பனமங்கலத்தில், சாதுவின் மண்டலாபிஷேக பூர்த்தி நிகழ்வு

பல்வேறு கோவில்களுக்கு சென்று பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்தார்.சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம், நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
மண்டலாபிஷேக பூர்த்தி நிகழ்வு நடந்தது.
மண்டலாபிஷேக பூர்த்தி நிகழ்வு நடந்தது.
Published on

சீர்காழி:

காஞ்சிபுரத்தை சேர்ந்த சிவபக்தர் ஸ்ரீலஸ்ரீ மணிவ ண்ணன் சாது ஆண்டு முழுவதும் பல்வேறு கோவில்களுக்கு சென்று பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்தார்.

அதன்படி, ஆண்டிற்கு ஒரு முறை சீர்காழி பகுதிக்கு ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் மார்கோனி வீட்டிற்கு வருகை புரிவார்.

இதனிடையே கடந்த ஆண்டு சாது இறந்ததையடுத்து சீர்காழி அருகே பனமங்கலம் பகுதியில் மார்கோனி தனது சொந்த செலவில் இடம் வாங்கி சாதுவின் உடல் அடக்கம் செய்யப்பட்டு அதன்மேல் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடந்து வந்தது.

இதனிடையே மண்டலாபிஷேக பூர்த்தி அடைந்ததை யொட்டி சாது அடக்கம் செய்யப்பட்ட பகுதி சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம், நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் மார்கோனி, ராஜசேகர், மோகன், பாலமுருகன் உள்ளிட்ட பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com