என் மலர்
மதுரை
- பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் வாகை சூடும் என்று மதுரையில் கவிஞர் சினேகன் பேசினார்.
- 6-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம், மதுரை பெத்தானியாபுரத்தில் நடந்தது.
மதுரை
மக்கள் நீதி மய்யம் கட்சியின் 6-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம், மதுரை பெத்தானியாபுரத்தில் நடந்தது. இதில் மாநிலத் துணைத்தலைவர்கள் ஏ.ஜி. மவுரியா, தங்க வேல், நற்பணி இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் நாகராஜ், மாநில விவசாய அணி அமைப்பாளர் மயில்சாமி, இளைஞரணி மாநில செயலாளர் கவிஞர் சினேகன், மண்டல செயலாளர் அழகர், மாவட்ட செய லாளர்கள் மணி, கதிரேசன், சரவணன், மண்டல அமைப்பாளர்கள் முத்துகிருஷ் ணன், நாகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கவிஞர் சினேகன் பேசியதாவது:-
தமிழக அரசியலின் தரத்தை சர்வதேச அளவில் உயர்த்தும் முயற்சியில் கமலஹாசன் ஈடுபட்டு வருகிறார். இதற்கான பணிகளில் நாங்கள் கடந்த 6 ஆண்டு களாக நெருப்பாற்றை நீந்தி கடந்து வந்து உள்ளோம். தமிழகத்தில் இன்றைக்கு மக்கள் நீதி மய்யம் அசைக்க முடியாத சக்தியாக விளங்கி வருகிறது. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தேச ஒற்றுமைக்காக பாதயாத்திரை சென்றார். அப்போது அவருக்கு கூட்டணி கட்சிகளே கை கொடுக்க யோசித்தது.
அந்த நிலையில் தலைவர் கமலஹாசன் தாமாகவே முன்வந்து ஆதரவு கொடுத்தார். புது டெல்லி பாதயாத்திரையில் உடன் ஒன்றாக கலந்து கொண்டார். ராகுல் காந்தியின் எம்.பி பதவி இன்றைக்கு பறிக்கப்பட்டு உள்ளது.
இது ஜனநாயகத்தின் மீது விழுந்த பேரிடி ஆகும். இந்தியாவின் எந்த ஒரு பகுதியிலும் ஜனநாயகத்துக்கு ஆபத்து வந்தால் மக்கள் நீதி மய்யம் தான் முதலாவதாக குரல் கொடுக்கும்.
அந்த வகையில் எங்கள் தலைவர் கமலஹாசன் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வருகிற பாராளுமன்ற பொது தேர்தலில் மக்கள் நீதி மய்யம் வெற்றி வாகை சூடும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை விற்பனையை செய்யப்பட்டதா என விசாரணை நடந்து வருகிறது.
- 5 பெண்களிடம் நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமாரி தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது உசிலம்பட்டி அருகே உள்ள நடுப்பட்டியை சேர்ந்த சின்னப்பாண்டி மனைவி பாண்டியம்மாள் (வயது60) என்பவர் பச்சிளம் பெண் குழந்தையுடன் பஸ் நிலையத்தில் அமர்ந்திருந்தார்.
போலீசார் அவரிடம், குழந்தை குறித்து விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தார். இதனால் பாண்டி யம்மாள் மீது சந்தேகம் வலுத்தது. இதையடுத்து போலீசார் குழந்தையை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து பாண்டியம்மாளை போலீஸ் நிலை யத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தபோது, பிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தையை விற்பனை செய்ய வந்தது தெரியவந்தது. இதற்கு அந்த குழந்தையின் தாய் மற்றும் மாலதி, கருப்பசாமி மனைவி அழகுபாண்டி, கரும்பாலை நாகராஜன் மனைவி பாண்டியம்மாள் ஆகியோர் உடந்தையாக இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வறுமை அல்லது பெண் என்பதால் குழந்தையை விற்க முற்பட்டார்களா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரசு ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தினர்.
- தாலுகா அலுவலகங்களில் அரசு ஊழியர்கள் வேலைக்கு வராததால் வெறிச்சோடி காணப்பட்டது.

வேலை நிறுத்தம் காரணமாக கலெக்டர் அலுவலக வட்டாட்சியர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.
மதுரை
தமிழகம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டத்திலும் இந்த போராட்டம் நடந்தது.
