search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mountain road"

    • ஏற்காடு செல்லும் வழியில் உள்ள 2-வது வளைவு மற்றும் 3-வது வளைவு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது.
    • இருசக்கர வாகனங்கள் மட்டுமே மலை பாதையில் சென்று வர அனுமதி தரப்பட்டுள்ளது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு மலை பாதையில் சீரமைப்பு பணிகள் நடப்பதால் இன்று காலை முதல் மலைப்பாதையில் இலகு மற்றும் கனரக வாகனங்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது. சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு பல்வேறு ஊர்களில் இருந்து திரளான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த வருடம் சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் வழியில் உள்ள 2-வது வளைவு மற்றும் 3-வது வளைவு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. உடனே இந்த பகுதியில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு வாகனங்கள் சென்று வர அனுமதி தரப்பட்டது. மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் மீண்டும் மண் சரிவு ஏற்ப்படாமல் இருக்க மீண்டும் மணல் மூட்டைகள் வைத்து சிமெண்ட் கலவை பூசும் பணி இன்று காலை தொடங்கியது.

    இதனால் இன்று காலை முதல் வருகிற வெள்ளிக்கிழமை வரை சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் இலகு மற்றும் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கபட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள் மட்டுமே மலை பாதையில் சென்று வர அனுமதி தரப்பட்டுள்ளது.

    மாற்று பாதையான சேலத்தில் இருந்து அயோத்தியாப்பட்டணம், குப்பனூர் வழியாக ஏற்காட்டுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை முதல் குப்பனூர் வழியாக அரசு பேருந்துகள், கார்கள் சென்று வருகிறது. குப்பனூர் பகுதியில் சுங்க சாவடி உள்ளது. வருகிற வெள்ளிக்கிழமை வரை இந்த சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க கூடாது என்றும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

    ஒவ்வொரு ஆண்டு மே மாதம் இறுதியில் ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். அடுத்த மாதம் கோடை விழா நடப்பதை ஒட்டி மலை பாதை முழுவதும் சாலை சீரமைக்கவும் உத்தர விடப்பட்டு உள்ளது.

    • குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் அழகர்கோவில் மலை சாலையால் பக்தர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
    • முருகனின் 6-வது படைவீடான சோலைமலை முருகன் கோவிலும், வற்றாத நூபுரகங்கை தீர்த்தமும் உள்ளது.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் உள்ள அழகர்மலை அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோவில் உள்ளது. மலைமேல் முருகனின் 6-வது படைவீடான சோலைமலை முருகன் கோவிலும், வற்றாத நூபுரகங்கை தீர்த்தமும் உள்ளது.

    மதுரையில் சுற்றுலா மற்றும் ஆன்மீக ஸ்தலமாக விளங்கும் இங்கு நாள்தோறும் மதுரை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். மலை மேல் உள்ள முருகன் கோவிலுக்கு செல்ல மலைச்சாலை உள்ளது.

    இங்கு வாகனங்களுக்கு ரூ. 100, 50 வீதமும், இருசக்கர வாகனங்களுக்கு ரூ.15-ம் வசூலிக்கப்படுகிறது. மதுரை மக்களுக்கு அழகர்கோவில் மட்டுமே சுற்றுலாத்தலமாக உள்ளதால் நாள்தோறும் அங்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    ஆனால் அங்குள்ள மலைச்சாலை கடந்த பல ஆண்டுகளாக போதிய பராமரிப்பின்றி செப்பனிடப்படாமல் உள்ளன. இதன் காரணமாக மலைச்சாலை பெரும்பாலான இடங்களில் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.

    இதனால் பஸ்கள், மோட்டார் சைக்கிளில் வரும் பக்தர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். நீண்ட காலமாக புதுப்பிக்கப்படாமல் இருக்கும் சாலையை உடனே செப்பனிட வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×