என் மலர்
மதுரை
- மதுரை அருகே உயர்கல்வி வழிகாட்டல் முகாம் நடக்கிறது.
- வருகிற 7-ந்தேதி அன்று உசிலம்பட்டியிலும், 8-ந்தேதி திருமங்கலத்திலும் நடைபெற உள்ளது.
மதுரை
மதுரை மாவட்டம் மேலூர் அரசுக் கலைக் கல்லூரியில் "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் "உயர்வுக்குப் படி" என்ற தலைப்பில் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டல் முகாம் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் சங்கீதா தலைமை தாங்கி பேசியதாவது:-
தமிழக அரசு மாணவ- மாணவிகளின் நலனை கருத்திற்கொண்டு "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, மதுரை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கடந்த கல்வியாண்டில் பிளஸ்2 படித்து தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேர விண்ணப்பிக்காத மாணவ, மாணவியர்களுக்கு "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டல் முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இம்முகாமில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லுாரிகளில் விண்ணப்பித்தல், சேர்க்கை, கல்விக் கடன் உதவித்தொகை, முதல் பட்டதாரி சான்றிதழ், இருப்பிடச் சான்று, சாதிச் சான்று, வருமானச்சான்று மற்றும் விடுதியில் தங்கி படித்தல் உள்ளிட்ட சேவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், அனைத்து கல்வி நிறுவனங்கள், திறன்பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான வழிகாட்டுதலையும் கல்லுாரிக்கான சேர்க்கை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இம்முகாமின் தொடர்ச்சியாக 03.07.2023-அன்று மதுரையிலும், வருகிற 7-ந்தேதி அன்று உசிலம்பட்டியிலும் மற்றும் 8-ந்தேதி ்ன்று திருமங்கலத்திலும் நடைபெறவுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சரவணன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கார்த்திகா, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநர் டாக்டர் சண்முகசுந்தர் , மேலூர் வருவாய் கோட்டாட்சியர் பிரிதோஷ் பாத்திமா, அரசு உயர் அலுவலர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
- ராஜாமணி திருநகரை சேர்ந்த வசந்தி என்பவருக்கு ரூ. 1 லட்சம் பணம் வட்டிக்கு கொடுத்திருந்தார்.
- நகைக்காக மூதாட்டியை கொலை செய்து வீசிய சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
மதுரை:
மதுரை அருகே நாகமலைபுதுக்கோட்டை காலாங்கரை பகுதியில் கடந்த 12-ந்தேதி சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது கை, கால்கள் கயிற்றால் கட்டப்பட்டு இருந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த நாகமலைபுதுக்கோட்டை போலீசார், அந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? பணம்-நகைக்காக கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
விசாரணையில், அவர் மதுரை செல்லூர் கீழத்தோப்பு பகுதியை சேர்ந்த கல்யாணி என்பவரின் மனைவி ராஜாமணி என்பதும், அவர் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கியதும் தெரியவந்தது. இதனால் பணம் கொடுக்கல்-வாங்கல் விவகாரத்தில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்று கருதி தனிப்படையினர் விசாரணை நடத்தினர்.
ராஜாமணி திருநகரை சேர்ந்த வசந்தி என்பவருக்கு ரூ. 1 லட்சம் பணம் வட்டிக்கு கொடுத்திருந்தார். அவரிடம் பணம் வாங்க செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. தனது தாய் மாயமானது குறித்து ராஜாமணி மகன் ஈஸ்வரன் புகார் அளித்தார்.
ஆகவே ராஜாமணி கொலையில் வசந்திக்கு தொடர்பு இருக்கும் என்ற கோணத்தில் நாகமலை புதுக்கோட்டை போலீசார், அவரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் தனது கணவருடன் சேர்ந்து ராஜாமணியை கொன்ற திடுக்கிடும் தகவல் வெளியானது.
ராஜாமணியிடம் வசந்தி ரூ. 1 லட்சம் வட்டிக்கு கடன் வாங்கியிருந்தார். மேலும் அவருக்கு ரூ. 5 லட்சம் கடன் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த கடனை அடைக்க வழி தெரியாமல் இருந்து வந்த அவர், ராஜாமணியை கொலை செய்து, அவர் அணிந்திருக்கும் 28 பவுன் நகையை திருடி விற்க திட்டம் தீட்டினர்.