இதன் காரணமாக மதுரை கலெக்டர் அலுவலகம், திருப்பரங்குன்றம், மேலூர், உசிலம்பட்டியில் உள்ள தாலுகா அலுவலகங்களில் அரசு ஊழியர்கள் வேலைக்கு வராததால் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் பட்டா மாறுதல், சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக வந்திருந்த பொது மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இந்த நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். காலிப்பணியி டங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்கள் சங்க மாவட்டத் தலைவர் மூர்த்தி பேசுகை யில், மதுரை மாவட்டத்தில் இன்று கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது.
அரசு எங்கள் கோரிக்கைகளை நிறை வேற்றாவிடில் சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிடுவோம் என்றார். ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
- சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் இளமதி, தக்கார், கணக்கர் பூபதி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
சோழவந்தான்
சோழவந்தானில் பிரசித்தி பெற்ற ஜெனகை மாரியம்மன் கோவிலில் வைகாசி 17 நாள் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மே 17-ந் தேதி பூச்சொரிதல் விழாவும், மே 22-ந் தேதி கம்பத்தில் திருவிழா கொடியேற்ற நிகழ்வும், மே 30-ந் தேதி பால்குடம், தீச்சட்டி எடுக்கும் நிகழ்ச்சியும், மே 31-ந் தேதி பூக்குழி விழாவும், ஜூன் 6-ந் தேதி தேரோட்டமும், ஜூன் 7-ந் தேதி வைகையாற்றில் தீர்த்தவாரி விழாவும் நடைபெறும்.
விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் இளமதி, தக்கார், கணக்கர் பூபதி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர். இதில் 3 மாத கொடிக்கம்ப நிகழ்ச்சியின் உபயதாரர் ராசு காவல் குடும்பத்தினர் உள்ளிட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.
- விபத்தில் அ.தி.மு.க. பிரமுகர் மகன் பரிதாபமாக இறந்தார்.
- திருமங்கலம் நகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உளள் டி.அரசப்பட்டியை சேர்ந்தவர் அ.தி.மு.க. நிர்வாகி கருப்பு. இவரது மகன் சரத்குமார் (வயது 26). கட்டிட தொழிலாளியான இவருக்கு புவனா என்ற மனைவியும், 7மாத பெண் குழந்தையும் உள்ளனர்.சரத்குமார் தற்போது கப்பலூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
சம்பவத்தன்று அதே பகுதியில் நடந்த சகோதரர் வீட்டு கிரகப் பிரவேச நிகழ்ச்சியில் சரத்குமார் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். அன்று இரவு விசேஷத்திற்கு வந்த உறவினர் ஒருவரை அரசபட்டியில் மோட்டார் சைக்கிளில் சரத்குமார் அழைத்துச் சென்றார்.
அங்கு அவரை இறக்கி சென்று விட்டு மீண்டும் சரத்குமார் கப்பலூருக்கு புறப்பட்டார். திருமங்கலம் -உசிலம்பட்டி சாலை சந்திப்பு இடத்தில் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த நெற்கதிர் அறுவை செய்யும் எந்திர வாகனம் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சரத்குமார் முகம் சிதைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திருமங்க லம் நகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
- கண்ணில் விழிலென்ஸ் பொருத்தி மீண்டும் பார்வை பெற ஏற்பாடு செய்யப்பட்டது
சோழவந்தான்
மதுரை மாவட்டம் சோழவந்தானில் நகர அரிமா சங்கம், வேலம்மாள் மருத்துவ கல்லூரியுடன் இணைந்து இலவச கண் மருத்துவ முகாமை நடத்தியது.
சோழவந்தான் நகர அரிமா சங்க தலைவர் லயன்ஸ் டாக்டர் எம்.வி.எம்.மருதுபாண்டியன் ஏற்பாட்டில் நடைபெற்ற இம்முகாமில் அரிமா சங்க ஆளுநர் சசிகுமார் முன்னிலை வகித்தார்.
முன்னாள் ஆளுநர் செல்லப்பாண்டி முகாமை தொடங்கி வைத்தார். இதில் சோழவந்தான் அரிமா சங்க பொருளாளர் காந்தன் மற்றும் நிர்வாகிகள், வேலம்மாள் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர்.
முகாமில் கண்புரை நோயால் கண் பார்வை குறைவாக உள்ளவர்களுக்கு மற்றும் கண்பார்வை இல்லாதவர்களுக்கும் இலவசமாக கண்ணில் விழிலென்ஸ் பொருத்தி மீண்டும் பார்வை பெற ஏற்பாடு செய்யப்பட்டது.
