என் மலர்
மயிலாடுதுறை
- போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அவ்வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தினர்.
- சாராய பாட்டில்கள் ஒரு மூட்டையில் 50 பாட்டில்கள் வீதம் 28 மூட்டைகள் உள்ளது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவில் காவல் சரகம் மகாராஜபுரம் மெயின் ரோடு வழியாக காரில் சாராயம் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல்ககாிடைத்துள்ளது.
இதன்ரிபேரில் இரவு 9 மணியளவில் ரகசிய தகவலின் பேரில் செம்பனா ர்கோவில் இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வந்த காரை தடுத்து நிறுத்தினர். அப்பிபோது காரில் இருந்த 2 பேர் காரை விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.பின்னர் காரை சோதனையிட்டதில் அதில் மூட்டைகள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து காரை கைப்பற்றி, காவல் நிலையம் கொண்டு வந்தனர். இதில் சோதனையில் 28 மூட்டைகளில் (ஒரு மூட்டையில் 5 லிட்டர் கொண்ட சாராய பாக்கெட்டுகள் 5 உள்ளது) சாராயம் இருந்தது. சாராய பாட்டில்கள் ஒரு மூட்டையில் 50 பாட்டில்கள் வீதம் 28 மூட்டைகள் உள்ளது. மொத்தம் 56 மூட்டைகள் உள்ளது. 952 லிட்டர் கடத்தி வரப்பட்டது தெரியவந்துள்ளார்.இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காரில் வந்த
2 பேரையும் தீவிரமாக தேடிவருகின்றனர்.
- திருவிழாவை முன்னிட்டு நூற்றுகணக்கான பக்தர்கள் பால் குடம் எடுத்தும், அலகு காவடிகள் எடுத்தும் நேர்த்திகடன் செலுத்தினர்.
- இக்கோவிலில் ஆண்டு திருவிழா கடந்த 2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தென்பாதியில் காமாட்சி மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. பழைமை வாய்ந்த இக்கோவிலில் ஆண்டு திருவிழா கடந்த 2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய திருவிழாவான தீமிதி திருவிழா நடைபெற்றது. தீமிதியை முன்னிட்டு நூற்றுகணக்கான பக்தர்கள் பால் குடம் எடுத்தும், அலகு காவடிகள் எடுத்தும் நேர்த்திகடன் செலுத்தினர்.
பின்னர் நடைபெற்ற தீமிதி உற்ச்சவத்தின் போது காமாட்சி மகாமாரியம்மன் தீகுண்டம் அருகே எழுந்தருள சக்தி கரகத்தை தொடர்ந்து 200 க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து நேர்த்திகடன் செலுத்தி வழிபட்டனர். திருவிழாவில் தென்பாதி, சட்டநாதபுரம், கைவிளாஞ்சேரி, ஆகிய பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கன பக்தர்கள் கலந்து கொண்டு காமாட்சி மகாமாரியம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.
- விடுமுறை நாட்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தக்கூடாது என அரசிடம் வலியுறுத்தியுள்ளதை நடைமுறைப்படுத்த வேண்டும்.
- கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மறுக்க–ப்பட்டுள்ள சரண்டர் விடுப்பு திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், மயிலாடுதுறை மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு மாநில அமைப்புச் செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, திரு முருகவேல் முன்னிலை வகித்தனர் மாநில பொதுச்செயலாளர் இலா. தியோடர் ராபின்சன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அதன் பின்னர் தியோடர் ராபின்சன் செய்தியாளர்களிடம் கூறுகையில், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும் என்வும் சம வேலைக்கு சம ஊதியம் என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.அண்ணாவின் மீது ஆணையிட்டு தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்த தமிழக அரசு தன் பங்கேற்பு திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றார்.
