என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    • இலுப்பூர் ஊராட்சி வடக்கு தெருவில் உள்ள பாலம் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக சேதமடைந்துள்ளது.
    • முடிகண்ட–நல்லூரில் அங்கன்வாடி கட்டிடம் அமைத்து தர வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் பாஸ்கரன், ஒன்றிய ஆணையர் மஞ்சுளா, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஒன்றிய மேலாளர் கோவிந்தராஜ் வரவேற்றார்.

    கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசிய விவரம் வருமாறு.

    சுப்பிரமணியன்:-

    கஞ்சாநகரம் கிராமத்தில் கல்வெட்டை சீரமைக்க வேண்டும். மங்கனூர் கிராமத்தில் கடந்த 1997- 98 ம் ஆண்டு கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும்.

    தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால் செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளையும் ஆய்வு செய்து வடிகால் வசதி, சாலை சீரமைப்பு போன்ற அடிப்படை வசதிகளை சரி செய்ய வேண்டும்.

    தேவிகா:-

    இலுப்பூர் ஊராட்சியில் வடக்கு தெருவில் உள்ள பாலம் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக சேதமடைந்து உள்ளது.

    அந்த வழியாக பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் செல்லும்போது பாலம் உடைந்து சேதம் ஏற்படுமோ என்ற அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

    எனவே உடைந்த பாலத்தை உடனே சீரமைத்து தர வேண்டும்.

    ராணி:-

    திருச்சம்பள்ளி வண்ணாங்குளம் படித்துறையை சீரமைக்க வேண்டும். முடிகண்டநல்லூரில் அங்கன்வாடி அமைப்பதற்கான இடம் உள்ளது.

    அங்கு அங்கன்வாடி அமைத்து தர வேண்டும்.

    இதனைத் தொடர்ந்து ஒன்றியக்குழு தலைவர் பேசுகையில், செம்பனார்–கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் குடிநீர், சாலை வசதி மற்றும் மக்களின் அடிப்படை வசதிகள் அனைத்தும் நேரில் சென்று பார்வையிட்டு நிறைவேற்றப்படும்.

    மேலும் தற்போது மழைக்காலமாக இருப்பதால் சரியாக வடிகால் வசதி இல்லாத ஊராட்சிகளில் வடிகால் வசதி ஏற்படுத்தி தரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இவ்வாறு விவாதம் நடந்தது.

    இந்நிகழ்ச்சியில் பொறியா ளர்கள் முத்து, சோமு, மாவட்ட கவுன்சிலர்கள், அனைத்து துறை அலுவலர்கள் கலந்துக்கொன்டனர். நிகழ்ச்சியின் முடிவில் இடைநிலை அலுவலர் முருகன் நன்றி கூறினர்.

    • காரைக்காலில் இருந்து பாக்கெட் சாராயத்தை கடத்திவந்து பதுக்கி வைத்து விற்பனை.
    • போலீசார் விமல்ராஜை கைது செய்து சாராய பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் பல்வேறு இடங்களில் கள்ள சாராயம் விருப்பதாக மயிலாடுதுறை மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்ததை முன்னிட்டு பல்வேறு இடங்களில் வாகன சோதனைகள் நடத்தப்பட்டன.

    அப்போது ராஜாத் தெரு, திருவிழந்தூர் பல்லவராயன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் மகன் விமல்ராஜ் (வயது 20). இவர் காரைக்காலிருந்து பாக்கெட் சாராயத்தை கடத்திவந்து பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

    இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையிலான அன்பரசன் உள்ளிட்ட போலீசார் சாராயம் விற்பனை செய்து வந்த விமல்ராஜை கைது செய்து சாராய பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

    • கொள்ளிடம் ஆற்றில் படுகை உள்ளே உள்ள 4 கிராமங்களில் வெள்ளநீர் முழுவதுமாக சூழ்ந்துள்ளது.
    • கிராம மக்கள் தங்கள் உடமைகள் மற்றும் கால்நடைகளுடன் வெளியேறி வருகின்றனர்.