அரிமா சங்க முன்னாள் தலைவர் ராசி கண்ணன் நன்றி கூறினார். சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
- மனைவியின் கள்ளக்காதல் விவகாரம் சக்திவேலுக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் 2 பேரையும் கண்டித்துள்ளார்.
- சக்திவேல், ராஜபிரபு, முருகன் ஆகிய 3 பேரும் சரவண மருதுவை கட்டையால் சரமாரியாக தாக்கி கொலை செய்தனர்.
மதுரை:
மதுரை ஜெய்ஹிந்துபுரம் மீனாம்பிகை நகரை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவரது மகன் சரவண மருது(வயது32). இவர் கடந்த 14-ந்தேதி வெளியே சென்று வருவதாக வீட்டில் கூறி விட்டுச்சென்றார். ஆனால் அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை.
அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் பதட்டமடைந்த ராஜேஸ்வரி, தனது மகனை பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் அவரைப்பற்றி எந்த தகவலும் இல்லை. ஆகவே மகன் சரவணமருது மாயமானது குறித்து ஜெய்ஹிந்துபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது சரவண மருதுவுக்கும், சிவகங்கை மாவட்டம் கண்டாங்கிபட்டியை சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணுக்கும் பழக்கம் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று அந்த பெண்ணின் கணவர் சக்திவேல்(36) என்பவரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதனால் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் வலுத்தது. இதையடுத்து சக்திவேலிடம் தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது அவர் சரவணமருதுவை கொன்று புதைத்ததாக தெரிவித்தார். போலீஸ் விசாரணையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான தகவல்கள் வருமாறு:-
சரவணமருது கடந்த சில மாதங்களுக்கு முன்பு கண்டாங்கிப்பட்டிக்கு ஒரு வேலைக்காக சென்றுள்ளார். அப்போது சக்திவேல் மனைவிக்கும், அவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர்.
மனைவியின் கள்ளக்காதல் விவகாரம் சக்திவேலுக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் 2 பேரையும் கண்டித்துள்ளார். ஆனால் அவர்களின் கள்ளக்காதல் நீடித்தது. இதனால் சக்திவேல், சரவண மருதுவை கொலை செய்ய திட்டமிட்டார்.
இதற்காக மதுரை அருகே உள்ள தனது உறவினர்களான திருவாதவூர் சமத்துவபுரத்தை சேர்ந்த ராஜபிரபு(31), முருகன்(56) ஆகியோரையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டார். அவர்கள் 3 பேரும் சேர்ந்து திட்டம் போட்டு சரவணமருதுவை திருவாதவூருக்கு வரவழைத்து கொலை செய்ய முடிவு செய்தனர்.
தனது போனில் இருந்து அழைத்தால் அதனை சரவண மருது ஏற்கமாட்டார் என்பதால், மனைவிக்கு தெரியாமல் அவரது செல்போன் மூலம் சரவணமருதுவுக்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளார். அதில், "நீ திருவாதவூருக்கு புறப்பட்டு வா. அங்குள்ள கண்மாய் பகுதியில் உல்லாசமாக இருக்கலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதைப்பார்த்த சரவணமருது சம்பவத்தன்று திருவாதவூருக்கு வந்துள்ளார். அங்குள்ள கண்மாய்க்கு சென்றபோது அங்கு சக்திவேல் இருந்தார். அவர் தனது மனைவியுடனான கள்ளத்தொடர்பை கைவிடுமாறு கூறியுள்ளார். ஆனால் அதற்கு சரவணமருது மறுத்ததாக தெரிகிறது.
இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சக்திவேல், ராஜபிரபு, முருகன் ஆகிய 3 பேரும் சரவண மருதுவை கட்டையால் சரமாரியாக தாக்கி கொலை செய்தனர். பின்னர் அவரது உடலை கண்மாயின் மறைவான இடத்தில் குழி தோண்டி புதைத்துள்ளனர்.
மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சக்திவேல், ராஜபிரபு, முருகன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். சரவண மருதுவின் உடல் புதைக்கப்பட்ட இடத்தை 3 பேரும் அடையாளம் காட்டினர். அதன்பேரில் உடல் தோண்டியெடுக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
மனைவியின் கள்ளக்காதலனை கொன்று புதைத்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- 3 பேர் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் தெய்வநாயகபுரம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பேரையூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட தெய்வ நாயகபுரம் கிராமத்தில் உள்ள கோவிலில் தற்போது திருவிழா நடந்து வருகிறது. திருவிழாவில் பங்கேற்பதற்காக வெளியூர்களில் வேலை பார்க்கும் அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் வந்திருந்தனர்.
