என் மலர்
மயிலாடுதுறை
- பிரச்சனை தொடர்பாக இவர்களது வீட்டிற்கு சென்று வீட்டை காலி செய்ய கூறி பொருட்களை உடைத்து சேதப்படுத்தியதோடு தமிழ்ச்செல்வன், சுதா ஆகியோரை பழனிவேல் தாக்கி உள்ளார்.
- ஓய்வுபெற்ற ராணுவவீரர் பழனிவேல் இவர்கள் இருவரிடையே தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் ஊராட்சி திருக்குளத் தெருவில் குடியிருந்து வருபவர்கள் தமிழ்செல்வன் -சுதா தம்பதியினர்.
குடியிருந்த வீட்டை கங்கா என்பவரிடம் ரூ.12 லட்சம் கொடுத்து வாங்கியதாக அதை காலிசெய்ய வலியுறுத்தி மூங்கில் தோட்டம் மெயின்ரோட்டை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவவீரர் பழனிவேல் இவர்கள் இருவரிடையே தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த பிரச்சனை தொடர்பாக இவர்களது வீட்டிற்கு சென்று வீட்டை காலி செய்ய கூறி பொருட்களை உடைத்து சேதப்படுத்தியதோடு தமிழ்ச்செல்வன், சுதா ஆகியோரை பழனிவேல் தாக்கி உள்ளார்.
மேலும் துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார்.
இதில் காயமடைந்த தமிழ்ச்செல்வன், சுதா ஆகியோர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து சுதா கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் துப்பாக்கியை பறிமுதல் செய்து பழனிவேலை கைது செய்தனர்.
சீர்காழி:
சீர்காழி அடுத்த வேட்டங்குடி கிராமத்தை சேர்ந்த மணிவண்ணன் -சீதா தம்பதியின் மகள் சுபானு.
இவர் உலக அளவில் பல்வேறு யோகா போட்டி யில் பங்கேற்று 10-க்கும் மேற்பட்ட தங்க பதக்கங்களை வென்று ள்ளார்.
இந்நிலையில் மாணவி சுபானு தனது தாய் சீதாவுடன் சேர்ந்து புதுச்சேரியில் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அப்போது ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் யோகா மாணவியின் சாதனைகளை கேட்டறிந்து பாராட்டி கவுரவித்தார்.
- இறால் வளர்ப்பு விவசாயிகள் சங்க தலைவர் பூம்புகார் சங்கர்பிள்ளை தலைமை வகித்தார். செயலாளர் பேராசிரியர் ஜெயராமன் வரவேற்றார்.
- இறால் ஏற்றுமதியாளர்கள் ஒன்றிணைந்து அவர்களுக்குள் விலைநிர்ணயம் செய்து இறால் விவசாயிகளுக்கு சரியான விலை தராமல், சந்தை மதிப்பை மறைத்து, குறைத்து விலை தருவதை கண்டிப்பது,
சீர்காழி:
சீர்காழியில் மயிலாடுதுறை மாவட்ட இறால் வளர்ப்பு விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இறால் வளர்ப்பு விவசாயிகள் சங்க தலைவர் பூம்புகார் சங்கர்பிள்ளை தலைமை வகித்தார். செயலாளர் பேராசிரியர் ஜெயராமன் வரவேற்றார்.
நிர்வாகிகள் அரவிந்தன், அரிகிருஷ்ணன், கோபால், ராஜ்குமார், சாமிநாதன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், இறால் ஏற்றுமதியாளர்கள் ஒன்றிணைந்து அவர்களுக்குள் விலைநிர்ணயம் செய்து இறால் விவசாயிகளுக்கு சரியான விலை தராமல், சந்தை மதிப்பை மறைத்து, குறைத்து விலை தருவதை கண்டிப்பது,
மத்திய, மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், உரிமம் வாங்குவது, புதுப்பிப்பதில் உள்ள தேவையற்ற காலதாமத்தை கண்டிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் நிர்வாகிகள் ஞானம், இளங்கோ, அக்பர், சுந்தர் பங்கேற்றனர். முடிவில் சரவணன் நன்றிக் கூறினார்.
- அ.தி.மு.க. சார்பில் சிதம்பரத்திலிருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் புத்தூரில் சாலை மறியலில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.
- கொள்ளிடம் ஒன்றிய மற்றும் கிளை நிர்வாகிகள் புத்தூர் நெடுஞ்சாலையில் ஒன்றுகூடி மணல் ஏற்றி வரும் லாரியை கண்காணித்தனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள பாலூரான்படுகை பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் அரசின் மணல் குவாரி இயங்கி வருகிறது.
இங்கு வரும் லாரிகள் மூலம் குறிப்பிட்ட அளவைவிட அதிக அளவு மண் ஏற்றி செல்ல படுவதாகவும், கட்டணம் அதிகம் வசூல் செய்யப்படுவதாகவும் கொள்ளிடம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் சிதம்பரத்திலிருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் புத்தூரில் சாலை மறியலில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் காலை மற்றும் மாலை ஆகிய இரு வேளைகளிலும் சீர்காழி தாசில்தார் அலுவலகத்தில் கொள்ளிடம் ஒன்றிய அதிமுக ஒன்றிய செயலாளர் நற்குணன் தலைமை யில் நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்ட சமாதானகூட்டம் நடைபெற்றது.
