கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை

திருமங்கலம் அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை செய்யப்பட்டார். இது தொடர்பாக ராணுவ வீரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை
Published on

திருமங்கலம்,

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள எட்டுநாழி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் சங்கீதா (வயது31). இவர் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

கடந்த 2009-ம் ஆண்டு எனக்கும், சோழவந்தானை சேர்ந்த சின்னதுரை மகன் கவியரசு என்பவருக்கும் திருமணம் நடந்தது. அப்போது 35 பவுன் நகை, ரூ.3 லட்சம் ரொக்கம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் கொடுக்கப்பட்டன. எனது கணவர் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன.

கடந்த சில மாதங்களாக கூடுதல் பணம், நகை கேட்டு கவியரசு துன்புறுத்தி வருகிறார். இதற்கு உடந்தை யாக அவரது தாயார் காளியம்மாள் உள்ளார். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த புகாரின் அடிப் படையில் ராணுவ வீரர், அவரது தாயார் மீது போலீ சார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின் றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com