search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Slave"

    • மாணவர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாகி மீளமுடியாமல் வாழ்க்கை வீணாகிறது.
    • தீமைகளிலிருந்து மாணவர்கள் தங்களை காப்பாற்றி கொள்ள வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் சார்பில் சர்வதேச போதை ஒழிப்பு தின கருத்தரங்கம் திருத்துறைப்பூண்டி அரசு கலை கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் மலர்மதி தலைமை தாங்கினார். பாரதமாதா சேவை நிறுவனங்களின் நிறுவனர் எடையூர் மணிமாறன் முன்னிலை வகித்தார். மத்திய பல்கலைக்கழக உதவி பேராசிரியர் சித்ரா அனைவரையும் வரவேற்றார். சமூக பணித்துறை தலைவர் பேராசிரியர் சிகாமணி உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக திருத்துறைப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன் கலந்து கொண்டு பேசுகையில்:- போதை பொருட்களுக்கு மாணவர்கள் அதிகளவில் அடிமையாகி வருகின்றனர். இதனால் அதிலிருந்து மீளமுடியாமல் அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடுகிறது. இதன் தீமைகளை அறிந்து கொண்டு மாணவர்கள் தங்களை காப்பாற்றி கொள்ள வேண்டும். இது போன்ற செயல்களில் யார் ஈடுபட்டாலும் காவல்துறை கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும், மேலும் மாணவர்கள் தங்களை நல்வழிபடுத்தி கொள்ள காவல்துறை எல்லா நேரங்களிலும் துணை நிற்கும் என்றார்.

    போதை பழக்கத்ததால் ஏற்படும் தீமைகள் குறித்து டாக்டர். திலீபன் ராஜா விளக்கினார். ஒருங்கிணைந்த சேவை மைய உளவியலாளர் ராஜேஸ்வரி போதை பழக்கத்தில் இருந்து மீள்வது குறித்து கூறினார். போக்குவரத்து இன்ஸ்பெக்டர் இளங்கிள்ளிவளவன் கலந்துகொண்டு பேசினார்.

    முடிவில் மத்திய பல்கலைக்கழக விரிவுரையாளர் சரண்யா சுந்தர்ராஜ் நன்றி கூறினார்.

    • கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணியை நாகை மாலி எம்.எல்.ஏ. தொடக்கி வைத்தார்.
    • அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்க பேரணி நடைபெற்றது.

    தரங்கம்பாடி:

    தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கத்தின் முதல் மாநில மாநாடு மயிலாடுதுறையில் மாநில அமைப்பாளர் சாமி.நடராஜன் தலைமையில் தொடங்கியது.

    முன்னதாக விஜயா திரையரங்கு அருகிலிருந்து கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணியை நாகை மாலி எம்.எல்.ஏ. தொடக்கி வைத்தார்.

    அண்ணாசிலை, கிட்டப்பா அங்காடி, மணிக்கூண்டு, பட்டமங்கலத்தெரு தரங்கை சாலை வழியாக குடியிருப்போருக்கே அடிமனை சொந்தம், உழுபவருக்கே நிலம் சொந்தம் என்ற கோரிக்கைகள் தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறு முழக்கங்களை எழுப்பினர்.

    பின்னர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.

    மாநில அமைப்பாளர் சாமி.நடராஜன் தலைமையில் நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சண்முகம், நாகைமாலி எம்.எல்.ஏ., விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுப்ரமணியன், மாநில செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டில்லிபாபு, சங்கத்தின் மாநில அமைப்புக்குழுவின் நெ.இல.சீதரன் ஆகியோர் பேசினர்.

    இதில் விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ், மாவட்ட தலைவர் சிம்சன், அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட செயலாளர் விஜய், மாவட்ட தலைவர் ராயர், மாவட்ட பொருளாளர் இயற்கை விவசாயி ராமலிங்கம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    மன்னார்குடி அருகே கொத்தடிமைகளாக இருந்து ஆடுமேய்த்த 2 சிறுவர்கள் மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மன்னார்குடி:

    படிக்கும் வயதில் சிறுவர்-சிறுமிகளை வேலைக்கு சேர்க்க கூடாது என்றும், அவ்வாறு சேர்ப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இருந்த போதிலும் சிறுவர்களை வேலைக்கு சேர்ப்பதும், கொத்தடிமைகளாக வைத்திருப்பதும் தொடர்ந்து வருகிறது.

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ராமாபுரம் ஊராட்சிக்குட்பட்ட நாகராஜபுரத்தில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை சேர்ந்த அருள்பாண்டி (வயது 14) கண்ணன் (13) ஆகிய சிறுவர்கள் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கார்மேகம் என்பவர் நிலத்தில் ஆடுமேய்க்கும் கொத்தடிமைகளாக பணியாற்றுவதாக திருவாரூர் மாவட்ட சைல்டுலைன் அமைப்பிற்கு தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து நாகராஜபுரம் விரைந்த சைல்டுலைன் அமைப்பின் பணியாளர்கள் சி.பிரகலாதன், ஏ.முருகேஷ், காந்திமதி, மரகதமணி ஆகியோர் வயலில் ஆடுமேய்த்துக்கொண்டிருந்த சிறுவர்களை மீட்டு மன்னார்குடி கோட்டாட்சியர் பத்மாவதி முன்னிலையில் ஆஜர்படுத்தி திருவாரூர் குழந்தைகள் குழுமத்திடம் ஒப்படைத்தனர், மன்னார்குடி அருகே கொத்தடிமைகளாக இருந்த 2 சிறுவர்கள் மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    ×