என் மலர்tooltip icon

    மதுரை

    • விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் எஸ்.ஆர்.தங்கப்பாண்டி இல்ல திருமணம் நாளை மறுநாள் நடக்கிறது.
    • இதில் எம்.எல்.ஏக்கள்-முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்துகிறார்கள்.

    மதுரை

    மதுரை மாவட்ட விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் எஸ்.ஆர். தங்கப்பாண்டி இல்ல திருமணம் மதுரையில் நாளை மறுநாள் நடக்கிறது.

    நடிகர் விஜய் மக்கள் இயக்க மதுரை மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர். தங்கபாண்டி - அருணா தேவி ஆகியோரது மகன் எஸ். ஆர். டி. சஞ்சய், மதுரை கரிமேடு சரவணன்-சத்யா ஆகியோரது மகள் லத்திகா. இவர்களது திருமணம் நடிகர் விஜய்-சங்கீதா நல்லாசியுடன், விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. புஸ்ஸி ஆனந்து நல்வாழ்த்துக்களுடன் மதுரை எல்லீஸ் நகர் 70 அடி ரோட்டில் உள்ள எம்.ஆர்.சி. மஹாலில் நாளை மறுநாள் 23-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.

    மணமக்கள் சஞ்சய்-லத்திகா திருமண விழாவில் எம்எல்ஏக்கள் ஆர்.பி. உதயகுமார், ராஜன்செல்லப்பா, புதூர் பூமிநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.கே. ராஜேந்திரன், திரைப்பட தயாரிப்பாளர் ஜி.என். அன்புசெழியன் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்கள்.

    இந்த திருமணத்திற்கான ஏற்பாடுகளை மதுரை மாவட்ட விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் எஸ்.ஆர்.தங்கபாண்டி குடும்பத்தினர் மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    • திருவிழா காலங்களில் மதுபான கடைகளை மூடுவதற்கான அதிகாரம் யாருக்கு உள்ளது?
    • மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுந்துள்ளது.

    மதுரை

    தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

    கும்பகோணத்தில் மாசி மகாமக திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு மார்ச் 6-ந் தேதி கும்ப கோணம் மாசி மகாமக திரு விழா நடைபெற உள்ளது. இதற்காக கும்பகோணத்தில் உள்ள 12 சிவ ஆலயங்கள், 5 பெருமாள் கோவில்களில் கொடியேற்றம் நடை பெற்றது. மாசி மகாமக திரு விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து பல லட்சம் பக்தர்கள் வந்து கலந்து கொள்வார்கள்.

    அப்போது சட்ட விரோத செயல்களை தடுக்க கும்பகோணம் மற்றும் அதனை சுற்றி யுள்ள டாஸ்மாக் கடை களை மூடவேண்டும், அன்று உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என 2021-ம் ஆண்டு உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

    ஆனால், இதுவரை மாசி மகாமக திருவிழாவில் டாஸ்மாக் கடைகள் மூடப்படவில்லை. எனவே, கும்பகோணம் மாசி மக திருவிழாவில் பக்தர்களின் நலன் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சட்டம், ஒழுங்கு பிரச்சினையைத் தவிர்ப்பதற்காக கும்ப கோணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கவும், உள்ளுர் விடுமுறை அளித்து உத்தரவிட வேண்டும்

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விக்டோரியா கவுரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், திருவிழாக்களில் உள்ளூர் விடுமுறை மற்றும் மதுபான கடைகளை மூடுவதற்கான அதிகாரம் யாருக்கு உள்ளது? எதன் அடிப்படையில் உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது? இதற்கு அரசாணை ஏதேனும் உள்ளதா? என கேள்வி எழுப்பினார்.

    அப்போது மனுதாரர் தரப்பில் அரசாணையின் அடிப்படையில் திருச்செந்தூர் திருவிழாக்களில் உள்ளூர் விடுமுறை மற்றும் மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளது. மதுரையிலும் இதுபோன்று நடைபெற்றுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

    அதற்கு அரசு தரப்பில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் பெற்று தெரிவிக்க கால அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்று கொண்ட நீதிபதிகள் அரசு தரப்பில் தகவல் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை நாளை ஒத்தி வைத்துள்ளனர்.