மேலும் 3 சதவீத அகவிலைப்படியை மத்திய அரசு கடந்த ஜனவரி 1-ஆம் தேதியிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கியுள்ளது. அதே போன்று தமிழக அரசு ஊழியர்களுக்கும் அதே தேதியிட்டு 3 சதவீத அகவிலைப்படி வழங்க வேண்டும் எனவும் கேட்டு க்கொண்டார். கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மறுக்க–ப்பட்டுள்ள சரண்டர் விடுப்பு திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் எனவும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலர் வலியுறுத்தினார்.
அதோடு மருத்துவ கல்லூரியில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவது போன்றும் அரசு பள்ளியில் பயின்று மேற்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு ரூ.1000 தொகை வழங்கும் திட்டங்களை அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். விடுமுறை நாட்களில் இடைநிலை ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவது மன உளைச்சலையும், மன வேதனையைத் தருகிறது.
விடுமுறை நாட்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தக்கூடாது என அரசிடம் வலியுறுத்தியுள்ளதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார். அரசுப்பள்ளிகளில் எமிஸ் எண் பதிவேற்றம் செய்ய கட்டாயப்படுத்துவது ஆசிரியர்களுக்கு மன உளைச்சலுக்கு ஆளாகிறது. கிராம மற்றும் மலைப் பகுதிகளில் தேவையான அதிக திறன் கொண்ட இணைய வசதி சர்வர் பயன்பாட்டை ஏற்படுத்த வேண்டும். அரசுப் பள்ளிகளில் வைபை ஏற்படுத்தி தரவேண்டும் எனவும் கூறினார். இதில் வேல்மணி, பிரபு, செல்வம், வாகீசன், ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- கடல் சாகச பயணத்தின் ஐந்தாம் நாளான நேற்று பூம்புகார் துறைமுகத்தில் இருந்து காரைக்கால் நோக்கிச் செல்லும் பயணம் தொடங்கி உள்ளது.
- இந்தப் பயணத்தில் மூன்று கடற்படை அதிகாரிகளும் 4 தேசிய மாணவர் படை இணை அலுவலர்களும் பங்கேற்றுள்ளனர்
சீர்காழி:
ஜனவரி 2023 அன்று நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு நடத்தப்படும் போட்டிகளில் ஒன்றான கடல் சாகச பயணம் குறித்த போட்டிக்கான நிகழ்வாக சமுத்திரகமன் 2022 கடல் சாகச பயணம் புதுவையில் இருந்து காரைக்கால் சென்று மீண்டும் புதுவை திரும்புதல் நிகழ்வு அமைக்கப்பட்டுள்ளது.
கடலூர் 5 தமிழ்நாடு தேசிய மாணவர் படை, கப்பல் படை பிரிவு மற்றும் 1 புதுவை தேசிய மாணவர் கப்பல் படை மாணவர்கள் இணைந்து நடத்தும் கடல் சாகச பயணம் கடந்த 6-ந் தேதி காலை புதுவையில் துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைக்க நடைபெற்றது. இதில் 25 மாணவிகள் உள்பட 60 தேசிய மாணவர் படை மாணவர்கள் கடல் சாகச பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த கடல் சாகச பயணத்தின் ஐந்தாம் நாளான நேற்று பூம்புகார் துறைமுகத்தில் இருந்து காரைக்கால் நோக்கிச் செல்லும் பயணம் தொடங்கி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா கொடியசைத்து இந்த கடல் சாகச பயணத்தைத் பூம்புகாரில் தொடங்கி வைத்தார்.
இந்தக் குழுவினருடன் இந்தப் பயணத்தில் மூன்று கடற்படை அதிகாரிகளும் 4 தேசிய மாணவர் படை இணை அலுவலர்களும் பங்கேற்றுள்ளனர் இப்பய ணத்தில் மூன்று பாய்மரப் படகுகளில் மாணவர்கள் பயணிக்கின்றனர்.
