என் மலர்
நீங்கள் தேடியது "நிறுவனர் தினவிழா"
- எஸ்.என்.கல்லூரியில் நிறுவனர் தினவிழா நடந்தது.
- இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை
சரஸ்வதி நாராய ணன் கல்லூரியின் நிறுவனர் தினவிழா கல்லூரி செயலர் நாராயணன் தலைமையில் நடைபெற்றது. வணிகவியல் துறை தலைவர் ஜெயக்கொடி வரவேற்று பேசினார்.
முதல்வர் கண்ணன் தொடக்கவுரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட காந்திகிராம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் நிர்மலா மோகன் 'ஈதல் இசைபட வாழ்தல்' என்ற தலைப்பில் பேசினார்.
நாராயணன் செட்டியார் அறக்கட்டளை மூலமாக இக்கல்வியாண்டிற்கான கல்வி உதவித்தொகை மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் துணை முதல்வர் மோதி லால் நன்றி கூறினார்.
- பல்வேறு பள்ளிகளை சார்ந்த மாணவ- மாணவி களுக்கு திறனாய்வு போட்டிகள் நடத்தப்பட்டன.
- அனைத்து மாணவர்களுக்கும் விருதுகள் மற்றும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.
செங்கோட்டை:
செங்கோட்டை ஜெயேந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நிறுவனர் தினவிழா நடந்தது. விழாவிற்கு மத்திய மரபுசாரா எரிசக்திதுறை உறுப்பினர் புளியங்குடி ஜார்ஜ் ஸ்டீபன்ராஜ் தலைமை தாங்கினார். தமிழக காங்கிரஸ் ஊடகப்பிரிவு செயலர் அப்துல்காதர்மஜித், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் பால்சாமி ஆகியோர் முன்னி லை வகித்தனர். பள்ளி தாளாளர் ராம் மோகன் வரவேற்புரை யாற்றினார்.
விழாவில் பல்வேறு பள்ளிகளை சார்ந்த மாணவ- மாணவி களுக்கு திறனாய்வு போட்டிகள் நடத்தப்பட்டன. பேச்சுப் போட்டி, பாட்டுப்போட்டி, ஓவிய ப்போட்டி போன்ற பல்வேறு திறனாய்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம் பரிசாக வழங்கப்பட்டது.
கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் விருதுகள் மற்றும் பங்கேற்பு சான்றிதழ் வழங்க ப்பட்டது.விழா ஏற்பாடு களை பள்ளி துணை முதல்வர் கார்த்திக், ஆசிரி யைகள் மற்றும் பசுமைப்ப டை மாணவர்கள் செய்தி ருந்தனர். 12-ம் வகுப்பு மாணவி தன மகே ஷ்வரி நிகழ்ச்சிகளை தொ குத்து வழங்கினார்.
பள்ளி முதல்வர் ராணிராம்மோகன் நன்றி கூறினார்.






