என் மலர்
மதுரை
- அ.தி.மு.க. கவுன்சிலர் கொலையில் 6 பேர் மதுரை கோர்ட்டில் சரணடைந்தனர்.
- இதையடுத்து அவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
மதுரை
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே மாணிக்கம்பட்டி செல்லும் சாலையில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா கொடைரோடு, மாவுத்தன்பட்டி கிராமத்தை சேர்ந்த அ.தி.மு.க. கவுன்சிலர் சந்திர பாண்டியன் (வயது 46) நேற்று மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மதுரை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நிலக்கோட்டை மாதேவன்பட்டியை சேர்ந்த அபிஷேக் (21), அழகர்சாமி (21), ரவிக்குமார் (21), விஜயகுமார் (22), தளபதி (21), கரண் (22) ஆகிய இன்று 6 பேர் இன்று சரண் அடைந்தனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
- காமராஜர் அறநிலையம் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
- அற நிலையத்தின் பொதுச்செய லாளர் கே.பி.எம்.எம்.காசிமணி நன்றி கூறினார்.
மதுரை
காமராஜர் அறநிலையம் சார்பில் காமராஜரின் 121-வது பிறந்தநாள் விழா தெப்பக்குளம் காமராஜர் அறநிலையத்தில் நடந்தது. அறநிலைய தலைவர் ஜெமினி எஸ்பால்பாண்டியன் தலைமை தாங்கினார்.மதுரை நாடார் உறவின் முறை பொதுச்செயலாளர். எஸ்.கே. மோகன் முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் டிபால சுப்பிரமணியன் வரவேற்றார். துணைத்தலைவர் எம்.எஸ்.சோமசுந்தரம் சிறப்பு விருந்தினர்களை கவுரவித்தார்.
மதுரை நாடார் உறவின்முறை பொதுச்செயலாளர் வி.பி.மணி, ஜெயராஜ் நாடார் மேல்நிலைப்பள்ளி தலைவர் பி.தர்மராஜ், துணைத் லைவர் பி.செந்தில்குமார், செயலாளர்-தாளாளர் எல்.ஆனந்தகிருஷ்ணன், துணைச்செயலாளர் சி.பாஸ்கரன், விடுதிக்குழு செயலாளர் பா.குமார், ஜெயராஜ் அன்னபாக்கியம் மெட்ரிக்குலேசன் மேல் நிலைப்பள்ளி இணை செயலாளர் ஓய்.சூசை அந்தோணி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
மதுரை செந்தமிழ் கல்லூரி துணை முதல்வர் ரேவதி சுப்புலெட்சுமி 1,500 மகளிருக்கு சேலைகளை வழங்கினார். அம்மன் சன்னதி காந்தி சிலை அமைப்புக் குழு தலைவர் மு.சிதம்பரபாரதி சிறப் புரை ஆற்றினர். அறநிலையத்தின் பொதுச்செயலாளர் கே.பி.எம்.எம்.காசிமணி நன்றி கூறினார்.
- திருநகரில் மோட்டார் சைக்கிளில் இருந்து ரூ.1.30 லட்சம் திருட்டு போனது.
- முதியவரிடம் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
திருப்பரங்குன்றம்
திருமங்கலம் சொக்க நாதன் பட்டி கப்பலூர் நடுத்தெருவை சேர்ந்தவர் பவுன்ராஜ் (63). இவர் திருநகர் சீதாலட்சுமி மில் கேட் அருகே உள்ள ஒரு ஜூஸ் கடைக்குச் சென்றார். அப்போது அவர் பையில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்தை மோட்டார் சைக்கிளில் வைத்து விட்டு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த பணம் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் காணாமல் போயிருந்தது. பணத்தை மோட்டார் சைக்கிளில் வைத்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அவர் கடைக்கு சென்று திரும்பிய சிறிது நேரத்திற்குள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து பவுன்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் திருநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- திருப்பரங்குன்றத்தில் கிரிவலப்பாதையை சீரமைக்க வேண்டும்.
- குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் மேற்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடை பெற்றது.
இந்த கூட்டத்திற்கு மண்டல தலைவர் சுவிதா விமல் தலைமை வகித்தார். மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மேயர் இந்திராணி பொன் வசந்த், ஆணையாளர் பிரவீன் குமார் ஆகியோர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர்.