இந்த குழுவினர் தாங்கள் செல்லும் இடங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் ரத்த தான முகாம் மரம் நடுதல் தூய்மைப்பணி திட்டம் எனப் பல சமூக சேவை சார்ந்த நிகழ்வுகளை நடத்த உள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக டி.பி.எம்.எல் கல்லூரியில் தேசிய மாணவர் படை சார்பில் இரத்த தான முகாம் நடைபெற்றது. அதை மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா தொடக்கி வைத்தார். தேசிய மாணவர் படை மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ரத்த தானம் அளித்தனர்.
- நகர்புற வளர்ச்சி துறையின் சார்பில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தததோடு பணிகளை விரைவாகவும் தரமாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்திரவிட்டேன்.
- சீர்காழி நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள குழநீர் மேல் நீர்தெக்க தொட்டிகள் மற்றும் அலுவலக தொடர்பான பணிகளையும் ஆய்வு செய்யப்பட்டது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி மற்றும் மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகர்புற வளர்ச்சித்துறையின் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர்லலிதா முன்னிலையில் நகராட்சி நிர்வாக இயக்குநர்பொன்னையா பார்வையிட்டு ஆய்வு மேற்க்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-
சீர்காழி நகராட்சியில் நகர்புற வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ் சீர்காழி அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் உட்புற நோயாளிகளுடன் தங்குவோர் கட்டிடம் கட்டிமுடிக்கப் பெற்றுள்ளதையும், வார்டு எண். 4 ஈசான்ய தெருவில் கசடு கழிவு நீர் சுத்தகரிப்பு நிலையம் ரூ.260 லட்சத்தில் கட்டப்பட்டு முடியும் தருவாயில் உள்ள கட்டிடத்தினையும், வார்டு எண். 4 ஈசான்ய தெருவில் எரிவாயு தகன மேடையும், மேலும் நகராட்சி உரகிடங்கில் ரூ.147.20 லட்சம் மதிப்பீட்டில் உயிரிய செயலாக்கு முறை அமைக்கும் பணி மற்றும் திடக்கழிவு மேலாண்மை குப்பைகளை தரம் பிரிக்கும் மையத்தினையும், சீர்காழி நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள குழநீர் மேல் நீர்தெக்க தொட்டிகள் மற்றும் அலுவலக தொடர்பான பணிகளையும் ஆய்வு செய்யப்பட்டது.
அதனைதொடர்ந்து மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட மணக்குடியில் ரூ.45 கோடி மதிப்பீட்டில் புதியதாக அமையவுள்ள பஸ் நிலைய இடத்தினையும், தருமபுரம் சாலை ராஜன்தோட்டத்தில் நகர்புற வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ.2.00 கோடி செலவில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நூலகத்துடன் கூடிய அறிவுசார் மையம் கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்தேன்.
முன்னதாக மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் மற்றும் கோப்புகளை ஆய்வு சேய்தேன். நகர்புற வளர்ச்சி துறையின் சார்பில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தததோடு பணிகளை விரைவாகவும் தரமாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்திரவிட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.
இவ்ஆய்வின்போது ராஜகுமார் எம்.எல்.ஏ, மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், மயிலாடுதுறை நகர்மன்றத் தலைவர்செல்வராஜ், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் ஜானகி ரவீந்திரன், சீர்காழி நகராட்சி ஆணையர்ராஜகோபாலன், நகராட்சி மண்டல செய ற்பொறியாளர்பார்த்திபன், மயிலாடுதுறை நகர்மன்ற உறுப்பினர்சம்பத், மயிலாடுதுறை நகராட்சி பொறியாளர்சனல்குமார் ஆகியோர் இருந்தனர்.