    சீர்காழி:

    கர்நாடகா மாநிலம் மற்றும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் வெள்ள நீர் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் வெள்ள நீர் முழுவதுமாக கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    கொள்ளிடம் ஆற்று திறக்கப்பட்டுள்ள வெள்ள நீரானது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஆற்றின் வழியே சென்று பழையாறு அருகே கடலில் கலந்து வருகிறது.

    இரண்டு லட்சம் கன அடிக்கு மேல் வெள்ள நீர் சென்று வரும் நிலையில் கொள்ளிடம் ஆற்றின் படுகை உள்ளே அமைந்துள்ள திட்டு கிராமங்களான நாதல்படுகை, முதலைமேடு திட்டு, வெள்ளைமணல், கோரை திட்டு உள்ளிட்ட 4 கிராமங்களில் வெள்ள நீர் முழுவதுமாக சூழ்ந்துள்ளது

    இதனால் அப்பகுதியில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்த தால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

    திட்டு கிராமங்களுக்கு செல்லும் சாலைகள் முழுவதும் வெள்ள நீரால் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் கிராமங்களில் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் தங்கள் உடமைகள் மற்றும் கால்நடைகளுடன் மேடான பகுதிக்கு தொடர்ந்து வெளியேறி வருகின்றனர்.

    கிராமங்களில் இருந்து வெளியேறிய மக்களுக்கு கரைகளில் முகாம்கள் அமைக்கப்பட்டு உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.

    மூன்றாவது நாளாக இன்றும் வெள்ளப்பெருக்கு குறையாததால் அன்றாட தேவைக்காக பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் படகுகளின் மூலமாகவே வெளியேறி வருகின்றனர்.

    • முத்து நகரில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றனர்.
    • இரவு நேரங்களில் பாம்பு, நாய்கள் தொல்லையால் மக்கள் அவதியடைந்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே முத்துநகரில் வசிக்கும் நகர் வாசிகள் தங்களது சொந்தசெலவிலேயே தெருவிளக்குகளை அமைத்து புதன்கிழமை பயன்பாட்டிற்கு தொடங்கிவைத்தனர்.

    சீர்காழி நகராட்சி 1-வது வார்டில் முத்துநகர் அமைந்துள்ளது.

    இங்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றனர்.

    இங்கு நகராட்சி சார்பில் மின்விளக்குகள் அமைத்து தர பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தும் மின்விளக்கு அமைத்திட தாமதம் ஏற்பட்டு வந்தது.

    இதனால் இரவு நேரங்களில் செல்லும்போது பாம்பு போன்ற விஷ ஜந்துக்களாலும், நாய்கள் தொல்லையாலும் மக்கள் அவதியடைந்தனர்.

    இதனையடுத்து முத்துநகர் சங்க நிர்வாகிகள் ஏற்பாட்டின்படி நகர் வாசிகள் இணைந்து ரூ.25ஆயிரம் செலவில் அங்கு ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தில் 8 மின்விளக்குகளை பொருத்தினர்.

    அதனை பயன்பாட்டிற்கு அளிக்கும் நிகழ்ச்சி முத்து நகர் சங்க தலைவர் அமுதராஜன் தலைமையில் நடந்தது. சங்க செயலாலரும், நகர்மன்ற உறுப்பினருமான முபாரக் அலி மின்விளக்கை ஒளிரசெய்து தொடங்கி வைத்தார்.

    இதில் பொருளாளர் சுரேஷ், துணை தலைவர் பிச்சைசாலி முகம்மது, துணை செயாளர் இஸ்மாயில் ஜின்னா மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

    • வழிபாட்டு தலங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
    • குடிசை பகுதிகளில் எளிதில் தீ ்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறைமாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,

    தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும்தி ருநாளாகும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளைவெடித்து மகிழ்ச்சியைவெளிப்படுத்துவார்கள்.

