என் மலர்tooltip icon

    மதுரை

    • சீதாராமன் ஓய்வூதிய தொகையை பெறுவதற்காக திருமங்கலத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு வைத்திருந்தார்.
    • பென்ஷன் பணத்தை ஒவ்வொரு மாதமும் தனது வீட்டில் குடியிருக்கும் சந்தோசிடம் ஏ.டி.எம். கார்டை கொடுத்து எடுத்து வரச்சொல்வது வழக்கம்.

    திருமங்கலம்:

    மதுரை திருநகர் சுந்தர்நகரை சேர்ந்தவர் சீதாராமன்(வயது89). ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமையாசிரியர். இவரது மகன் ஆஸ்திரேலியாவில் பணிபுரிந்து வருகிறார். சீதாராமனின் வீட்டில் மாடியில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த சந்தோஷ்(32) என்பவர் குடியிருந்து வருகிறார்.

    சீதாராமன் ஓய்வூதிய தொகையை பெறுவதற்காக திருமங்கலத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு வைத்திருந்தார். முதுமை காரணமாக சீதாராமன் வெளியில் அவ்வளவாக செல்வதில்லை. வங்கிக்கும் செல்ல முடியவில்லை.

    இதனால் பென்ஷன் பணத்தை ஒவ்வொரு மாதமும் தனது வீட்டில் குடியிருக்கும் சந்தோசிடம் ஏ.டி.எம். கார்டை கொடுத்து எடுத்து வரச்சொல்வது வழக்கம். இதன் காரணமாக சந்தோசிற்கு சீதாராமனின் வங்கி கணக்கு மற்றும் ஏ.டி.எம். கார்டு விவரங்கள் தெரிந்துள்ளது.

    சீதாராமன் முதுமை காரணமாக வெளியில் செல்ல முடியாமல் இருப்பதாலும், கணக்கில் உள்ள பணம் சம்பந்தமான விபரங்கள் தெரியாது என்பதாலும் அதனை பயன்படுத்தி அவர் கணக்கில் உள்ள பணத்தை எடுத்துக்கொள்ள சந்தோஷ் திட்டமிட்டார்.

    அதன்படி கடந்தாண்டு ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையில் சீதாராமனின் வங்கி கணக்கில் இருந்து அவருக்கு தெரியாமல் ஆன்லைன் மூலமாக ரூ.5 லட்சத்து 79 ஆயிரத்தை எடுத்துள்ளார். கடந்த வாரம் திடீரென பணத்தேவை காரணமாக சீதாராமன் நேரடியாக திருமங்கலம் வங்கிக்கு வந்து ரூ.5 லட்சத்திற்கு காசோலை அளித்துள்ளார்.

    அப்போது வங்கி கணக்கில் பணம் இல்லை என்று கூறி காசோலையை திருப்பி அனுப்பியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த அவர், வங்கியை தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார். அப்போது அவரது கணக்கிலிருந்து பல தவணைகளில் லட்சக்கணக்கில் பணம் எடுக்கப்பட்டிருந்ததது தெரிய வந்தது.

    உடனடியாக அவர் இதுகுறித்து சந்தோசிடம் விவரம் கேட்டுள்ளார். ஆனால் அவர் அதுகுறித்து தனக்கு தெரியாது என்று மழுப்பலாக பதில் அளித்துள்ளார். இதனால் சீதாராமனுக்கு மேலும் சந்தேகம் அதிகமானது.

    இந்நிலையில் சந்தோஷ் மற்றும் அவரது மனைவி திடீரென தலைமறைவாகி விட்டனர். இதையடுத்து தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.5.79 லட்சம் திருடப்பட்டது குறித்து மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத்திடம் நேரில் சென்று புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் திருமங்கலம் டவுன் போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சந்தோசை தேடி வருகின்றனர்.

