என் மலர்tooltip icon

    மதுரை

    • கவர்னர் தமிழகம் என்று குறிப்பிட்டதில் தவறில்லை என பா.ஜ.க. ராம. சீனிவாசன் அறிக்கை வெளியிட்டார்.
    • இதில் திராவிடம் என்ற தேவையற்ற இனவாதத்தை தி.மு.க. தான் கலப்படம் செய்து வருகிறது.

    மதுரை

    தமிழக பா.ஜ.க. பொதுச் செயலாளர் ராம. சீனிவாசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-

    தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்பது பொருத்தமானது என்று கவர்னர் ரவி சொன்னதை வைத்து, தி.மு.க. வினரால் பெரிய கருத்து மோதல் செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்தத் தருணத்தில் நான் சில கருத்துக்களை முன் வைக்க விரும்புகிறேன். முதலில் தமிழ்நாடு என்ற வார்த்தை, இலக்கி யங்களில் இல்லை. தொல்காப் பியத்தில் தமிழ்நாட்டின் வட எல்லையாக இமயமலையும், தென் எல்லையாக கடலும் சொல்லப்பட்டுள்ளது.

    இந்தியாவின் முதல் தேசிய கவியான பாரதியார் முதன்முதலில் தமிழ்நாடு என்று குறிப்பிட்டார். 'கல்வி சிறந்த தமிழ்நாடு, உயர் கம்பன் பிறந்த தமிழ்நாடு' என்ற பாடல் வரிகளை தமிழுக்கு அறிமுகப் படுத்தியவர் பாரதிதான். அதற்கு முன்னதாக இந்த வார்த்தை எங்கும் இல்லை.

    நாம் அன்றாடம் பாடும் தமிழ்தாய் வாழ்த்தில் கூட, தமிழ்நாடு என்று இல்லை. 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்றுதான் வரிகள் உள்ளன. 1950-ம் ஆண்டுக்கு முன்பு இந்தப் பகுதி, சென்னை மாகாணம் என்று தான் அழைக்கப்பட்டது. தமிழ்நாடு என்பதே அண்மைக்கால கருத்தாக்கம்தான்.

    முன்னாள் முதல்வர் அண்ணாதுரை, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா வில் பேசும்போது, 'ஏ தாழ்ந்த தமிழகமே' என்று தான் குறிப்பிட்டார். இதே தலைப்பில் அண்ணா சொற்பொழிவு புத்தகமாகவும் வந்துள்ளது. கருணாநிதியும் எழுத்துக் களில் ஆயிரக்கணக்கான இடங்களில் தமிழக என்கிற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். ஆனால் இதையே ஒரு கவர்னர் சொல்லும் போது அவர்கள் பொங்கி எழுகிறார்கள்.

    அண்ணா தாழ்ந்த தமிழ கமே என்று சொல்லும் போது வராத கோபம், கவர்னர் தமிழகம் என்று சொல்லும் போது ஏன் வருகிறது? கவர்னர் என்ன பேசி னாலும் எதிர்ப்பது என்பது தான், ஆளுங்கட்சியின் வழக்கமாக உள்ளது. சட்டமன்றத்தில் கவர்னர் பேசும்போது உரையின் நிறைவாக ஜெய்ஹிந்த் என்றும், ஜெய் தமிழ்நாடு என்றும் சொல்லி ஒரு புதிய மரபை தோற்றுவித்தவர்.

    ஆகவே தமிழ்நாடு என்ற கருத்தாக்கத்தை உருவாக்கியது, தமிழுக்கு என்று ஒரு மாநிலத்தை உருவாக்கியது, தமிழகம் என்றும் அழைக்கலாம் என்று புரிய வைப்பது தேசியவாதிகள் தான்.

    இதில் திராவிடம் என்ற தேவையற்ற இனவாதத்தை தி.மு.க. தான் கலப்படம் செய்து வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மீனாட்சி அம்மன் கோவில் தெப்பத் திருவிழா வருகிற 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களின் நலன் கருதி ஆயிரங்கால் மண்டபம் (கலைக் கூடம்) திறந்து வைக்கப்படும்.

