என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Debt Departure"

    • மங்கள வாத்தியங்கள் முழங்க கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டது.
    • பட்டாச்சாரியார்களால் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, மகா தீபாராதனைக் காட்டப்பட்டது.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே வாணாதிராஜபுரத்தில் உள்ள சிறப்புமிக்க கோபாலகிருஷ்ண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நேற்று சிறப்பான வகையில் நடைபெற்றது.

    இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவடைந்தன.

    இதையடுத்து 15-ந்தேதி கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை சுத்தி, வாஸ்து சாந்தி ஹோமம், ஆச்சார்ய அழைப்பு, அங்குரார்ப்பணம், கும்ப பூஜை, பூர்ணாஹூதி உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டு முதல் யாக பூஜை தொடங்கியது.

    நேற்று காலையுடன் 4 கால யாக பூஜைகள் நிறைவுபெற்று பூர்ணாஹூதி, யாத்ராதானம் நடத்தப்பட்டு, மங்கள வாத்தியங்கள் முழங்க கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டது.

    தொடர்ந்து ஸ்ரீகோபால கிருஷ்ண பெருமாள் மற்றும் பரிவார தெய்வங்களின் சன்னதிகளின் விமானங்களில் பட்டாச்சாரியார்களால் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, மகா தீபாராதனைக் காட்டப்பட்டது.

    கோயில் செயல் அலுவலர் நிர்மலாதேவி, ஊராட்சி மன்றத் தலைவர் சங்கரிதமிழரசன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    ×