என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    • உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது.
    • பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, செம்பனார்கோவில் ஒன்றியம், பரசலூர் ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார்.கிராம நிர்வாக அலுவலர் சிவசங்கர் முன்னிலையில் வைத்தார்.

    ஊராட்சி செயலர் நாகராஜன் அனைவரையும் வரவேற்றார்.

    அப்போது சிறப்பு (பற்றாளர்) அழைப்பாளராக ஒன்றிய பணி மேற்பார்வையாளர் கீதா கலந்து கொண்டு பேசினார்.

    தண்ணியை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் தண்ணீரை தேவை இல்லாமல் வீணடிக்க கூடாது.

    சுகாதாரமாக இருக்க வேண்டும்.

    சுற்றுச்சூழல் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    நடைபெற்று வரும் பல்வேறு அரசு நலத்திட்ட பணிகள் நடைபெற்று வருவதையும் ஏதேனும் குறைகள் இருந்தால் அதை எடுத்து கூறுமாறு கேட்டுக் கொண்டார்.

    இந்நிகழ்ச்சியில் ஊராட்சி பொதுமக்கள் வார்டு உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியின் முடிவில் சங்கீதா நாராயணன் நன்றி கூறினார்.

    • திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது.
    • ஆஸ்திரியா நாட்டை சேர்ந்தவர்கள் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வந்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடை யூரில் உள்ள தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலுக்கு தினந்தோறும் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த ஸ்வட்லானாக்ரூசர், இலோனா கலாட்டினோவா ஆகியோர் தமிழ்நாட்டின் ஆன்மீக கலாச்சாரத்தின் மீது பற்றுதல் கொண்டதன் காரணமாக திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வந்தனர்.அவர்களுக்கு கணேச குருக்கள் சிறப்பு பூஜைகள் செய்து வைத்தார்.

    பின்னர் நல்லடையில் உள்ள அக்னி ஸ்தலமான பரணீஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை செய்து சாமி தரிசனம் செய்தனர.

    இதனை தொடர்ந்து மயிலாடுதுறையில் உள்ள அபயாம்பிகை உடனாகிய ஸ்ரீ மாயூரநாதர் சுவாமி திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.

    அங்கே சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் முன்னிட்டு முதல் யாகசாலை பூஜை நடைபெற்றது.

    அதில் கலந்து கொண்ட தர்மபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பிரம்மச்சாரிய சுவாமிகளிடம் ஆசீர் பெற்னர்.

    அவர்களுக்கு தர்மபுரம் ஆதீனம் பிரசாதம் வழங்கி ஆசீர்வாதம் செய்தார். இந்நிகழ்ச்சியில் வெளிநாட்டினருடன் வந்திருந்த கோபிநாத், குரு, சாமி தரிசனம் செய்தனர்.

    • ஆச்சாள்புரம் அரசு பள்ளியில் உலகதண்ணீர் தின விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
    • பேரணியில் பொதுமக்களிடம் தண்ணீர் பாதுகாப்பின் முக்கியத்துவம் எடுத்து கூறினர்.

    சீர்காழி:

    தண்ணீர் தேவையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக உலக தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதனை முன்னிட்டு அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் புலம் மாணவிகள் சீர்காழி ஆச்சாள்புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

    கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் மாணவிகள் இந்த பேரணியை ஒருங்கிணைத்து நடத்தினர். பள்ளி தலைமை ஆசிரியர் துரை பேரணிக்கு தலைமை தாங்கினார்.

    பள்ளியின் மாணவ மாணவிகள் பங்கேற்ற இந்த பேரணியில் பொதுமக்களிடம் தண்ணீர் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப் பட்டது.