    அதேவேளையில், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன.

    பட்டாசு வெடிப்ப தால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும்காற்றுமாசினால் சிறுகுழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்பட்டுள்ள வயோதிகர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளா கிறார்கள்.

    தமிழக அரசு கடந்த 4 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பு ம்பட்டாசுகளை வெடிப்பதற்கு அனுமதி வழங்கியது.

    இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை தினத்தன்றும், கடந்த ஆண்டைப் போலவே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

    மேலும், பட்டாசுகளை வெடிப்பதால்ஏற்படும் சுற்றுச் சூழல்சீர்கேடு குறித்தும்,உடல்நலனில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்த மாசு கட்டுப்பாடு வாரியம் நடவடிக்கைகள் எடுத்துவருகிறது.

    பொதுமக்கள்குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடு த்தும் பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும்.மருத்துவ மனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும்இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

    குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீபற்றக் கூடிய இடங்களுக்கு அருகி ல்பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

    ஆகவே, பொதுமக்கள் சுற்றுச் சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுங்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வடரெங்கம் ரெங்கநாதர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும்.
    • இக்கோயிலை 2-வது முறையாக வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே வடரங்கம் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் பழமை வாய்ந்த வடரங்கநாதர் கோயில் அமைந்துள்ளது.

    இந்த கோயில் 2000 ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் கட்டப்பட்டு வசிஷ்ட முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது ஆகும்.

    இந்த கோயில் பஞ்சரங்கத்தில் ஒரு ரங்கமாக விளங்கி வருகிறது. கடந்த 1924ம் ஆண்டு கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் கோயில் முழுவதும் மூழ்கியது

    இதனையடுத்து அந்தப் பகுதி மக்கள் வடரங்கம் பகுதியிலேயே புதிய கோயிலை கட்டி அதில் வடரங்கநாதரை வைத்து தரிசனம் செய்து வந்தனர்.

    இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் இந்த கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாக இருந்து வருகிறது.

    இந்நிலையில் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட உபரி நீரால் தற்போது கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு இருகரைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

    இதனால் கரையோரம் அமைந்துள்ள பழமை வாய்ந்த வடரங்கம் ரெங்கநாத பெருமாள் கோயிலை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. கொள்ளிடம் ஆற்றில் இதுவரை 5 முறை ‌‌‌‌ தண்ணீர் அதிக அளவில் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் இக்கோயிலை 2வது முறையாக தண்ணீர் சூழ்ந்துள்ளது.

    • திட்டு கிராமமக்கள் வசிக்க 7 இடங்களில் நிவாரண முகாம்கள் தயார்.
    • 25 ஆயிரம் மணல் மூட்டைகள், 20 ஆயிரம் டன் சவுக்கு கட்டைகள் தயார் நிலையில் வைக்கபட்டுள்ளது.

    சீர்காழி:

    மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் முழுவதும் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.

    இந்த நீர் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றின் வழியே சென்று பழையாறு துறைமுகத்தை ஒட்டி வங்க கடலில் கலந்து வருகிறது.

    நேற்று காலை நிலவரப்படி 90 ஆயிரம் கன அடி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றின் வழியே கடலுக்கு சென்று கொண்டிருந்தது. நேற்று மாலை 1 லட்சத்து 85 ஆயிரம் கன அடி வரை ஆற்றில் சென்று கொண்டிருக்கும் நிலை இருந்து வந்தது.

    கொள்ளிடம் ஆற்றின் படுகையில் அமைந்துள்ள நாதல்படுகை, முதலைமேடுதிட்டு, வெள்ளைமணல், கோரைதிட்டு உள்ளிட்ட கிராமங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீரின் அளவு அதிகரித்து வரும் சூழலில் ஆற்றில் உள்ளே அமைந்துள்ள திட்டு கிராமங்களில் மாவட்ட கலெக்டர் லலிதா ஆய்வு மேற்கொண்டு முன்னெச்ச ரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து அப்பகுதியில் உள்ளவர்களிடம் வீடுகளு க்கு நேரில் சென்று மேடான இடங்களில் வந்து தங்குமாறு அழைப்பு விடுத்தார்.