    • மதுரையில் மத்திய அரசு பணிக்கான தேர்வு இன்று நடந்தது.
    • 67 சதவீதம் பேர் தேர்வு எழுத வரவில்லை

    மதுரை

    மத்திய அரசின் பொறியியல் பணிகளுக்கான யூ.பி.எஸ்.சி முதல்நிலை தேர்வு இன்று காலை நடந்தது. அழகர் கோவில் சாலையில் உள்ள மதுரை காமராஜர் உறுப்புக்கல்லூரி, கோரிப்பாளையம் அரசினர் மீனாட்சி கல்லூரி, கே.கே.நகர் வக்புவாரிய கல்லூரி ஆகிய 3 இடங்களில் தேர்வு நடத்தப்பட்டது.

    காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 2 மணி முதல் 5 மணி வரையிலும் தேர்வு நடக்கிறது. மதுரை மாவட்டத்தில் 1087 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 353 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்திருந்தனர். மீதமுள்ள 734 பேர் (67சதவீதம்) தேர்வு எழுத வரவில்லை.

    • குடிபோதையில் வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் கைது செய்யப்பட்டார்.
    • கரிமேடு போலீசார் பாட்டி- பேரன் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.

    மதுரை

    மதுரை கரிமேடு, கருப்பையா தோப்பை சேர்ந்தவர் சுப்புலட்சுமி (60). இவர் நேற்று மதியம் பேரன் ஆகாசுடன்(13) மேல அண்ணா தோப்பு, டீச்சர்ஸ் காலனி அருகே நடந்து சென்றார். அங்கு வேகமாக வந்த கார் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சுப்புலட்சுமி, ஆகாஷ் ஆகியோர் சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தனர்.

    வேகமாக சென்ற கார் மேலும் 2 பேர் மீது மோதியது. இதில் அவர்கள் படுகாயம் அடைந்தனர். இது குறித்து கரிமேடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தனர். அப்போது படுகாயம் அடைந்தவர்களில் மதுரை கீழ அண்ணா தோப்பு கருப்பையா மகன் பிரபாகரன் (13) என்பவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

    படுகாயம் அடைந்த இன்னொரு சிறுவன் முத்து (14) என்பது தெரியவந்தது. இருவரும் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கரிமேடு போலீசார் பாட்டி- பேரன் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.

    அதிவேகமாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முருகன் (43) குடிபோதையில் வாகனம் ஓட்டியது தெரிய வந்தது. அவரை கரிமேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    • சிவன் கோவில்களில் விடிய விடிய பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
    • சரவண பொய்கையில் உள்ள சிவபெருமானுக்கு சர்வ பூஜைகள் நடந்தது.



     இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் நடந்த சிவராத்திரி விழாவில் நடைபெற்ற மாணவிகளின் பரதநாட்டியம்.

    மதுரை

    சிவபெருமான் 63 திரு விளையாடல்களை நிகழ்த்திய மதுரை தலத்தில் இறைவனே மணிமுடி தாங்கி ஆட்சி செய்வதாக ஐதீகம். மதுரை மாவட்டத்தில் ஆண்டுதோறும் சிவனுக்கு உகந்த திருவிழாக்கள் நடத்தப்படுவது வழக்கம். மகாசிவராத்திரி திருவிழா நேற்று தொடங்கியது. நேற்று சனி பிரதோஷம் ஆகும். 2 அம்சங்களும் அமைந்த இந்த திருவிழாவில் கலந்து கலந்து கொள்வதற்காக பக்தர்கள் சிவன் கோவில்களுக்கு கூட்டம், கூட்டமாக வந்தனர்.

    மதுரை மாவட்டத்தில் சிவராத்திரியை முன்னிட்டு நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை கோவில் நடை திறந்திருந்தது. அங்கு 4 கால பூஜைகள் நடத்தப்பட்டன. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், ஆராதனை நடத்தப்பட்டது. பொதுமக்கள் பக்தி பரவசத்துடன் வழிபாடு செய்தனர்.