இந்நிலையில் பணம் வாங்க வந்த ராஜாமணியை கணவருடன் சேர்ந்து கொலை செய்து அவர் அணிந்திருந்த நகையை பறித்துக்கொண்டார். பின்பு மூதாட்டியின் உடலை ஆட்டோவில் ஏற்றி யாருக்கும் தெரியாமல் நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள காலங்கரை பகுதியில் வீசிச்சென்றது தெரியவந்தது.
இதையடுத்து வசந்தி, அவரது கணவர் சத்திய மூர்த்தி, ஆட்டோ டிரைவர் வீரபெருமாள் ஆகிய 3 பேரை நாகமலை புதுக்கோட்டை போலீசார் கைது செய்தனர். நகைக்காக மூதாட்டியை கொலை செய்து வீசிய சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
- மதுரையில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
- கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே உள்ள மையிட்டான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி யசோதை. கடந்த ஒரு மாதமாக பழனிசாமி வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். மனைவி யசோதை 100 நாள் வேலைக்கு சென்று வந்து கொண்டிருந்தார். மனவிரக்தியில் இருந்த பழனிசாமி சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து யசோதை கொடுத்த புகாரின்பேரில் கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மதுரையில் வாலிபர் திடீர் மாயமானார்
- சிந்துபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்
திருமங்கலம் டி.உச்சப் பட்டியை சேர்ந்தவர் முருகன்(வயது42), அரசு பஸ் டிரைவர். இவரது மனைவி விஜயலட்சுமி. கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகனின் தாயார் இறந்ததில் இருந்தே கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்த ன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற முருகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.
அவர் எங்கு சென்றார் என்று தெரிய வில்லை. இதுகுறித்து மனைவி விஜயலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் சிந்துபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது, பண மோசடியில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- வழக்கின் அடிப்படையில் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
மதுரை:
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா, வானதிராயன் பட்டியை சேர்ந்த வக்கீல் சண்முக சுந்தரம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
கடந்த 2021-ம் ஆண்டில் நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் கரூர் தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் அவர் மின்சாரத்துறை, கலால் மற்றும் ஆயத்தீர்வைத்துறைகளின் அமைச்சராக இருந்து வந்தார்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக அவர் இருந்தபோது, பண மோசடியில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் அடிப்படையில் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
பின்னர் அவரை அதிகாரிகள் கைது செய்தனர். இதையடுத்து அவரிடம் இருந்த மின்துறையும், கலால் துறையும் மற்ற 2 அமைச்சர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. தற்போது அவர் துறைகள் எதுவும் இல்லாத அமைச்சராக நீடித்து வருகிறார்.
இது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. எனவே செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் நீடிக்க தடை விதித்தும், அந்த பதவியில் இருந்து அவரை நீக்கியும் உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளன. எனவே இந்த வழக்கையும் சென்னை ஐகோர்ட்டு முதன்மை அமர்வுக்கு மாற்றி உத்தரவிடுகிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
- பசுமாடு திருடிய கணவன்-மனைவி கைது செய்யப்பட்டனர்.
- இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் செய்யப்பட்டது.
மதுரை
எஸ்.எஸ்.காலனி தாமஸ் காலனியை சேர்ந்தவர் பெரிய முத்து (வயது39). இவரது பசுமாடு திருடுபோனது. அதே நாளில் அதே பகுதியில் விஷ்ணு என்பவரின் மாடும் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் செய்யப்பட்டது. மேலும் பல்வேறு மாட்டுச் சந்தை நடைபெறும் இடங்களுக்கு சென்று தனது மாட்டை பெரியமுத்து தேடி வந்தார். அப்போது ஒட்டன்சத்திரம் மாட்டு சந்தைக்கு சென்றபோது, அவருடைய மாடு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். விசாரித்தபோது தனது மாட்டை கணவன்-மனைவி விற்பனைக்காக கொண்டு வந்தது தெரியவந்தது.
