என் மலர்
மதுரை
- எஸ்.என்.கல்லூரியில் நிறுவனர் தினவிழா நடந்தது.
- இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை
சரஸ்வதி நாராய ணன் கல்லூரியின் நிறுவனர் தினவிழா கல்லூரி செயலர் நாராயணன் தலைமையில் நடைபெற்றது. வணிகவியல் துறை தலைவர் ஜெயக்கொடி வரவேற்று பேசினார்.
முதல்வர் கண்ணன் தொடக்கவுரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட காந்திகிராம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் நிர்மலா மோகன் 'ஈதல் இசைபட வாழ்தல்' என்ற தலைப்பில் பேசினார்.
நாராயணன் செட்டியார் அறக்கட்டளை மூலமாக இக்கல்வியாண்டிற்கான கல்வி உதவித்தொகை மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் துணை முதல்வர் மோதி லால் நன்றி கூறினார்.
- மதுரையில் தமிழர் தேசம் கட்சியின் தென் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
- நிறுவன தலைவர் கே.கே.செல்வகுமார் பங்கேற்றார்.
மதுரை
மதுரையில் தமிழர் தேசம் கட்சியின் தென்மாவட்ட பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் நிறுவனத் தலைவர் செல்வக்குமார் தலைமையில் நடந்தது.
இதில் மாநில பொதுச்செயலாளர் தளவாய் ராஜேஷ், தலைமை ஒருங்கிணைப்பாளர் குரு.மணிகண்டன், மாநில செயலாளர் பனங்காடி வி.எம்.எஸ்.அழகர் மற்றும் தென் மாவட்ட பொறுப்பாளராக பதவி ேயற்ற மதுரை மாவட்ட செயலாளர் சிங்க கண்ணன், மதுரை மாவட்ட மகளிர் அணி கவிதா, மதுரை மாவட்ட இளைஞர் அணி ராஜ்குமார், ஆதி முருகன், கரிசல்குளம் செல்லபாண்டி, மேலூர் ஒன்றிய செயலாளர் ஆத்துகரைபட்டி சரவணன் பங்கேற்றனர்.
திண்டுக்கல் மாவட்ட கிழக்கு நத்தம் மாவட்ட செயலாளர் பிரபு அம்பலம், அழகுராஜா, வத்திபட்டி துணை செயலாளர், திண்டுக்கல் மாவட்ட இளைஞர் அணி சங்கிலி, திண்டுக்கல் மாவட்ட மேற்கு மாவட்ட விஜய் அம்பலம், திண்டுக்கல் எழில் அன்பு, டாக்டர் அவைத் தலைவர் தூத்துக்குடி மாவட்டம் இசக்கிமுத்து, தேனி மாவட்டம் வழக்கறிஞர் மணிகண்டன், தென்காசி மாவட்டம் திருமலை, மதுரை மாவட்டம் கல்லுபட்டி ராஜ்குமார், ஆனையூர் பகுதி நிவாஸ், மதுரை மாநகரம் பரசுராம்.
தென் மாவட்ட மாநில மாவட்ட மகளிர் அணி,இளைஞர் அணி, மகளிர் அணி, வழக்கறிஞர் அணி பெரியசாமி ஏராளமான பெண்கள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
- தனியார் நிறுவன ஊழியர்-தொழிலாளி தற்கொலை செய்து கொண்டனர்.
- கூடக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
திருமங்கலம்
மதுரை சம்மட்டிபுரத்தை சேர்ந்தவர் முருகன். இவரது 2-வது மகன் சிவனேஷ் (வயது 28). இவர் திருமங்க லம் கல்லுப்பட்டி அருகே தேவன்குறிச்சியில் உள்ள தனது பாட்டி வீட்டில் வசித்து வந்தார்.
பட்டதாரியான சிவனேஷ், அதே பகுதி யில் உள்ள தனியார் நிறுவ னத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு குடிபழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவத் தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிவனேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை மாவட்டம் கூடக்கோவிலை சேர்ந்தவர் மாரியப்பன் (48), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி பாண்டியம்மாள். கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டது.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த மாரியப்பன் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கூடக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
- திருமங்கலம் அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை செய்யப்பட்டார்.