திருப்பரங்குன்றம் பகுதி மக்கள் அளித்த மனுக்களில் கூறப்பட்டிருந்ததாவது:-
சீரான குடிநீர் வழங்க கோரி கோரிக்கை மனு அளித்தனர். தங்கள் பகுதிக்கு வைகை கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ சரிவர தண்ணீர் வராத நிலையில், காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் திருப்பரங்குன்றம் பகுதியை சேர்க்க வேண்டும். சீரான குடிநீர் வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர். இதேபோல கிரிவலப் பாதைகளில் தெரு விளக்கு சரிவர எரிவதில்லை மற்றும் கிரிவலப் பாதையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. திருநகர் பகுதியில் ஆங்காங்கே கொட்டப்படும் குப்பைகள் சரிவர அள்ளப்படவில்லை மற்றும் தெருவிளக்கு வசதி இல்லை என அப்பகுதி மக்கள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தனர். இதேபோல திருநகர் ஒன்றாவது பஸ் நிறுத்தத்தில் இருந்து எட்டாவது பஸ் நிறுத்தம் வரை சாலையின் இரு பகுதிகளிலும் ஆக்கிர மிப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால் விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
செங்குன்றம் நகர் பகுதியில் 750க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள நிலையில் அந்த பகுதிக்கு சாலை வசதி மற்றும் இப்பகுதியில் தெருநாய் தொல்லை அதிக அளவில் உள்ளது. அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
முகாமில் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மேயர் சம்பந்தப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
- மதுரையில் தமிழ்நாடு நாள் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
- இதனை கலெக்டர் சங்கீதா தொடங்கி வைத்தார்.
மதுரை
மதுரை தமுக்கம் மைதானம் தமிழன்னை சிலை அருகே இன்று தமிழ்நாடு நாள் விழிப்புணர்வு பேரணி நடந்தது. விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் சங்கீதா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த பேரணி காந்தி நினைவு அருங்காட்சியகம் வழியாக சென்று மதுரை உலக தமிழ்ச்சங்க வளா கத்தில் நிறைவு பெற்றது. 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி னர்.
முன்னதாக தமிழ்நாடு விழாவை முன்னிட்டு கலெக்டர் சங்கீதா தமுக்கம் மைதானத்தில் உள்ள தமிழன்னை சிலைக்கு மரியாதை செலுத்தினார். மேலும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மேயர் இந்திராணி, ஆணையாளர் பிரவீன் குமார், போலீஸ் துணை துணை கமிஷனர் அரவிந்த், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கார்த்திகா, துணை மேயர் நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மதுரை மகபூப்பாளையத்தில் முனியாண்டி கோவில் உற்சவ விழா நடந்தது.
- இதில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மதுரை
மதுரை மகபூப்பாளையம் வைத்தியநாதபுரத்தில் காணியாளன் பொன் முனியாண்டி சுவாமி கோவில் 75-வது ஆண்டு உற்சவ விழாவை முன் னிட்டு நடைபெற்ற அன்னதானத்தை தேவகி மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் நாகேந்திரன் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு பெட்கி ராட் தொழில் பயிற்சி பள்ளியின் நிர்வாக இயக்குனர் சுப்புராமன் தலைமை வகித்தார். மாநக ராட்சி உதவி பொறியாளர் பாஸ்கர பாண்டியன், 59-வது வட்ட தி.மு.க. அவைத் தலைவர் சந்திரன், லட்சுமி அம்மாள் மகளிர் குழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகஸ்தர்கள் தலைவர் பிச்சமுத்து, உதவி தலைவர் மணிகண்டன், செயலாளர் பூசாரி அ.பி.குமார், உதவி செயலாளர் அருணகிரி, இணைச்செயலாளர்கள் ராஜசேகரன், குரு மூர்த்தி, பொருளா ளர் மும்பை ஆர்.கண்ணன், அறங்காவலர் கணேசன், மக்கள் தொடர்பாளர் முருகேசன் ஆகியோர் செய்திருந்தனர்.
- திருப்பரங்குன்றம் ஜோதி நடுநிலைப்பள்ளியில் காமராஜர் 121-வது பிறந்தநாள் விழா நடந்தது.
- பள்ளி தலைமையாசிரியை மற்றும் மாணவ, மாணவிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
மதுரை
திருப்பரங்குன்றம் ஜோதி நடுநிலைப்பள்ளியில் கர்ம–வீரர் காமராஜரின் 121-வது பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி செயலாளர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கி காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விழாவையொட்டி கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவி–களுக்கு மதுரை ஆனந்தம் செயலாளர் செல்வராஜ் பரிசு–களை வழங்கினார். விழாவில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சந்தானகிருஷ்ணன், பள்ளி தலைமையாசிரியை மற்றும் மாணவ, மாணவிகள், ஊர் பெரியோர்கள் உள்பட ஏராள–மானோர் கலந்துகொண்டனர்.
- மதுரை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டில் 1,194 தீ விபத்து சம்பவங்கள் நடந்துள்ளது.
- தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் அதிர்ச்சி தகவல் வெளியானது.
மதுரை
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகில் தெற்கு மாசி வீதியில் நேற்று பிளாஸ்டிக் கடை மற்றும் குடோனில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ரூ.50 லட்சத்திற்கும் மேலான பொருட்கள் சேதம் அடைந்தது.
