண்டு மடிக்கணினி மூலம் ஆமைகள் முட்டையிடும் காட்சிகள் மற்றும் கடல் ஆமைகள் பாதுகாப்பு குறித்து மாணவ-மாணவிகளுக்கு விளக்கம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    குறிப்பாக ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை அரிய வகை ஆமை இனமான ஆலிவர்ரெட்லி ஆமைகள் இக்கடற்கரை பகுதிக்கு முட்டைகள் இடுவதற்காக வரும் காலமாகும்.

    இந்நேரத்தில் கடற்கரையோரம் வரும் ஆமைகளை வன விலங்குகள் மற்றும் சமூக விரோதிகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும். ஆமை முட்டைகள் குறித்து வனத்துறை அலுவலர்களிடம் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    தொடந்து பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் கிராம மக்கள் சார்பில் அழிந்து வரும் ஆமையினமான ஆலிவர் ரெட்லியை பாதுகாக்க உறுதிமொழி ஏற்றனர்.

    தொடர்ந்து ஆமை பொரிப்பகங்கள் உள்ள இடத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும், கடற்கரையோரம் உள்ள தொழிற்சாலைகளிலிருந்து கழிவு நீர் கடலில் கலக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வனத்துறையிடம் கிராம மக்கள் முன் வைத்தனர்.

    முகாமில் விஏஓ பவளச்சந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர் அங்குதன் மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஊழியர்கள், கிராம மக்கள் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • 60 கனமீட்டர் மிகாமல் களிமண் இலவசமாக எடுத்து கொள்ள அனுமதி வழங்கப்படும்.
    • மேலும் விபரங்களுக்கு சம்பந்தப்பட்ட தாசில்தார் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மயிலாடுதுறை மாவட்ட த்தில் பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையின் கட்டுபாட்டில் உள்ள நீர்நிலைகளில் அமைந்துள்ள மண், வண்டல் மண் மற்றும் களிமண் போன்ற சிறு கனிமங்களை தூர்வாரி கட்டணமில்லாமல் பொது மக்களின் வேளாண்மை நோக்கம் மற்றும் மண்பாண்ட தொழில் பயன்பாட்டிற்கு மண் எடுக்க விண்ணப்பதாரர்கள் உரிய ஆவணங்களுடன் தொடர்புடைய வேளாண்மை அலுவலர்கள் சான்று/மண்பாண்ட தொழிலாளர்கள் சங்க சான்றுடன், கிராம நிர்வாக அலுவலர்களிடம் விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.

    விவசாய பயன்பாட்டிற்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை 1 ஏக்கர் பரப்பளவுள்ள நஞ்சை நிலத்திற்கு 75 கனமீட்டர் மற்றும் 1 ஏக்கர் பரப்பளவுள்ள புஞ்சை நிலத்திற்கு 90 கனமீட்டர் வண்டல் மண் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள், மண்பாண்டங்கள் செய்வதற்கு 60 கனமீட்டர் மிகாமல் களிமண் இலவசமாக எடுத்து கொள்ள உரிய நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்படும்.

    இதுகுறித்த மேலும் விபரங்களுக்கு சம்பந்தப்பட்ட தாசில்தார் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தேர்வு நிலை அரசாணையை நிறைவேற்ற வேண்டும்.
    • ஊதிய மாற்ற அரசாணை நிறைவேற்ற வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் நல்லமுத்து தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட செயலாளர் தியாகராஜன் மாவட்ட செயலாளர் ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொன்.ராஜேந்திரன் வரவேற்றார்.

    ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகம் ஒப்புக்கொண்ட ஊராட்சி செயலாளர் பணி விதிகள், சிறப்பு நிலை, தேர்வு நிலை அரசாணையை நிறைவேற்ற வேண்டும்,

    கணினி உதவியாளர் பணி வரன்முறை மற்றும் ஊதிய மாற்ற அரசாணை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட துணை தலைவர் நடராஜன், சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் கலா, மாவட்ட துணை தலைவர் லதா, சௌந்தரபாண்டியன் ஆகியோர் கண்டன உரையாற்றினார். முடிவில் மாநில பொருப்பாளர் மாரி.தெட்சிணாமூர்த்தி நன்றி கூறினார்.

    • பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
    • பட்டப்படிப்பு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.

    தரங்கம்பாடி:

    தரங்கம்பாடி தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழக அரசை கண்டித்து கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தியும் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு சரண்டரை மீண்டும் வழங்க வேண்டும் கூடுதல் பொறுப்பு ஊதியம் வழங்க வேண்டும் பட்டப்படிப்பு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.

    ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத் தலைவர் பண்ணீர்செல்வம் தலைமை தாங்கினார். செயலாளர் செல்வகுமார் முன்னிலை வகித்தனர்.துணை தலைவர் சிவசங்கர் வரவேற்றார்.