- இது தொடர்பாக ராணுவ வீரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
திருமங்கலம்,
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள எட்டுநாழி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் சங்கீதா (வயது31). இவர் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
கடந்த 2009-ம் ஆண்டு எனக்கும், சோழவந்தானை சேர்ந்த சின்னதுரை மகன் கவியரசு என்பவருக்கும் திருமணம் நடந்தது. அப்போது 35 பவுன் நகை, ரூ.3 லட்சம் ரொக்கம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் கொடுக்கப்பட்டன. எனது கணவர் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன.
கடந்த சில மாதங்களாக கூடுதல் பணம், நகை கேட்டு கவியரசு துன்புறுத்தி வருகிறார். இதற்கு உடந்தை யாக அவரது தாயார் காளியம்மாள் உள்ளார். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த புகாரின் அடிப் படையில் ராணுவ வீரர், அவரது தாயார் மீது போலீ சார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின் றனர்.
- அரிமா சங்கம் சார்பில் சாதனை செய்த மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
- விஜயபாண்டி, கணேசன், பழனி, முத்துக்குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருமங்கலம்
திருமங்கலம் தனியார் மெட்ரிக் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வரும் மாணவர் கேரிகிப்ட்சன்சாம் (வயது10). இவர் சிங்கப்பூரில் கடந்த 28-ந் தேதி நடைபெற்ற சர்வதேச சிலம்பாட்ட போட்டியில் முதலிடம் பெற்றார்.
அவருக்கு ரோஸ் அரிமா சங்கத்தின் சார்பில் முன்னாள் மாவட்ட ஆளுநர் அறிவழகன், பட்டய தலைவர் அனிதா பால்ராஜ், செயலாளர் வைரமுத்து, பொருளாளர் சுந்தரம், முன்னாள் தலைவர் சிவராஜன் ஆகியோர் மாணவனை பாராட்டி பொன்னாடை அணிவித்து கேடயம் வழங்கினர்.
இதேபோல ஆசாதி சாட் 2 செயற்கைகோளுக்கு மென்பொருள் தயாரித்து இஸ்ரோ சென்று திரும்பிய திருமங்கலம் அரசு பள்ளி மாணவிகளுக்கு ரோஸ் அரிமா சங்கத்தின் சார்பில் திருமங்கலம் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 10 மாணவிகளுக்கும் விருது வழங்கி பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர்.
இதில் நிர்வாகிகள் சுரேஷ்குமார், சுந்தரபாண்டி, விஜயபாண்டி, கணேசன், பழனி, முத்துக்குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி-அம்பாளுக்கு 4 கால சிறப்பு பூஜை நடக்கிறது.
- இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் 1008 சங்காபிஷேக வழிபாடு நடந்தது.
மதுரை
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா சிவராத்திரி விழா வருடந்தோறும் விமரி சையாக கொண்டாடப்படும். அதன்படி சிவராத்திரியான இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சொக்கநாதர்-மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.
இன்று மாலை 4 மணிக்கு சுந்தரேஸ்வரர் சன்னதி முன்பு 1008 சங்காபிஷேகமும், மீனாட்சி அம்மன் சன்னதியில் 108 சங்காபிஷேக வழிபாடும் நடக்கிறது. அதன்பின்னர் சனி பிரதோஷ வழிபாட 4.45 மணிக்கு தொடங்குகிறது.
சிவராத்திரியை முன்னிட்டு இன்று இரவு முழுவதும் கோவில் நடை திறக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு தொடங்கி அதிகாலை வரை சுவாமி-அம்பாளுக்கு 4 கால பூஜைகள் நடை பெறுகிறது. அதன்படி மீனாட்சி அம்மனுக்கு முதல் கால பூஜை இரவு 10 மணிக்கும், 2ம் கால பூஜை 11 மணிக்கும், 3ம் கால பூஜை 12 மணிக்கும், 4ம் கால பூஜை 1 மணிக்கும் நடக்கிறது.
இதேபோல் சுவாமிக்கு முதல் கால பூஜை இரவு 11 மணிக்கும், 2ம் கால பூஜை 12 மணிக்கும், 3ம் கால பூஜை 1 மணிக்கும், 4ம் கால பூஜை 2 மணிக்கும் நடக்கிறது. அதிகாலை 3 மணிக்கு அர்த்த ஜாம பூஜையும், 4 மணிக்கு பள்ளியறை பூஜையும், 5 மணிக்கு திருவனந்தல் பூஜையும் நடக்கிறது.
