என் மலர்
மயிலாடுதுறை
- கோயில் பூசாரிகளுக்கு மாதம் ரூ.2000 சம்பளம் வழங்கப்படும்.
- 60 வயது நிறைவடைந்த அனைத்து பூசாரிகளுக்கும் மாத ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த கிராமங்களில் பூசாரிகள் பேரவை, அருள்வாக்கு அருள்வார் பேரவை, பூ கட்டுவர் பேரவையின் சார்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட அமைப்பாளர் கோபிநாதன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில், கிராம கோயில் பூசாரிகளுக்கு மாதம் ரூ.2000 சம்பளம் வழங்கப்படும் என்று தி.மு.க தேர்தல் அறிக்கையில் அறிவித்தது. அதனை எந்த நிபந்தனையும் இன்றி மாதம் ரூ.10000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.
60 வயது நிறைவடைந்த அனைத்து பூசாரிகளுக்கும் மாத ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.
இதில் மாவட்ட பொறுப்பாளர்கள் சுந்தரமூர்த்தி, சவுந்தரராஜன், கருணாகரன், பிரபாகரன், மாவட்ட செய்தி தொடர்பாளர் சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கோயில் பூசாரி பேரவை ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.
- உலக நன்மைக்காக மஹா சண்டி ஹோமம் நடந்தது.
- சுந்தரேஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அருகே மணக்குடியில் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நல்லநாயகி அம்மன் பொறையான் திருக்கோயிலில் தமிழ் மாதமான பங்குனி மாதத்தில் நடைபெறும் உற்சவ திருவிழா பத்து நாள் நிகழ்ச்சியாகும்.
இந்த உற்சவத்தை முன்னிட்டு உலக நன்மைக்காகவும் மஹா சண்டி ஹோமம் இதில் தர்மபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் ஆலோசணைபடி சுந்தரேச சிவாச்சாரியார், திருக்கடையூர் மகேச குருக்கள் ஆகியோர் மஹா சண்டிஹோமம் பூஜைகள் செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட கலெக்டர் மகாபாரதி தன்னுடைய குடும்பத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
அவர்களுக்கு கோயில் மரியாதை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்தனர். இதனை தொடர்ந்து அருகில் உள்ள சுந்தரேஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் குமரக்கட்டளை தம்பிரான் சுவாமிகள், மணக்குடி ஊரா ட்சி மன்ற தலைவர் வீரமணி, முன்னாள் தலைவர் வடிவேலு, ஆலவேலி ஊராட்சி மன்ற தலைவர் ரஞ்சித், வள்ளலார் கோயில் கண்காணிப்பாளர் அகோரம், மற்றும் வெங்க ட்ராமன், குமார், ரவி, சீனிவாசன், மற்றும் குல தெய்வ குடும்பத்தார்கள், மனக்குடி கிராமவாசிகள் ஏராளமானோர் கலந்து கொ ண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- பல்வேறு கோவில்களுக்கு சென்று பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்தார்.
- சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம், நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
சீர்காழி:
காஞ்சிபுரத்தை சேர்ந்த சிவபக்தர் ஸ்ரீலஸ்ரீ மணிவ ண்ணன் சாது ஆண்டு முழுவதும் பல்வேறு கோவில்களுக்கு சென்று பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்தார்.
அதன்படி, ஆண்டிற்கு ஒரு முறை சீர்காழி பகுதிக்கு ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் மார்கோனி வீட்டிற்கு வருகை புரிவார்.
இதனிடையே கடந்த ஆண்டு சாது இறந்ததையடுத்து சீர்காழி அருகே பனமங்கலம் பகுதியில் மார்கோனி தனது சொந்த செலவில் இடம் வாங்கி சாதுவின் உடல் அடக்கம் செய்யப்பட்டு அதன்மேல் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடந்து வந்தது.
இதனிடையே மண்டலாபிஷேக பூர்த்தி அடைந்ததை யொட்டி சாது அடக்கம் செய்யப்பட்ட பகுதி சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம், நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் மார்கோனி, ராஜசேகர், மோகன், பாலமுருகன் உள்ளிட்ட பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- முதியோர் பாதுகாப்பு, சாலை விதிகளை மதித்து நடத்தல் போன்ற பல்வேறு கருத்துக்கள் குறித்து பேசினார்.
- முன்னதாக கல்லூரி முதல்வர் அனைவரையும் வரவேற்றார்.