- இலகுரக மோட்டார் வாகனங்களை இயக்குவ தற்கான உரிமம் மற்றும் ஓட்டுநர் பணியில் குறை ந்தது 2 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் தங்களது மாற்றுசான்றிதழ், கல்வித் தகுதிக்கான மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ், ஓட்டுநர் உரிமம் முன் அனுபவ சான்றிதழ்களின்ஒளி நகல்களில் சுயசான்றொப்பமிட்டு விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மயிலாடுதுறை மாவட்ட தொழில் மையத்தில் காலியாக உள்ள ஓட்டுனர் பதவி பொதுப் போட்டி முன்னுரிமையற்றவர் ஒரு பணியிடத்திற்கு விண்ண ப்பங்கள் 30.6.2022 அன்று பிற்பகல் 5.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன.
கொரோனா பெருந்தோற்று காரணமாகக் அரசு பணிகளில் நேரடி நியமனம் செய்யப்படுவதற்கான வயது உச்சவரம்பினை தமிழ்நாடு அரசு இரண்டாண்டுகள் உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளதன்படி 13.9.2021 அன்று 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது பொதுப் பிரிவினருக்கு 32 வயதுக்குள்ளும், பிற்பட்ட மிகவும் பிற்பட்ட வகுப்பினருக்கு 34 வயதுக்குள்ளும் தாழ்த்த ப்பட்ட பழங்குடியினருக்கு 37 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். மேலும் கல்வித்தகுதி 8-ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இலகுரக மோட்டார் வாகனங்களை இயக்குவ தற்கான உரிமம் மற்றும் ஓட்டுநர் பணியில் குறை ந்தது 2 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.மேற்காணும் தகுதியுடை யவர்கள் தங்களின் விண்ண ப்பத்தினை வெள்ளைத் தாளில் எழுதி பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படம் ஒட்டி பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், 2-வது தளம், செந்தில்பைப் வளாகம், கச்சேரி சாலை, மயிலாடுதுறை-609001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் தங்களது மாற்றுசான்றிதழ், கல்வித் தகுதிக்கான மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ், ஓட்டுநர் உரிமம் முன் அனுபவ சான்றிதழ்களின்ஒளி நகல்களில் சுயசான்றொப்பமிட்டு விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
தேவையான சான்றிதழ்கள் இல்லாத விண்ணப்பங்களும் குறிப்பிட்ட காலக் கெடுவிற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்களும் கண்டி ப்பாக ஏற்றுக் கொள்ள இயலாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தளா மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
- ஓம் சக்தி ஓம் சக்தி என கோஷங்கள் எழுப்ப வானத்தில் கருடன் வட்டமிட விமானத்தில் உள்ள கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை செய்தனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, ஒழுகைமங்கலம் கிராமத்தில் சீதளா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு நேற்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனை முன்னிட்டு கடந்த 5 ஆம் தேதி பூர்வாங்க பூஜைகள் தொடங்கப்பட்டு 7-ம் தேதி மாலை முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
நேற்று காலை யாகசாலை நான்காம் கால பூஜைகள் முடிவுற்று பூர்ணாகுதி மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்றது.
இதனை தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு வேத விற்பனர்கள் கண்ணன் சிவாச்சாரியார் தலைமையில் ஓத, வானவேடிக்கையுடன் மங்கள வாத்தியங்கள் முழங்க கோவிலை வலம் வந்து அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களின் விமான கலசங்களை அடைந்தன.
அப்போது பக்தர்கள் ஓம் சக்தி ஓம் சக்தி என கோஷங்கள் எழுப்ப வானத்தில் கருடன் வட்டமிட விமானத்தில் உள்ள கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை செய்தனர்.
தொடர்ந்து கருவரையில் உள்ள அம்மன் சிலைக்கு புனித நீரை ஊற்றப்பட்டது. பின்னர் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சியில் பரம்பரை நிர்வாக அரங்காவர் லட்சுமி நாராயணன், அறங்காவர்கள் ராகவன், பத்மநாபன், வெங்கட்ட ரெங்கராஜ், நிவேதா முருகன் எம்.எல்.ஏ. மற்றும் பேரூராட்சி தலைவர் குடும்பத்தினர்கள், இந்து சமய அறநிலைய துறையினர், கோவில் பணியாளர்கள், கிராமவாசிகள் என ஏராளமானவர்கள் கலந்துக்கொன்டு சாமி தரிசனம் செய்தனர்.
