search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Wire"

    • கனமழையால் அறுந்து தொங்கிய மின்கம்பி மாணவன் மீது உரசியது.
    • பொதுமக்கள் தகவல் தெரிவித்ததையடுத்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் ஜலாலியல் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுல்தான் சலா வுதீன். இவர் சவுதி அரேபியாவில் பணியாற்றி வருகிறார். இவ ருடைய மனைவி நஜிபு நிஷா. இவருடைய மகன் முகமது முஜமில் (வயது 11). 6-ம் வகுப்பு மாணவன்.

    சுல்தானா சலாவுதீன் சவூதி அரேபியாவில் வேலை பார்த்து வந்த நிலையில் முகமது முஜமில் தாயுடன் இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் திருவாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை முதல் கரு மேகங்கள் சூழ்ந்து காணப்பட்ட நிலையில் இரவு 7 மணி அளவில் காற்றுடன் கூடிய கனமழை பெய்த நிலையில் பட்டக்கால் தெருவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த முகமது முஜமில் ஜலாலி யல் தெருவில் உள்ள தனது வீட்டிற்கு தனது மிதிவண்டியில் வந்துள்ளார். அப்போது கனமழையால் அறுந்து தொங்கிய மின் கம்பி அவர் மீது உரசியதில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார்.

    இதனை தொடர்ந்து அக்கம்ப க்கத்தி னர் உடனடி யாக ஓடி வந்து சிறுவனை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வம னைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மின் கம்பி அறுந்தது குறித்து மின்சார வாரியத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்த தையடுத்து மின்சாரம் துண்டிக்கப்ப ட்டது. மருத்துவமனையில் முகமது முஜமிலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    இச்சம்பவம் அப்பகு தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • மின் கம்பி அறுந்து கிடப்பது தெரியாமல் அதன் மீது மிதித்து விட்டார்.
    • கள்ளப்பெரம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    வல்லம்:

    தஞ்சை அருகே களிமேடு பரிசுத்தம் நகர் பகுதியை சேர்ந்தவர் இளங்கோ (வயது 56). இவர் நெல் கொள்முதல் நிலையத்தில் பணியாற்றி வந்தார். மேலும் தஞ்சை பல்லேரி பகுதியில் உள்ள தனது வயலில் கத்தரிக்காய் சாகுபடியும் மேற்கொண்டு இருந்தார்.

    இளங்கோ பணி முடித்து தினமும் வயலுக்குச் சென்று கத்திரிக்காய் செடிகளுக்கு தண்ணீர் விடுவது உரம் தெளிப்பது போன்ற பணிகளை மேற்கொள்வது வழக்கம். சம்பவதன்று வயலுக்குச் சென்ற இளங்கோ அங்கு மின் கம்பி அறுந்து கிடப்பது தெரியாமல் அதன் மீது மதித்து விட்டார். இதில் மின்சாரம் தாக்கி இளங்கோ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து அக்கம் பக்கத்தினர் கள்ளப் பெரம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இளங்கோ உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து இளங்கோவின் மனைவி லலிதா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • எதிர்பாராதவிதமாக அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி பலியானார்.
    • மின்விபத்தில் உயிரிழந்த அபிமணி தந்தை செல்வகுமாரிடம் ரூ.5 லட்சத்திற்கான காசோலை வழங்கல்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தில்லைவிடங்கன் கிராமம் இந்திரா காலனி பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் மகன் அபிமணி (வயது 21).

    சம்பவத்தன்று இவர் நடந்து சென்றபோது எதிர்பாராதவிதமாக அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி பலியானார்.

    இந்நிலையில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தமிழக மின்சாரத் துறை சார்பில் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி சீர்காழி சட்டமன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் மின்விபத்தில் உயிரிழந்த அபிமணி தந்தை செல்வகுமாரிடம் ரூ.5 லட்சத்திற்கான காசோலையை பன்னீர்செல்வம் எம்.எல். ஏ. வழங்கினார்.

    அப்பொழுது செயற்பொறியாளர் லதா மகேஸ்வரி, உதவி செயற்பொறியாளர் விஜயபாரதி, உதவி மின்பாதை பொறியாளர் ரங்கராஜன், சீர்காழி தி.மு.க. ஒன்றிய செயலாளர் பிரபாகரன், நகர செயலாளர் சுப்பராயன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சுப்ரவேலு, பெரியசாமி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • விளையாடி கொண்டிருந்த அமரன் வாய்க்காலில் தவறி விழுந்து மூழ்கினான்.
    • வாய்க்கால் கரையை ஒட்டி தடுப்பு கம்பி அமைக்கப்படவில்லை.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரம் ஊராட்சி செங்கல்மேடு கிராமம் கொடுக்கால்வலி தெருவை சேர்ந்த அமிர்தலிங்கம்-ரஞ்சிதா ஆகியோரின் இரண்டரை வயது மகன் அமரன்.

    அமரனை நேற்று அவரின் தாய் ரஞ்சிதா அழைத்துக் கொண்டு கொள்ளிடம் அஞ்சல் அலுவலகத்திற்கு வந்தார்.

    அப்போது அலுவலக வாசல் முன்பு விளையாடிக் கொண்டிருந்த அமரன், அலுவலகத்திலிருந்து 10 அடி தூரத்தில் உள்ள தெற்கு ராஜன் வாய்க்காலில் தவறி விழுந்து மூழ்கி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு விட்டான்.

    தெற்கு ராஜன் வாய்க்காலில் தண்ணீர் அதிகம் சென்று கொண்டிருப்பதால் சிறுவன் அமரனை அப்பகுதியில் உள்ளவர்கள் வாய்க்காலில் சென்று தேடினர்.

    பின்னர் கொள்ளிடத்தில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆச்சாள்புரம் கிராமத்தில் தெற்குராஜன் வாய்க்காலில் அமரனின் உடல் மிதந்ததை கண்டுபிடிக்கப்பட்டு எடுக்கப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து அமரனின் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தெற்கு ராஜன் வாய்க்கால் கரையில் அஞ்சல் அலுவலகம் உள்ளது. பாதுகாப்பற்ற முறையில் அலுவலகம் எதிரே எந்த தடுப்புச் சுவரோ, தடுப்பு கம்பியோ வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு கருதி அமைக்கப்படவில்லை.

    அஞ்சல் அலுவலகம் எதிரே தெற்கு ராஜன் வாய்க்கால் கரையை ஒட்டி தடுப்புச் சுவர் அமைத்திருந்தால் கொள்ளிடம் அஞ்சல் அலுவலகத்திற்கு வந்து செல்லும் வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு மிகுந்த பாதுகாப்பாக அமையும்.

    எனவே அனைத்து மக்களின் பாதுகாப்பு கருதி அஞ்சல் அலுவலகத்தை பாதுகாப்பான இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ×