search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பங்குனி உத்திரத்தையொட்டி முருகன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்
    X

    கிரிவலம் வந்த பக்தர்கள்.

    பங்குனி உத்திரத்தையொட்டி முருகன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்

    • பங்குனி உத்திரத்தையொட்டி முருகன் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்.
    • கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை, தேரோட்டம், திருக்கல்யாணம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    மதுரை

    தமிழ் மாதங்களில் 12-வது மாதமாக வரும் பங்குனி மாதத்தில் நட்சத்திரங்களில் 12-வதாக இருக்கும் உத்திர நட்சத்திரத்தன்று நடைபெறும் விழா பங்குனி உத்திரமாகும். பங்குனி உத்திரத்தில் தமிழ் கடவுளான முருக பெருமானுக்கு உகந்த நாளாக பக்தர்கள் கருதி இந்த நாளில் முருகன் கோவில்களில் வழிபாடு செய்வது வழக்கம்.

    இந்த நாளில் முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை, தேரோட்டம், திருக்கல்யாணம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். மதுரை மாவட்டம் அழகர்கோவில் மலை மீது உள்ள பழமுதிர்ச்சோலை முருகன் கோவிலில் இன்று பாலாபிஷேகமும் நடந்தது.

    மதுரை நேதாஜி ரோட்டில் அமைந்திருக்கும் தண்டாயுதபாணி கோவிலில் இன்று காலை சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலையில் சுவாமி அலங்கரிக்கப்பட்டு பூப்பல்லக்கில் 4 மாசி வீதிகளில் சுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

    மதுரை காந்தி மியூசியம் அருகில் உள்ள பூங்கா முருகன் கோவிலில் சிறப்பு பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடனை நிறைவேற்றி வருகின்றனர். பங்குனி உத்திரத்தை யொட்டி மதுரை மாவட்டத்தில் உள்ள முருகன் கோவிலில் இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    Next Story
    ×