சிவராத்திரியை முன்னிட்டு சுவாமி-அம்பாளுக்கு விடிய விடிய அபிஷேக ஆராதனை நடைபெறும். அபிஷே கத்திற்கு தேவையான பால், தயிர், இளநீர், பன்னீர், பழ வகைகள், தேன் ஆகியவற்றை ஏராளமான பக்தர்கள் கோவில் அலுவலகத்தில் வழங்கினர்.
இம்மையிலும் நன்மை தருவார் கோவில்
இதேபோல் மதுரையில் உள்ள இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ் சிவம் தலைமையில் 1008 சங்காபிஷேக வழிபாடு நடந்தது.
சிம்மக்கல் ஆதி சொக்க நாதர் கோவில், செல்லூர் திருவாப்புடையார் கோவில், தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவில், திருவாதவூர் திருமறைநாதர் சுவாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு சிவ தலங்களில் மகா சிவராத்திரி வழிபாடு இன்று இரவு நடக்கிறது. மேலும் பல்வேறு பகுதிகளில் உள்ள குலதெய்வ கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.
- மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் வகையில் இ-டெண்டர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
- பல்வேறு அம்சங்கள் அடிப்படையில் அறிக்கை தயாரித்து 4 மாதத்தில் வழங்க வேண்டும் என்று டெண்டர் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மதுரை:
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்தது முதல் தென் மாவட்டங்களின் தொழில், கல்வி வளர்ச்சிக்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுரையில் கலைஞர் நூலகம், டைடல் பார்க், ஜல்லிக்கட்டு அரங்கம் போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
மதுரையில் வாகன பயன்பாட்டால் ஏற்படும் நெரிசலை தவிர்க்க சாலை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக தல்லாகுளம் முதல் கோரிப்பாளையம் வரை மேம்பாலம் கட்டுவதற்கான திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. ஒத்தகடை முதல் திருமங்கலம் வரை 31 கி.மீ. தொலைவுக்கு, ரூ.8 ஆயிரம் கோடி செலவில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக 17 நிறுத்தும் இடங்கள் தேர்வு செய்யப்பட உள்ளன. அவற்றில் கோரிப்பாளையம், வசந்தநகர் ஆகிய பகுதிகளில் சுரங்கப்பாதை அமைய உள்ளது.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் வகையில் இ-டெண்டர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மதுரையில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல், எதிர்கால தேவை, மாற்றுத் திட்டங்கள், திட்டப்பாதை, திருப்பங்கள், பயணிகள் எண்ணிக்கை, பயணத் திட்டம், நேரம், பயணக்கட்டணம், ரெயில் நிலையங்கள், தேவையான நிலப்பரப்பு, எந்த வகை நிதியின் கீழ் மேற்கண்ட திட்டத்தை நிறைவேற்றுவது? உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அடிப்படையில் அறிக்கை தயாரித்து 4 மாதத்தில் வழங்க வேண்டும் என்று டெண்டர் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மதுரை மாநகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ, மெட்ரோ நியோ மற்றும் மெட்ரோ லைட் ஆகிய வகைகளில் பயணிகள் பொதுப் போக்குவரத்து திட்டத்தை நிறைவேற்றுவதன் சாத்தியம் குறித்தும் ஆய்வுகள் நடத்தப்பட உள்ளன. இதற்கு 'மதுரை விரைவு போக்குவரத்து பெருந்திட்டம்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் மெட்ரோ ரெயில் இயக்கப்படும்போது திருப்புவனம், மேலூர் ஆகிய பகுதிகளை இணைத்து விரிவாக்கம் செய்யும் வகையிலும் ஆய்வுகள் நடைபெறும்.
சென்னை மெட்ரோ ரெயில் திட்ட இயக்குநர் அர்ச்சுனன் சமீபத்தில் மதுரை வந்திருந்த போது, "மெட்ரோ ரெயில் திட்டம் பாதுகாப்பானது. நம்பகத்தன்மை மிகுந்தது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை, மெட்ரோ ரெயில் எளிதாக இணைக்கிறது. சென்னையில் 54 கி.மீ. தூரம் வரை மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது. அங்குள்ள ரெயில் நிலையம், ரெயில் பெட்டிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. மெட்ரோ ரெயிலில் பெயரளவுக்கு மட்டுமே டிரைவர்கள் இருப்பார்கள். பெரும்பாலான நேரங்களில் ஜி.பி.எஸ் மூலமாகவே, ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. 2-ம் கட்ட திட்டப் பணியில் டிரைவரின்றி மெட்ரோ ரெயில் இயக்கப்படும்.