    • கடந்த 19-ம் தேதி எஜமானர் அனுக்ஞை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • புனிதநீர் நிரப்பி அதனை ஊர்வலமாக மயிலாடுதுறை மாயூரநாதர் கோவிலுக்கு எடுத்து வரும் நிகழ்ச்சி.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாயூரநாதர் கோவில் உள்ளது. அபயாம்பிகை அம்மன் மயில் உருவம் கொண்டு சிவனை பூஜித்து சாப விமோசனம் அடைந்த தலம். மேலும் பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான குமரக்கட்டளை வள்ளி தேவசேனா உடனாகிய சுப்பிரமணிய சாமி கோவிலில் நாளை மறுநாள் (24-ந்தேதி) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. விழா கடந்த 19-ம் தேதி எஜமானர் அனுக்ஞை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இதனை முன்னிட்டு யாகசாலையில் வைத்து பூஜிப்பதற்காக புன்னிய நதிகளில் இருந்து புனிதநீர் எடுத்துவரப்பட்டு மயிலாடுதுறை துலா கட்ட காவிரி கரையில் உள்ள காவிரி அம்மன் கோவிலுக்கு கொண்டு சென்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    தொடர்ந்து, 10-க்கும் மேற்பட்ட மல்லாரி மேளக்கச்சேரி உடன் ஒட்டகம், குதிரைகள் முன் செல்ல, 100-க்கும் மேற்பட்ட வேத சிவ ஆகம பாடசாலை சிறுவர்கள் தேவார பாடல்கள் பாடி பின் தொடர ஆதீன கட்டளை தம்பிரான் சுவாமிகள் மற்றும் சிவாச்சாரியார்கள் கலந்து கொள்ள வெள்ளி குடங்களில் புனிதநீர் நிரப்பி அதனை யானைகள் மீது ஏற்றி ஊர்வலமாக மயிலாடுதுறை மாயூரநாதர் கோவிலுக்கு எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    மயிலாடுதுறை தருமபுர ஆதீன கட்டளை மடத்தின் வாசலில் தருமபுர ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் மலர் தூவி புனித கடங்களை வரவேற்றார்.

    தொடர்ந்து யாகசாலையில் பாலசந்தர் சிவாச்சாரியார், திருக்கடையூர் மகேஷ் குருக்கள் ஆகியோர் முதல் கால பூஜைகள் தொடங்கினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • ஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும்.
    • இறந்த சாலை பணியாளர்களின் குடும்பங்களுக்கு வாரிசு வேலை வழங்க வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கினார். அரசு அலுவலர் ஒன்றியம் மாவட்ட தலைவர் வெங்கடேசன், சாலை பணியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் சட்டையப்பன், மத்திய செயற்குழு உறுப்பினர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இணை செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார்.

    ஆர்ப்பாட்டத்தில் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி சட்ட மன்றத்தில் அறிவிப்போம் என வாக்குறுதி அளித்த தமிழக முதல்வர் அதை அமல்படுத்த வேண்டும்.

    இறந்த சாலை பணியாளர்கள் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வாரிசு வேலை வழங்க வேண்டும். 50-க்கும் மேற்பட்ட தமிழக இளைஞர்களை பலி கொண்டுள்ள ஆன்லைன் சூதாட்டத்தை மத்திய அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும்.

    அனைத்து அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 7500க்கும் மேற்பட்ட சாலை பணியாளர்கள் காலி இடங்களை நிரப்பி இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான சாலை பணியாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்நிகழ்ச்சியில் வட்டத் தலைவர் கருணாகரன் கண்ணன் காமராஜ் கலைவாணன் இளங்கோவன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் மாவட்ட பொரு–ளாளர் வைத்தியநாதன் நன்றி கூறினார்.

    • 2 யானைகளை பிரிக்க முயற்சித்தும் தொடர்ந்து யானைகள் கொஞ்சி குலாவியது.
    • யானைகள் கொஞ்சி குழாவி உற்சாக குளியல் போட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாயூரநாதர் திருக்கோயில் உள்ளது.

    இக்கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி சன்னதி அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் கும்பாபிஷேக விழா கடந்த 19ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது.

    இதனை முன்னிட்டு யாகசாலையில் வைத்து பூஜிப்பதற்காக மயிலாடுதுறை காவிரி கரையில் இருந்து கங்கை முதலான பல்வேறு ஆறுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கடங்கள் மூன்று யானைகளின் மீது கொண்டுவரப்பட்டது.

    மாயூரநாதர் அபயாம்பிகை யானை, திருவையாறு ஐயாரப்பர் கோவில் தர்மாம்பாள் யானை, திருக்கடையூர் அபிராமி ஆகிய யானைகள் மீது புனித கடங்கள் ஊர்வலமாக மங்கள வாத்தியங்கள் முழங்க கோயிலை வந்தடைந்தது.

