என் மலர்
நீங்கள் தேடியது "Masi Kalari Festival"
- ஆற்றங்கரை கருப்பணசாமி-ராக்கச்சி அம்மன் கோவிலில் மாசி களரி விழா நடக்கிறது.
- களஞ்சிய தேவர் குடும்பத்தினர் ஏற்பாட்டில் விரைவில் பொற்கோவிலாக அமைய உள்ளது.
பனைக்குளம்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியனில் ஆறும், கடலும் சங்கமிக்கக்கூடிய சிறப்புமிகு ஆற்றங்கரையில் விரைவில் பொற்கோவிலாக அமைய உள்ள கருப்பணசாமி-ராக்கச்சி அம்மன் கோவிலில் மாசி களரி விழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா இன்றும், நாளையும் நடைபெறுகிறது.
தற்போது கருப்பண சாமி-ராக்கச்சி அம்மன் கோவில் மிகப் பிரமாண்டமான அளவில் பொற்கோவில் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. சிறந்த கட்டு மான தொழில் நுட்ப வல்லுநர்கள் மூலம் இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த கோவிலில் ஆண்டு தோறும் ராமநாதபுரம் மாவட்ட மக்களால் அன்போடு வள்ளல் என்று அழைக்கக்கூடிய டாக்டர் ராமு களஞ்சியதேவர் மாசி களரி திருவிழாவை பிரமாண்டமாக நடத்தி வந்தார்.
அப்போது 101 கிடாய் வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தி வருவது வழக்கம். விழாவில் ஏழை-எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, 5 ஆயிரம் பேருக்கு இலவச வேட்டி-சேலை மற்றும் மருத்துவ கல்வி, தொழில் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை அனைத்து சமுதாய மக்க ளுக்கும் தொடர்ந்து செய்து வந்தார்.
தற்போது அவரது மூத்த மகனும், பொறியாளரும், ஆன்மீக செம்மலுமான ஆர்.கே.வெங்கட்ராமன் தலைமையில் மகன்கள் டாக்டர் ஆர்.கே.சிவக்குமார், திரைப்பட நடிகர் ஆர்.கே.சுரேஷ், மகள் ராகவி குமரக்கண்ணன் ஆகியோர் தங்களது தந்தை வழியில் நற்காரியங்கள் அனைத்தை யும் தொடர்ச்சியாக செய்து வருகின்றனர்.
ஆண்டுதோறும் மாசி களரி திருவிழாவின்போது ஆற்றாங்கரையில் உள்ள கருப்பணசாமி, ராக்கச்சி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரா தனைகள் நடைபெறும். இந்த விழாவில் ஏராளமான ஆடுகள் நேர்த்திக்கடனாக பலியிடப்பட்டு அன்ன தானம் வழங்கப்படும்.
அதன்படி விழாவின் முதல் நாளான இன்று 10 மணி முதல் நாளை அதிகாலை 2 மணி வரை ராக்கச்சி அம்மனுக்கு முதல்கால பூஜை மற்றும் தீபாராதனை நடைபெறும்.
இன்று காலை 10 மணிக்கு மேல் சிறப்பு பூஜை, தீபாராதனை நடை பெற்றது. நாளை (19-ந்தேதி) 101 கிடாய்கள் வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தப்பட உள்ளன. அதன் பின்னர் டாக்டர் களஞ்சிய தேவரின் மனைவி லட்சுமி களஞ்சியம் நாச்சியார் அன்னதானத்தை தொடங்கி வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் மகன்கள் பொறியாளர்-ஆன்மீக செம்மல் ஆர்.கே.வெங்கட்ராமன், டாக்டர் ஆர்.கே.சிவக்குமார், திரைப்பட நடிகர் ஆர்.கே.சுரேஷ், மகள் ராகவி குமரக்கண்ணன் மற்றும் மருமகள்கள், பேரன்-பேத்திகள் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கின்றனர்.
இந்த மாசி களரி விழாவை முன்னிட்டு கோவில் முழுவதும் வண்ண மின் விளங்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை கருப்பணசாமி வழிபாட்டு குலதெய்வ மக்கள் செய்துள்ளனர்.






