என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பக்தர்கள் அவதி"

    • திருப்பதியில் நேற்று 68, 187 பேர் தரிசனம் செய்தனர்.
    • நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 10 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    டிட்வா புயல் காரணமாக திருப்பதி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இடைவிடாது பெய்து வரும் மழையால் திருப்பதியில் தரிசனத்திற்கு வந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மழையில் நனைந்தபடி குளிரில் நடுங்கி கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    பலத்த மழையால் பாபவிநாசம், ஸ்ரீவாரி பாதத்திற்கு செல்லும் வழிகளை தேவஸ்தான அதிகாரிகள் மூடினர். மேலும் அலிபிரியில் இருந்து மலைக்குச் செல்லும் வாகனங்கள் மெதுவாக செல்ல வேண்டுமென பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

    பலத்த மழையால் திருப்பதி மலையில் உள்ள கோகர்ப்பம், பாப விநாசம், ஆகாச கங்கா, குமாரதாரா, பசுபதாரா அணைகள் முழுமையாக நிரம்பியது. கோகர்ப்பம், பாப விநாசம் அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படுகிறது. மழையில் பல்வேறு இடங்களில் திடீரென நீர்வீழ்ச்சிகள் உருவாகி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. திருப்பதி மலைக்கு செல்லும் பக்தர்கள் நீர்வீழ்ச்சிகளில் குளித்து மகிழ்ச்சி அடைந்து செல்கின்றனர்.

    திருப்பதியில் நேற்று 68, 187 பேர் தரிசனம் செய்தனர். 25,027 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.47 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 10 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    • கடந்த மாதம் வரை மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே அனுமதி.
    • பக்தர்கள் தினமும் மலையேறி சென்று சாமி தரிசனம்.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. இங்கு கடந்த மாதம் வரை மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. அதன்பின் மதுரை ஐகோர்ட்டு சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு தினமும் அனுமதி அளிக்கலாம் என உத்தரவிட்டது.

    அதன்படி கடந்த ஒரு மாதமாக பக்தர்கள் தினமும் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். மழை நாட்களில் மட்டும் பக்தர்கள் செல்ல வனத்துறை தடை விதித்து வருகிறது.

    இந்த நிலையில் சித்திரை மாத பிரதோஷம் (இன்று), 27-ந்தேதி அமாவாசை முன்னிட்டு இன்று பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் அடிவாரமான தாணிப்பாறையில் குவிந்தனர்.

    காலை 6.30 மணிக்கு நுழைவு வாயில் திறக்கப் பட்டது. வனத்துறையினர் உடைமைகளை சோதனை செய்த பின் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப் பட்டனர். சிறுவர்கள், பெண்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் சுமார் 3 முதல் 4 மணி நேரம் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    கடும் வெயிலால் பக்தர்கள் சிரமமடைந்தனர். மலை பகுதிகளில் போதிய குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை என கூறப்படுகிறது.

    எனவே கோடை காலத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு குடிநீர் வசதியை செய்து தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    பிரதோஷத்தை முன்னிட்டு இன்று மாலை சுந்தர மகாலிங்கத்துக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்துள்ளனர்.

    நாளை மறுநாள் அமாவாசை மற்றும் விடுமுறை நாட்கள் என்பதாலும் பக்தர்களின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • அரசு பஸ்கள் இயக்கப்படாததால் பக்தர்கள் கடும் அவதிப்படுகின்றனர்.
    • பஸ்கள் புறப்படும் நேர அட்டவணையையும் வெளியிட வேண்டும் என அய்யப்ப பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மதுரை

    கார்த்திைக மாத பிறப்பை முன்னிட்டு தமிழகத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் அய்யப்பனுக்கு விரதம் மேற்கொண்டு சபரிமலை சென்று வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் கார், வேன்கள் மூலம் செல்லும் நிலை உள்ளது.

    பஸ்கள் இயக்க வேண்டும்

    சபரிமலை சீசனை முன்னிட்டு தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மதுரையில் தற்போது வரை பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் குழுவாக செல்லா மல் தனியாக சபரிமலை செல்லும் பக்தர்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

    இவர்கள் தேனி மாவட்டம் கம்பம், குமுளிக்கு சென்று அங்கிருந்து கேரள அரசு பஸ்களை பிடித்து நிலக்கல்லுக்கு செல்லும் நிலை உள்ளது.