    புனித கடங்கள் யானை மீது இருந்து இறக்கப்பட்ட பின்னர் அருகருகே நின்ற மயிலாடுதுறை அபயாம்பிகை யானை திருவையாறு தர்மாம்பாள் யானை இரண்டும் இரண்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சந்தித்துக் கொண்டதால் உற்சாகமடைந்தன.

    யானைகள் புத்துணர்வு மறுவாழ்வு முகாம் நடைபெற்ற போது இரண்டு வருடங்களுக்கு முன்பு சந்தித்துக் கொண்ட இந்த இரண்டு யானைகளும் நேற்று மீண்டும் சந்தித்துக் கொண்டதால் ஒன்றோடு ஒன்று முகத்தை உரசியும் துதிக்கையால் பிணைந்தும் ஆரத்தழுவி முத்தமிட்டு மகிழ்ச்சி அடைந்து குதூகலமிட்டனர்.

    மகிழ்ச்சியின் உச்சமாக திருவையாறு யானை கர்ஜித்து முழக்கமிட்டது. யானை பாகன்கள் இரண்டு யானைகளை பிரிக்க முயற்சித்தும் தொடர்ந்து யானைகள் கொஞ்சி குலாவியது. தொடர்ந்து இரண்டு யானைகளை யானைபாகன்கள் தன்னீர் பைப்பு மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து யானைகளுக்கு வெயிலின் தாக்கத்தை குறைத்தனர்.

    அப்போதும் உற்சாகத்துடன் யானைகள் கொஞ்சி குழாவி உற்சாக குளியல் இட்டது பக்தர்களிடையே வியப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. ஏராளமான பக்தர்கள் யானைகளின் பாசப்பிணைப்பை செல்போனில் படம் பிடித்து மகிழ்ச்சியுடன் பார்த்து ரசித்தனர்.

    • ரூ.1.11 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு குளம் தூர்வாரும் பணிகள் தொடங்கியது.
    • குளத்தை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுக்க தீவிரம் காட்டினார்.

    சீர்காழி:

    சீர்காழி - சிதம்பரம் நெடுஞ்சாலையில் அரியாபிள்ளை குளம் உள்ளது. இந்த குளம் சுமார் 80ஆண்டுகளாக வீடுகள் கட்டப்பட்டும், வீட்டு சுற்றுசுவர் வைத்தும், கட்டிடங்கள் கட்டப்பட்டும் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் அரியா–பிள்ளை குளத்தினை நடைபாதையுடன் அழகுப்படுத்தும் திட்டத்தின் கீழ் ரூ.1.11கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு குளத்தினை தூர்வாரும் பணிகள் தொடங்கிய நிலையில் ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் சுனக்கம் ஏற்பட்டது. இதனையறிந்த மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் ஏ.பி.மகாபாரதி குளத்தினை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுக்க தீவிரம் காட்டினார். நகராட்சி ஆணையர் வாசுதேவனை தொடர்பு கொண்டு போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார்.

    இதனையடுத்து போலீசார் குவிக்கப்பட்டு அரியாபிள்ளை குளம் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் பொக்லின் இயந்திரம் கொண்டு இடித்து அகற்றி மீட்கப்பட்டது.

    ௮௦ ஆண்டுகால ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுத்த மாவட்ட கலெக்டர் ஏபி.மகாபாரதியை சீர்காழி நகர பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.

    • வேளாண் இல்லாது உலகம் வெல்லாது உழவர்களுக்கான பாடலை வெளியிட்டார்.
    • விவசாயம் சார்ந்த படிப்புகளை மாணவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையை அடுத்த வள்ளாலகரம் ஊராட்சி, லட்சுமிபுரத்தில் உள்ள யூரோ கிட்ஸ் என்ற மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி சார்பில் விவசாயம் மற்றும் அதை சார்ந்த படிப்புகளுக்கான ஆர்வத்தை மாணவ மாணவிகளுக்கு ஏற்படுத்தும் வகையில் நம்ம உழவன் எனும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் பங்கேற்று வேளாண் இல்லாது உலகம் வெல்லாது உழவர்களுக்கான சிறப்பு தீம் பாடலை வெளியிட்டார்.

