என் மலர்tooltip icon

    மதுரை

    • ஜம்மு காஷ்மீரில் இருந்து மதுரைக்கு நாளை முன்பதிவற்ற ெரயில் இயக்கப்படுகிறது.
    • இந்த தகவலை மதுரை கோட்ட ெரயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    ஜம்மு காஷ்மீர்-மதுரை இடையே முன்பதிவற்ற எக்ஸ்பிரஸ் ெரயில் இயக்கப்படுகிறது. இது நகர்லாகூனில் இருந்து நாளை (7-ந்தேதி) இரவு 11.50 மணிக்கு புறப்படுகிறது. அந்த ெரயில் 10-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு காட்பாடி வருகிறது. அதன் பிறகு காலை 7.52 மணிக்கும் சேலத்துக்கும், 8.50 மணிக்கு ஈரோட்டுக்கும், 9.43 மணிக்கு திருப்பூருக்கும், 10.42 மணிக்கு கோவைக்கும், மாலை 2.10 மணிக்கு திண்டுக்கல்லுக்கும், 4 மணிக்கு மதுரைக்கும் வருகிறது.

    இந்த தகவலை மதுரை கோட்ட ெரயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • ரேஷன் கடை பெண் ஊழியர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறான்.

    மதுரை

    மதுரை பழங்காநத்தம் பசும்பொன் நகரை சேர்ந்த வர் மகாலிங்கம். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 65). இவர் அந்த பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் ராஜேஸ் வரி சமயநல்லூர் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்து உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    எனது மகன் மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறான். இந்த நிலையில் தோடனேரியை சேர்ந்த கதிரவன் மனைவி நாக ஜோதி என்பவர் தனது 83 செண்ட் நிலத்தை விற்க முன்வந்தார்.

    நாங்கள் அதனை பணம் கொடுத்து வாங்கி பத்திரப் பதிவு செய்து கொண்டோம். ஆண்டிப்பட்டி பங்களாவில் நாகஜோதி ரேஷன் கடை ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் நாக ஜோதியின் மகன் சூரஜ் குமார், சரத்குமார், ஷர்மிளா தேவி, மணிகண்டன் ஆகி யோர் எங்களுக்கு சொந்த மான இடத்தில் 28 செண்ட் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதற்கு நாகஜோதி, அவரது மகள் சரண்யா மற்றும் தோடனேரி நடுத்தெருவை சேர்ந்த நெடுஞ்செழியன் ஆகியோர் உடந்தையாக உள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த புகாரின்பேரில் சமயநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மணிஷ் காஷ்யப்பை கைது செய்து பீகார் சிறையில் அடைத்தனர்.
    • மணிஷ் காஷ்யப் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மதுரை:

    தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும், அவர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என்பது போலவும் சித்தரிக்கப்பட்ட வீடியோ சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் பரவியது.

    இந்த வீடியோ தமிழகத்தில் வாழ்ந்து வரும் வட மாநிலத்தினர் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த தகவல் உண்மை இல்லை என்றும், தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது எனவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

    மேலும் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்று போலி வீடியோ வெளியானது தொடர்பாக விசாரணை நடத்தவும் அவர் உத்தரவிட்டார். அதன்படி போலீசார் விசாரணை நடத்தினர்.

    அதில் பீகார் மாநிலத்தை சேர்ந்த 'யூ-டியூபர்' மணிஷ் காஷ்யப் (வயது35) என்பவர் தான் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலி வீடியோவை வெளியிட்டது தெரிய வந்தது. போலி வீடியோ வெளியிட்டது தொடர்பாக மணிஷ் காஷ்யப் உள்பட 4 பேர் மீது பீகார் போலீசார் வழக்கு பதிந்தனர்.

    மணிஷ் காஷ்யப்பை கைது செய்து பீகார் சிறையில் அடைத்தனர். போலி வீடியோ பரப்பியது தொடர்பாக 'யூ-டியூபர்' மணிஷ் காஷ்யப் மீது மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் பெருங்குடியை சேர்ந்த ஜெகதீசன் என்பவர் புகார் கொடுத்தார். அதன்பேரில் மணிஷ் காஷ்யப் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்தனர்.