    மதுரை மாவட்டத்தில் சிவராத்திரி திருவிழாவிற்காக கோவில்களில் நேற்று மாலை 3 மணிக்கே நடை திறக்கப்பட்டது. இன்று அதிகாலை வரை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. மீனாட்சி அம்மன் கோவிலில் சுந்தரேசுவரருக்கு நேற்று இரவு 11.45 மணிக்கு முதல்கால பூஜையும், 12.45 மணிக்கு 2-ம் கால பூஜையும், அதிகாலை 1.45 மணிக்கு 3-ம் கால பூஜையும், 2.45 மணிக்கு 4-ம் கால பூஜையும் நடந்தன. அதிகாலை 3:45 மணிக்கு அடுத்த ஜாம பூஜை, 4 மணிக்கு பள்ளியறை பூஜை, 5 மணிக்கு திருவனந்தல் பூஜை நடத்தப்பட்டன. திருப்பரங்குன்றம் முருகன் கோவில் அருகில் உள்ள சத்தியகிரீ சுவரருக்கு பிரதோஷ வழிபாடு நடத்தப்பட்டது. இரவு 9.30 மணி அளவில் முதல் கால பூஜை நடந்தது. தொடர்ந்து 4 கால பூஜைகள், சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது.

    திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள பால் சுனை கண்ட சிவ பெருமான் க பால், பன்னீர், இளநீர் அபிஷேகம் செய்யப்பட்டது. சிவபெருமான் ருத்ராட்சம், நாகபரணம் உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்களுடன் காட்சி அளித்தார்.

    சரவண பொய்கையில் உள்ள சிவபெருமானுக்கு சர்வ பூஜைகள் நடந்தது. காஞ்ச ரம்பேட்டை, பாறைப்பட்டி பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜை வழிபாடுகள் நடத்தப்பட்டன .

    மதுரை இம்மையில் நன்மை தருவார் கோவில், தெப்பக்குளம் முக்தீசுவரர் கோவில், சிம்மக்கல் ஆதி சொக்கநாதர் கோவில், தெற்கு வாசல் தென்திருவாலவாய சுவாமி கோவில், செல்லூர் திருவாப்புடையார் கோவில், திருவாதவூர் திருமுறை நாதர் சுவாமி கோவில், ஆமூர் ஐம்பொழில் ஈஸ்வரன் கோவில், சோழ வந்தான் பிரளயநாதர் கோவில், திருவேடகம் ஏடக நாதர் சுவாமி கோவில், மன்னாடிமங்கலம் மீனாட்சி- சுந்தரேசுவரர் கோவில், சோழவந்தான் பேட்டை அருணாச்சல ஈஸ்வரர் கோவில், திருவால வாயநல்லூர் மீனாட்சி- சுந்தரேசுவரர் கோவில், விக்கிரமங்கலம் மருததோய ஈஸ்வரமுடையார் கோவில், பேச்சியம்மன் படித்துறை காசி விஸ்வநாதர் கோவில், சுடுதண்ணீர் வாய்க்கால் கடம்பவனேசுவரர் கோவில் உள்பட பல்வேறு சிவாலயங்களில் திருவிளக்கு பூஜையும், சங்கு அபிஷேகமும் நடத்தப்பட்டது.

    சிவராத்திரியை முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தமிழகத்தில் சிவராத்திரியை முன்னிட்டு குலதெய்வ கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள குலதெய்வ கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. பக்தர்கள் நேற்று இரவு குடும்பத்துடன் கோவிலுக்கு வந்து தங்கி இருந்து விடிய, விடிய பூஜைகள் நடத்தி சிவபெருமானை வழிபட்டனர்.

    • சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு, தமிழக முதல்வரின் சிறப்பு பதக்கம் அறிவிக்கப்பட்டது.
    • இதற்காக 15 பெண் காவலர்கள் உள்பட 60 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

    மதுரை

    தமிழக சிறைத்துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு, தமிழக முதல்வரின் சிறப்பு பதக்கம் அறிவிக்கப்பட்டது. இதற்காக 15 பெண் காவலர்கள் உள்பட 60 பேர் தேர்வு செய்யப்பட்டனர். மதுரை சரகத்தில் மட்டும் 2 பெண்கள் உள்பட 14 சிறை காவலர்களுக்கு சிறப்பு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மதுரை மத்திய சிறை மைதானத்தில் தமிழக அரசின் சிறப்பு விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 16 பேருக்கும் சரக டி.ஐ.ஜி. பழனி பதக்கம் வழங்கி பாராட்டினார். இதில் சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டு வசந்த கண்ணன், சிறை அலுவலர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சோழவந்தான் பகுதியில் மகா சிவராத்திரி விழா வழிபாடு நடந்தது.
    • இந்த நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் சப்பாணி கோவில் தெருவில் உள்ள சப்பாணி கோவிலில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு மகா சிவராத்திரி விழா நடந்தது. இதனை முன்னிட்டு பக்தர்கள் முதல் வாரம் காப்பு கட்டி, விரதம் இருந்து வந்தனர்.

    இந்த நிலையில் மகாசிவ ராத்திரி அன்று வைகை ஆற்றுக்கு சென்று சாமி பெட்டியுடன் கரகம் எடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப் பட்டது. வைத்தியநாதபுரம் அம்மன் கோவிலில் நடந்த விழாவில் பக்தர்கள் வயல்காட்டுக்கு சென்று சாமி பெட்டி எடுத்து கரகம் எடுத்து முளைப்பாரி ஊர்வலம் எடுத்து வந்தனர்.

    புட்டு விநாயகர் கோவிலில் 4 கால அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. திரவுபதி அம்மன் கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷே கம் நடைபெற்றது. இங்குள்ள கருப்பசாமிக்கு 12 வாசனை பொருட்களை கொண்டு அபிஷே கம், சிறப்பு பூஜை கள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    பிரளய நாத சுவாமி கோவிலிலும் 4 கால பூஜை நடைபெற்றது. இதில் எம்.வி.எம். குழுமத்தலைவர் மணிமுத்தையா, நிர்வாகி வள்ளியம்மாள், தாளாளர் டாக்டர் மருதுபாண்டியன் ஆகியோர் பங்கேற்று பக்தர்களுக்கு பிரசாதப்பை வழங்கினர்.

    மேலரதவீதி அங்காள பரமேஸ்வரி சமேத வாலகுரு நாதன் கோவில், வைகை ஆற்றங்கரையில் உள்ள சாலை கருப்பண்ணசாமி கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் திருவேடகம் ஏடகநாதர் கோவில், தென்கரை அகிலாண்ட ஈஸ்வரி சமேத மூலநாத சுவாமி கோவில், முதலைக் குளம் கம்ப காமாட்சி அம்மன் கருப்புசாமி கோவில், விக்கிரமங்கலம் கருப்பு கோவில், காடுபட்டி கோவில் வயக்காட்டு கருப்புசாமி கோவில், மன்னாடிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களிலும் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிவராத்திரியொட்டி பூக்களின் வரத்தும் அதிகமாக இருந்தது.
    • மதுரை மாட்டுத்தாவணியில் மலர் சந்தையில் பூக்களை வாங்க ஏராளமானோர் குவிந்தனர்.

    மதுரை:

    இந்துக்களின் பண்டிகைகளில் முக்கியத்துவம் பெற்ற மகாசிவராத்திரி இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சிவன் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் விடிய விடிய இருந்து சாமி தரிசனம் செய்வார்கள்.சிறப்பு பூஜையில் சுவாமிக்கு மலர் அபிஷேகம் செய்யப்படுவது வழக்கம். இதற்காக பூக்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.

    மதுரை மாட்டுத்தாவணியில் மலர் சந்தையில் பூக்களை வாங்க ஏராளமானோர் குவிந்தனர். இன்று சிவராத்திரியொட்டி பூக்களின் வரத்தும் அதிகமாக இருந்தது.