- சீர்காழியில் அ.திமு.க நிர்வா கிகள் இல்ல திருமண விழாவில்கலந்து கொள்ள இணைஒருங்கி ணைப்பாளரும்முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி வந்தார்.
- அக்னி தீர்த்த புனித நீர் தெளித்துக் கொண்டு சுவேதாரண்யேஸ்வரர், பிர்ம்ம வித்யாம்பிகை அம்பாள், அகோர மூர்த்தி, புதன் சன்னிதி, காளி சன்னதிகளில் வழிபாடு செய்து தரிசனம் செய்தார்.
சீர்காழி:
சீர்காழியில் அ.திமு.க நிர்வா கிகள் இல்ல திருமண விழாவில்கலந்து கொள்ள இணைஒருங்கி ணைப்பாளரும்முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி வந்தார்.
அவர் திருவெண்காடு ஸ்ரீசுவேதார ண்யேஸ்வரர் சுவாமி கோயில் புதன் ஸ்தலத்தில் தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து அக்னி தீர்த்த புனித நீர் தெளித்துக் கொண்டு சுவேதாரண்யேஸ்வரர், பிர்ம்ம வித்யாம்பிகை அம்பாள், அகோர மூர்த்தி, புதன் சன்னிதி, காளி சன்னதிகளில் வழிபாடு செய்து தரிசனம் செய்தார்.
கோயிலுக்கு வருகை தந்த பக்தர்கள் எடப்பாடி பழனிச்சாமியுடன் செல்பி எடுத்துக்கொண்டனர். அப்போது முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பவுன்ராஜ், முன்னாள் எம். எல்.ஏ. சக்தி, நிர்வாகிகள் வி.ஜி.கே. செந்தில்நாதன், நாடி.செல்வமுத்துகுமரன் உள்ளிட்ட திரளான அ.தி.மு.க.வி னர்கள் உடனிரு ந்தனர்.
அதனைத் தொடர்ந்து திருக்கடையூர் அமிர்தகடே ஸ்வரர் சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
- குழந்தை திருஞானசம்பந்தர் ஐம்பொன் சிலை கடந்த 1965-ம் ஆண்டு திருட்டு போனது.
- தமிழக சிலை கடத்தல் தடுப்பு போலீசார் மூலம் காணாமல் போன குழந்தை திருஞானசம்பந்தர் சிலை திருஞானசம்பந்தர் சிலை உட்பட 10 சிலைகள் ஆஸ்திரேலியாவில் அருங்காட்சியகத்தில் இருந்து இந்திய வெளியுறவுத்துறை மூலம் மீட்கபட்டு தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி ஜெயந்த்முரளி ஆகியோரிடம் ஒப்படைக்க ப்பட்டது.
சீர்காழி:
சீர்காழி அருகே மேலையூர் சாயாவனம் பகுதியில் கோசாம்பிகை உடனாகிய ரத்தின சாயாவனேஸ்வரர் அமைந்துள்ளது. இக்கோயிலிலுள்ள குழந்தை திருஞானசம்பந்தர் ஐம்பொன் சிலை கடந்த 1965-ம் ஆண்டு திருட்டு போனது.
இந்த நிலையில் தமிழக சிலை கடத்தல் தடுப்பு போலீசார் மூலம் காணாமல் போன குழந்தை திருஞானசம்பந்தர் சிலை திருஞானசம்பந்தர் சிலை உட்பட 10 சிலைகள் ஆஸ்திரேலியாவில் அருங்காட்சியகத்தில் இருந்து இந்திய வெளியுறவுத்துறை மூலம் மீட்கபட்டு தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி ஜெயந்த்முரளி ஆகியோரிடம் ஒப்படைக்க ப்பட்டது.