கோவை, மதுரை மாவட்டங்களில் மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அந்த அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. மதுரையில் மெட்ரோ ரெயில் இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக இ-டெண்டர் அறிவிப்பு வெளியிடப்படும்" என்று அறிவித்திருந்தார்.
அதன்படி சென்னை மெட்ரோ ரெயில் நிலைய அதிகாரிகள் மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ஓரிரு ஆண்டுக்குள் மதுரை மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ஜனாதிபதியை விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என் ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.
- மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்து வருகிறார்.
மதுரை:
தனி விமானத்தில் டெல்லியில் இருந்து புறப்பட்டு மதுரைக்கு ஜனாதிபதி வருகை தந்தார். ஜனாதிபதியாக பதவி ஏற்றபின்பு, திரவுபதி முர்மு முதன் முறையாக இன்று தமிழகம் வருகை வந்தார்.
ஜனாதிபதியை விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என் ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் வரவேற்பு அளித்தனர். 2 நாள் பயணமாக தமிழகம் வந்த ஜனாதிபதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்து வருகிறார்.
அவருக்கு மீனாட்சி அம்மன் கோவில் சார்பில் பூரண கும்பமரியாதையும் வழங்கப்பட்ட உள்ளது. அவருக்கு கோவில் சார்பாக குங்குமம், மீனாட்சி அம்மன் சிலை பிரசாதமாக வழங்கப்படவுள்ளது. குடியரசு தலைவர் வருகையையொட்டி 3500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அரசு சுற்றுலா மாளிகையில் மதிய உணவுக்குப்பின் சற்று நேரம் ஓய்வு எடுக்கும் அவர், பிற்பகல் 2 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் விமான நிலையம் சென்றடைகிறார். அங்கிருந்து விமானத்தில் கோவை செல்லும் அவர், ஈஷா யோகா மையம் சார்பில் நடக்கும் சிவராத்திரி விழாவில் கலந்துகொள்கிறார்.
- கோவை ஈஷா மையத்தில் இன்று நடக்கும் சிவராத்திரி விழாவில் தலைமை விருந்தினராக திரவுபதி முர்மு பங்கேற்கிறார்.
- இன்று மாலை 6 மணிக்கு சிவராத்திரி விழாவில் பங்கேற்கும் முர்மு இரவு 9.15-க்கு புறப்பட்டு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.
குடியரசுத்தலைவராக பதவியேற்ற பிறகு முதன்முறையாக தமிழ்நாடு வந்துள்ளார் திரவுபதி முர்மு. 2 நாள் பயணமாக மதுரை, கோவைக்கு செல்கிறார்.
டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்த குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவுக்கு ஆளுநர் ஆர்என் ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்டோர் வரவேற்றனர். மீனாட்சியம்மன் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு கோவை செல்கிறார்.
மேலும் கோவை ஈஷா மையத்தில் இன்று நடக்கும் சிவராத்திரி விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்கிறார்.
இன்று மாலை 6 மணிக்கு சிவராத்திரி விழாவில் பங்கேற்கும் முர்மு இரவு 9.15-க்கு புறப்பட்டு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.
- 4 கால பூஜை அபிஷேகத்திற்கு தேவையான அபிஷேக பொருட்களை இன்று மாலைக்குள் கோவில் அலுவலகத்தில் ஒப்படைக்கலாம்.
- இரவு முதல் மறுநாள் காலை வரை நடை திறந்திருக்கும்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று (சனிக்கிழமை) மகா சிவராத்திரி விழா சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. அன்றைய தினம் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சுவாமிக்கு விடிய, விடிய சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. மேலும் இரவு முழுவதும் நடைபெறும் 4 கால பூஜை அபிஷேகத்திற்கு தேவையான பால், தயிர், இளநீர், பன்னீர், பழவகைகள், தேன், மஞ்சள் பொடி, எண்ணெய், நெய் மற்றும் இதர அபிஷேக பொருட்களை இன்று மாலைக்குள் கோவில் உள்துறை அலுவலகத்தில் பக்தர்கள் ஒப்படைக்கலாம். மேலும் அன்று இரவு முதல் மறுநாள் காலை வரை நடை திறந்திருக்கும். எனவே பக்தர்கள் அந்த நேரத்தில் சென்று வழிபாடு நடத்தலாம்.
