search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "children's rescue"

    • கடந்த 6 மாதத்தில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்
    • குழந்தைகள் உதவி குழு ஆலோசனைக் கூட்டம் நடந்தது

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ரெயில்வே குழந்தைகள் உதவி மையம்

    குழந்தைகள் பாதுகாப்பு குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை அதிகாரிகள், ரெயில் நிலைய அதிகாரிகள், ரெயில்வே காவல் நிலைய போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார், உள்ளிட்டவர்களை உள்ளடக்கி மாதந்தோறும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும் குழந்தைகள் உதவி குழு கூட்டம் நடத்தப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று ரெயில் நிலையத்தில் நடந்த குழந்தைகள் உதவி குழு ஆலோசனைக் கூட்டத்திற்கு ரெயில்வே குழந்தைகள் மைய திட்ட ஒருங்கிணை ப்பாளர் ஆனந்தராஜ் தலைமை தாங்கினார்.

    திருப்பத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமாவளவன், ஜோலார்பேட்டை ெரயில் நிலைய மேலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழந்தைகள் பாதுகாப்பு உதவி அலுவலர் பிரசாந்த் வரவேற்றார்.

    ஆலோசனைக் கூட்டத்தில் குழந்தைகள் உதவிக் குழுவினர் பலர் பங்கேற்றனர். இதில் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ் பேசியதாவது:-

    குழந்தைகளை கடந்த 6 மாதங்களில் ஜோலார்பேட்டை ரெயில்வே குழந்தைகள் உதவி மையம் சார்பில் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களையும், மாவட்டங்களையும் சேர்ந்த 150 குழந்தைகளை மீட்டு சிறுவர்களையும் மீட்டு அவர்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகளை கூறி குழந்தை உதவிக்குழு அலுவலரிடம் ஒப்படைத்து பின்னர் அவர்களின் வாழ்க்கைக்கு தேவையான அறிவுரைகளை வழங்கி அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    மேலும் ஆதரவற்ற வர்களை வேலூர் பெண்கள் தற்காப்பு காப்பகத்திலும், குழந்தை நல காப்பகத்திலும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் இது மட்டுமல்லாமல் மீட்கப்பட்ட குழந்தைகள் ஊருக்கு சென்று அங்குள்ள பொதுமக்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    மேலும் இந்த ஒரு ஆண்டில் மட்டும் 250 குழந்தைகள் ெரயில் நிலையத்தில் மீட்டு பெற்றோரிடமும் காப்பகத்திலும் பாதுகாப்பான முறையில் ஒப்படைக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.

    மன்னார்குடி அருகே கொத்தடிமைகளாக இருந்து ஆடுமேய்த்த 2 சிறுவர்கள் மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மன்னார்குடி:

    படிக்கும் வயதில் சிறுவர்-சிறுமிகளை வேலைக்கு சேர்க்க கூடாது என்றும், அவ்வாறு சேர்ப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இருந்த போதிலும் சிறுவர்களை வேலைக்கு சேர்ப்பதும், கொத்தடிமைகளாக வைத்திருப்பதும் தொடர்ந்து வருகிறது.

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ராமாபுரம் ஊராட்சிக்குட்பட்ட நாகராஜபுரத்தில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை சேர்ந்த அருள்பாண்டி (வயது 14) கண்ணன் (13) ஆகிய சிறுவர்கள் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கார்மேகம் என்பவர் நிலத்தில் ஆடுமேய்க்கும் கொத்தடிமைகளாக பணியாற்றுவதாக திருவாரூர் மாவட்ட சைல்டுலைன் அமைப்பிற்கு தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து நாகராஜபுரம் விரைந்த சைல்டுலைன் அமைப்பின் பணியாளர்கள் சி.பிரகலாதன், ஏ.முருகேஷ், காந்திமதி, மரகதமணி ஆகியோர் வயலில் ஆடுமேய்த்துக்கொண்டிருந்த சிறுவர்களை மீட்டு மன்னார்குடி கோட்டாட்சியர் பத்மாவதி முன்னிலையில் ஆஜர்படுத்தி திருவாரூர் குழந்தைகள் குழுமத்திடம் ஒப்படைத்தனர், மன்னார்குடி அருகே கொத்தடிமைகளாக இருந்த 2 சிறுவர்கள் மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    ×