    இதனை தொடர்ந்து பீகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மணிஷ் காஷ்யப் தமிழகத்திற்கு அழைத்து வரப்பட்டார். மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் பதிந்த வழக்கு தொடர்பாக கடந்த 30-ந் தேதி மதுரை மாவட்ட முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிபதி டீலாபானு முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    அவரிடம் 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க போலீசார் அனுமதி கேட்டனர். அதன்பேரில் 3 நாள் போலீஸ் காவலுக்கு நீதிபதி அனுமதி கொடுத்தார். இதையடுத்து மணிஷ் காஷ்யப்பை போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    போலீஸ் காவல் முடிந்த நிலையில் மதுரை கோர்ட்டில் நேற்று மீண்டும் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அப்போது விசாரணையில் மணிஷ் காஷ்யப் தகவல் எதுவும் சரியாக தெரிவிக்கவில்லை என்பதால், மேலும் 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என போலீஸ் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

    மணிஷ் காஷ்யப் தரப்பில் போலீஸ் விசாரணையில் மனித உரிமை மீறப்படுவதால், மீண்டும் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கக்கூடாது என்று கேட்டுக்கொண்டனர். இதனை தொடர்ந்து மணிஷ் காஷ்யப்பை வருகிற 19-ந் தேதி வரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி டீலாபானு உத்தரவிட்டார். இதையடுத்து அவர் மதுரை மத்திய ஜெயிலில் மீண்டும் அடைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் மணிஷ் காஷ்யப் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவ பிரசாத் இன்று பிறப்பித்தார்.

    தேசிய பாதுகாப்பு சட்டத்தில் மணிஷ் காஷ்யப் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதற்கான உத்தரவு மதுரை மத்திய ஜெயிலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    • வாடிவாசலில் இருந்து துள்ளி குதித்து வந்த காளைகளை வீரர்கள் போட்டிப்போட்டுக் கொண்டு திமிலை பிடித்து அடக்க முயன்றனர்.
    • சில காளைகள் வீரர்களின் பிடியில் சிக்கியது. பல காளைகள் வீரர்களுக்கு போக்குகாட்டி சென்றன.

    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம் எழுமலை அருகே உள்ள எஸ்.பாப்பிநாயக்கன்பட்டியில் காளியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. விழாவை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதற்காக கோவில் முன்பு திடல் அமைக்கப்பட்டது.

    இன்று காலை 8 மணி அளவில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இதில் 500-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். போட்டி தொடங்குவதற்கு முன்பு அதிகாரிகள் முன்னிலையில் வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    அதனை தொடர்ந்து வாடிவாசலில் இருந்து கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதனை யாரும் பிடிக்கவில்லை.

    அதன்பின் காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து துள்ளி குதித்து வந்த காளைகளை வீரர்கள் போட்டிப்போட்டுக் கொண்டு திமிலை பிடித்து அடக்க முயன்றனர். சில காளைகள் வீரர்களின் பிடியில் சிக்கியது. பல காளைகள் வீரர்களுக்கு போக்குகாட்டி சென்றன.

    ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும், காளைகளின் உரிமையாளர்களுக்கும் பீரோ, சைக்கிள், மிக்சி, மின்விசிறி, பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.

    ஜல்லிக்கட்டில் 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் மற்றும் உசிலம்பட்டி டி.எஸ்.பி. நல்லு தலைமையில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

    • பங்குனி உத்திரத்தையொட்டி முருகன் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்.
    • கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை, தேரோட்டம், திருக்கல்யாணம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    மதுரை

    தமிழ் மாதங்களில் 12-வது மாதமாக வரும் பங்குனி மாதத்தில் நட்சத்திரங்களில் 12-வதாக இருக்கும் உத்திர நட்சத்திரத்தன்று நடைபெறும் விழா பங்குனி உத்திரமாகும். பங்குனி உத்திரத்தில் தமிழ் கடவுளான முருக பெருமானுக்கு உகந்த நாளாக பக்தர்கள் கருதி இந்த நாளில் முருகன் கோவில்களில் வழிபாடு செய்வது வழக்கம்.

