search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "old lady murder"

    • உசிலம்பட்டி அருகே மூதாட்டி கொலையில் 2 பேர் சிக்கினர்.
    • இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த சாமி. இவரது மனைவி செல்லம்மாள். சாமி 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களது மகன், மகளுக்கு திருமணம் முடிந்து வெளியூர்களில் வசித்து வருகின்றனர்.

    சில தினங்களுக்கு முன்பு உசிலம்பட்டி-வத்தலக்குண்டு நெடுஞ்சாலையில் உள்ள தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த செல்லம்மாள் இரவு தூங்க சென்றார்.

    மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது செல்லம்மாள் கழுத்து, முகம் பகுதிகளில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. உசிலம்பட்டி டி.எஸ்.பி. நல்லு, இன்ஸ்பெக்டர் கண்ணாத்தாள் மற்றும் தடயவியல், குற்றப்பிரிவு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். கொலைக்கான கா ணம் குறித்தும் கொலை செய்த மர்ம நபர்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் கொலை யுண்ட செல்லம்மாளுக்கும், உத்தப்பநாயக்கனூரைச் சேர்ந்த சின்னன் மகன் குணா (வயது45) என்பவருக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட தகராறில் செல்லம்மாள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

    அதன் அடிப்படையில் குணா, அவரது கூட்டாளி மாரிமுத்து (35) ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாகூராள் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளதை கண்டு பழனிச்சாமி அதிர்ச்சியடைந்தார்.
    • ராஜா, நகைக்காக நாகூராளை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

    குரும்பூர்:

    தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள அம்மன்புரம் திருவள்ளூவர் மேலத்தெருவை சேர்ந்தவர் காசி என்ற பெருமாள். இவரது மனைவி நாகூராள் (வயது85). இவர்களது ஒரே மகள் இசக்கியம்மாளை உள்ளூரிலேயே திருமணம் செய்து கொடுத்துள்ளனர். அவருக்கு ராஜா (35), பழனிச்சாமி (31) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

    காசி கடந்த 15 வருடங்களுக்கு முன் இறந்ததால் நாகூராள் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இவருக்கு அவரது பேரன்கள் தினமும் சாப்பாடு கொண்டு வருவது வழக்கம். இதேபோல் கடந்த ஆண்டு ஜனவரி 7-ந்தேதி காலை பழனிச்சாமி, பாட்டி நாகூராளுக்கு சாப்பாடு கொண்டு வந்துள்ளார்.

    அப்போது அவரது வீட்டின் கதவு உள்ளே பூட்டாமல் இருந்தது. பாட்டி நாகூராளை அழைத்தும் அவர் வெளியே வராததால் பழனிச்சாமி கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றுள்ளார். அப்போது பாட்டி நாகூராள் பற்கள் உடைந்த நிலையில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க செயினும் மாயமாகி இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து அவரது மகள் இசக்கியம்மாள் குரும்பூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியை தேடி வந்தனர். ஒரு வருடமாகியும் இந்த கொலை வழக்கில் குற்றவாளி சிக்காமல் இருந்துள்ளார்.

    இந்நிலையில் இந்த கொலை வழக்கில் குற்றவாளியை விரைந்து கைது செய்ய வேண்டும் என்று எஸ்.பி. பாலாஜி சரவணன் தனிப்படையினருக்கு உத்தர விட்டார். இதனைத்தொடர்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட்ட தனிப்படையினர் மூத்த பேரன் ராஜாவை நேற்று முன்தினம் பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் நகைக்காக பாட்டி நாகூராளை கொலை செய்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் ராஜாவை கைது செய்து பாளை சிறையில் அடைத்தனர்.

    • வீட்டிற்குள் பிளாஸ்திரியால் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்ததார்.
    • மூதாட்டியை கொலை செய்தவர்களை கண்டுபிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    சூலூர்

    சூலூர் அருகே காந்தி நகரை சேர்ந்தவர் சரோஜி(வயது82). சம்பவத்தன்று இவர் வீட்டிற்குள் பிளாஸ்திரியால் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்ததார்.

    அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையும் மாயமாகி இருந்தது. அவரை யாரோ கொலை செய்து விட்டு நகையை திருடி சென்றுள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் மூதாட்டியை கொலை செய்தவர்களை கண்டுபிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மூதாட்டியின் வீட்டில் இருந்த கோரை பாய் வியாபாரிகள் 3 பேர் கொலை நடந்த நாளில் இருந்து தலைமறைவாக உள்ளனர்.

    இதனால் அவர்களை தேடி ஒரு தனிப்படை குழு தர்மபுரி விரைந்துள்ளது.தர்மபுரி மாவட்டம் முழுவதும் சல்லடை போட்டு, தேடும் போலீசார் அவர்கள் குறித்த தகவல்கள் கிடைக்கிறதா? என்றும் விசாரித்து வருகின்றனர்.

    மற்றொரு தனிப்படை குழுவினர், காந்திநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இதுவரை 50க்கும் மேற்பட்ட கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்தனர்.

    அந்த காட்சியில் பதிவாகி இருந்த காட்சிகளை வைத்து, சந்தேகத்திற்கு இடமான நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.இதுகுறித்து போலீசார் கூறுகையில், சந்தேக நபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். மூதாட்டியின் கொலையில் முக்கிய தடயம் சிக்கி உள்ளது. குற்றவாளிகளை நெருங்கி விட்டோம்.

    இன்று அல்லது நாளைக்குள் குற்றாவளிகளை பிடித்து விடுவோம். மேலும் தனிப்படையினர் தொடர்ந்து தர்மபுரி, ஓசூர் பகுதிகளில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்றனர்.

    ×