    பின்னர் மாவட்ட கலெக்டர் லலிதா நிருபர்களி டம் கூறுகையில், கொள்ளிடம் ஆற்றில் 1.85 லட்சம் கன அடி தண்ணீர் வரும் என எதிர்பார்க்கப்படுவதால் தாழ்வான பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    அதிகப்படியான வெள்ள நீர் திறக்கப்பட்டுள்ளதால் படுகையில் உள்ள நாதல்படுகை, முதலைமேடு திட்டு, வெள்ளைமணல், கோரை திட்டு கிராமங்கள் துண்டிக்கப்படும் அபாயம் உள்ளதால் 7 இடங்களில் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளது.

    ஆற்றின் கரையில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு வருகிறது. கொள்ளிடம் ஆற்றின் கரையை பலபடுத்தும் பணிகளுக்காக 25 ஆயிரம் மணல் மூட்டைகள், 20 ஆயிரம் டன் சவுக்கு கட்டைகள் தயார் நிலையில் வைக்கபட்டுள்ளது.

    மீட்பு பணிக்காக தீயணைப்பு துறை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினர், படகுகளுடன் தயார் நிலையில் உள்ளனர் என்றார்.

    சீர்காழி ஆர்டிஓ அர்ச்சனா, மயிலாடுதுறை கீழ்க்காவிரி வடிநிலக்கோ ட்ட செயற்பொறியாளர் சண்முகம், ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ், சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், ஒன்றிய ஆணையர் ரெஜினாராணி, பி டி ஓ அருள்மொழி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி பொறியாளர் சிவசங்கரன், வருவாய் ஆய்வாளர் தமிழ்வேந்தன், விஏஓ சங்கீதா மற்றும் அதிகாரிகள், பேரிடர் மீட்பு குழுவினர் உடன் இருந்தனர்.

    • விளையாடி கொண்டிருந்த அமரன் வாய்க்காலில் தவறி விழுந்து மூழ்கினான்.
    • வாய்க்கால் கரையை ஒட்டி தடுப்பு கம்பி அமைக்கப்படவில்லை.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரம் ஊராட்சி செங்கல்மேடு கிராமம் கொடுக்கால்வலி தெருவை சேர்ந்த அமிர்தலிங்கம்-ரஞ்சிதா ஆகியோரின் இரண்டரை வயது மகன் அமரன்.

    அமரனை நேற்று அவரின் தாய் ரஞ்சிதா அழைத்துக் கொண்டு கொள்ளிடம் அஞ்சல் அலுவலகத்திற்கு வந்தார்.

    அப்போது அலுவலக வாசல் முன்பு விளையாடிக் கொண்டிருந்த அமரன், அலுவலகத்திலிருந்து 10 அடி தூரத்தில் உள்ள தெற்கு ராஜன் வாய்க்காலில் தவறி விழுந்து மூழ்கி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு விட்டான்.

    தெற்கு ராஜன் வாய்க்காலில் தண்ணீர் அதிகம் சென்று கொண்டிருப்பதால் சிறுவன் அமரனை அப்பகுதியில் உள்ளவர்கள் வாய்க்காலில் சென்று தேடினர்.

    பின்னர் கொள்ளிடத்தில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆச்சாள்புரம் கிராமத்தில் தெற்குராஜன் வாய்க்காலில் அமரனின் உடல் மிதந்ததை கண்டுபிடிக்கப்பட்டு எடுக்கப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து அமரனின் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தெற்கு ராஜன் வாய்க்கால் கரையில் அஞ்சல் அலுவலகம் உள்ளது. பாதுகாப்பற்ற முறையில் அலுவலகம் எதிரே எந்த தடுப்புச் சுவரோ, தடுப்பு கம்பியோ வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு கருதி அமைக்கப்படவில்லை.