தரங்கம்பாடி:
செம்பனார்கோயில் கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கான சமூக விழிப்புணர்வு கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் புதுச்சேரி ஓய்வு பெற்ற காவல்துறை கண்கா ணிப்பாளர் கொண்டா வெங்கடேஸ்வரராவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
அப்போது வரதட்ச ணை ஒழிப்பு, பாலியல் வன்கொடுமை இளம்பெ ண்கள் பலாத்காரம்,முதி யோர் பாதுகாப்பு, சாலை விதிகளை மதித்து நடத்தல் போன்ற பல்வேறு கருத்து க்கள் குறித்து விரிவாக பேசினார். முன்னதாக கல்லூரி முதல்வர் அனைவரையும் வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி தாளாளர், செயலர் மற்றும் நிர்வாக இயக்குநர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடைசெய்தல்.
- 100 சதவீதம் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்ட ஊராட்சிகளுக்கு கிராம சபையில் தீர்மானம்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது;-
மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற 22-ந் தேதி (புதன்கிழமை) தண்ணீர் தினத்தன்று கிராமசபா கூட்டம் 241 கிராம ஊராட்சிகளிலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடைபெற உள்ளது.
இக்கிராமசபா கூட்டத்தில் உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருளினைப் பற்றி விவாதித்தல், கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதியில் மேற்கொள்ளப்பட்ட செலவினம், 2022-23 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட பணிகள் விவரம் குறித்து விவாதித்தல், சுத்தமான் குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், ஊரக பகுதிகளில் விரிவான கிராம சுகாதாரம் பற்றி எடுத்துரைத்தல், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடைசெய்தல், ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 100 சதவீதம் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்ட ஊராட்சிகளுக்கு கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றுதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து இக்கிராமசபையில் விவாதிக்கப்பட உள்ளது.
எனவே, இக்கிராமசபா கூட்டத்தில் அனைத்து ஊராட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தவறாது கலந்து கொண்டு கோரிக்கைகள் மற்றும் மறுப்புகள் தொடர்பான விபரங்களை விவாதித்திட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வீட்டின் அருகே உள்ள மீன்குட்டையில் தவறி விழுந்துள்ளார்.
- அசம்பாவிதங்கள் இனி ஏற்படாமல் தடுக்க மீன்குட்டையை உடனடியாக மூடவேண்டும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கருவாழக்கரை மேலையூர் அய்யர் காலனியை சேர்ந்தவர் மகேந்திரன். இவருடைய மகன் அபினேஷ் (வயது17). இவர் செம்பனார்கோவிலில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
நேற்று முன்தினம் அபினேஷ், தனது வீட்டின் அருகே உள்ள மீன்குட்டையில் தவறி விழுந்துள்ளார். அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அப்போது அங்கு மாணவரை பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே அபினேஷ் இறந்தது விட்டதாக தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே சாலையோரத்தில் எவ்வித பாதுகாப்பு இன்றியும் மீன்குட்டை அமைத்ததால் தான் அபினேஷ் தவறி விழுந்து இறந்துள்ளார்.
எனவே மீன்குட்டை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுப்பதோடு, இதுபோன்று அசம்பாவிதங்கள் இனி ஏற்படாமல் தடுக்க மீன்குட்டையை உடனடியாக மூடவேண்டும் என வலியுறுத்தி மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரி அருகே சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால், அவர்களை குண்டுகட்டாக தூக்கி சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர்.
இந்த சம்பவத்தை கண்டித்து செம்பனார்கோயில் மேல் முக்கூட்டில் சி.பி.ஐ.கட்சியின் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, வழக்கறிஞர் சங்கமித்திரன் ஆகியோர் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டு போராட்டம் செய்தனர்.
இசம்பவம் குறித்து செம்பனார்கோயில் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சித்ரா, தரங்கம்பாடி தாசில்தார் இந்துமதி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இறந்த மாணவனின் குடும்பத்திற்கு இழப்பிடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். கோரிக்கைகளை ஏற்று நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் சாலை மறியலை கைவிட்டனர்.
- பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
- தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி தாலுகா பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி பலர் பேசினர்.
- ரூ.5 லட்சம் செலவில் இந்நாள் மாணவர்களுக்கான உணவருந்தும் கூடத்தை அமைத்துக் கொடுத்தனர்.
- கல்லூரி கால நிகழ்வுகளை பரிமாறிக்கொண்டு நண்பர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த புத்தூரில் சீனிவாசா சுப்பராய அரசு பல் தொழில்நுட்பக் கல்லூரி அமைந்துள்ளது.