அதன்படி சேலத்தில் பணியாற்றும் தங்கம் (வயது56), சென்னையில் வசித்து வந்த மாயாண்டி(60) ஆகியோர் திருவிழாவுக்காக ஊருக்கு வந்திருந்தனர்.இன்று மதியம் பூஜை பொருட்களை வாங்க தங்கம், மாயாண்டி பேரையூர் செல்ல முடிவு செய்தனர்.
இதையடுத்து அதே ஊரைச்சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் கண்ணன்(30) என்பவருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் தங்கம், மாயாண்டி பேரையூருக்கு புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை கண்ணன் ஓட்டினார். 3 பேரும் தெய்வநாயகபுரத்தில் இருந்து சிலைமலைப்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிரே வந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது. இதில் 3 பேரும் கீழே விழுந்தனர். அவர்கள் மீது லாரியின் டயர் ஏறியது. இதில் கண்ணன், தங்கம், மாயாண்டி ஆகிய 3 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பேரையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 3 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவிழாவுக்கு பூஜை பொருட்களை வாங்கச் சென்ற 3 பேர் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் தெய்வநாயகபுரம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- வீட்டின் கதவில் பெட்ரோல் வெடிகுண்டு வெடித்து திரைச்சீலை எரிந்து சேதமானது.
- போலீசார் சுந்தரபாண்டி, ஆனந்தன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
மேலூர்:
மதுரை மாவட்டம் திருவாதவூரை சேர்ந்தவர் ராஜா முகமது. இறைச்சி கடை நடத்தி வரும் இவரது வீட்டில் நேற்று முன்தினம் மர்ம நபர்கள் பெட்ரோல் வெடிகுண்டுகளை வீசி சென்றனர். இதில் வீட்டின் கதவில் பெட்ரோல் வெடிகுண்டு வெடித்து திரைச்சீலை எரிந்து சேதமானது.
இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவப்பிரசாத், டி.எஸ்.பி. ஆர்லிஸ் ரெபோனி மற்றும் மேலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்களும் வீட்டில் வீசப்பட்ட வெடிகுண்டு மாதிரிகளை சேகரித்தனர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னவன் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார்.
சம்பவம் நடப்பதற்கு முன்தினம் மாலை ராஜா முகமது தனது மனைவியுடன் பள்ளிவாசலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த திருவாதவூரை சேர்ந்த சுந்தரபாண்டி (25), ஆனந்தன் (20) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் ராஜா முகமது மீது மோதியுள்ளனர். இதில் அவர்களுக்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் சமரசம் செய்ததின்பேரில் 3 பேரும் சென்றனர்.
ஆனால் ஆத்திரம் அடங்காத சுந்தரபாண்டி, ஆனந்தன் உள்பட 3 பேர் ராஜா முகமதுவை பழி தீர்க்க முயன்றதாக தெரிகிறது. அதன் அடிப்படையில் நள்ளிரவு நேரத்தில் அவரது வீட்டுக்கு சென்று பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர்.
மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் சுந்தரபாண்டி, ஆனந்தன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
- தொட்டப்ப நாயக்கனூர் விலக்கில் தேனி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- தொட்டப்ப நாயக்கனூர் கிராமத்தை சேர்ந்த ஏராளமான பால் உற்பத்தியாளர்கள், தங்கள் வளர்க்கும் கறவை மாடுகளுடன் வந்து கலந்து கொண்டனர்.
உசிலம்பட்டி:
பால் கொள்முதல் விலையை ரூ.31-ல் இருந்து 40 ரூபாயாக உயர்த்தி தர வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு மாவட்டங்களில் கடந்த 11-ந்தேதி முதல் பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டத்திலும் பல்வேறு சங்கங்களை சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அவர்கள் ஆவின் நிறுவனத்திற்கு பால் அனுப்புவதை நிறுத்தி தங்களின் எதிர்ப்பை காட்டி வருகின்றனர். மேலும் மறியல் உள்ளிட்ட போராட்டங்களிலும் ஈடுபடுகின்றனர்.
கடந்த வாரம் உசிலம்பட்டி அருகே உள்ள பாறைப்பட்டி மற்றும் சர்க்கரைப்பட்டி பகுதிகளை சேர்ந்த பால் உற்பத்தியாளர் நல சங்கத்தினர் சாலையில் பாலை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் திருமங்கலம் அருகே உள்ள நாகையாபுரம், மதிப்பனூரை சேர்ந்த பால் உற்பத்தியாளர்களும் சாலையில் பாலை கொட்டி போராட்டம் நடத்தினார்கள்.