உடனடியாக அவர்களை எஸ்.எஸ்.காலனி போலீசில் ஒப்படைத்தார். போலீசாரின் விசாரணையில் அவர்கள் திண்டுக்கல் வேடசந்தூர் கிழக்கு தெருவை சேர்ந்த பெரியசாமி (38) மற்றும் அவரது மனைவி சத்யா (34) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைதுசெய்தனர்.
- மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்த சாத்தியக்கூறுகள் உள்ளதாக திட்ட இயக்குநர் பேட்டியளித்துள்ளார்.
- வைகையாற்றில் பாறை பகுதிகளில் மெட்ரோ வழித்தடம் அமைப்பதால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றார்.
மதுரை
மதுரையில் மெட்ரோ ரெயில் சேவை அமைக்கப்படும் என சட்டமன்ற கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டது. அதற்கான ஆரம்ப கட்டப்பணிகள் மதுரையில் நடைபெற்று வருகிறது. திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை மண் பரிசோதனை, வழித்தடம் போன்றவற்றை அதிகாரி கள் ஆய்வு செய்தனர்.
மெட்ரோ ரெயில் திட்டம் தொடர்பாக மதுரையில் திட்ட இயக்குநர் அர்ஜூனன் மற்றும் அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர் நிருபர்க ளிடம் கூறியதாவது:-
திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை மெட்ரோ ரெயிலுக்காக மண் பரிசோதனை செய்யப்பட்டு 90 சதவீத பணிகள் முடிந்து இறுதி அறிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்டோம். திருமங்கலம் பஸ் நிலையம் அருகில், தோப்பூர், மதுரை ரெயில் நிலையம் அருகில் மற்றும் மாசி வீதிகளில் மெட்ரோ ரெயில் நிறுத்தம் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி மாசி வீதிகளில் தேரோட்டம் பாதிக்கப்படாத வகையிலும், பழமையான கட்டிடங்கள் சேதமடையாத வகையிலும் மெட்ரோ ரெயில் நிறுத்தம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மதுரை வைகை ஆறு முதல் கோரிப்பாளையம் வரை மெட்ரோ சுரங்கப்பாதை அமைப்பதற்காக முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகள் தாமதமாக வாய்ப்புள்ளது.
வைகையாற்றில் பாறை பகுதிகளில் மெட்ரோ வழித்தடம் அமைப்பதால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்தை பொறுத்தவரை வைகை ஆற்றின் கீழ் வழித்தடம் அமைப்பது, மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் மெட்ரோ ரெயில் நிறுத்தம் அமைப்பது சவாலான பணிகளாக இருக்கும். மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகளவில் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
- வாலிபரை தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
- முன்விரோதம் இருந்தது.
மதுரை
தத்தனேரி கண்மாய்கரை கணேசபுரத்தைச் சேர்ந்தவர் நாகேந்திரன். இவரது மகன் கருப்பசாமி(22). அதே பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஷ். இவர்கள் இருவருக்கும் முன்விரோதம் இருந்தது. இந்த நிலையில் தத்தனேரி சுடுகாட்டு காளியம்மன் கோவில் அருகே சென்ற கருப்பசாமியை வழிமறித்து 17 வயது சிறுவன் உள்பட 6 பேர் அவரை அவதூறாக பேசி பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து செல்லூர் போலீசில் கருப்பசாமி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து 17 வயது சிறுவன், அய்யனார்(20), காளிதாஸ், சித்திரைச் செல்வம் ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் ஹரிஸ், குரேநாதனை தேடி வருகின்றனர்.
- வடமலையான் மருத்துவமனை சார்பில் மருத்துவ மாநாடு நடந்்தது.
- திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. அபினவ்குமார் தொடங்கி வைத்தார்.
மதுரை
திண்டுக்கல்லில் வடமலையான் மருத்துவ மனை சார்பில் வீகான்-2023 என்ற அவசர சிகிச்சை தொடர்பான ஒருநாள் மருத்துவ மாநாடு நடந்தது. டாக்டர் கார்த்திகேயன் வரவேற்று பேசினார். மருத்துவ மாநாட்டை திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. அபினவ்குமார் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
ஒவ்வொருவரும் மறைமுகமாகவோ நேரடியாகவோ சமூகப் பணியாற்றுகின்றனர். அதில் மருத்துவர்களும் காவல்துறையினரும் நேரடியாக மக்கள் பணியாற்றுகின்றனர். அந்த வகையில், உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களின் பங்கு மகத்தானது.