    மதுரை

    மதுரை மீனாட்சி- சுந்தரேசுவரர் கோவிலில் தெப்பத்திருவிழா வருகிற 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பிப்ரவரி. 4-ந் தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது.

    இதுகுறித்து மீனாட்சி அம்மன் கோவில் துணை ஆணையர் அருணாசலம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் தெப்ப உற்சவத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நடப்பாண்டுக்கான தெப்பத் திருவிழா கொடியேற்றம் வருகிற 24-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணியளவில் நடை பெறுகிறது. முன்னதாக, கொடிக்கம்ப மண்டபம் முன்பு சிம்மாசனத்தில் பிரியாவிடையுடன் சுவாமியும், அம்மனும் தனித்தனியே எழுந்தருளு கின்றனர்.

    தொடர்ந்து தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் தங்கச்சப்பரம், அன்னம், காம தேனு, சிம்மாசனம், குதிரை, ரிஷபம், யாளி, பல்லக்கு உள்பட வெவ்வேறு வாகனங்களில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வருகின்றனர். பிப்ரவரி 3-ந் தேதி 11-ம் நாள் விழாவையொட்டி, சுவாமியும், அம்மனும் கோவிலில் இருந்து புறப்பா டாகி கீழ மாசி வீதி வழியாக சிந்தாமணி சாலையில் உள்ள கதிரறுப்பு மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர். அங்கு, கதிரறுப்பு திருவிழா நடைபெறும்.

    பிப்ரவரி 4-ந் தேதி சுவாமி யும், அம்மனும் பஞ்சமூர்த்திகளுடன் கோவிலில் இருந்து புறப்பட்டு மீனாட்சியம்மன் கோவிலின் உபகோவிலான மாரியம்மன் தெப்பக்குளம் சென்று, அங்கு தெப்பத்தில் எழுந்தருளுகின்றனர். அன்று காலையில் அலங்க ரிக்கப்பட்ட தெப்பத்தில் 2 முறை தெப்பக்குளத்தைச் சுற்றி வலம் வருகின்றனர்.

    தொடர்ந்து, அன்று மாலை சுவாமியும், அம்மனும் மைய மண்டபத்தில் எழுந்தரு ளுகின்றனர். பின்னர், மின் விளக்குகளால் அலங்க ரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளி தெப்பத்தை ஒரு முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர்.

    அதன்பிறகு முக்தீசுவரர் கோவிலில் எழுந்தருளி சிறப்பு ஆராதனைகள் நடைபெற உள்ளன. பின்னர், அங்கிருந்து புறப்பாடாகி மீனாட்சியம்மன் கோவிலில் எழுந்தருளுகின்றனர். விழாவையொட்டி, பிப்ரவரி 4- ந் தேதி அதிகாலை சுவாமியும், அம்மனும் புறப்பாடாகி, மீண்டும் கோவிலுக்குள் வரும் வரை மீனாட்சி-சுந்தரேசுவரர் கோவில் நடை சாத்தப்பட்டிருக்கும்.

    எனவே, வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களின் நலன் கருதி ஆயிரங்கால் மண்டபம் (கலைக் கூடம்) திறந்து வைக்கப்படும். மேற்கண்ட நாளில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வடக்கு கோபுர வாசல் வழியாக காலை 7 மணி முதல் பகல் 12.30 வரை, மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கலெக்டர் அலுவலக போர்டிக்கோவில் 3 பேர் தங்கள் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
    • மதுரை கலெக்டர் அலுவலக பகுதியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    மதுரை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். உலக பிரசித்தி பெற்ற இந்த போட்டிகளை இந்த ஆண்டு சிறப்பாக நடத்துவதற்கு மும்முரமாக ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    பொங்கல் பண்டிகை அன்று (15-ந்தேதி) அவனியாபுரத்திலும், 16-ந் தேதி பாலமேட்டிலும், 17-ந் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகிறது.

    அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை இந்த ஆண்டு நடத்துவது தொடர்பாக தொடக்கத்தில் இருந்தே தென்கால் பாசன விவசாயிகள் சங்கம், அவனியாபுரம் கிராம கமிட்டியினர் மாவட்ட கலெக்டரிடம் மனுஅளித்து வந்தனர்.

    இங்கு பல ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டியை அவனியாபுரத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்கள் நடத்துவதாகவும், அதில் தற்போது அனைத்து சமுதாய மக்களையும் இணைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

    இதுதொடர்பாக இருதரப்பினரிடமும் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இதையடுத்து இந்த விவகாரம் கோர்ட்டுக்கு சென்றது. நீதிமன்றம் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து போட்டியை நடத்துமாறு அறிவுறுத்தியது. ஆனால் இதை ஏற்க மறுத்த ஒரு தரப்பினர் மேல்முறையீட்டு மனு செய்தனர்.

    அந்த வழக்கு விசாரணையில் உள்ளது. இதன் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மதுரை மாவட்ட நிர்வாகம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியை தாங்கள் தான் நடத்துவோம் என 2 தரப்பினரும் கூறிவருகின்றனர். இதுதொடர்பாக அவர்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

    நேற்று மீண்டும் இருதரப்பினரையும் அழைத்து கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் அனீஷ்சேகர் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது.

    பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தபோது கலெக்டர் அலுவலக போர்டிக்கோவில் 3 பேர் தங்கள் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக தென்கால் விவசாய சங்கம், அவனியாபுரம் கிராம கமிட்டி சார்பில் இன்று தனித்தனியே போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர். இதையடுத்து அவனியாபுரம், மதுரை கலெக்டர் அலுவலக பகுதியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதற்கிடையில் கோரிக்கையை வலியுறுத்தி தென்கால் பாசன விவசாய சங்கத்தை சேர்ந்த ஏராளமானோர் ஜல்லிக்கட்டு மாடுகளுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு இன்று வந்தனர். பின்னர் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 

    • அடிப்படை வசதிகள் கேட்டு கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம் வருகிற 9-ந்தேதி நடக்கிறது.
    • அடிப்படை தேவைகளை ஊராட்சி நிர்வாகம் செய்வார்களா? என்று நாவினிப்பட்டி கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    மேலூர்

    மேலூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த நாவினிப்பட்டி ஊராட்சியில் குடிநீர், சாலை, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தரவில்லை என்று கூறி இந்த பகுதி பொதுமக்கள் ஏற்கனவே நடந்த கிராம சபை கூட்டத்தின் போது வலியுறுத்தினர்.

    மேலும் கிராமசபை கூட்டத்தில் இருந்து வெளியேறி மேலூர்- காரைக்குடி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது பற்றிய தகவலறிந்த அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். அதன் பின்பும் நடத்தி மறியலை கைவிட செய்தனர்.

    இருந்த போதிலும் தங்கள் பகுதிக்கு இன்னும் குடிநீர் முறையாக வழங்க வில்லை எனக்கூறி 6 மற்றும் 7-வது வார்டு கிராமமக்கள் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா குழுவின் செயலாளர் சுரேஷ்குமார் தலைமையில் மாவட்டத் தலைவர் சக்திவேல், மாவட்ட துணைத் தலைவர் மெய்யர் முன்னிலையில் வருகிற 9-ந்தேதி நாவினிப்பட்டி ஊராட்சியில் அனைத்து அடிப்படை தேவைகளும் நிறைவேற்ற கோரி மேலூர் யூனியன் அலுவலகம் முன்பு காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.