சிவராத்திரி விழாவையொட்டி இன்று மாலை 4 மணிக்கு சுந்தரேசுவரர் சுவாமிக்கு 1008 சங்காபிஷேகமும், மீனாட்சிக்கு 108 சங்காபிஷேகமும் நடக்கிறது. அதன்பின்னர் சனிபிரதோஷ வழிபாடு 4.45 மணிக்கு மேல் நடக்கிறது. தொடர்ந்து அன்று இரவு மகாசிவராத்திரி 4 கால பூஜைகள் நடைபெறுகிறது. அதன்படி மீனாட்சி அம்மன் சன்னதியில் முதல் கால பூஜை இரவு 10 மணிக்கு தொடங்கி 10.45 மணி வரையிலும், 2-ம் கால பூஜை 11 மணிக்கு தொடங்கி 11.40 மணி வரையிலும், 3-ம் கால பூஜை 12 மணிக்கு தொடங்கி 12.40 மணி வரையிலும், 4-ம் கால பூஜை நள்ளிரவு 1 மணிக்கு தொடங்கி 1.45 மணி வரையிலும் நடைபெறும்.
அதே போன்று சுவாமி சன்னதியில் முதல் கால பூஜை இரவு 11 மணிக்கு தொடங்கி 11.45 மணி வரையிலும், 2-ம் கால பூஜை இரவு 12 மணிக்கு தொடங்கி 12.45 மணி வரையிலும், 3-ம் கால பூஜை நள்ளிரவு 1 மணிக்கு தொடங்கி 1.45 மணி வரையிலும், 4-ம் கால பூஜை 2 மணிக்கு தொடங்கி 2.45 மணி வரையிலும் நடைபெறும். அதிகாலை 3 மணிக்கு அர்த்த ஜாம பூஜையும், 4 மணிக்கு பள்ளிறை பூஜையும், 5 மணிக்கு திருவனந்தல் பூஜையும் நடைபெற உள்ளது.
மீனாட்சி அம்மன் கோவிலை சார்ந்த சிம்மக்கல் ஆதிசொக்கநாதர் கோவில், செல்லூர் திருவாப்புடையார் கோவில், தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவில், தெற்குமாசி வீதி தென்திருவாலவாய சுவாமி கோவில், எழுகடல் காஞ்சன மாலையம்மன் கோவில், காசி விஸ்வநாதர் கோவில், சுடுதண்ணீர் வாய்க்கால் கடம்பவனேசுவரர் கோவில், திருவாதவூர் திருமறைநாத சுவாமி கோவில், ஆமூர் அய்யம் பொழில் ஈஸ்வரர் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது.
அதேபோல் இம்மையிலும் நன்மை தருவார் கோவில், நேதாஜி ரோடு முருகன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் 4 கால பூஜைகள் நடைபெறுகிறது. மேலும் குலதெய்வ வழிபாட்டிற்காக நகர் மற்றும் புறநகரில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடக்கிறது.
- மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றிலும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
- மத்திய பாதுகாப்பு படை அதிகாரிகள் மீனாட்சி அம்மன் கோவிலில் வேலை பார்க்கும் பணியாளர்களின் முழு விவரங்களை சேகரித்துள்ளனர்.
மதுரை:
ஜனாதிபதி திரவுபதி முர்மு முதன்முறையாக நாளை (18-ந் தேதி) மதியம் 12 மணிக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகிறார். அங்கு அவர் அம்மன், சுவாமி சன்னதிகளில் தரிசனம் செய்கிறார். இதனைத் தொடர்ந்து திரவுபதி முர்மு கோவிலின் பல்வேறு பகுதிகளை பார்வையிடுகிறார்.
கோவிலில் நடைபெறும் அன்ன தானத்திலும் பங்கேற்கிறார். மீனாட்சி அம்மன் கோவிலில் ஜனாதிபதி சுமார் 1 மணி நேரம் வரை இருப்பார் என்று தெரிகிறது. இதனை முன்னிட்டு ஒட்டு மொத்த மதுரை மாநகரமும் போலீஸ் பாதுகாப்பு வளையத்தில் கொண்டுவரப்பட்டு உள்ளது. மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றிலும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ஏற்கெனவே சித்திரை வீதிகள் மற்றும் கோவில் சுற்றுப்புற பகுதிகளில் 8 இடங்களில் சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
இதற்கிடையே மத்திய பாதுகாப்பு படை அதிகாரிகள் மீனாட்சி அம்மன் கோவிலில் வேலை பார்க்கும் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் அர்ச்சர்கர்களின் விவரங்களை முழு விவரங்களை சேகரித்துள்ளனர். அவர்களின் இருப்பிடம், குடும்ப விவரங்களும் போலீசாரால் குறிப்பு எடுக்கப்பட்டு உள்ளன. அடுத்தபடியாக அவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் நடத்தப்பட்டது.

