search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கவர்னர் தமிழகம் என்று குறிப்பிட்டதில் தவறில்லை
    X

    கவர்னர் தமிழகம் என்று குறிப்பிட்டதில் தவறில்லை

    • கவர்னர் தமிழகம் என்று குறிப்பிட்டதில் தவறில்லை என பா.ஜ.க. ராம. சீனிவாசன் அறிக்கை வெளியிட்டார்.
    • இதில் திராவிடம் என்ற தேவையற்ற இனவாதத்தை தி.மு.க. தான் கலப்படம் செய்து வருகிறது.

    மதுரை

    தமிழக பா.ஜ.க. பொதுச் செயலாளர் ராம. சீனிவாசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-

    தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்பது பொருத்தமானது என்று கவர்னர் ரவி சொன்னதை வைத்து, தி.மு.க. வினரால் பெரிய கருத்து மோதல் செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்தத் தருணத்தில் நான் சில கருத்துக்களை முன் வைக்க விரும்புகிறேன். முதலில் தமிழ்நாடு என்ற வார்த்தை, இலக்கி யங்களில் இல்லை. தொல்காப் பியத்தில் தமிழ்நாட்டின் வட எல்லையாக இமயமலையும், தென் எல்லையாக கடலும் சொல்லப்பட்டுள்ளது.

    இந்தியாவின் முதல் தேசிய கவியான பாரதியார் முதன்முதலில் தமிழ்நாடு என்று குறிப்பிட்டார். 'கல்வி சிறந்த தமிழ்நாடு, உயர் கம்பன் பிறந்த தமிழ்நாடு' என்ற பாடல் வரிகளை தமிழுக்கு அறிமுகப் படுத்தியவர் பாரதிதான். அதற்கு முன்னதாக இந்த வார்த்தை எங்கும் இல்லை.

    நாம் அன்றாடம் பாடும் தமிழ்தாய் வாழ்த்தில் கூட, தமிழ்நாடு என்று இல்லை. 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்றுதான் வரிகள் உள்ளன. 1950-ம் ஆண்டுக்கு முன்பு இந்தப் பகுதி, சென்னை மாகாணம் என்று தான் அழைக்கப்பட்டது. தமிழ்நாடு என்பதே அண்மைக்கால கருத்தாக்கம்தான்.

    முன்னாள் முதல்வர் அண்ணாதுரை, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா வில் பேசும்போது, 'ஏ தாழ்ந்த தமிழகமே' என்று தான் குறிப்பிட்டார். இதே தலைப்பில் அண்ணா சொற்பொழிவு புத்தகமாகவும் வந்துள்ளது. கருணாநிதியும் எழுத்துக் களில் ஆயிரக்கணக்கான இடங்களில் தமிழக என்கிற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். ஆனால் இதையே ஒரு கவர்னர் சொல்லும் போது அவர்கள் பொங்கி எழுகிறார்கள்.

    அண்ணா தாழ்ந்த தமிழ கமே என்று சொல்லும் போது வராத கோபம், கவர்னர் தமிழகம் என்று சொல்லும் போது ஏன் வருகிறது? கவர்னர் என்ன பேசி னாலும் எதிர்ப்பது என்பது தான், ஆளுங்கட்சியின் வழக்கமாக உள்ளது. சட்டமன்றத்தில் கவர்னர் பேசும்போது உரையின் நிறைவாக ஜெய்ஹிந்த் என்றும், ஜெய் தமிழ்நாடு என்றும் சொல்லி ஒரு புதிய மரபை தோற்றுவித்தவர்.

    ஆகவே தமிழ்நாடு என்ற கருத்தாக்கத்தை உருவாக்கியது, தமிழுக்கு என்று ஒரு மாநிலத்தை உருவாக்கியது, தமிழகம் என்றும் அழைக்கலாம் என்று புரிய வைப்பது தேசியவாதிகள் தான்.

    இதில் திராவிடம் என்ற தேவையற்ற இனவாதத்தை தி.மு.க. தான் கலப்படம் செய்து வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×