பேச்சுவார்த்தையின் முடிவில் புத்தூரில் நேற்று நடைபெற விருந்த சாலை மறியல் போராட்டம் தாசில்தார் செந்தில் முன்னிலையில் விலக்கி கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று அ.தி.மு.க.வை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட கொள்ளிடம் ஒன்றிய மற்றும் கிளை நிர்வாகிகள் புத்தூர் நெடுஞ்சாலையில் ஒன்றுகூடி மணல் ஏற்றி வரும் லாரியை கண்காணித்தனர்.
- மாவட்ட அளவில் வலைப்பந்து போட்டி நடைபெற்றது.
- எம்.ஜி.ஆர் அரசு கலைக் கல்லூரியை சேர்ந்த மாணவிகள்மாவட்ட த்திலேயே முதலிடம் பெற்று வெற்றி பெற்றனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள புத்தூர் எம்.ஜி.ஆர் அரசு கலைக்கல்லூரியில் மாவட்ட அளவில் வலைப்பந்து போட்டி நடைபெற்றது.
இதில் புத்தூர் எம்.ஜி.ஆர் அரசு கலைக் கல்லூரியை சேர்ந்த மாணவிகள்மாவட்ட த்திலேயே முதலிடம் பெற்று வெற்றி பெற்றனர்.
மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவிக ளுக்கு புத்தூர் கல்லூரியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கல்லூரி முதல்வர் விஜயலட்சுமி, உடற்கல்வி இயக்குனர் பிரபாகரன்,
கொள்ளிடம் சீனிவாசா மெட்ரிக் பள்ளி நிர்வாகி முருகேசன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவி களுக்கு பரிசு மற்றும் ரொக்கம் வழங்கி பாராட்டினர்.
நிகழ்ச்சியில் பெற்றோர், ஆசிரியர் மற்றும் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் விமர்சையாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
- பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சாத்துமுறை, புஷ்ப அலங்காரம் நடைபெற்றது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 108 திவ்ய தேசங்களில் 28-வது திவ்ய தேசமான தாடாளன் பெருமாள் என்னும் திருவிக்ரம நாராயண பெருமாள் கோயில் உள்ளது.
மூலவர் பெருமாள் தனது இடது பாதத்தை வான் நோக்கி தூக்கி உலகளந்த பெருமாளாக காட்சி தருகிறார்.
பிரசித்தி பெற்ற இக்கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் விமர்சையாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவில் முக்கிய நிகழ்வாக தங்க கருட சேவை நடைபெற்றது. முன்னதாக பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சாத்துமுறை, புஷ்ப அலங்காரம் நடைபெற்றது.
தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் தங்க கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி, தீபாராதனை நடந்தது.
பின்னர் பிரதான வீதிகளில் தங்க கருட வாகனத்தில் பெருமாள் வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
- கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணியை நாகை மாலி எம்.எல்.ஏ. தொடக்கி வைத்தார்.
- அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்க பேரணி நடைபெற்றது.
தரங்கம்பாடி:
தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கத்தின் முதல் மாநில மாநாடு மயிலாடுதுறையில் மாநில அமைப்பாளர் சாமி.நடராஜன் தலைமையில் தொடங்கியது.
முன்னதாக விஜயா திரையரங்கு அருகிலிருந்து கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணியை நாகை மாலி எம்.எல்.ஏ. தொடக்கி வைத்தார்.
அண்ணாசிலை, கிட்டப்பா அங்காடி, மணிக்கூண்டு, பட்டமங்கலத்தெரு தரங்கை சாலை வழியாக குடியிருப்போருக்கே அடிமனை சொந்தம், உழுபவருக்கே நிலம் சொந்தம் என்ற கோரிக்கைகள் தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறு முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.
மாநில அமைப்பாளர் சாமி.நடராஜன் தலைமையில் நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சண்முகம், நாகைமாலி எம்.எல்.ஏ., விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுப்ரமணியன், மாநில செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டில்லிபாபு, சங்கத்தின் மாநில அமைப்புக்குழுவின் நெ.இல.சீதரன் ஆகியோர் பேசினர்.