    அஞ்சல் அலுவலகம் எதிரே தெற்கு ராஜன் வாய்க்கால் கரையை ஒட்டி தடுப்புச் சுவர் அமைத்திருந்தால் கொள்ளிடம் அஞ்சல் அலுவலகத்திற்கு வந்து செல்லும் வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு மிகுந்த பாதுகாப்பாக அமையும்.

    எனவே அனைத்து மக்களின் பாதுகாப்பு கருதி அஞ்சல் அலுவலகத்தை பாதுகாப்பான இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • சீர்காழி முழுவதும் பகல் நேரங்களில் சுற்றித்திரிந்து பூட்டி இருக்கும் இடங்களை நோட்டமிட்டனர்.
    • 4 பவுன் நகை, வெள்ளி பொருட்கள், இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சேந்தங்குடி, பாதரக்குடி, சம்பா கட்டளை, சட்டநாதபுரம் உள் ளிட்ட பகுதிகளில் பூட்டி இருக்கும் வீடுகளின் பூட்டை உடைத்து நகை- வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

    இது குறித்த புகாரின் பேரில் சீர்காழி போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    ஆய்வின் போது சீர்காழி அருகே உள்ள தாண் டவன்குளத்தைச் சேர்ந்த மருது என்ற விஜயபாஸ்கர் (வயது 28), கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி அருகே உள்ள தெம்மூர் கிராமத்தைச்சேர்ந்த மணிமாறன் ( 32) ஆகிய இருவரும் சேர்ந்து திருட்டுகளில் ஈடுபட்டது தெரியவந்தது.திருட்டில் ஈடுபட்ட விஜயபாஸ்கரன், மணிமாறன் சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் பல்வேறு வீடுகளில் திருட்டில் ஈடுபட்டு கைதாகி சிறைக்கு சென்று தற்பொழுது இருவரும் வெளியே வந்து சீர்காழி பகுதியில் வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி சீர்காழி முழுவதும் பகல் நேரங்களில் சுற்றி திரிந்து பூட்டி இருக்கும் இடங்களை நோட்டமிட்டு இரவு நேரங்களில் நகை வெள்ளி பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து விஜய பாஸ்கர், மணிமாறன் ஆகிய இருவரையும் எஸ். பி. தனிப்படை சப்- இன்ஸ்பெக்டர் இளையராஜா, எஸ். எஸ். ஐ .க்கள் ரமேஷ், நரசிம்ம பாரதி அசோக் குமார், செந்தில் ஆகியோர் கைது செய்து சீர்காழி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.சீர்காழி போலீசார் அவர்களிடமிருந்து 4 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள், ஒருஇருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது பற்றி வழக்கு பதிவு செய்து விஜயபாஸ்கள், மணிமாறனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • இந்து சமய அறநிலையத்துறை சார்ந்த இடம் கையகப்படுத்துவது.
    • சாலை பணிக்கு அரசு நிலம் கையகப்படுத்தும் போது அனைத்து துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நெடுஞ்சாலைத்துறை சம்பந்தமாக நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிப்பது தொடர்பாக மாவட்ட கலெக்டர் லலிதா தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் குறிப்பாக நெடுஞ்சாலைத்துறை சம்பந்தமாக நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    மாதிரி மங்கலம், முடிகண்டநல்லூர் இணைப்பு சாலை, சீர்காழி திருமுல்லைவாசல் சாலை பணி, கதிராமங்கலம் ஆகிய இடங்களில் நெடுஞ்சாலைத்துறை சாலை பணிக்கு அரசுக்கு சொந்தமாக உள்ள வருவாய்த் துறையைச் சார்ந்த இடம், இந்து சமய அறநிலையத்துறையை சார்ந்த இடம், கையகப்படுத்துவது தொடர்பாக எடுக்கப்பட்ட பணிகள் குறித்தும் முன்னேற்றம் குறித்தும் விரிவாக வருவாய் துறை ஊரக வளர்ச்சித் துறை நெடுஞ்சாலைத்துறை ஆகிய துறையைச் சார்ந்த அலுவலர்கள் தங்களின் துறைகளில் சாலை பணிக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து கேட்டறியப்பட்டது.