    நிகழ்ச்சியில் பேசிய பொன்ராஜ் உழவர்களை முன்னெடுத்துச் சென்றால் டாக்டர் அப்துல் கலாம் கண்ட கனவு இந்தியா விரைவில் மலரும் என்று தெரிவித்தார். தொடர்ந்து விவசாயத்தின் பெருமையை உணர்த்தும் வகையில் பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் சின்னத்திரை கலைஞர் அறந்தாங்கி நிஷா, நாகை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி, சுற்றுச்சூழல் ஆர்வலர் நிமல் ராகவன் குத்தாலம் சாதிக் பாட்ஷா உள்ளிட்ட பலர் பங்கேற்று விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்தும் அதனை சார்ந்த வேலை வாய்ப்புகளையும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறி விவசாயம் சார்ந்த படிப்புகளை மாணவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    இதில் ஒன்றிய கவுன்சிலர் மோகன், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசுதா ராபர்ட் ஜெயகரன், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், ஆசிரியைகள் மாணவர்–களின் பெற்றோர்கள் என ஏராளமானவர்கள் கலந்துக்கொன்டனர்.

    • தமிழ் மற்றும் கணிதத்தில் அடிப்படை திறன்கள் கற்றுத்தரப்பட்டது.
    • ஏ.டி.எம். பயன்படுத்தும் முறை, வங்கியில் பணம் எடுக்கும் முறை குறித்து கற்றுத்தரப்பட்டது.

    சீர்காழி:

    கொள்ளிடம் ஒன்றி யத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் முற்றிலும் எழுத படிக்க தெரியாத கல்லாதோருக்கு அடிப்படை எழுத்தறிவை தெரிந்து கொள்ள கொள்ளிடம் ஒன்றியத்தில் 38 மையங்களில் சுமார் 780 கற்போர்கள் பயின்று வந்தனர்.

    இவர்களின் கற்றலை மதிப்பிடும் வகையில் 38 மையங்களில்அடிப்படை எழுத்தறிவு தேர்வுநடை பெற்றதுதேர்விற்கு முதன்மை கண்காணிப்பாளராக தலைமை ஆசிரியரும் அறை கண்காணிப்பாளராக தன்னார்வலர்களும் செயல்பட்டனர்

    தேர்வு நடைபெற்ற மையங்களை வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி வட்டார வளமைய மேற்பார்வை யாளர் ஞானபுகழேந்தி ஆசிரியர் பயிற்றுநர்கள் பாக்கியலட்சுமி ஐசக் ஞானராஜ் கவிதா ஆகியோர் மையங்களை பார்வையிட்டனர்.

    வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஞான புகழேந்தி கூறும் போது முழுவதும் எழுதப் படிக்க தெரியாதவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தமிழ் மற்றும் கணிதத்தில் அடிப்படைத் திறன்களை கற்றுத் தரப்பட்டது.

    ஏடிஎம் பயன்படுத்தும் முறை, வங்கியில் பணம் எடுக்கும் முறை, பேருந்து மற்றும் ரயில் டிக்கெட் பதிவு செய்யும் முறை, அஞ்சல் நிலையங்களில் பணம் செலுத்தும் முறை, ஆகியவை கற்றுத் தரப்பட்டது.

    இத்தேர்வை கோயில்கள் பள்ளிகள் மற்றும் அவர்கள் வேலை செய்யும் இடங்களுக்கே சென்று தேர்வு வைக்கப்பட்டது இத்தேர்வில் கற்போர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தேர்வை எழுதினர் என்றார்.

    • 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடல் நீர் உட்புகுவது தடுக்கப்–படுகிறது.
    • 10 கி.மீ தூரத்திற்கு ஒரு தடுப்பணை அமைக்க வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே கொண்டல் தலைப்பி–லிருந்து உருவாகும் உப்பனாறு கொண்டல், வள்ளுவக்குடி, அகணி, சீர்காழி, சட்டநாதபுரம், திட்டை, தில்லைவிடங்கன், எடமணல் திருநகரி, வழுதலைக்குடி வழியாக சென்று திருமுலைவாசலில் கடலில் கலந்து வருகிறது. இந்த உப்பனாறு மூலம் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் மேம்பட்டு வந்தது.