    குமுளி முக்கிய மையமாக உள்ளதால் அங்கு தமிழக பக்தர்கள் அதிக அளவில் திரளுகின்றனர். இதனால் கேரள பஸ்களில் கூட்டம் அலைமோதுகிறது. பல கிலோ மீட்டர்தூரம் நின்று கொண்டே பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே தென்மாவட்ட மக்கள் பயன்பெறும் வகை யில் மதுரை ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி மற்றும் விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும், பஸ்கள் புறப்படும் நேர அட்டவணையையும் வெளியிட வேண்டும் என அய்யப்ப பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் அழகர்கோவில் மலை சாலையால் பக்தர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
    • முருகனின் 6-வது படைவீடான சோலைமலை முருகன் கோவிலும், வற்றாத நூபுரகங்கை தீர்த்தமும் உள்ளது.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் உள்ள அழகர்மலை அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோவில் உள்ளது. மலைமேல் முருகனின் 6-வது படைவீடான சோலைமலை முருகன் கோவிலும், வற்றாத நூபுரகங்கை தீர்த்தமும் உள்ளது.

    மதுரையில் சுற்றுலா மற்றும் ஆன்மீக ஸ்தலமாக விளங்கும் இங்கு நாள்தோறும் மதுரை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். மலை மேல் உள்ள முருகன் கோவிலுக்கு செல்ல மலைச்சாலை உள்ளது.

    இங்கு வாகனங்களுக்கு ரூ. 100, 50 வீதமும், இருசக்கர வாகனங்களுக்கு ரூ.15-ம் வசூலிக்கப்படுகிறது. மதுரை மக்களுக்கு அழகர்கோவில் மட்டுமே சுற்றுலாத்தலமாக உள்ளதால் நாள்தோறும் அங்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    ஆனால் அங்குள்ள மலைச்சாலை கடந்த பல ஆண்டுகளாக போதிய பராமரிப்பின்றி செப்பனிடப்படாமல் உள்ளன. இதன் காரணமாக மலைச்சாலை பெரும்பாலான இடங்களில் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.

    இதனால் பஸ்கள், மோட்டார் சைக்கிளில் வரும் பக்தர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். நீண்ட காலமாக புதுப்பிக்கப்படாமல் இருக்கும் சாலையை உடனே செப்பனிட வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • குடிதண்ணீர், கழிப்பிடவசதி உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாததால் பக்தர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
    • எனவே பேரூராட்சி, அறநிலையத்துறை, பொதுப்பணித்துறை நிர்வாகம் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சின்னமனூர்:

    சின்னமனூர் அருகிலுள்ள சுயம்பு சனீஸ்வர பகவான் கோவில் ஆடிவார திருவிழா நேற்று ெகாடி ஏற்றத்துடன் தொடங்கியது. உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்து செல்கிறார்கள்.

    ஆனால் குடிதண்ணீர், கழிப்பிடவசதி உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாததால் பக்தர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். சுரபிநதி மேம்பாலம் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

    இது குறித்து பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே பேரூராட்சி, அறநிலையத்துறை, பொதுப்பணித்துறை நிர்வாகம் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சாலை குறுகலானதாக இருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
    • பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

    திருப்பதி:

    தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள அலிபிரி பகுதியில் நேற்று நடந்தது.

    இதனால் திருப்பதி மலைக்கு சென்ற பஸ்கள், பக்தர்களின் வாகனங்களை, ஹரே ராமா ஹரே கிருஷ்ணா சாலை வழியாக போலீசார் திருப்பி விட்டனர்.

    இந்த சாலை குறுகலானதாக இருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

    அதன் பின் படக்குழுவினர் திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோவில் முன் படப்பிடிப்பை நடத்த முற்பட்டனர்.

    இதனால் அங்கு தரிசனத்துக்கு வந்த பக்தர்களை படக்குழுவினருடன் வந்திருந்த பவுன்சர்கள் அவசர அவசரமாக வெளியேற்றினர்.

    தகவலறிந்த ஆந்திர மாநில பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் பானு பிரகாஷ் ரெட்டி திருப்பதி போலீசில் புகார் கொடுத்தனர்.

    இந்நிலையில் பக்தர்கள் அவதி, போக்குவரத்து இடையூறு ஆகியவற்றை கருத்தில் கொண்டு தனுஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புக்கு அளித்த அனுமதி ரத்து செய்யப்படுவதாக திருப்பதி போலீஸ் சூப்பிரண்டு பரமேஸ்வர ரெட்டி அறிவித்தார். இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

    ×