இதில் விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ், மாவட்ட தலைவர் சிம்சன், அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட செயலாளர் விஜய், மாவட்ட தலைவர் ராயர், மாவட்ட பொருளாளர் இயற்கை விவசாயி ராமலிங்கம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி காமராஜரிடம் இருந்து ரூ.16 லட்சத்து 40 ஆயிரம் வரை பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தராமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
- மோசடி புகார் தொடர்பாக விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னர் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
தரங்கம்பாடி:
தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ஊழியராக துர்காதேவி என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த காமராஜ் என்பவரின் மகன் விக்னேஸ்வரனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி காமராஜரிடம் இருந்து ரூ.16 லட்சத்து 40 ஆயிரம் வரை பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தராமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட காமராஜ் பணத்தை திருப்பி கேட்டபோது தொடர்ந்து பணத்தை தராமல் அலைக்கழித்ததாகவும், அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான காமராஜ் நேற்று திருக்கடையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அலுவலகம் முன்பு தனது மனைவி மற்றும் தாயுடன் தீக்குளிக்க முயன்றுள்ளார் .
தொடர்ந்து மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்ற போது போலீசார் தடுத்து அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர்.
மோசடி புகார் தொடர்பாக விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னர் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான எண்ணும், எழுத்தும் என்கிற பயிற்சி முகாம் தொடங்கியது.
- மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 100 -க்கும் மேற்பட்ட ஆசிரிய -ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் அமைந்துள்ள அரசு பெண்கள் மேல்நிலை–ப்பள்ளியில் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான எண்ணும், எழுத்தும் என்கிற பயிற்சி முகாம் தொடங்கியது.
குருக்கத்தி ஆசிரியர் பயிற்சி கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பாக நடைபெற்ற இம்முகாமில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 100 -க்கும் மேற்பட்ட ஆசிரிய -ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
முதன்மைக் கல்வி அலுவலர் நேர்முக உதவியாளர் பரமசிவம், சீர்காழி மாவட்ட கல்வி அலுவலர் செல்வராஜ், வட்டார கல்வி அலுவலர் பூங்குழலி மற்றும் நாகராஜன் வளமைய ஜெயசங்கர் உள்ளிட்டோர் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் கல்வித்துறை அதிகாரிகள் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் திரளான ஆசிரிய ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
- கொள்ளிடம் அருகே பழைய பாளையம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் இயங்கி வருகிறது.
- ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில் கேபிள் வயர் திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழைய பாளையம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் இயங்கி வருகிறது.
இந்த நிறுவன வளாகத்தில் விலை உயர்ந்த கேபிள் வயர்கள் மற்றும் இரும்பு பொருட்கள் உள்ளன.
இங்கு இருப்பு வைக்கப்பட்டுள்ள கேபிள் வயரை பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள இடத்திற்குள் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை வடக்கு தெருவைச் சேர்ந்த சத்யன் (வயது 24), கடலூர் சுனாமி நகர் வடக்கு தெருவை சேர்ந்த மதன் (28), கொள்ளிடம் அருகே உள்ள வழுதலைகுடி கிராமம் முத்து (26), செல்வராஜ்( 55) ஆகிய 4 பேரும் புகுந்து கேபிள் வயர்களை திருடும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது அதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அந்த 4 பேரையும் பிடித்து புதுப்பட்டினம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் மேற்கண்ட நான்கு பேரையும் கைது செய்து அவர்கள் பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
- சீர்காழி பகுதியில் அதிகளவு திருட்டு போகும் மிதிவண்டிகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
- தனிப்படை அமைத்து போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
சீர்காழி:
சீர்காழி நகரின் பல்வேறு பகுதிகளில் மிதிவண்டிகள் கடந்த சில நாட்களாக அதிக அளவு திருடு போகின்றன. சீர்காழி நகரில் தேர் தெற்கு வீதி உள்ளிட்ட இடங்களில் இரு தினங்களில் மூன்றுக்கு மேற்பட்ட மிதிவண்டிகள் திருடு போயின.
வீட்டு வாசலில் முன்பு வைத்து பூட்டி வைக்கப்பட்டிருந்த மிதிவண்டிகளை மர்ம நபர்கள் திருடிச் செல்வது சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளது.
சீர்காழியில் தற்போது அதிக அளவு பல்வேறு இடங்களில் மிதிவண்டிகள் திருட்டு போவது குறித்து புகார்கள் சீர்காழி காவல் நிலையத்தில் வருகின்றன.
மிதிவண்டிகளை திருடினால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டோர் புகார் அளிக்க மாட்டார்கள் என்ற நினைப்பில் தற்போது மிதிவண்டி திருட்டில் சிலர் ஈடுபடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
திருடப்படும் மிதிவண்டிகளை பிரித்து பழைய இரும்பு கடையில் விற்பனை செய்வதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதனை தனிப்படை அமைத்து போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
- மயிலாடுதுறை அருகே உலக சுற்றுசூழல் தினவிழா நடைபெற்றது.
- சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் மரம் நடுதலின் அவசியம் குறித்தும் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அருகே மேலையூர் கிராமத்தில் தனியார் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடைபெற்றது.
இவ்விழாவில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்து உரையாற்றினார்.
தொடர்ந்து தனியார் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டுவைத்து பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கியும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் மரம் நடுதலின் அவசியம் குறித்தும் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதில் பள்ளி மாணவர்கள், கிராம மக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