    • மதுரை மாவட்டத்தில் ரேசன் அரிசி கடத்தல் குறித்து இலவச தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.
    • தமிழக சிவில் சப்ளை சி.ஐ.டி. போலீசார் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    மதுரை

    தமிழக சிவில் சப்ளை சி.ஐ.டி. போலீசார் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஏழை-எளிய, நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் ரேசன் கடை மூலம் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தமிழக அரசு வழங்கி வருகிறது. இதனை சிலர் முறைகேடாக பதுக்கி கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் பார்க்கின்றனர். இதனை தடுக்கும் வகையில் சிவில் சப்ளை சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் காவல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இது சென்னை கூடுதல் டி.ஜி.பி. நேரடி கண்காணிப்பில் செயல்படுகிறது. மதுரை மாவட்டத்தில் ரேசன் அரிசி கடத்தல், பதுக்கல் குறித்து இலவச தொலைபேசி எண் 1800 599 5950 மூலம் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். தகவல் தருபவரின் ரகசியம் பாதுகாக்கப்படும்.

    • உசிலம்பட்டியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.
    • மேற்கண்ட தகவலை மின்பகிர்மான செயற்பொறியாளர் அழகுமணிமாறன் தெரிவித்துள்ளார்.

    உசிலம்பட்டி

    உசிலம்பட்டி, தும்மக்குண்டு, இடையபட்டி, மொண்டிக்குண்டு ஆகிய துணைமின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக உசிலம்பட்டி நகர், கவண்டன்பட்டி, பூதிப்புரம், கள்ளபட்டி, வலையபட்டி, கே.போத்தம்பட்டி, அயன்மேட்டுப்பட்டி, மலைப்பட்டி, கரையாம்பட்டி, நல்லுத்தேவன்பட்டி, சீமானூத்து, கொங்கபட்டி, மேக்கிலார்பட்டி, கீரிபட்டி, ஒத்தபட்டி, பண்ணைப்பட்டி, சடையாள், கன்னியம்பட்டி, சிந்துபட்டி, தும்மக்குண்டு, பெருமாள்பட்டி, காளப்பன்பட்டி, பூசலப்புரம், திடியன், ஈச்சம்பட்டி, பாறைப்பட்டி, அம்பட்டையன்பட்டி, வலங்காகுளம், உச்சப்பட்டி, காங்கேயநத்தம, தங்களாச்சேரி, பொக்கம்பட்டி, மாதரை, தொட்டப்பநாயக்கனூர், இடையபட்டி, நக்கலப்பட்டி, பூச்சிபட்டி, செட்டியபட்டி, வில்லாணி, உத்தப்பநாயக்கனூர், உ.வாடிப்பட்டி, குளத்துப்பட்டி, கல்யாணிபட்டி, கல்லூத்து, எரவார்பட்டி, மொண்டிக்குண்டு, பாப்பாபட்டி, கொப்பிலிபட்டி, வெள்ளைமலைப்பட்டி, வையம்பட்டி, லிங்கப்பநாயக்கனூர், புதுக்கோட்டை, துரைசாமிபுரம் புதூர் ஆகிய பகுதிகளில் நாளை (22-ந் தேதி) காலை 6 மணி முதல் மின்தடை ஏற்படும். மேற்கண்ட தகவலை மின்பகிர்மான செயற்பொறியாளர் அழகுமணிமாறன் தெரிவித்துள்ளார்.

    • மின் வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.7 லட்சம் மோசடி செய்த அரசு ஊழியர் கைது செய்யப்பட்டார்.
    • திருநகர் போலீசார் கைது செய்தனர்.

    மதுரை

    மதுரை எஸ்.ஆர்.வி.நகரை சேர்ந்த வேல் முருகன் மனைவி சாந்தி (வயது 40). இவர் திருநகர் போலீசில் கொடுத்துள்ள புகார் மனுவில், எனது மகனுக்கு மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி கூடல்புதூர் சீனி வாசா நகரை சேர்ந்த உதயகுமார் (வயது44) என்பவர், என்னிடம் ரூ.7 லட்சம் வாங்கினார்.

    ஆனால் எனது மகனுக்கு வேலை வாங்கி கொடுக்கவில்ைல. எனவே நான் கொடுத்த பணத்தை திருப்பி தரும்படி கேட்டேன். அப்போது அவர் போலியான பணிநியமன ஆணையை வழங்கினார். இதுபற்றி தெரியவந்ததும் நான் உடனடியாக பணத்தை வழங்கும்படி கேட்டேன்.

