அதிக அளவு திருட்டு போகும் மிதிவண்டிகள்

சீர்காழி பகுதியில் அதிகளவு திருட்டு போகும் மிதிவண்டிகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.தனிப்படை அமைத்து போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதிக அளவு திருட்டு போகும் மிதிவண்டிகள்
Published on

சீர்காழி:

சீர்காழி நகரின் பல்வேறு பகுதிகளில் மிதிவண்டிகள் கடந்த சில நாட்களாக அதிக அளவு திருடு போகின்றன. சீர்காழி நகரில் தேர் தெற்கு வீதி உள்ளிட்ட இடங்களில் இரு தினங்களில் மூன்றுக்கு மேற்பட்ட மிதிவண்டிகள் திருடு போயின.

வீட்டு வாசலில் முன்பு வைத்து பூட்டி வைக்கப்பட்டிருந்த மிதிவண்டிகளை மர்ம நபர்கள் திருடிச் செல்வது சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளது.

சீர்காழியில் தற்போது அதிக அளவு பல்வேறு இடங்களில் மிதிவண்டிகள் திருட்டு போவது குறித்து புகார்கள் சீர்காழி காவல் நிலையத்தில் வருகின்றன.

மிதிவண்டிகளை திருடினால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டோர் புகார் அளிக்க மாட்டார்கள் என்ற நினைப்பில் தற்போது மிதிவண்டி திருட்டில் சிலர் ஈடுபடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

திருடப்படும் மிதிவண்டிகளை பிரித்து பழைய இரும்பு கடையில் விற்பனை செய்வதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதனை தனிப்படை அமைத்து போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com