என் மலர்
நீங்கள் தேடியது "did not come to write"
- மதுரையில் மத்திய அரசு பணிக்கான தேர்வு இன்று நடந்தது.
- 67 சதவீதம் பேர் தேர்வு எழுத வரவில்லை
மதுரை
மத்திய அரசின் பொறியியல் பணிகளுக்கான யூ.பி.எஸ்.சி முதல்நிலை தேர்வு இன்று காலை நடந்தது. அழகர் கோவில் சாலையில் உள்ள மதுரை காமராஜர் உறுப்புக்கல்லூரி, கோரிப்பாளையம் அரசினர் மீனாட்சி கல்லூரி, கே.கே.நகர் வக்புவாரிய கல்லூரி ஆகிய 3 இடங்களில் தேர்வு நடத்தப்பட்டது.
காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 2 மணி முதல் 5 மணி வரையிலும் தேர்வு நடக்கிறது. மதுரை மாவட்டத்தில் 1087 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 353 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்திருந்தனர். மீதமுள்ள 734 பேர் (67சதவீதம்) தேர்வு எழுத வரவில்லை.