இதுபோன்ற மாநாடு அவர்களது துறை சார்ந்த அறிவைப் புதுப்பித்துக் கொள்ள பெரிதும் உதவும், அதன்மூலம் அவர்களால் மேலும் சிறப்பாக பணி யாற்ற முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாநாட்டில் வடமலை யான் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் புகழகிரி பேசுகையில், திண்டுக்கல்லில் பன்முக மருத்துவமனை அமைக்கவேண்டும் என்பது எனது தந்தையின் கனவு அது தற்போதுநிறை வேறியுள்ளது.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதற் கான அரசு அனுமதியும் தற்போது இம்மருத்துவ மனைக்கு கிடைத்துள்ளது. இதன்மூலம் திண்டுக்கல் நகரில் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை வசதி கொண்ட முதல் மருத்துவ மனை என்ற பெயரைப் பெற்றுள்ளது.
அனுபவமிக்க நரம்பியல், இருதய சிகிச்சை வல்லு நர்கள் என 40 முழுநேர மருத்துவர்களைக்கொண்டு அனைத்து நவீன வசதிக ளுடன் 24 மணி நேரமும் இம்மருத்துவமனை செயல்படுகிறது என்றார்.
தொடர்ந்து மாநாட்டில் டாக்டர் கார்த்திகேயனுக்கு நினைவுப்பரிசை புகழகிரி வழங்கினார். இதில் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் அஸ்வின் புகழகிரி, திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளர் வீரமணி, இந்திய அவசர சிகிச்சை மருத்துவ அமைப்பின் துணைத் தலைவர் டாக்டர் சாய் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில் உயிர் காக்கும் செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
- அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் ரூ. 5 லட்சம் பணம்-நகைகள் திருட்டு நடந்ததாக போலீசில் மனைவி பரபரப்பு புகார் செய்தார்.
- பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர்.
மதுரை
மதுரை மாவட்டம் சத்திரப்பட்டி அருகே உள்ள கருவனூரை சேர்ந்தவர் பொன்னம்பலம் (வயது65). அ.தி.மு.க.வை சேர்ந்த இவர் கடந்த 2001-2006-ம் ஆண்டு வரை சமயநல்லூர் (தனி) தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கருவனூரில் உள்ள பாறை கருப்பசாமி கோவில் உற்சவ விழா தொடங்கியது. இதில் முதல் மரியாதை யாருக்கு? என்பது தொ டர்பாக பொன்னம்பலம் தரப்புக்கும், தி.மு.க. கிளைச் செயலாளர் வேல்முருகன் தரப்புக்கும் தகராறு ஏற்பட்டது.
இதுதொடர்பாக ஏற்பட்ட மோதலில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேல்முருகன் தரப்பினர், பொன்னம்பலம் வீட்டில் புகுந்து தாக்குதல் நடத்தினர். வீட்டில் நின்ற காருக்கு தீ வைத்தது மட்டுமின்றி, அங்கிருந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் வீட்டுக்குள் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர்.
கோவில் மோதல் சம்பவம் தொடர்பாக இரு தரப்பை சேர்ந்தவர்களும் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் விசாரணை நடத்திய சத்திரப்பட்டி போலீசார், அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னம்பலம் கொடுத்த புகாரின் அடிப்படையில் தி.மு.க.பிரமுகர் வேல் முருகன், ராஜபாண்டி, செந்தமிழன், கலைவாணன், ராஜ்மோகன், படையப்பா, சங்கர், அருண் உள்பட 18பேர் மீதும், வேல்முருகன் தரப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில் பொன்னம்பலம்,
அவரது மகன்கள் திருச்சிற்றம்பலம், தில்லையம்பலம் மற்றும் பழனிவேல், சின்னகருப்பு, விஜய், வேலுமணி உள்பட 20பேர் மீதும் போலீசார் வழக்கு பதிந்தனர்.