    மல்லிகை பூ 1500 முதல் 2000 ரூபாய் வரை விற்கப்பட்டது. பிச்சி ரூ. 1,500, முல்லை ரூ. 1500, செவ்வந்தி ரூ. 200, சம்பங்கி ரூ. 300, செண்டுமல்லி ரூ. 150-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    மலர் சந்தையில் தாமரை பூக்கள் வழக்கமாக 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை விற்கப்படுவது வழக்கம். ஆனால் இன்று மதுரை பூ மார்க்கெட்டில் வரலாற்றில் முதல் முறையாக ஒரு தாமரைப்பூ 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனையும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். தாமரைப்பூவின் இந்த திடீர் விலை உயர்வு வியாபாரிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்ப்படுத்தி யுள்ளது.

    • ஆற்றங்கரை கருப்பணசாமி-ராக்கச்சி அம்மன் கோவிலில் மாசி களரி விழா நடக்கிறது.
    • களஞ்சிய தேவர் குடும்பத்தினர் ஏற்பாட்டில் விரைவில் பொற்கோவிலாக அமைய உள்ளது.

    பனைக்குளம்

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியனில் ஆறும், கடலும் சங்கமிக்கக்கூடிய சிறப்புமிகு ஆற்றங்கரையில் விரைவில் பொற்கோவிலாக அமைய உள்ள கருப்பணசாமி-ராக்கச்சி அம்மன் கோவிலில் மாசி களரி விழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா இன்றும், நாளையும் நடைபெறுகிறது.

    தற்போது கருப்பண சாமி-ராக்கச்சி அம்மன் கோவில் மிகப் பிரமாண்டமான அளவில் பொற்கோவில் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. சிறந்த கட்டு மான தொழில் நுட்ப வல்லுநர்கள் மூலம் இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் ராமநாதபுரம் மாவட்ட மக்களால் அன்போடு வள்ளல் என்று அழைக்கக்கூடிய டாக்டர் ராமு களஞ்சியதேவர் மாசி களரி திருவிழாவை பிரமாண்டமாக நடத்தி வந்தார்.

    அப்போது 101 கிடாய் வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தி வருவது வழக்கம். விழாவில் ஏழை-எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, 5 ஆயிரம் பேருக்கு இலவச வேட்டி-சேலை மற்றும் மருத்துவ கல்வி, தொழில் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை அனைத்து சமுதாய மக்க ளுக்கும் தொடர்ந்து செய்து வந்தார்.

    தற்போது அவரது மூத்த மகனும், பொறியாளரும், ஆன்மீக செம்மலுமான ஆர்.கே.வெங்கட்ராமன் தலைமையில் மகன்கள் டாக்டர் ஆர்.கே.சிவக்குமார், திரைப்பட நடிகர் ஆர்.கே.சுரேஷ், மகள் ராகவி குமரக்கண்ணன் ஆகியோர் தங்களது தந்தை வழியில் நற்காரியங்கள் அனைத்தை யும் தொடர்ச்சியாக செய்து வருகின்றனர்.

    ஆண்டுதோறும் மாசி களரி திருவிழாவின்போது ஆற்றாங்கரையில் உள்ள கருப்பணசாமி, ராக்கச்சி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரா தனைகள் நடைபெறும். இந்த விழாவில் ஏராளமான ஆடுகள் நேர்த்திக்கடனாக பலியிடப்பட்டு அன்ன தானம் வழங்கப்படும்.

    அதன்படி விழாவின் முதல் நாளான இன்று 10 மணி முதல் நாளை அதிகாலை 2 மணி வரை ராக்கச்சி அம்மனுக்கு முதல்கால பூஜை மற்றும் தீபாராதனை நடைபெறும்.

    இன்று காலை 10 மணிக்கு மேல் சிறப்பு பூஜை, தீபாராதனை நடை பெற்றது. நாளை (19-ந்தேதி) 101 கிடாய்கள் வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தப்பட உள்ளன. அதன் பின்னர் டாக்டர் களஞ்சிய தேவரின் மனைவி லட்சுமி களஞ்சியம் நாச்சியார் அன்னதானத்தை தொடங்கி வைக்கிறார்.