    குறிப்பாக சாலை பணிக்கு அரசு நிலம் கையகப்படுத்தும் போது அனைத்து துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குநர்முருகண்ணன், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர்அர்ச்சனா, மற்றும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சிதுறை, நெடுஞ்சாலைத்துறை, இந்து சமய அறநிலைத்துறை ஆகிய துறையைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • ஏ.டி.எம். மையத்தின் அருகே 3 பவுன் தங்க சங்கிலி கீழே கிடந்தது.
    • விசாரணையில் குரங்கு புத்துரை சேர்ந்த பிரவீன் தாஸ் என்பவருக்கு சொந்தமான செயின் என தெரியவந்தது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே மேலையூரில் உள்ள ஏ.டி.எம் மையத்திற்கு அதே பகுதியை சேர்ந்த கிராம சுகாதார செவிலியர் மகாலட்சுமி சென்றிருந்தார்.

    அப்போது ஏடிஎம் மையத்தின் அருகே 3 பவுன் தங்க சங்கிலி கீழே கிடப்பதை பார்த்துள்ளார். அந்த சங்கிலியை பூம்புகார் இன்ஸ்பெக்டர் நகரத்தினத்திடம் மகாலட்சுமி ஒப்படைத்தார்.

    போலீசார் விசாரணையில் குரங்கு புத்துரை சேர்ந்த பிரவீன் தாஸ் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்ததையடுத்து சங்கிலி உரியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.தங்க சங்கிலியை ஒப்படைத்த சுகாதார செவிலியர் மகாலட்சுமியின் செயலுக்கு இன்ஸ்பெக்டர் நாகரத்தினம் மற்றும் போலீசார், கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    இந்நிலையில் செவிலியர் மகாலட்சுமி செயலை பாராட்டி மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா நேரில் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

    • இந்தி மொழி திணிப்பதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்.
    • தமிழ் மொழிதான் தாய் மொழி, அதுதான் உலகின் சிறந்த மொழி.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் தி.மு.க. இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் ஒன்றிய அரசின் இந்தி மொழி திணிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு நகர செயலாளரும் நகர மன்றத் தலைவருமான குண்டாமணி என்கின்ற செல்வராஜ் தலைமை தாங்கினார்.

    மயிலாடுதுறை வடக்கு ஒன்றிய செயலாளரும் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினருமான இளையபெருமாள், தெற்கு ஒன்றிய செயலாளர் ஞான இமயநாதன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் சிவதாஸ், ஜூபையர் அஹமது, நகர இளைஞரணி அமைப்பாளர் விஜய் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அலெக்சாண்டர் வரவேற்றார். பூம்புகார் தொகுதி எம்.எல்.ஏ. நிவேதா முருகன் பேசும்போது, தமிழக்கத்தில் ஒன்றிய அரசு தேசிய கல்வி கொள்கை என்ற பெயரில் இந்தி மொழியை திணிப்பது ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்.

    தமிழ் மொழிதான் தாய் மொழி, அதுதான் உலகின் சிறந்த மொழி என்றார்.இந்நிகழ்ச்சியில் சீர்காழி எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள். மாவட்ட துணைச் செயலாளர்கள் ஞானவேலன், செல்வமணி, வழக்கறிஞர் அணி ராம. சேயோன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் மலர்விழி திருமாவளவன், குத்தாலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மங்கை சங்கர், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் செந்தில் நன்றி கூறினார்.

    ×