பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை விற்பனை

பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை விற்பனையை செய்யப்பட்டதா என விசாரணை நடந்து வருகிறது. 5 பெண்களிடம் நடத்தி வருகின்றனர்.
பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை விற்பனை
Published on

மதுரை

மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமாரி தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர்.

அப்போது உசிலம்பட்டி அருகே உள்ள நடுப்பட்டியை சேர்ந்த சின்னப்பாண்டி மனைவி பாண்டியம்மாள் (வயது60) என்பவர் பச்சிளம் பெண் குழந்தையுடன் பஸ் நிலையத்தில் அமர்ந்திருந்தார்.

போலீசார் அவரிடம், குழந்தை குறித்து விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தார். இதனால் பாண்டி யம்மாள் மீது சந்தேகம் வலுத்தது. இதையடுத்து போலீசார் குழந்தையை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து பாண்டியம்மாளை போலீஸ் நிலை யத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தபோது, பிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தையை விற்பனை செய்ய வந்தது தெரியவந்தது. இதற்கு அந்த குழந்தையின் தாய் மற்றும் மாலதி, கருப்பசாமி மனைவி அழகுபாண்டி, கரும்பாலை நாகராஜன் மனைவி பாண்டியம்மாள் ஆகியோர் உடந்தையாக இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வறுமை அல்லது பெண் என்பதால் குழந்தையை விற்க முற்பட்டார்களா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com