பெண்ணிடம் ரூ.7 லட்சம் மோசடி செய்த அரசு ஊழியர் கைது

மின் வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.7 லட்சம் மோசடி செய்த அரசு ஊழியர் கைது செய்யப்பட்டார். திருநகர் போலீசார் கைது செய்தனர்.
மின்வாரிய ஊழியர் உதயகுமார் 
மின்வாரிய ஊழியர் உதயகுமார் 
Published on

மதுரை

மதுரை எஸ்.ஆர்.வி.நகரை சேர்ந்த வேல் முருகன் மனைவி சாந்தி (வயது 40). இவர் திருநகர் போலீசில் கொடுத்துள்ள புகார் மனுவில், எனது மகனுக்கு மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி கூடல்புதூர் சீனி வாசா நகரை சேர்ந்த உதயகுமார் (வயது44) என்பவர், என்னிடம் ரூ.7 லட்சம் வாங்கினார்.

ஆனால் எனது மகனுக்கு வேலை வாங்கி கொடுக்கவில்ைல. எனவே நான் கொடுத்த பணத்தை திருப்பி தரும்படி கேட்டேன். அப்போது அவர் போலியான பணிநியமன ஆணையை வழங்கினார். இதுபற்றி தெரியவந்ததும் நான் உடனடியாக பணத்தை வழங்கும்படி கேட்டேன்.

அப்போது உதயகுமாரும், அவரது மனைவி சுமதியும் கொலை மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

இதில் தொடர்புடைய குற்ற வாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர், போலீசாருக்கு உத்தர விட்டார். அதன்பேரில் மாநகர தெற்கு துணை கமிஷனர் சாய்பிரனீத் மேற்பார்வையில், திருப்பரங்குன்றம் உதவி கமிஷனர் ரவி ஆலோசனை ப்படி, திருநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையின்போது, சாந்தி அவர் கொடுத்த பணம், போலி நியமன ஆணை உள்பட அத்தனை ஆவணங்களையும் சமர்ப்பித்தார். இதனை போலீசார் ஆய்வு செய்து பார்த்தனர்.

இதன் அடிப்படையில் உதயகுமாரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் அவர் மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக சாந்தியிடம் ரூ. 7 லட்சம் வாங்கி மோசடி செய்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து உதயகுமாரை திருநகர் போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக உதயகுமார் மனைவி சுமதியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com