    இந்த நாளில் முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை, தேரோட்டம், திருக்கல்யாணம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். மதுரை மாவட்டம் அழகர்கோவில் மலை மீது உள்ள பழமுதிர்ச்சோலை முருகன் கோவிலில் இன்று பாலாபிஷேகமும் நடந்தது.

    மதுரை நேதாஜி ரோட்டில் அமைந்திருக்கும் தண்டாயுதபாணி கோவிலில் இன்று காலை சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலையில் சுவாமி அலங்கரிக்கப்பட்டு பூப்பல்லக்கில் 4 மாசி வீதிகளில் சுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

    மதுரை காந்தி மியூசியம் அருகில் உள்ள பூங்கா முருகன் கோவிலில் சிறப்பு பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடனை நிறைவேற்றி வருகின்றனர். பங்குனி உத்திரத்தை யொட்டி மதுரை மாவட்டத்தில் உள்ள முருகன் கோவிலில் இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    • வீட்டு உபயோக பொருட்கள் நிலையத்தில் போலியாக விற்பனை செய்து ரூ. 22 லட்சம் மோசடி நடந்துள்ளது.
    • இது சம்பந்தமாக 3 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

    மதுரை

    மதுரை எஸ்.எஸ். காலனி ராம்நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் மைக்கேல் அருள் ராயன் (வயது54). இவர் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவ னத்தில் அலங்காநல்லூர்-தனிச்சியம் மெயின்ரோடு அன்பரசு மகன் நேதாஜி (24), நரிமேடு சாலை முதலியார் தெரு மாரிமுத்து மகன் விஜயகுமார் (33), ஆரப்பாளையம் மேல மாரியம்மன் கோவில் தெரு, அருள் ஜோ (43) ஆகியோர் வேலை பார்த்தனர்.

    3 பேரும் கடையில் இருந்து போலியான ரசீதுகளை தயார் செய்து கடை பணம் ரூ.22 லட்சத்து 35 ஆயிரத்து 260-ஐ மோசடி செய்தது தெரியவந்தது.

    இந்த மோசடி குறித்து கடை உரிமையாளர் எஸ்.எஸ். காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் நேதாஜி, விஜயகுமார், அருள்ஜோ ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    • 4 பிராட்டிமார்களை மணந்த சுந்தரராஜ பெருமாள் கோவிலில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
    • நாளை (6-ந்தேதி) மஞ்சள் நீர் சாற்று முறை நடக்கிறது.

    மதுரை

    தென் திருப்பதி என்றும் திருமாலிருஞ்சோலை என்று அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற வைணவ தலமான அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் திருக்கல்யாண திருவிழா கடந்த 2-ந் தேதி தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது.

    தினமும் காலை, மாலையில் சுந்தரராஜ பெருமாள் அம்பாளுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாணம் இன்று (5-ந் தேதி) காலை விமரிசையாக நடைபெற்றது. இதை யொட்டி பல வண்ண மலர்கள் மற்றும் விளக்கு களால் கோவில் திருக் கல்யாண மண்டபம் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    இன்று காலை 9 மணி அளிவில் மணமேடையில் சிறப்பு அலங்காரத்தில் சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளினார். அதைத் தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண சுந்தர வல்லி தாயார், ஆண்டாள் ஆகியோர் மணமேடைக்கு வந்தனர். தொடர்ந்து பட்டாச்சா ரியார்கள் வேத மந்திரங்கள் ஓத பெரி யாழ்வார் முன்னிலையில் திருமணம் விமரிசையாக நடந்தது.

    அப்போது அங்கு கூடியிருந்த பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கான பக்தர்கள் பக்தி கோஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர். திருமணத்தை முன்னிட்டு கோவில் வளாகம் மற்றும் முன்புறம் உள்ள 2 மண்டபங்களில் விருந்து நடைபெற்றது. இதல் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு திருமண விருந்து சாப்பிட்டனர். தொடர்ந்து பக்தர்கள் திருமண மொய் எழுதினர்.இன்று இரவு சுவாமி- அம்பாள் சப்பரத்தில் எழுந்தருளி காட்சிய ளிக்கிறார். நாளை (6-ந்தேதி) மஞ்சள் நீர் சாற்று முறை நடக்கிறது.

    • குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் அழகர்கோவில் மலை சாலையால் பக்தர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
    • முருகனின் 6-வது படைவீடான சோலைமலை முருகன் கோவிலும், வற்றாத நூபுரகங்கை தீர்த்தமும் உள்ளது.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் உள்ள அழகர்மலை அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோவில் உள்ளது. மலைமேல் முருகனின் 6-வது படைவீடான சோலைமலை முருகன் கோவிலும், வற்றாத நூபுரகங்கை தீர்த்தமும் உள்ளது.

    மதுரையில் சுற்றுலா மற்றும் ஆன்மீக ஸ்தலமாக விளங்கும் இங்கு நாள்தோறும் மதுரை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். மலை மேல் உள்ள முருகன் கோவிலுக்கு செல்ல மலைச்சாலை உள்ளது.

    இங்கு வாகனங்களுக்கு ரூ. 100, 50 வீதமும், இருசக்கர வாகனங்களுக்கு ரூ.15-ம் வசூலிக்கப்படுகிறது. மதுரை மக்களுக்கு அழகர்கோவில் மட்டுமே சுற்றுலாத்தலமாக உள்ளதால் நாள்தோறும் அங்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    ஆனால் அங்குள்ள மலைச்சாலை கடந்த பல ஆண்டுகளாக போதிய பராமரிப்பின்றி செப்பனிடப்படாமல் உள்ளன. இதன் காரணமாக மலைச்சாலை பெரும்பாலான இடங்களில் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.

    இதனால் பஸ்கள், மோட்டார் சைக்கிளில் வரும் பக்தர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். நீண்ட காலமாக புதுப்பிக்கப்படாமல் இருக்கும் சாலையை உடனே செப்பனிட வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மதுரை பறக்கும் மேம்பாலத்தை பிரதமர் மோடி 8-ந் தேதி திறந்து வைக்கிறார்.
    • இன்று (5-ந் தேதி) பறக்கும் பாலத்தில் சோதனை ஓட்டம் நடந்தது.

    மதுரை

    தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் மதுரை தல்லாகுளம் - ஐ.ஓ.சி. அலுவலகம் அருகில் இருந்து, நத்தம் வரை 35 கி.மீ. தூரத்துக்கு ரூ.1,028 கோடியில் நான்குவழிச் சாலையாக விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கியது.

    இந்த சாலையில் மதுரை தல்லாகுளம் முதல் ஊமச்சிகுளம் வரை சுமார் 7.5 கி.மீ. தொலைவுக்கு ரூ.612 கோடியில் பறக்கும் பாலம் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளது.

    இந்த பறக்கும் பாலத்தின் அடியில் 150 அடி இடைவெளியில் பலமான அஸ்திவாரத்துடன் 268 தூண்கள் கட்டப்பட்டுள்ளன. தூண்களின் இடையே பாலத்தை இணைக்கும் வகையில் கிடைமட்ட வாக்கில் 'கான்கிரீட் கர்டர்கள்' பொருத்தப்பட்டுள்ளன.மதுரை நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், மதுரையில் இருந்து திருச்சி மற்றும் சென்னைக்கு செல்லும் பயணத் தொலைவை குறைக்கும் வகையிலும் இந்த பறக்கும் பாலமும், நான்குவழிச் சாலையும் அமைக்கப்படுகிறது.

    இந்த பறக்கும் பாலம் வழியாக திருச்சி செல்வோருக்கு 24 கி.மீ. பயண தூரம் குறையும். இதே போல் இந்த பாலத்தின் வழியாக சென்னை செல்வோர்பயண நேரம் 1 மணி நேரம் குறையும்.

