search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கட்டாய எமிஸ் பதிவேற்றத்தால் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு மன உளைச்சல் - ஆசிரியர் மன்ற மாநில பொதுச் செயலாளர் குற்றச்சாட்டு
    X

    தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச் செயலாளர் தியோடர் ராபின்சன் பேட்டியளித்தார்.

    கட்டாய எமிஸ் பதிவேற்றத்தால் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு மன உளைச்சல் - ஆசிரியர் மன்ற மாநில பொதுச் செயலாளர் குற்றச்சாட்டு

    • விடுமுறை நாட்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தக்கூடாது என அரசிடம் வலியுறுத்தியுள்ளதை நடைமுறைப்படுத்த வேண்டும்.
    • கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மறுக்க–ப்பட்டுள்ள சரண்டர் விடுப்பு திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், மயிலாடுதுறை மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு மாநில அமைப்புச் செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, திரு முருகவேல் முன்னிலை வகித்தனர் மாநில பொதுச்செயலாளர் இலா. தியோடர் ராபின்சன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

    அதன் பின்னர் தியோடர் ராபின்சன் செய்தியாளர்களிடம் கூறுகையில், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும் என்வும் சம வேலைக்கு சம ஊதியம் என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.அண்ணாவின் மீது ஆணையிட்டு தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்த தமிழக அரசு தன் பங்கேற்பு திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றார்.

    மேலும் 3 சதவீத அகவிலைப்படியை மத்திய அரசு கடந்த ஜனவரி 1-ஆம் தேதியிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கியுள்ளது. அதே போன்று தமிழக அரசு ஊழியர்களுக்கும் அதே தேதியிட்டு 3 சதவீத அகவிலைப்படி வழங்க வேண்டும் எனவும் கேட்டு க்கொண்டார். கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மறுக்க–ப்பட்டுள்ள சரண்டர் விடுப்பு திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் எனவும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலர் வலியுறுத்தினார்.

    அதோடு மருத்துவ கல்லூரியில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவது போன்றும் அரசு பள்ளியில் பயின்று மேற்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு ரூ.1000 தொகை வழங்கும் திட்டங்களை அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். விடுமுறை நாட்களில் இடைநிலை ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவது மன உளைச்சலையும், மன வேதனையைத் தருகிறது.

    விடுமுறை நாட்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தக்கூடாது என அரசிடம் வலியுறுத்தியுள்ளதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார். அரசுப்பள்ளிகளில் எமிஸ் எண் பதிவேற்றம் செய்ய கட்டாயப்படுத்துவது ஆசிரியர்களுக்கு மன உளைச்சலுக்கு ஆளாகிறது. கிராம மற்றும் மலைப் பகுதிகளில் தேவையான அதிக திறன் கொண்ட இணைய வசதி சர்வர் பயன்பாட்டை ஏற்படுத்த வேண்டும். அரசுப் பள்ளிகளில் வைபை ஏற்படுத்தி தரவேண்டும் எனவும் கூறினார். இதில் வேல்மணி, பிரபு, செல்வம், வாகீசன், ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Next Story
    ×