என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூரண கும்ப மரியாதை"

    • சீர்காழியில் அ.திமு.க நிர்வா கிகள் இல்ல திருமண விழாவில்கலந்து கொள்ள இணைஒருங்கி ணைப்பாளரும்முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி வந்தார்.
    • அக்னி தீர்த்த புனித நீர் தெளித்துக் கொண்டு சுவேதாரண்யேஸ்வரர், பிர்ம்ம வித்யாம்பிகை அம்பாள், அகோர மூர்த்தி, புதன் சன்னிதி, காளி சன்னதிகளில் வழிபாடு செய்து தரிசனம் செய்தார்.

    சீர்காழி:

    சீர்காழியில் அ.திமு.க நிர்வா கிகள் இல்ல திருமண விழாவில்கலந்து கொள்ள இணைஒருங்கி ணைப்பாளரும்முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி வந்தார்.

    அவர் திருவெண்காடு ஸ்ரீசுவேதார ண்யேஸ்வரர் சுவாமி கோயில் புதன் ஸ்தலத்தில் தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து அக்னி தீர்த்த புனித நீர் தெளித்துக் கொண்டு சுவேதாரண்யேஸ்வரர், பிர்ம்ம வித்யாம்பிகை அம்பாள், அகோர மூர்த்தி, புதன் சன்னிதி, காளி சன்னதிகளில் வழிபாடு செய்து தரிசனம் செய்தார்.

    கோயிலுக்கு வருகை தந்த பக்தர்கள் எடப்பாடி பழனிச்சாமியுடன் செல்பி எடுத்துக்கொண்டனர். அப்போது முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பவுன்ராஜ், முன்னாள் எம். எல்.ஏ. சக்தி, நிர்வாகிகள் வி.ஜி.கே. செந்தில்நாதன், நாடி.செல்வமுத்துகுமரன் உள்ளிட்ட திரளான அ.தி.மு.க.வி னர்கள் உடனிரு ந்தனர்.

    அதனைத் தொடர்ந்து திருக்கடையூர் அமிர்தகடே ஸ்வரர் சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

    ×