    இந்த நிலையில் வருகிற 8-ந் தேதி சென்னையில் இருந்து பிரதமர் மோடி காணொளி வாயிலாக இந்தப் பாலத்தை திறந்து வைக்கிறார். இதனை முன்னிட்டு இன்று (5-ந் தேதி) பறக்கும் பாலத்தில் சோதனை ஓட்டம் நடந்தது. இதையொட்டி வாகன ஓட்டிகள் பறக்கும் மேம்பாலம் வழியாக ஆர்வமுடன் சென்று வருகின்றனர்். இந்தப் பாலம் தமிழகத் திலேயே மிக நீண்ட பாலமாக கட்டப் பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • அரசு வேலை வாங்கி தருவதாக ரூ. 7½ லட்சம் மோசடி செய்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.
    • புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    மதுரை

    சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த சக்திவேல் மகள் ஸ்ரீ துர்கா (23). இவரிடம் புதூர் கொடிக்குளம் தனலட்சுமி நகரை சேர்ந்த முத்துக்குமார் (50) அரசு வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். அவரது பேச்சை நம்பிய துர்கா ரூ. 11 லட்சம் கொடுத்தார். பணத்தை பெற்றுக்கொண்ட முத்துக்குமார் வாக்குறுதி அளித்தபடி வேலை வாங்கி தரவில்லை. பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். அதில் ரூ. 3 லட்சத்து 50 ஆயிரத்தை மட்டும் திருப்பி கொடுத்தார். சில நாட்கள் கழித்து மீதி பணத்தை கேட்டபோது முத்துகுமார் தராமல் குடும்பத்துடன் துர்காவை மிரட்டினார். இது குறித்து புகாரின்பேரில் புதூர் போலீசார் முத்துக்குமார், அவரது மனைவி பிரபா, மகன் ஸ்ரீஹரி, மருமகன் சுரேந்தர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் முத்துக்குமார் கைது செய்யப்பட்டார்.

    • மதுரையில் 10-ம் வகுப்பு மாணவியை ஒருதலையாக காதலித்து மிரட்டினார்.
    • போக்சோ சட்டத்தின் கீழ் ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.

    மதுரை

    மதுரை கீரைத்துறை இருளப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் முத்துராமலிங்கம் (வயது 25), ஆட்டோ டிரைவர். இவர் அனுப்பானடியை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை ஒருதலையாய் காதலித்து வந்துள்ளார்.

    அவர் மாணவியை கடந்த 6 மாதமாக பின்தொடர்ந்து சென்று அவரிடம் தனது காதலை தெரிவித்துள்ளார். அவரது ஒருதலை காதலை மாணவி ஏற்றுக்கொள்ள வில்லை. இருந்தபோதிலும், முத்துராமலிங்கம் மாணவியை பின்தொடர்ந்து வந்தார்.

    இந்த நிலையில், சம்பவத்தன்று பள்ளிக்குச் சென்ற மாணவியை வழிமறித்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி யுள்ளார். அதற்கு அந்த மாணவி மறுப்பு தெரிவித்ததால் அவரை அவதூறாக பேசி கல்லால் தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவி மதுரை அனைத்து மகளிர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவிக்கு மிரட்டல் விடுத்த ஆட்டோ டிரைவர் முத்துராமலிங்கத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

    • கீழவளவு வீரகாளி அம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.
    • அதனைத்தொடர்ந்து அன்னதானம் நடந்தது.

    மேலூர்

    மேலூர் அருகே உள்ள கீழவளவு வீரகாளியம்மன் கோவில் பங்குனி பூக்குழி திருவிழா நடந்தது. பக்தர்கள் பால்குடம் எடுத்து, அலகு குத்தியும், பெரியமந்தையில் இருந்து ஊர்வலமாக சென்று வீரகாளியம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி நேர்த்திகடன் செலுத்தினர்.

    அதனைத்தொடர்ந்து அன்னதானம் நடந்தது. விழாவில் கீழவளவு, வாச்சம்பட்டி, குழிச்சேவல்பட்டி, வடக்கு வலையபட்டி உள்ளிட்ட கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர். கீழவளவு போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.

    ×