பழைமை வாய்ந்த இக்கல்லூரியில் 1960 ஆம் ஆண்டு முதல் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் வைர விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
1960-ம் ஆண்டு முதல் இக்கல்லூரியில் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் பல்வேறு மாவட்டம், மாநிலங்களில் பணியாற்றி மற்றும் ஓய்வு பெற்ற நிலையில் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
முன்னாள் மாணவர்கள் தங்களது கல்லூரி காலத்தில் தங்களுக்கு கல்வி பயிற்றுவித்த அனைத்து ஆசிரியர்களையும் அழைத்து பொன்னாடை போற்றி நினைவு பரிசுகள் வழங்கி மரியாதை செய்து கவுரவித்தனர்.
1993 ஆம் ஆண்டு கல்வி முடித்த முன்னாள் மாணவர்கள் ரூ.5 லட்சம் செலவில் இந்நாள் மாணவர்களுக்கான உணவருந்தும் கூடத்தை அமைத்துக் கொடுத்து அதனை திறந்துவைத்தனர்.
பலர் பணிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் தற்பொழுது முன்னாள் மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்த நிகழ்வில் அனைவரும் இளைஞர்கள் போல் ஒருவருக்கொருவர் தங்களது கல்லூரி கால நிகழ்வுகளை மகிழ்ச்சியுடன் பரிமாறிக் கொண்ட துடன் தங்களது சக நண்பர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.
இதில் முன்னாள் மாணவர்களாகிய விஸ்வநாதன், சேகர், கண்ணன், திருநாவுக்கரசு, சுப்ரமணியன், தில்லை நடராஜன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்.
- ஊராட்சி மன்ற தலைவர் பிரியா பெரியசாமி தலைமை தாங்கினர்.
- வட்டார வளர்ச்சி அலுவலர் மஞ்சுளா கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்களிடம் அரசு செயல் திட்டங்களை விளக்கி எடுத்துக் கூறினர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை ஒன்றியம் மன்னம்பந்தல் ஊராட்சியில் சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பிரியா பெரியசாமி தலைமை தாங்கினர்.
துணை தலைவர் அமலா கிராம நிர்வாக அலுவலர் அருணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் ரஜினி வரவேற்றார்.
இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் மஞ்சுளா கலந்துகொண்டு சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்களிடம் அரசு செயல் திட்டங்களை விளக்கி எடுத்துக் கூறினர்.
நடைபெற்று வரும் திட்ட பணிகளை தரமுடன் செயல்படுத்தி வருவதாகவும், சுகாதாரம், குடிநீர், தெரு விளக்கு பராமரித்து வருவதாகவும் இதில் ஏதேனும் குறைகள் இருந்தால் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
பின்னர் ஊராட்சிக்கு தேவையான 2023-24 ஆண்டிற்க்கான கிராம வளர்ச்சி திட்ட பணிகளை தயார் செய்தனர்.
நிகழ்ச்சியில் ஒன்றிய பணி மேற்பார்வையாளர் அபிராமி மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- வீரசோழன் ஆற்றின் குறுக்கே ஏற்கெனவே இருந்த பாலம் ஒரு பேருந்துக்கு மேல் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.
- ரூ.2 கோடியே 3.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி பணிகளை தொடக்கி வைத்தார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா உத்திரங்குடி - இலுப்பூர் ஊராட்சிகளை இணைக்கும் மேமாத்தூர்- சங்கரன்பந்தல் மார்க்கத்தில் வீரசோழன் ஆற்றின் குறுக்கே ஏற்கெனவே இருந்த பாலம் ஒரு பேருந்துக்கு மேல் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.
இதனால் அந்த பாலத்தை பயன்படுத்தி வந்த பல கிராமமக்கள் புதிய பாலம் கட்டிதர வேண்டி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க. செயலாளரும், பூம்புகார் தொகுதி எம்.எல்.ஏ. வுமான நிவேதா முருகன் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அங்கே நபார்டு வங்கி நிதியுதவியில் ரூ.2 கோடியே 3.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி பணிகளை தொடக்கி வைத்தார்.
நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளர் ஞானவேலன், தஞ்சை மண்டல திமுக தகவல் தொழில் நுட்ப அணி பொறுப்பாளர் பி.எம்.ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர்கள் அப்துல்மாலிக், பி.எம்.அன்பழகன், அமுர்த.விஜயகுமார், ஒப்பந்ததாரர் பழனிவேல், டெல்டா பாசனதாரர் சங்க தலைவர் கோபி கணேசன், ஊராட்சி மன்ற தலைவர்கள் பகவதி, லெனின் மேசாக் உள்ளிட்ட திமுக கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- மங்கள வாத்தியங்கள் முழங்க கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டது.
