மதுரை வந்தார் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு

கோவை ஈஷா மையத்தில் இன்று நடக்கும் சிவராத்திரி விழாவில் தலைமை விருந்தினராக திரவுபதி முர்மு பங்கேற்கிறார்.இன்று மாலை 6 மணிக்கு சிவராத்திரி விழாவில் பங்கேற்கும் முர்மு இரவு 9.15-க்கு புறப்பட்டு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.
மதுரை வந்தார் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு
Published on

குடியரசுத்தலைவராக பதவியேற்ற பிறகு முதன்முறையாக தமிழ்நாடு வந்துள்ளார் திரவுபதி முர்மு. 2 நாள் பயணமாக மதுரை, கோவைக்கு செல்கிறார்.

டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்த குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவுக்கு ஆளுநர் ஆர்என் ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்டோர் வரவேற்றனர். மீனாட்சியம்மன் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு கோவை செல்கிறார்.

மேலும் கோவை ஈஷா மையத்தில் இன்று நடக்கும் சிவராத்திரி விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்கிறார்.

இன்று மாலை 6 மணிக்கு சிவராத்திரி விழாவில் பங்கேற்கும் முர்மு இரவு 9.15-க்கு புறப்பட்டு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com