    அப்போது உதயகுமாரும், அவரது மனைவி சுமதியும் கொலை மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    இதில் தொடர்புடைய குற்ற வாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர், போலீசாருக்கு உத்தர விட்டார். அதன்பேரில் மாநகர தெற்கு துணை கமிஷனர் சாய்பிரனீத் மேற்பார்வையில், திருப்பரங்குன்றம் உதவி கமிஷனர் ரவி ஆலோசனை ப்படி, திருநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையின்போது, சாந்தி அவர் கொடுத்த பணம், போலி நியமன ஆணை உள்பட அத்தனை ஆவணங்களையும் சமர்ப்பித்தார். இதனை போலீசார் ஆய்வு செய்து பார்த்தனர்.

    இதன் அடிப்படையில் உதயகுமாரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் அவர் மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக சாந்தியிடம் ரூ. 7 லட்சம் வாங்கி மோசடி செய்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து உதயகுமாரை திருநகர் போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக உதயகுமார் மனைவி சுமதியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் மாசி பெருந்திருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறுகிறது.
    • மார்ச் 4-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.

    மதுரை

    மதுரை மேலமாசிவீதியில் உள்ள பிரசித்திபெற்ற இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மாசி பெருந்திருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    அன்று காலை 7.42 மணி முதல் 8.42 மணிக்குள் அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்தில் கொடி யேற்றம் நடக்கிறது. இதனை தொடர்ந்து விழா நடக்கும் 10 நாட்களும் காலை, மாலையிலும் சப்பரம், ரிஷபம், யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி-அம்பாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    விழாவின் 6-ம் நாளான 2-ந்தேதி சைவ சமய வரலாற்று கழுவேற்ற லீலை நடக்கிறது. அன்று காலை கோவில் வளாகத்தில் ஞான சம்பந்தருக்கு பாலூட்டி உற்சவமும், 3-ந்தேதி காலை பிக்ஷாடணர் புறப்பாடு நடைபெறுகிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சி யான திருக்கல்யாணம் மார்ச் 4-ந்தேதி (சனிக்கி ழமை) நடக்கிறது. காலை 8.02 மணி முதல் 8.53 மணிக்குள் பிரியாவிடையு டன் நன்மை தருவாருக்கும், மத்தியபுரி அம்மனுக்கும் நடை பெறும் திருக்கல்யாண நிகழ்ச்சியில் பெண்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்பார்கள்.

    அன்று சனிப்பிரதோஷம் என்பதால் மாலை 3 மணிக்கு நந்திக்கு சிறப்பு அபிஷேகமும், வழிபாடும் நடக்கிறது. அன்று இரவு 8 மணிக்கு யானை, புஷ்ப வாகனத்தில் சுவாமி -அம்பாள் திருக்கல்யாண கோலத்தில் வீதி உலா வரு கிறார்கள். மறுநாள் 5-ந்தேதி காலையில் தேரோட்டம்ந டக்கிறது.

    10-ந்தேதி தீர்த்தவாரி உற்சவம் மற்றும் கொடியிறக்கமும், 11-ந்தேதி உற்சவ சாந்தி, பைரவர் பூஜையுடன் விழா நிறைவுபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ் சிவம் மற்றும் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

    • 400 ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
    • 9 ரவுடிகளின் வீட்டில் இருந்து 5 வாள், 2 கத்தி, 1 அரிவாள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மதுரை

    மதுரை மாநகரில் ரவுடிகள் மீண்டும் தலை தூக்குவதாக போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் ரவுடிகள் தொடர்பாக பட்டியல் தயார் செய்தனர். மதுரை மாநகரில் மட்டும் 400 ரவுடிகள் வசிப்பது தெரிய வந்தது.

    ரவுடிகளின் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்துவது என்று மாநகர போலீசார் முடிவு செய்தனர். அதன்படி கடந்த 5-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை சோதனை நடந்தது. 400 ரவுடிகளின் வீடுகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது.

    திருப்பரங்குன்றம், ஜெய்ஹிந்துபுரம், திடீர்நகர், கூடல்புதூர், அண்ணாநகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 9 ரவுடிகளின் வீட்டில் இருந்து 5 வாள், 2 கத்தி, 1 அரிவாள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்த பாலாஜி, கார்த்திகேயன் என்ற மெண்டல் கார்த்திக், கருப்பையா என்ற போதகர், சரவணன், நூர்கான், கார்த்திக், விக்னேசுவரன் என்ற பெயிண்டர் விக்கி, பழனிக்குமார், மணிகண்டன் என்ற உசிலை மணி ஆகிய 9 ரவுடிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறை வாக உள்ள ரவுடிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

    இது குறித்து மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் கூறுகையில், மதுரை மாநகரில் ரவுகளின் நட வடிக்கைகளை தொடர்ச்சி யாக கண்காணிக்க உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றச்செயல்களில் மீண்டும் ஈடுபடும் ரவுடிகளை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன் என்றார்.