- பட்டாச்சாரியார்களால் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, மகா தீபாராதனைக் காட்டப்பட்டது.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே வாணாதிராஜபுரத்தில் உள்ள சிறப்புமிக்க கோபாலகிருஷ்ண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நேற்று சிறப்பான வகையில் நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவடைந்தன.
இதையடுத்து 15-ந்தேதி கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை சுத்தி, வாஸ்து சாந்தி ஹோமம், ஆச்சார்ய அழைப்பு, அங்குரார்ப்பணம், கும்ப பூஜை, பூர்ணாஹூதி உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டு முதல் யாக பூஜை தொடங்கியது.
நேற்று காலையுடன் 4 கால யாக பூஜைகள் நிறைவுபெற்று பூர்ணாஹூதி, யாத்ராதானம் நடத்தப்பட்டு, மங்கள வாத்தியங்கள் முழங்க கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டது.
தொடர்ந்து ஸ்ரீகோபால கிருஷ்ண பெருமாள் மற்றும் பரிவார தெய்வங்களின் சன்னதிகளின் விமானங்களில் பட்டாச்சாரியார்களால் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, மகா தீபாராதனைக் காட்டப்பட்டது.
கோயில் செயல் அலுவலர் நிர்மலாதேவி, ஊராட்சி மன்றத் தலைவர் சங்கரிதமிழரசன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
- மலைமீது உமா மகேஸ்வரர், சட்டநாதர் ஆகிய சுவாமிகள் காட்சி தருகின்றனர்.
- திருஞான சம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கிய தலமாக கோயில் போற்றப்படுகிறது.
சீர்காழி:
சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் 32 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறவுள்ள கும்பாபிஷேகத்திற்கு யாகசாலை அமைப்பதற்கான பந்த்கால் முகூர்த்தம் தருமபுரம் ஆதீனம் நேற்று தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சட்டைநாதர் சுவாமி கோவில் அமைந்துள்ளது.
இக்கோயிலில் திருநிலைநாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்கிறார்.
மலைமீது உமா மகேஸ்வரர், சட்டநாதர் ஆகிய சுவாமிகள் காட்சி தருகின்றனர்.
இக்கோயிலில் சிவபெருமான் லிங்கம், மூர்த்தம்,சங்கமம் ஆகிய மூன்று நிலைகளில் பக்தர்களுக்கு காட்சித் தருகிறார்.
திருஞான சம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கிய தலமாக கோயில் போற்றப்படுகிறது.
பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் 32 ஆண்டுகளுக்கு பிறகு வரும் மே 24-ந்தேதி கும்பாபிஷேகம் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமார்ச்சாரிய சுவாமிகள் ஏற்பாட்டின்படி நடைபெறவுள்ளது.
அதற்கான திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜை மற்றும் பந்தல்கால் அமைப்பதற்கான பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீ லஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் கோயில் கொடிமரம் அருகே பந்தக்காலுக்கு சிவாச்சாரியார்களால் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மேள, தாளங்கள் முழங்க பந்தக்கால் கோயிலை வலம் வந்து பின்னர் நவகிரக சன்னதி அருகே பந்தகால் நடப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
தொடர்ந்து மேல கோபுரவாசல் அருகே யாகசாலை அமைப்பதற்கான பந்தக்கால் நடப்பட்டு சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது.
கோபுர கலசங்களுக்கு தங்கமுலாம் பூசுவதற்கான இயந்திரத்தினை பூஜைகள் செய்து தருமபுரம் ஆதீனம் தொடங்கிவைத்தார்.
தொடர்ந்து முத்துசட்டை நாதர் சுவாமிக்கு புதிதாக அமைக்கப்படும் கருங்கல் மண்டபத்திற்கு கருங்கல் நிலை வைப்பதற்கான சிறப்பு பூஜையையும் தருமபுரம் ஆதீனம் செய்து நிலைப்படி வைத்து பணியை தொடங்கி வைத்தார்.
முன்னதாக சீர்காழி தேரடி சித்தி வினாயகர் கருங்கல் கோவில், பிடாரிவடக்குவீதி பதிணென்புராணேஸ்வரர் சுவாமி கோவில் கும்பாபிஷேகத்திற்காக பந்தகால் முகூர்த்தத்தையும் தருமபுரம் ஆதீனம் தொடங்கிவைத்தார்.
இதில் திருப்பணி உபயதாரர்கள் மகாலட்சுமி அம்மையார், மார்கோனி, முரளி, கிருஷ்ணன் மற்றும் ஆசிரியர் கோவி.நடராஜன் உள்ளிட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.






