search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sea adventure trip"

    • கடல் சாகச பயணத்தின் ஐந்தாம் நாளான நேற்று பூம்புகார் துறைமுகத்தில் இருந்து காரைக்கால் நோக்கிச் செல்லும் பயணம் தொடங்கி உள்ளது.
    • இந்தப் பயணத்தில் மூன்று கடற்படை அதிகாரிகளும் 4 தேசிய மாணவர் படை இணை அலுவலர்களும் பங்கேற்றுள்ளனர்

    சீர்காழி:

    ஜனவரி 2023 அன்று நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு நடத்தப்படும் போட்டிகளில் ஒன்றான கடல் சாகச பயணம் குறித்த போட்டிக்கான நிகழ்வாக சமுத்திரகமன் 2022 கடல் சாகச பயணம் புதுவையில் இருந்து காரைக்கால் சென்று மீண்டும் புதுவை திரும்புதல் நிகழ்வு அமைக்கப்பட்டுள்ளது.

    கடலூர் 5 தமிழ்நாடு தேசிய மாணவர் படை, கப்பல் படை பிரிவு மற்றும் 1 புதுவை தேசிய மாணவர் கப்பல் படை மாணவர்கள் இணைந்து நடத்தும் கடல் சாகச பயணம் கடந்த 6-ந் தேதி காலை புதுவையில் துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைக்க நடைபெற்றது. இதில் 25 மாணவிகள் உள்பட 60 தேசிய மாணவர் படை மாணவர்கள் கடல் சாகச பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த கடல் சாகச பயணத்தின் ஐந்தாம் நாளான நேற்று பூம்புகார் துறைமுகத்தில் இருந்து காரைக்கால் நோக்கிச் செல்லும் பயணம் தொடங்கி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா கொடியசைத்து இந்த கடல் சாகச பயணத்தைத் பூம்புகாரில் தொடங்கி வைத்தார்.

    இந்தக் குழுவினருடன் இந்தப் பயணத்தில் மூன்று கடற்படை அதிகாரிகளும் 4 தேசிய மாணவர் படை இணை அலுவலர்களும் பங்கேற்றுள்ளனர் இப்பய ணத்தில் மூன்று பாய்மரப் படகுகளில் மாணவர்கள் பயணிக்கின்றனர்.

    இந்த குழுவினர் தாங்கள் செல்லும் இடங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் ரத்த தான முகாம் மரம் நடுதல் தூய்மைப்பணி திட்டம் எனப் பல சமூக சேவை சார்ந்த நிகழ்வுகளை நடத்த உள்ளனர்.

    இதன் ஒரு பகுதியாக டி.பி.எம்.எல் கல்லூரியில் தேசிய மாணவர் படை சார்பில் இரத்த தான முகாம் நடைபெற்றது. அதை மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா தொடக்கி வைத்தார். தேசிய மாணவர் படை மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ரத்த தானம் அளித்தனர்.

    ×