    இந்நிலையில் கோடை காலங்களில் கடல் நீர் உப்பனாற்று முகத்துவாரம் வழியாக 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு உப்புகுந்து நிலத்தடி நீர் முழுதும் பாதிக்கப்பட்டு உவர் நீராக மாறி வருகிறது.

    இதனால் சீர்காழி அருகே பனமங்கலம் பகுதியில் கடல் நீர் உட்புகுவதை தடுக்க அப்பகுதி மக்கள் ம.தி.மு.க மாவட்ட செயலாளர் மார்கோனி நிதியுதவியுடன் தற்காலிகமாக மண் அணை அமைத்து வருகின்றனர்.

    மழைக்காலங்களில் பெய்த மழை நீரால் நிலத்தடி நீர் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ள நிலையில் கோடைக்காலம் துவங்க உள்ளதால் கடல் நீர் உட்புகுந்து வருவதை தடுக்க மண் அணையை ஏற்படுத்தி வருகின்றனர்.

    இதன் மூலம் பனமங்கலம், துறையூர், கோடங்குடி, குமாரநத்தம், வரவுக்குடி, ஆதமங்கலம், கொண்டல், வள்ளுவக்குடி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடல் நீர் உட்புகுவது தடுக்கப்–படுவதோடு நிலத்தடி நீர் பாதிக்கப்படாமல் காப்பாற்றப்–படுவதாக அப்பகுதி கிராம மக்கள், விவ–சாயிகள் தெரிவிக்கின்றனர்.

    பனமங்கலம் பகுதியில் அரசு நிரந்தரமாக தடுப்பணை அமைக்க வேண்டும், 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு தடுப்பணை அமைத்திட வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நாட்டியாஞ்சலி, பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
    • இசை கலைஞர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் கலை பண்பாட்டு துறை, தஞ்சாவூர் மண்டல கலை பண்பாட்டு மையம், மாவட்ட அரசு இசைப்பள்ளி, சவகர் சிறுவர் மன்றம் ஆகியவன சார்பில் தமிழிசை விழா நடைபெற்றது.

    விழாவிற்கு மாவட்ட அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார்.

    தஞ்சை கலை பண்பாட்டு துறை மைய மண்டல உதவி இயக்குனர் நீலமேகம், விஸ்வநாதர் கோவில் அறங்காவலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவை தமிழ் சங்க தலைவர் மார்கோனி தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

    தொடர்ந்து மங்கல இசைகள், தேவாரப் பண்ணிசை, நாட்டியாஞ்சலி, பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    இதில் தமிழ்ச்சங்க செயலாளர் கோவி நடராஜன், பொருளாளர் சொர்ணபால், மாவட்ட அரசு இசைப்பள்ளி ஆசிரியர்கள், இசை கலைஞர்கள் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.

    விழாவில் இசை கலைஞர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. முடிவில் மிருதங்க ஆசிரியர் முருகேசன் நன்றி கூறினார்.

    • சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.
    • மேல் சிகிச்சைக்காக 20-க்கும் மேற்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவ ட்டம், தரங்கம்பாடி தாலுகா, செம்பனார்கோயில், கலைமகள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் செம்பனார்கோயில் கிங்ஸ் லயன்ஸ் கிளப் சார்பில் எலும்பு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

    இந்த முகாமிற்கு செம்பை கிங்ஸ் லயன்ஸ் கிளப் சாசன தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். செயலர் நந்தகுமார், பொருளாளர் சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கலைமகள் நிர்வாக இயக்குனர் என். எஸ்.குடியரசு மருத்துவ முகாமை துவக்கி வைத்தார்.

    இந்த முகாமில் எக்ஸ்ரே, பிசியோதெரபி, நரம்பியல் சிகிச்சை மற்றும் நவீன கருவிகள் மூலம் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தங்கள் உடலில் உள்ள குறைபாடுகளை பரிசோதனை செய்து சிகிச்சை பெற்றனர்.

    மேல் சிகிச்சைக்காக 20க்கும் மேற்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதில் மருத்துவர்கள் மதன்குமார், பிரபு, மக்கள் தொடர்பாளர் நாகராஜ், நாமக்கல் இமயம் மல்டி ஸ்பெஷலிஸ்ட் செவிலியர்கள், ஊழியர்கள் மற்றும் கிளப் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    ×