என் மலர்
உள்ளூர் செய்திகள்

கலெக்டர் லலிதா.
மாசற்ற தீபாவளி கொண்டாட கலெக்டர் வேண்டுகோள்
- வழிபாட்டு தலங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
- குடிசை பகுதிகளில் எளிதில் தீ ்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
சீர்காழி:
மயிலாடுதுறைமாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,
தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும்தி ருநாளாகும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளைவெடித்து மகிழ்ச்சியைவெளிப்படுத்துவார்கள்.
அதேவேளையில், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன.
பட்டாசு வெடிப்ப தால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும்காற்றுமாசினால் சிறுகுழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்பட்டுள்ள வயோதிகர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளா கிறார்கள்.
தமிழக அரசு கடந்த 4 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பு ம்பட்டாசுகளை வெடிப்பதற்கு அனுமதி வழங்கியது.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை தினத்தன்றும், கடந்த ஆண்டைப் போலவே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், பட்டாசுகளை வெடிப்பதால்ஏற்படும் சுற்றுச் சூழல்சீர்கேடு குறித்தும்,உடல்நலனில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்த மாசு கட்டுப்பாடு வாரியம் நடவடிக்கைகள் எடுத்துவருகிறது.
பொதுமக்கள்குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடு த்தும் பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும்.மருத்துவ மனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும்இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீபற்றக் கூடிய இடங்களுக்கு அருகி ல்பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
ஆகவே, பொதுமக்கள் சுற்றுச் சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுங்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.