பின்பு சுவாமி சிலைகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு மூலம் கும்பகோணம் சிறப்பு நீதி மன்றத்தில் ஒப்படைக்கப்பட்டடது.
இந்நிலையில் நேற்று இரவு இந்துசமய அறநிலைய இணை ஆணையர் மோகன சுந்தரம் வழிகாட்டுதலின்படி கோயில் செயல் அலுவலர் அன்பரசன் மூலம் சாயாவனம் கோயிலுக்கு திருஞானசம்பந்தருக்கு சிலை கொண்டுவரப்பட்டது. அப்போது கிராம மக்கள் கூடி நின்று வரவேற்று தரிசித்தனர்.
பின்னர் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு திருஞானசம்பந்தர் சிலைக்கு தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்பு திருஞானசம்பந்தர் சிலை பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
- பல ஆண்டு காலமாக நடந்து வந்த பட்டின பிரவேச நிகழ்ச்சியை தி.மு.க. அரசு வேண்டுமென்றே தடை செய்ய முயற்சி செய்தது.
- அதனை கண்டித்து அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் குரல் கொடுத்த பிறகே தடையை விலக்கியது.
குத்தாலம்:
மயிலாடுதுறையில் இன்று அ.தி.மு.க. நிர்வாகிகள் இல்ல திருமண விழாவை முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடத்தி வைத்தார்.
முன்னதாக அவர் மயிலாடுதுறை தருமபுர ஆதீன மடத்துக்கு சென்றார். அங்கு அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
இதையடுத்து தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார். அவருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
பின்னர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
டெல்டா பாசன விவசாயிகளுக்கு வெள்ள காலங்களிலும், வறட்சி காலங்களிலும் உடனடியாக நிவாரணத்தையும் இழப்பீடும் வழங்கியது அ.தி.மு.க அரசு தான். விவசாயிகளை பாதுகாக்க டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததும் அ.தி.மு.க. அரசு தான். ஆனால் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கான கையெழுத்திட்டது தி.மு.க. என்பதை மக்கள் மறக்க மாட்டார்கள்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் அரசு ஆய்வு குறித்து அறிக்கை அளிக்காதது ஏன் என்ற கேள்விக்கு மதம், கோவில் சம்பந்தப்பட்டது. முழு விவரம் தெரிவிக்கப்பட்ட பின்னர்தான் அறிக்கை வெளியிட முடியும் என்கின்றனர். எல்லா மதத்தையும் சமமாக பார்க்க வேண்டும். மதத்திற்குள் யாரும் நுழையக்கூடாது. ஒவ்வொரு கோவிலுக்கு என்று வழிமுறைகள் இருக்கிறது. அதற்கென்று சட்டரீதியாக பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
ஆதீனத்தில் வேண்டுமென்றே திட்டமிட்டு தி.மு.க. அரசு மூக்கை நுழைக்க பார்க்கிறார்கள். இது கண்டிக்கத்தக்கது. பல ஆண்டு காலமாக நடந்து வந்த பட்டின பிரவேச நிகழ்ச்சியை தி.மு.க. அரசு வேண்டுமென்றே தடை செய்ய முயற்சி செய்தது. அதனை கண்டித்து அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் குரல் கொடுத்த பிறகே தடையை விலக்கியது.
தமிழகத்தில் ஆளும் கட்சியைத் தவிர மற்ற அனைத்துமே எதிர்க்கட்சிகள் தான். ஆனால் அ.தி.மு.க.வே பிரதான எதிர்கட்சி.
இவ்வாறு அவர் கூறினார்.
- இப்பயிற்சியில் கருத்தாளர்கள் நடித்தல் கதை கூறுதல் பேசுதல் விளையாடுதல் பாடுதல் மற்றும் வரைதல் ஆகிய செயல்பாடுகளை ஆசிரியர்களிடம் செய்து காட்டி பயிற்சி அளித்தனர்.
- இப்பயிற்சியில் கருத்தாளர்கள் உட்பட 138 ஆசிரியர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
சீர்காழி:
கொள்ளிடம் வட்டார வள மையத்தின் சார்பாக தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி 5 நாள் பயிற்சியாக நடைபெற்று வருகின்றது.இப்பயிற்சியின் தொடக்க விழா துளசேந்திரபுரம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
பள்ளியின் தலைமை ஆசிரியர் பழனிவேல் தலைமையேற்றார் மாவட்ட உதவி விட்ட அலுவலர் ஞானசேகரன் தொடங்கிவைத்தார். வட்டரா கல்வி அலுவலர்கள் சரஸ்வதி சீனிவாசன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஞான புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டரா வள மைய ஆசிரியர் பயிற்றுநர் ஐசக் ஞானராஜ் வரவேற்புரையாற்றினார்.
இப்பயிற்சியில் கருத்தாளர்கள் நடித்தல் கதை கூறுதல் பேசுதல் விளையாடுதல் பாடுதல் மற்றும் வரைதல் ஆகிய செயல்பாடுகளை ஆசிரியர்களிடம் செய்து காட்டி பயிற்சி அளித்தனர்.
மையத்தை இணை இயக்குநர் பாஸ்கர் சேதுபதி பார்வையிட்டு பயிற்சி சிறப்பாக நடைபெற்று வருகின்றது என்று பாராட்டினார்.இப்பயிற்சியில் கருத்தாளர்கள் உட்பட 138 ஆசிரியர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இப்பயிற்சியின் கருத்தாளர்களாக பாலாகிருஷ்ணன் இராமன் சிங்கரவேல ராஜேஸ்வரி ஆகியோர் செயல்பட்டனர். ஐந்து நாள் பயிற்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் செய்து இருந்தார்.கருத்தாளர் கம்பன் நன்றி கூறினார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கத்தின் முதல் மாநில மாநாடு, அமைப்பின் மாநில அமைப்பாளர் சாமி.நடராஜன் தலைமையில் நடைப்பெற்றது. வரவேற்பு க்குழு தலைவர் துரைராஜ் வரவேற்று பேசினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில செய லாளர் டில்லிபாபு மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார்.
அரசாணை 318 -ஐ உடன் செயல்படுத்திட தமிழக அரசு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும், குத்தகை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு குத்தகை பதிவு உரிமை வழங்க வேண்டும்என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் புதிய மாநிலக்கு ழு, மாநில நிர்வாகிகள் தேர்வு நடைப்பெற்றது. இதில் சங்கத்தின் புதிய மாநில முதல் செயலாளராக சாமி.நடராஜன், தலைவராக செல்வம், பொருளாளராக துரைராஜ், துணைத் தலைவ ர்களாக சீதரன், ஜெயராமன், ஜீவபாரதி, பாண்டியன், துணை செயலாளர்களாக குணசேகரன், துரைராஜ், சபாபதி, ஹேமாவதி ஆகியோர் உள்ளடக்கிய 41 பேர் கொண்ட புதிய மாநிலக்குழுவும் தேர்வு செய்யப்பட்டது.
புதிய நிர்வாகிகளை அறிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சண்முகம் நிறைவுரையா ற்றினார். இந்த மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் தலைவர் சீனிவாசன், மாவட்டக்குழு சிம்சன், ஸ்டாலின், செம்பனார்கோவில் வடக்குஒன்றிய செயலாளர் மாக்ஸ், தெற்கு ஒன்றியசெயலாளர் ரவிச்சந்திரன், மயிலாடு துறை இயற்கை விவசாயி ராமலிங்கம் உள்ளிட்டோர் ஏராளமான வர்கள் கலந்துக் கொ ண்டனர். முடிவில் வரவேற்பு குழு செயலாளர் விஜய் நன்றி கூறினார்.