இந்த நிலையில் உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப்ப நாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள், பால் விலையை உயர்த்த வலியுறுத்தி இன்று போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அவர்கள் தொட்டப்ப நாயக்கனூர் விலக்கில் தேனி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது நடுரோட்டில் பாலை கொட்டி தங்களின் எதிர்ப்பை காட்டினர். இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் வெண்மணி சந்திரன், செயலாளர் முத்துப்பாண்டி, பொருளாளர் சாமி ஆகியோர் தலைமை தாங்கினார்.
இதில் தொட்டப்ப நாயக்கனூர் கிராமத்தை சேர்ந்த ஏராளமான பால் உற்பத்தியாளர்கள், தங்கள் வளர்க்கும் கறவை மாடுகளுடன் வந்து கலந்து கொண்டனர். மேலும் அந்த கிராமத்தின் பால்பண்ணை தலைவர்கள் சண்முகம், ஞானபிரகாசம், தமிழ், பாண்டி, சின்னச்சாமி, முருகன், விக்கி, அர்ஜுனன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். சாலையில் பாலை கொட்டி பால் உற்பத்தியாளர்கள் நடத்திய போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்களின் போராட்டம் நாளுக்கு நாள் விரிவடைந்து வருவதால், ஆவின் பால் வினியோகம் பாதிக்கும் சூழல் ஏற்படும் என அஞ்சப்படுகிறது.
ஆகவே பால் கொள்முதல் விலையை உயர்த்த உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் தங்களின் போராட்டம் தொடரும் எனவும் பால் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.
- மனு மீதான விசாரணை நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி அமர்வு முன்பு வந்தது.
- எதிர்காலங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும்.
மதுரை:
மதுரை மாவட்டம் ஏழுமலை கிராமத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அதிகாரிகள் நிறைவேற்றவில்லை. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நட்டாத்தி நாடார் உறவின்முறை சங்கம் சார்பில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி அமர்வு முன்பு வந்தது. அப்போது நீதிபதிகள் தெரிவிக்கையில், மதுரை மாவட்டம் ஏழுமலை கிராமத்தில் குறிப்பிட்ட ஆக்கிரமிப்பை சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலனை செய்து 8 வாரத்திற்குள் ஆக்கிரமிப்பு அகற்ற உத்தரவிட்டிருந்தும், ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த வழக்கு குறித்து அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த பின்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. அதன் பின்பு தான் ஆக்கிரமிப்பு தற்போது அகற்றப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக இத்தகைய நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. இது ஆரோக்கியமான போக்கு இல்லை. எதிர்காலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் வழக்குகளில் அதிகாரிகள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து இந்த வழக்கை முடித்து வைப்பதாக தெரிவித்தனர்.
- செல்லூரில் போக்குவரத்துக்கு இடையூறாக பட்டாசு வெடித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- தனிப்படை போலீசார் இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை செல்லூரில் திருமண விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில், பொதுமக்கள் சட்டவிரோதமாக வெடி போடுவது வழக்கத்தில் உள்ளது. இதற்கு போலீசிடம் முறைப்படி அனுமதி வாங்க வேண்டும். ஆனாலும் பலர் அப்படி செய்வதில்லை. போலீசாருக்கு தெரியாது என்று நினைப்பில் வெடி போட்டு மகிழ்கின்றனர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது என்று செல்லூர் போலீசுக்கு புகார்கள் வந்தன. இதன் அடிப்படையில் போலீசார் நேற்று காலை முதல் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.
அய்யனார் கோவில் மெயின் ரோடு திருமண மண்டபம் முன்பு போலீசாரின் அனுமதியின்றி பட்டாசு வெடித்து போக்கு வரத்துக்கு இடையூறு விளைவித்த, மேலக்குயில்குடி, கீழத் தெருவை சேர்ந்த ராஜா(35) கைது செய்யப்பட்டார்.
செல்லூர் அய்யனார் கோவில் மெயின்ரோடு, ஆர்.எஸ்.நாயுடு தெரு சந்திப்பில் சட்ட விரோதமாக பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் (39), கணேசன் (42) ஆகியோரையும் செல்லூர் போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் செல்லூர் போலீஸ் நிலையத்தில் தீ விபத்து நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தீ விபத்துக்கு பேட்டரி மின்கசிவு தான் காரணம் என்ற போதிலும், தனிப்படை போலீசார் இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.