    இதைப் போல் மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவர் மாரிமுத்து தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் பங்கேற்றவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழக அரசை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    • அகில இந்திய அளவில் வில்வித்தை போட்டியில் பங்கேற்று முதலிடத்தை பெற்று பதக்கங்களை வென்றார்.
    • தமிழ்நாட்டிற்கு சிறுவயதிலேயே கைலாஷ் பெருமை சேர்த்துள்ளார்.

    சீர்காழி:

    தஞ்சாவூர் 39 வார்டு பகுதியை சேர்ந்த கர்ணன் மகன் கைலாஷ்.

    இவர் அகில இந்திய அளவில் வில்வித்தை போட்டியில் பங்கேற்று முதலிடத்தை பெற்று பதக்கங்களை வென்றார்.

    இந்த சாதனையின் மூலம் தமிழ்நாட்டிற்கு சிறுவயதிலேயே கைலாஷ் பெருமை சேர்த்துள்ளார்.

    இதனை அறிந்த சீர்காழி ஒன்றிய குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன், சிறுவனை நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

    மேலும் இந்திய அளவில் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த மாணவனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அழைத்துச் சென்று பாராட்டு பெற வைப்பதாக அப்போது தெரிவித்தார்.

    • 38 பொது தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
    • கண்காணிக்க 824 அறை கண்கணிப்பாளர்கள் மற்றும் 90 பறக்கும் படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் பிளஸ்2 தேர்வை 5134 மாணவர்களும், 6057 மாணவிகளும் என மொத்தம் 11191 பேரும் எழுதுகின்றனர். பிளஸ் 1 தேர்வை 4446 மாணவர்களும், 5565 மாணவிகளும் என 10011 பேரும் எழுதுகின்றனர்.

    மாவட்டத்தில் 36 பொது தேர்வு மையங்களும், 2 தனித்தேர்வர்களுக்கான மையங்களும் ஆக மொத்தம் 38 பொது தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுவதை கண்காணிக்க 824 அறைக்கண் கணிப்பாளர்கள் மற்றும் 90 பறக்கும் படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், மயிலாடுதுறையில் உள்ள தியாகி ஜி நாராயணசாமி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பொதுத்தேர்வை கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

    • முன்னதாக தலைமை பொதுக்குழு உறுப்பினர் சிவதாஸ் வரவேற்றார்.
    • முடிவில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை திமுக சார்பில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா தெருமுனைப் பிரச்சார பொதுக்கூட்டம் மூவலூரில் நடைபெற்றது.

    இந்த கூட்டம் மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ. வுமான நிவேதா முருகன் ஆலோசனைபடி மயிலாடுதுறை மேற்கு ஒன்றிய செயலாளர் மூவலூர் எம். மூர்த்தி தலைமை தாங்கினார். ஒன்றிய அவைத் தலைவர் பாலு, ஒன்றிய பெருந்தலைவர் காமாட்சி மூர்த்தி, துணை செயலாளர்கள் சிவக்குமார், பாரதிமதியழகன், அற்புதராஜ், பொருளாளர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை பொதுக்குழு உறுப்பினர் சிவதாஸ் வரவேற்றார்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக தலைமை பேச்சாளர் நாகம்மை கருப்பையா கலந்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்த சாத னைகளை பொதுமக்களுக்கு புரிந்து கொள்ளும் வகையில் சிறப்பாக பேசினார். இந்நிகழ்ச்சியில் உயர்நிலை திட்டகுழு உறுப்பினர் குத்தாலம் கல்யாணம், மாவட்ட ஊராட்சிகுழு உறுப்பினர் குமாரசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சத்தியசீலன், மாவட்ட துணை செயலாளர் கண்ணகி பன்னீர்செல்வம், கழக பேச்சாளர் கோமல் விஜி அறிவழகன், முன்னாள் நகர கவுன்சிலர் மேனகா மாரியப்பன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் காந்தி, தொ. மு. ச. மண்டல செயலாளர் ஆபிரகாம், மாவட்டம் குழு உறுப்பினர் சுரேஷ், ஒன்றிய கவுன்சிலர்கள் மும்தாஜ், பதர்நிஷா நஜீம், சிவக்குமார், அர்ஜுன், காமராஜ், கபிலர், ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள் ஐயப்பன், முஹம்மது ஹரிப், சபாபதி, தேவராஜன், ராஜேஷ், ரமணி, ஆனந்தி தர்மராஜ், மாலதி கதிரவன், உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஒன்றிய கிளை பிரதிநிதிகள் பெண்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

    • மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைத்துள்ளனர்.
    • சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள 2-ம் நம்பர் புதுத்தெருவில் ஸ்ரீ மகாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோயில் வாசலில் உண்டியல் உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு அங்கு வந்த மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைத்துள்ளனர்.

    உண்டியல் உடைக்கும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். இதைத் தொடர்ந்து மர்மநபர்கள் உண்டியலில் உள்ள பாதி பணத்தை அள்ளிக்கொண்டு அருகில் உள்ள இருட்டில் பதுங்கினர். பின்னர் சிறிதளவு பணத்தை அங்கேயே விட்டு, விட்டு தப்பி சென்றனர்.

    இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்து அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

    ×