    அப்போதாவது தங்கள் பகுதிக்கு அடிப்படை தேவைகளை ஊராட்சி நிர்வாகம் செய்வார்களா? என்று நாவினிப்பட்டி கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • சிறு, குறு தொழில் மேம்பாட்டு மைய விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • விவசாயம் சார்ந்த தொழில்களை ஊக்குவிக்கும் மானிய உதவி, பயிற்சியுடன் கடன் உதவி உள்ளிட்ட திட்டங்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

    உசிலம்பட்டி

    உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி கிராமத்தில் பொதுமக்கள் மற்றும் மகளிர், இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டு நிறுவனத்தின் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    மகளிர் சுய உதவி குழு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம், தொழில் வாய்ப்பு முகாம் மற்றும் அனைத்து வகையான வேலைகளுக்கும் மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டு நிறுவனத்தில் இருந்து நிதி ஒதுக்கப்பட்டு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. எம்.எஸ்.எம்.இ. தலைவர் முத்துராமன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    மதுரை மாவட்ட திட்ட இயக்குனர் ஜெயசெல்வம், செல்லம்பட்டி வட்டார ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர், திட்ட இயக்குனர் காளிதாஸ், பாப்பாபட்டி ஒன்றிய கவுன்சிலர் வீரலட்சுமி செந்தில்குமார் மற்றும் பலர் பங்கேற்றனர். விவசாயம் சார்ந்த தொழில்களை ஊக்குவிக்கும் மானிய உதவி, பயிற்சியுடன் கடன் உதவி உள்ளிட்ட திட்டங்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.  

    • பறவைகள் சிதறி பறப்பதையும் அங்கு சுமார் 2 அடி உயரமுள்ள 2 சிறுத்தை புலி குட்டிகள் செல்வதையும் கண்டு அதனை செல்போனில் வீடியோ எடுத்தேன்.
    • தரையில் மர்ம விலங்கின் கால் தடம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    மேலூர்:

    மேலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகம் அருகே தேவன்குளம் உள்ளது. இங்கு எம்.மலம்பட்டியை சேர்ந்த ரமேஷ் என்பவர் நேற்று காலை 7 மணியளவில் குளிக்க சென்றுள்ளார். அப்போது அங்கு பறவைகள் திடீரென கூச்சலிட்டு பறப்பதையும் அதன் அருகே 2 சிறுத்தை புலிகள் ஓடியதை பார்த்து அதனை அவர் செல்போனில் படம் எடுத்துள்ளார். அந்த 2 சிறுத்தைப்புலிகளும் அருகிலுள்ள வாழைத்தோப்புக்குள் சென்று மறைந்துள்ளன. இந்த வீடியோ மேலூர் பகுதியில் வைரல் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து தகவல் அறிந்த மதுரை வன இலாகா அதிகாரிகள் வனவர் மூர்த்தி மற்றும் வனக்காப்பாளர் குருசுந்தரி ஆகியோர் தேவன்குளம் பகுதிக்கு வந்து ஆய்வு செய்தனர். அப்போது தரையில் மர்ம விலங்கின் கால் தடம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    சிறுத்தைப்புலிகளை பார்த்த ரமேஷ் கூறியதாவது:-

    தினமும் நடை பயிற்சி சென்று தேவன்குளத்தில் குளிப்பது பழக்கம். அவ்வாறு சென்றபோது அங்கு பறவைகள் சிதறி பறப்பதையும் அங்கு சுமார் 2 அடி உயரமுள்ள 2 சிறுத்தை புலி குட்டிகள் செல்வதையும் கண்டு அதனை செல்போனில் வீடியோ எடுத்தேன். வன இலாகாவினர் வந்து அங்கிருந்த கால் தடங்களை ஆய்வு செய்ததில் ஒரு இடத்தில் புலியின் கால் தடத்தை போன்றதை கண்டுபிடித்தனர். ஆனால் அவர்கள் வேறு ஏதாவது வன விலங்காக இருக்கலாம் என்றும் மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் புலிகள் இல்லை என்று கூறி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சென்றுவிட்டனர். இப்பகுதியில் பொதுமக்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் நடப்பதற்குள் அரசு உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.. இந்த சம்பவத்தினால் மேலூரில் உள்ள எம்.மலம்பட்டி மக்கள் இரவில் வெளியே செல்லாமல் அச்சத்துடன் வீடுகளில் உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகம் முழுவதும் 13 திறந்தவெளி நெல் சேமிப்பு கிட்டங்கிகள் உள்ளன.
    • நெல் மூட்டைகள் மழையால் சேதம் அடைவதை தவிர்க்க ரூ.238 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 2 லட்சத்து 86 ஆயிரத்து 450 டன் நெல் சேமிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மதுரை:

    மதுரை மாவட்டம் சாணம்பட்டியில் தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் 2 கோடியே 10 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, ரொக்க பணம் வழங்கப்படும். பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் 100 சதவீதம் அரசியல் தலையீடு எதுவும் இருக்காது. தமிழகம் முழுவதும் 13 திறந்தவெளி நெல் சேமிப்பு கிட்டங்கிகள் உள்ளன.

    நெல் மூட்டைகள் மழையால் சேதம் அடைவதை தவிர்க்க ரூ.238 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 2 லட்சத்து 86 ஆயிரத்து 450 டன் நெல் சேமிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் விவசாயிகள் தேங்காய் எண்ணெயை ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கையை முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவர் அவர் கூறினார்.

    • திருவாதவூரில் நடந்த ஆருத்ரா தரிசன விழாவில் நடராஜர்-சிவகாமி அம்பாள் வீதி உலா வந்தனர்.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள திருவாதவூரில் பிரசித்தி பெற்ற திருமறைநாதர் வேதநாயகி கோவில் உள்ளது. மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் நடராஜர்-சிவகாமி அம்மையாருடன் மாணிக்கவாசகர் தரிசனம் வழங்கும் நிகழ்ச்சி ஆருத்ரா தரிசனம் என அழைக்கப்படுகிறது. மாணிக்கவாசகர் பிறந்த ஊரான இங்கு வருடந்தோறும் ஆருத்ரா தரிசன விழா சிறப்பாக நடைபெறும்.

    அதன்படி இன்று ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறுகிறது. இதை முன்னிட்டு நடராஜர்-சிவகாமி அம்மாள், மாணிக்க வாசகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று ஆருத்ரா தரிசனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பின்னர் சுவாமி வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக நேற்று மாலை மாணிக்கவாசகர் சட்டத்தேரில் வீதி உலா வந்தார்.

    • கலால் வரி செலுத்தாமல் தமிழகத்தில் 24 மணி நேரமும் தடையின்றி மது விற்பனை செய்யப்படுவதாக ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
    • இந்த 24x7 மது விற்பனையால் இளைய சமுதாயத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. ஆகவே இதனை சரிசெய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் டாஸ்மார்க் விற்பனை நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற கிளை பரிந்துரை செய்துள்ளது. டாஸ்மாக் மது விற்பனை நிலையங்களை பயன்படுத்தி இன்றைக்கு, ஊழலுக்கான யுக்தியை தி.மு.க. அரசு கையாண்டு வருகிறதோ என்கிற மிகப்பெரிய ஒரு கேள்விக்குறி எழுந்துள்ளது.

    மாநிலத்தில் பல மாவட்டங்களுக்கு பார்கள் ஒதுக்கீடு செய்வதற்கான டெண்டர் தொடர்பான, வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசார ணையில் உள்ளது. இதுவரை அதிகாரப்பூர்வமாக யாருக்கும் பார்கள் உரிமைகளை, அரசு இன்னும் வழங்கவில்லை என்கிற விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.

    சட்டவிரோதமாக பார்களில், மதுபானங்கள் அதிக விலைக்கு 24 மணி நேரமும் தடையின்றி விற்கப்பட்டு வருக்கின்றன. இதனால் அரசின் கஜானாவிற்கு செல்ல வேண்டிய வரிப்பணம், இந்த துறையின் அமைச்சருக்கு சொல்லுகிறதோ என்று தி.மு.க. கட்சிக்காரர்களே பேசிகொள்கிற ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது.

    மது உற்பத்தியாளர்கள் கலால் வரியை முறையாக செலுத்தாமல், மதுபானங்கள் சப்ளை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன என்பது அதிர்ச்சி தகவலாக இருக்கிறது.