அவர்களில் வேல்மு ருகன், செந்தமிழன், ராஜ்மோகன், முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னம்பலம், அவரது மகன்கள் திருச்சிற்றம்பலம், தில்லையம்பலம் ஆகிய 6பேர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையில் முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னம்பலத்தின் மனைவி பழனியம்மாள், சத்திரப்பட்டி போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் தங்களுக்கு சொந்தமான பண்ணை வீட்டை, எதிர்தரப்பினர் சூறையாடிய போது பீரோவை உடைத்து அதிலிருந்த 5 பவுன் தங்க நகைகள், ரூ.5லட்சம் ரொக்கப்பணம் மற்றும் பத்திரப்பதிவு ஆவணங்கள் திருடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அடிப்படை வசதிகளை செய்துதரக்கோரி மாநகராட்சி மண்டல அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
- கோரிக்கை மனுக்களை அதிகாரிகளிடம் அளித்தார்.
மதுரை
மதுரை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட் பட்ட பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மேயர் இந்திராணி தலைமை யில் நடைபெற்றது. அப் போது மதுரை மாநகராட்சி மண்டலம் 2-க்கு உட்பட்ட விளாங் குடி 20-வது வார்டு பகுதி களுக்குட்பட்ட 116 தெரு பகுதிகளில் அடிப் படை வசதிகளை நிறை வேற்றக் கோரி பல முறை அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர்.
மேலும் இப்பகுதியில் சாக்கடை, கழிவு நீர் பிரச் சினை, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இருந்து வருவதால் பொது மக்கள் அவதிப்படுகின்றனர். இதனை சரி செய்யாத மாநகராட்சி அதிகாரிகளின் மெத்தனப் போக்கை கண்டித்து கவுன்சிலர் நாக ஜோதி சித்தன் தலைமையில் 25-க்கும் மேற்பட்ட பொது மக்கள் மண்டல அலு வலகத்தை முற்றுகையிட்டு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பதாகை களை ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.பின்னர் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி மேயர், ஆணையாளரிடம் மனு அளிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த னர். தொடர்ந்து மனு அளிக்க மண்டல அலுவல கத்திற்குள் வந்த பொது மக்கள் மேயர் மற்றும் அதி காரிகள் முன்பு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். பின்னர் பொது மக்கள் சார்பில் கோரிக்கை மனுக்களை அதிகாரிகளிடம் அளித்தார்.
மனுக்களை பெற்றுக் கொண்ட மேயர், ஆணையா ளர் ஆகியோர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித் தனர். அதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
அதே போல் மானகிரி 33-வது பகுதியில் கடந்த 6 மாதமாக குடிநீர் வராததை கண்டித்தும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆர்ப் பாட்டம் நடத்தினர். இத னால் குறைதீர்க்கும் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
- வாடிப்பட்டி வாரச்சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.
- காய்கறிகள் விற்கப்படுகிறது.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப் பட்டி பஸ் நிலையம் அருகில் செவ்வாய்க்கிழமை செயல் படும் தனியார் வாரச்சந்தை உள்ளது. இந்த சந்தையில் ஆடு, மாடு, கோழி மற்றும் காய்கறி கள் விற்கப்படுகிறது.
இந்த சந்தைக்கு மதுரை, திண்டுக்கல், தேனி, திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்க ளில் இருந்து வியாபாரிகளும், விவசாயிகளும் வந்து செல்கின்றனர். ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை சந்தை செயல்படும். இதில் ஆடு, மாடு, கோழிகளுக்கு எப்போதும் கிராக்கி இருக்கும். அதனால் இவைகள் காலை 9 மணிக்குள் விற்பனை செய்யப்பட்டு விடும். அதன் பின்னர் காய்கறி, பலசரக்கு வீட்டு உபயோக பொருட்கள் தொடர்ந்து விற்பனை யாகும்.
வருகிற 29-ந்தேதி (வியாழக்கிழமை) பக்ரீத் பண்டிகை வருவதை யொட்டி சுற்று வட்டார கிராமப்புறங்களில் இருந்து அதிகளவில் ஆடுகள் இன்று விற்பனைக்கு வந்தது. ஆடுகளின் விற்பனை ஜோராக இருந்தது. ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை ஆடுகள் விலை போனது. மதியம் வரை ரூ.2 கோடி மதிப்புக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் கூறினர்.