ஜனாதிபதி மதுரை வருகையை முன்னிட்டு விமான நிலையம், மீனாட்சி அம்மன் கோவில், வழித்தடங்கள் ஆகிய பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகிறார்கள். கோவிலுக்கு வெளியே தற்காலிக கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு இருந்தபடி போலீசார் கண்காணித்து வருகின்றனர். சித்திரை வீதியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு தற்காலிக சிறப்பு அறை தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.
மதுரை மாவட்டத்தில் விமான நிலையம் முதல் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு செல்லும் வழித்தடம் அனைத்தும் மாநகர காவல் எல்லைக்குள் உள்ளது. எனவே போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
ஒருவேளை ஜனாதிபதி சுற்றுச்சாலையை பயன்படுத்தும் பட்சத்தில் புறநகர் போலீசாரும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று போலீஸ் சரக டி.ஐ.ஜி. பொன்னி, போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் ஆகியோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவை சேர்ந்த மேலும் ஒரு குழு டெல்லியில் இருந்து மதுரைக்கு வந்துள்ளது. அவர்கள் மீனாட்சி கோயில் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு தரிசனத்தை முடித்து விட்டு, சிறிது நேரம் ஓய்வு எடுப்பதற்காக கோவில் வளாகத்தில் தற்காலிக வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.
இதற்கிடையே வெடி குண்டு தடுப்பு நிபுணர்கள் விமான நிலையம் முதல் மீனாட்சி-சுந்தரேசுவரா் கோவில் வரை உள்ள சாலைகளில் தீவிர வெடிகுண்டு சோதனை நடத்தினார்கள். இதன் ஒரு பகுதியாக தெற்குவாசல் மேம்பாலத்தின் கீழ்ப் பகுதிகளிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. மதுரையில் இன்று முதல் 2 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையை முன்னிட்டு மதுரை விமான நிலையம் முதல் மீனாட்சி அம்மன் கோவில் வரை 10-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்றும், நாளையும் வாகனம் நிறுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. தெற்குவாசல் போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வழக்குகள் தொடா்பான பழைய வாகனக் கழிவுகள் அனைத்தும் அகற்றப்பட்டு உள்ளன. மேலும் குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு போக்குவரத்து சாலை சீரமைப்புப் பணிகள், வா்ணம் பூசுதல், வேகத் தடைகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளும் நடந்து வருகிறது.
இதற்கிடையே மதுரை விமான நிலையத்தில் ஜனாதிபதி வருகையின் போது வேலை பார்க்கும் அதிகாரிகள், பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். அதன்படி மதுரை விமான நிலையத்தில் அதிகாரிகள், ஊழியர்கள், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் உள்பட 40 பேருக்கு சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்கி உள்ளனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக அதிகாலை இன்று காலை அதிகாரிகள் மீண்டும் ஆலோசனை நடத்தினார்கள். இதனைத் தொடர்ந்து மதுரையில் இன்று காலை போலீசாரின் பாதுகாப்பு ஒத்திகையும் நடத்தப்பட்டது.
- செயற்கைகோள் மென்பொருள் தயாரித்த மாணவிகளுக்கு எம்.எல்.ஏ. பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
- 10 பேர் மென்பொருள் தயாரித்தனர்.
திருமங்கலம்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட்டுடன் ஆசாதி-2 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைகோளுக்கு மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 10 பேர் மென்பொருள் தயாரித்தனர். அவர்கள் செயற்கை கோள் விண்ணில் ஏவப்படும் நிகழ்ச்சிக்கு இஸ்ரோ சென்று வந்தனர். செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதை அடுத்து மாணவிகளுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
இந்த நிலையில் உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன் திருமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு வருகை தந்து செயற்கைக்கோள் மென்பொருள் தயாரிப்பில் ஈடுபட்டு வெற்றி பெற்ற மாணவிகளை பாராட்டி சால்வை அணிவித்து கவுரவித்தார்.