    இந்த நிகழ்ச்சியில் மகன்கள் பொறியாளர்-ஆன்மீக செம்மல் ஆர்.கே.வெங்கட்ராமன், டாக்டர் ஆர்.கே.சிவக்குமார், திரைப்பட நடிகர் ஆர்.கே.சுரேஷ், மகள் ராகவி குமரக்கண்ணன் மற்றும் மருமகள்கள், பேரன்-பேத்திகள் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கின்றனர்.

    இந்த மாசி களரி விழாவை முன்னிட்டு கோவில் முழுவதும் வண்ண மின் விளங்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை கருப்பணசாமி வழிபாட்டு குலதெய்வ மக்கள் செய்துள்ளனர்.

    • மதுரையில் எஸ்ஸார்கோபி இல்ல திருமண விழா நாளை நடக்கிறது.
    • மதுரை வேலம்மாள் மருத்துவ கல்லூரி வளாகம் ஐடா ஸ்கட்டர் மண்டபத்தில் நடக்கிறது.

    மதுரை

    மதுரை வேலம்மாள் மருத்துவ கல்லூரி வளாகம் ஐடா ஸ்கட்டர் மண்டபத்தில் நாளை (19-ந்தேதி) ஞாயிறுக்கிழமை காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் தி.மு.க. நிர்வாகி எஸ்ஸார் கோபி இல்லத்திருமணம் நடக்கிறது.

    கமுதி வட்டம் அரியமங்கலம் போஸ் தேவர்-காளியம்மாள் ஆகியோரின் மகன் வழி பேத்தியும் ராமநாதபுரம் மாவட்டம் வேப்பங்குளம் சர்க்கரைத்தேவர்- பூமயில் ஆகியோரின் மகள்வழி பேத்தியும், மதுரைமாநகர் மாவட்ட தி.மு.க. முன்னாள் பொறுப்புக்குழு உறுப்பினர் எஸ்ஸார் கோபி-சுப்புலட்சுமி ஆகியோரின் மகள் டாக்டர் பிரியதர்ஷினிக்கும், தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டம் கடம்பன்குளம் செல்லையாதேவர்-சின்னத்தாய் ஆகியோரின் மகன் வழி பேரனும் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வட்டம் திருக்குறுங்குடி கிராமம் சுப்பிரமணிய தேவர்-பாக்கியலட்சுமி ஆகியோரின் மகள் வழி பேரனும் சென்னையை சேர்ந்த தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய ஓய்வு பெற்ற அலுவலர் முருகையா பாண்டியன்-ஓய்வு பெற்ற தமிழ்நாடு தேர்தல் துறை அலுவலர் வெள்ளையம்மாள் ஆகியோரின் மகன் டாக்டர் யோகேஷ் சக்திவேலுக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது.

    இந்த திருமண நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, நேரு, ஐ.பெரியசாமி, கே.ஆர்.பெரியகருப்பன், ஏ.வ.வேலு,தங்கம் தென்ன ரசு, சாத்தூர் ராமச்சந்திரன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அனிதா ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் பொன் முத்துராமலிங்கம், சுப.தங்கவேலன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல் திருமாவளவன் மற்றும் முன்னாள், இன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தி.மு.க. மாவட்ட, ஒன்றிய, பகுதி, நகர், வட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்கிறார்கள்.