    அதாவது ஹாலோகிராம் அச்சடிக்கப்படாததால், கலால் வரியை செலுத்தப் படாமல் அரசுக்கு கணக்கில் வராமல் மது பானங்கள் கடத்தப்படுகின்றன. கணக்கில் வராத இந்த மதுபானங்கள் சட்ட விரோதமாக நடத்தப்படும் பார்களை சென்றடைகிறது. இதன் மூலம் வரக்கூடிய பணம் முழுவதும் தனிப்பட்ட முறையில் ஆட்சி யாளர்களுக்கு செல்கிறது.

    இது அரசின் கஜானாவுக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்துகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர், எடப்பாடி பழனிசாமி ஆதாரத்தோடு புள்ளிவிவரத்தோடு தெரிவித்துள்ளார்.

    மதுரை ஐகோர்ட்டு கிளையில் டாஸ்மாக் விற்பனை நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும், அரசு 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கப்படவில்லை என்று உறுதிப்படுத்த வேண்டும், அதேபோன்று நேரத்தையும் முறைப்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற கிளை கூறியுள்ளது.

    24x7 என்று மருத்துவத்திற்கு தான் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் மது விற்பனைக்கு 24x7 நாம் பார்த்ததில்லை இதை தமிழகத்தில் கண்டு இன்றைக்கு சிரிப்பாய் சிரிக்கிறது.

    • புகையிலை பொருட்களை பதுக்கிய வழக்கில் கைதான வாலிபருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.
    • அரசு ஆஸ்பத்திரிக்கு ரூ.50 ஆயிரம் வழங்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    மதுரை

    மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் அருண்குமார். இவர் ரூ.1 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் தன்மீது எந்த ஒரு வழக்கும் நிலுவையில் இல்லை. எனவே ஜாமீன் வழங்குமாறு தெரிவிக்கப்ப ட்டது.

    இதனையடுத்து நீதிபதி, மனுதாரரின் சிறையில் இருந்த காலத்தை கருத்தில் கொண்டு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்படுகிறது. மனுதாரர் ரூ. 50 ஆயிரத்தை நன்கொடையாக மதுரை அரசு மருத்துவமனைக்கு வழங்க வேண்டும். அதற்கான ரசீதை விசா ரணை நீதிமன்றத்தில் ஒப்ப டைக்க வேண்டும்.

    மறு உத்தரவு வரும்வரை மனுதாரர் தினமும் காலை 10.30 மணிக்கு சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் போன்ற நிபந்தனைகளை நீதிபதி பிறப்பித்தார். 

    • அவனியாபுரத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
    • மேற்கண்ட தகவலை செயற்பொறியாளர் பழனி தெரிவித்துள்ளார்.

    மதுரை

    அவனியாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (7-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பெருங்குடி அன்பழகன் நகர், மண்டேலா நகர், காவலர் குடியிருப்பு, சின்ன உடைப்பு, ஏர்போர்ட் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை செயற்பொறியாளர் பழனி தெரிவித்துள்ளார்.

    • திருப்பரங்குன்றத்தில் நடராஜர்-சிவகாமி அம்மன் வீதி உலா நடந்தது.
    • கடந்த 28-ந்தேதி ஆருத்ரா தரிசன விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் மூலஸ்தானத்தில் சத்யகிரீஸ்வரர் அருள் பாலிகிறார். இதேபோல கோவிலில் நடராஜர் சிவகாமி அம்மன் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர்.

    திருப்பரங்குன்றம் கோவிலில் கடந்த 28-ந்தேதி ஆருத்ரா தரிசன விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவில் நிறைவு நாளான இன்று காலையில் மூலவர் நடராஜருக்கு சாம்பிராணி தைலம் சாத்துப்படி ஆனது.

    தொடர்ந்து உற்சவர் நடராஜர், சிவகாமி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பூச்சப்பரத்தில் திருப்பரங்குன்றத்தில் முக்கிய வீதிகள் கிரிவலப் பாதையை வழியாக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    ×