    • நன்மை தருவார்-மத்தியபுரி அம்மன் திருக்கல்யாணம் 4-ந்தேதி நடக்கிறது.
    • 5-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

    கோவில் மாநகரமான மதுரைக்கு எத்தனையோ புகழும், வரலாறுகளும் உள்ளன. பாண்டிய மன்னர்களின் மரபுகளில் ஒன்றாக மன்னர்கள் முடி சூட்டிக்கொள்வதற்கு முன்பாக சிவபூஜை செய்வது வழக்கம். அதன்படி பாண்டிய மன்னராக முடி சூட்டுவதற்கு முன்பாக சிவபெருமானும், ராணியாக மீனாட்சி அம்மனும் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து சிவபூஜை செய்து வழிபட்ட தலமே மதுரையில் உள்ள இன்மையில் நன்மை தருவார் கோவிலாகும். புகழ்பெற்ற இந்த கோவிலின் மாசி பெருந்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டு மாசி பெருந்திருவிழா இன்மையில் நன்மை தருவார் கோவிலில் வருகிற 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நிகழ்ச்சியின் தொடக்கமாக நாளை(புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு மேல் 10 மணிக்குள் கொட்டகை முகூர்த்தம் நடைபெறுகிறது.

    24-ந் தேதி மாலை 7 மணிக்கு வாஸ்து சாந்தி, 25-ந் தேதி காலை 7.42 மணி முதல் 8.45 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து தினசரி பிரியாவிடையுடன்-இன்மையில் நன்மை தருவார், மத்தியபுரி அம்மனுடன் காலையிலும், மாலையிலும் ரிஷப வாகனம், மரச்சப்பரம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான இன்மையில் நன்மை தருவார்-மத்தியபுரி அம்மன் திருக்கல்யாண வைபவம் 4-ந்தேதி காலை 8 மணி முதல் 8.53 மணிக்குள் நடைபெறுகிறது. 5-ந் தேதி காலை 8 மணி முதல் 8.53 மணிக்குள் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெறுகிறது. 6-ந் தேதி காலை உற்சவ சாந்தி, பைரவர் பூஜையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    • போலீஸ்காரர் மீது தாக்குதல் நடத்திய கைதி தற்கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்தார்.
    • இது தொடர்பாக கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மத்திய சிறையில் மகேஷ் சண்முகம் என்பவர் சிறைவாசம் அனுபவித்து வருகிறார். சம்பவத்தன்று மாலை அவர் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கும், சக கைதிக்கும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து ஜெயில் காவலர்கள் கண்ணன், பாண்டியன் ஆகியோர் மகேஷ் சண்முகத்தை சிறைக்குள் அடைக்க முயன்றனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த மகேஷ் சண்முகம், போலீஸ்காரர் கண்ணனை தாக்கினார். மேலும் அவரது சட்டையை கிழித்து கீழே தள்ளிவிட்டாராம்.

    இதுகுறித்து சிறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் மகேஷ் சண்முகம் அடுத்த நாள் மதியம் விசாரணை தொகுதிக்கு சென்றார். அங்கு பணியிலிருந்த சவரத் தொழிலாளியின் கத்தியை பிடுங்கி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக சிறை அதிகாரி பாலகிருஷ்ணன் கரிமேடு போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசு அதிகாரி மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • கோவிலுக்கு அழைத்துச் செல்லாததால் இந்த விபரீத முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது.

    மதுரை

    விளாங்குடி பொற்றாமரை நகரை சேர்ந்தவர் பாண்டி. ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளியில் வட்டார வளர்ச்சி அதிகாரியாக உள்ளார். இவரது மனைவி வசந்தி (வயது 50). இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர்.

    வசந்திக்கு ஆன்மீகத்தில் தீவிர ஈடுபாடு இருந்தது. மாதந்தோறும் விரதம் இருந்து கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வந்தார். இந்த நிலையில் வசந்தி சிவராத்திரியையொட்டி கடந்த 18-ந் தேதி முதல் விரதம் இருந்து வந்தார். அன்றைய தினம் இரவு கோவிலுக்கு சென்று அடுத்த நாள் காலை வரை விழித்திருந்து சிவராத்திரி வழிபாடு செய்ய முடிவு செய்தார்.