    • ராஜபாளையம் வழியாக நெல்லை-மேட்டுப்பாளையம் சிறப்பு எக்ஸ்பிரஸ் ெரயில் இயக்கப்படுகிறது.
    • இந்த தகவலை மதுரை கோட்ட ெரயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    நெல்லை-மேட்டுப்பாளையம் இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ெரயில் (06030) இயக்கப்படுகிறது. இது ஏப்ரல் மாதம் 6-ந் தேதி முதல் ஜூன் மாதம் 29-ந் தேதி வரை வியாழக்கிழமைகளில் மாலை 7 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் செல்லும். மேட்டுப்பாளையத்தில் இருந்து ஏப்ரல் 7-ந் தேதி முதல் ஜூன் 30-ந் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் இரவு 7.45 மணிக்கு புறப்படும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ெரயில் (06029) மறுநாள் காலை 7.45 மணிக்கு நெல்லை செல்லும். சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, போத்தனுார், கோவையில் நின்று செல்லும் . இந்த தகவலை மதுரை கோட்ட ெரயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • பாப்பாபட்டி ஓச்சாண்டம்மன் கோவிலில் சிவராத்திரி திருவிழா போலீஸ் பாதுகாப்புடன் வழிபாடு செய்ய ஏற்பாடு செய்யப்படும்.
    • இரு தரப்பினருக்கிடையே சமரசம் ஏற்படாததால் வருவாய் துறையின் மூலம் திருவிழாவை நடத்த ஏற்பாடு செய்யப்படும்.

    உசிலம்பட்டி

    உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி ஓச்சாண்டம்மன் மாசி மகா சிவராத்திரி திருவிழா மற்றும் பெட்டி தூக்குவது குறித்து 8 மற்றும் 2, 10 தேவர்கள் வகையறாவுக்கும், 5 பூசாரி வகையறாவுக்கும் பிரச்சினை இருந்து வருகிறது.

    இைதயடுத்து பூசாரி மற்றும் கோவில் நிர்வாகியிடம் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சமரச பேச்சு வார்த்தை நடந்தது. கோட்டாட்சியர் சங்கரலிங்கம், வட்டாட்சியர் சுரேஷ் பிரெடரிக் கிளமெண்ட், போலீஸ் டி.எஸ்.பி. நல்லு ஆகியோர் பங்கேற்றனர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

    இதையடுத்து வருவாய் துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் கோவிலை திறந்து வைத்து பக்தர்களுக்கு வழிபாடு செய்ய ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தனர்.

    மேலும் பெரிய பூசாரி தேர்வு செய்வதில் பூசாரி தரப்பினருக்கிடையே நடந்த பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படாததால் பெட்டி தூக்கும் திருவிழாவும் நிறுத்தி வைக்கப்பட்டது.

    பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவில் திருவிழா கோர்ட்டு உத்தரவுப்படி நடத்த இரு தரப்பினருக்கிடையே சமரசம் ஏற்படாததால் வருவாய் துறையின் மூலம் திருவிழாவை நடத்த ஏற்பாடு செய்யப்படும். அதற்கு காவல் துறையினரின் தகுந்த பாதுகாப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    • உசிலம்பட்டி அருகே மூதாட்டி கொலையில் 2 பேர் சிக்கினர்.
    • இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த சாமி. இவரது மனைவி செல்லம்மாள். சாமி 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களது மகன், மகளுக்கு திருமணம் முடிந்து வெளியூர்களில் வசித்து வருகின்றனர்.

    சில தினங்களுக்கு முன்பு உசிலம்பட்டி-வத்தலக்குண்டு நெடுஞ்சாலையில் உள்ள தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த செல்லம்மாள் இரவு தூங்க சென்றார்.

    மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது செல்லம்மாள் கழுத்து, முகம் பகுதிகளில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. உசிலம்பட்டி டி.எஸ்.பி. நல்லு, இன்ஸ்பெக்டர் கண்ணாத்தாள் மற்றும் தடயவியல், குற்றப்பிரிவு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். கொலைக்கான கா ணம் குறித்தும் கொலை செய்த மர்ம நபர்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் கொலை யுண்ட செல்லம்மாளுக்கும், உத்தப்பநாயக்கனூரைச் சேர்ந்த சின்னன் மகன் குணா (வயது45) என்பவருக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட தகராறில் செல்லம்மாள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

    அதன் அடிப்படையில் குணா, அவரது கூட்டாளி மாரிமுத்து (35) ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×