    எனவே வசந்தி கோவிலுக்கு செல்வதற்காக, வீட்டில் காத்துக்கொண்டிருந்தார். கணவர் பாண்டி கால தாமதமாக வீட்டுக்கு வந்ததாக தெரிகிறது. மேலும் அவர் குடிபோதையில் இருந்துள்ளார்.

    நான் கோவிலுக்கு வர முடியாது. நீ பிள்ளைகளை அழைத்துக்கொண்டு கோவிலுக்கு சென்று வா" என்று கணவர் கூறியுள்ளார். இது வசந்திக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. நல்ல நாளும் அதுவுமாக கோவிலுக்கு செல்ல வேண்டும் என்ப தற்காக காத்துக் கொண்டிருக்கிறோம். நல்ல நாளில் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருகிறீர்களே, இது நியாயமா? என்று சத்தம் போட்டார்.

    பாண்டியும், மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனைத்தொடர்ந்து வசந்தி படுக்கை அறைக்குள் சென்று கதவை மூடி கொண்டார். அந்த அறையில் அவர் தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    இதனை பார்த்த குடும்பத்தினர் கதவை உடைத்து வீட்டுக்குள் சென்று வசந்தியை மீ்ட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஊமச்சிகுளத்தில் வீட்டில் நகை திருட்டில் சிறையில் இருந்தவர் சிக்கினார்.
    • 11 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த வழக்கில் துப்பு துலங்கியது.

    மதுரை

    ஊமச்சிகுளம் அண்ணா நகரை சேர்ந்தவர் மலைசாமி. இவரது வீட்டில் 11 ஆண்டுகளுக்கு முன்பு நகைகள் திருடு போனது. இது தொடர்பாக சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது வீட்டில் குற்றவாளியின் கைரேகை மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

    ஆனாலும் இந்த சம்பவத்தில் யார் ஈடுபட்டனர்? என்பது பற்றிய விவரம் தெரியவில்லை. எனவே இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டது. மதுரை மாவட்ட காவல்துறையில் புலனாய்வு தொடர்பாக நவீன சாத னங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. இதன் அடிப்ப டையில் சிலைமான் போலீ சார், மலைசாமி வீட்டில் கிடைத்த கைரேகை மாதிரி அடிப்படையில் விசாரணை நடத்தினர்.

    அப்போது ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியை சேர்ந்த சேவுகராஜ் என்ப வருடன் கைரேகை ஒத்துப் போனது. போலீசார் அவரை தேடிச் சென்றனர். அப்போது சேவுகராஜ் முதுகுளத்தூர் கிளைச் சிறையில் இருப்பது தெரியவந்தது. சிலைமான் போலீசார் முதுகுளத்தூர் சென்று சேவுகராஜை கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஊமச்சிகுளம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

    அவரிடம் மலைசாமி வீட்டில் நடந்த திருட்டு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேனி மாவட்டம் வீரபாண்டியை சேர்ந்த தாமோதரன், அபினாஸ் உள்பட 10 பேர் பொன்னாங்கள் கோவிலுக்கு வந்திருந்தனர்.
    • தாமோதரன், அபினாஸ் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்து தேனி ஜெயிலில் அடைத்தனர்.

    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே கருமாத்தூரில் உள்ள பொன்னாங்கள் கோவிலில் சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    தேனி மாவட்டம் வீரபாண்டியை சேர்ந்த தாமோதரன், அபினாஸ் உள்பட 10 பேர் பொன்னாங்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். அவர்கள் கோவில் அருகே படுத்து தூங்கினர். அப்போது கருமாத்தூரை சேர்ந்த தங்கபாண்டி மற்றும் அவரது நண்பர் நீதி(வயது21) ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி தாமோதரன் என்பவர் வைத்திருந்த செல்போனை பறித்ததாக கூறப்படுகிறது.

    உடனே அவர்கள் 2 பேரும் திருடன்... திருடன்... என்று சத்தம் போட்டுள்ளனர். அதை கேட்டு அருகில் படுத்திருந்த அவரது ஊரைச் சேர்ந்த சிலர் தங்கப்பாண்டி மற்றும் நீதியை பிடிக்க முயன்றுள்ளனர். இதில் தங்கப்பாண்டி தப்பி ஓடிவிட்டார். நீதியை, தாமோதரன் தரப்பை சேர்ந்தவர்கள் பிடித்து சரமாரியாக அடித்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்து விட்டார்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் செக்கானூரணி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட நீதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

    தேனி மாவட்டம் வீரபாண்டியை சேர்ந்த சேர்ந்த தாமோதரன், அபினாஸ் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்து தேனி ஜெயிலில் அடைத்தனர்.

    ×