இந்த தீயை அணைக்க 7 மணி நேரத்துக்கும் மேலாக போராடிய தீயணைப்புத் துறையினர் 10-க்கும் மேற் பட்ட தீயணைப்பு வாக–னங்களைக் கொண்டு தண்ணீரை பீய்ச்சி அடித்தும் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாத நிலை ஏற்பட் டது.
இதைக்கண்ட பொதுமக் கள் அடிக்கடி மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி இதுபோன்று தீ விபத்துகள் நடைபெறுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவ–தாக தெரிவித்து வந்தனர். மேலும் குறிப்பாக மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உள்ளே வசந்த ராயர் மண்ட–பத்தில் ஏற்பட்ட தீ விபத் துக்கு பின்னர் இது போன்ற தீ விபத்துகள் நடைபெறு–வதால், மதுரை–யில் பெரும் அசம்பாவிதம் நடைபெறுமா என்ற அச்சத்தில் ஆன்மீகவா–திகள், பொதுமக்கள் இருக் கின்றனர்.
இந்த சூழ்நிலையில் சமூக ஆர்வலர் நாகேந்திரன் தக–வல் அறியும் உரிமைச்சட்டம் மூலமாக மதுரை மாவட்டத் தில் நடைபெற்ற தீ விபத்து குறித்து தகவல் கேட்டு இருந்தார். அதற்காக தீய–ணைப்புத் துறைகளால் கொடுக்கப்பட்டுள்ள தக–வல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மதுரை மாவட்டத்தில் மட்டும் கடந்த 2 ஆண்டுகளில் 1,194 தீ விபத்து சம்பவங்கள் நடை–பெற்று இருப்பதாகவும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி மட்டும் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தீ விபத்து ஏற்பட்டு இருப்பதாகவும் தீயணைப்புத்துறையினரால் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் 85 நிறுவ–னங்கள் மட்டுமே தீயணைப் புத்துறையினர் மூலம் தடை–யில்லா சான்றிதழ் பெற்றுள் ளனர் என்றும், ஆனால் மீனாட்சியம்மன் கோவிலை சுற்றி 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனாட்சி அம்மன் கோவி–லைச்சுற்றி நடைபெற்ற தீ விபத்துகளில் மூன்று பேர் உயிரிழந்து உள்ளதாகவும் இந்த தகவலில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மதுரை மாநக–ரில் உள்ள 50 ஆண்டு முதல் நூறு ஆண்டுகள் வரையி–லான பழமையான கட்டிடங் களில் செயல்பட்டு வரும் வணிக நிறுவனங்களுக்கு 95 சதவீதம் முறையான ஆவ–ணங்கள் இல்லை என்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரி விக்கப்பட்டு உள்ளது.
வரும் காலங்களில் பழ–மையான கட்டிடங்களை உரிய முறையில் தணிக்கை செய்து தீ விபத்துக்களை தடுக்க உறுதியான நடவ–டிக்கை எடுக்க வேண்டும் என்பது கோவில் மாநகர மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோவில் ஆடி பெருந்திருவிழா நடந்தது.
- வருகிற 24-ந்தேதி கொடியேற்றமும், 2-ந்தேதி தேரோட்டமும் நடக்கிறது.
அலங்காநல்லூர்
திருமாலிருஞ்சோலை மற்றும் தென்திருப்பதி என்று போற்றி அழைக்கப் படும் 108 திவ்யதேசங்களில் ஒன்றானது மதுரையை அடுத்த அழகர்கோவில், கள்ளழகர் கோவில் ஆகும். இங்கு நடைபெறும் திரு–விழாக்களில் ஆடி மாதம் நடைபெறும் ஆடி பெருந்தி–ருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
இந்த ஆடி திருவிழா வருகின்ற 24-ந்தேதி திங்கட் கிழமை காலை 10 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று இரவு அன்ன வாகனத்தில் கள்ளழகர் பெருமாள் புறப்பாடு நடைபெறும்.
25-ந்தேதி காலையில் தங்க பல்லக்கு உற்சவம், இரவு சிம்ம வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. 26-ந்தேதி காலையில் சுவாமி புறப்பாடு, இரவு அனுமார் வாகனத்திலும், 27-ந்தேதி இரவு கருட வாகனத்திலும், 28-ந்தேதி காலை பெருமாள் தங்க பல்லக்கில் புறப்பாடாகி மதுரை சாலையில் உள்ள மறவர் மண்டபத்தில் எழுந்த–ருளுவார்.
அன்று இரவு சேஷ வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். மேலும் 29-ந்தேதி இரவு யானை வாகனத்திலும், 30-ந்தேதி இரவு புஷ்ப சக்கரமும் நடைபெறும். 31-ந்தேதி இரவு குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெ–றும்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற ஆகஸ்ட் 1-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடை–பெறுகிறது. இதில் காலை 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் திருத்தேரில் சுவாமி எழுந்தருளல், 8 மணிக்கு மேல் 8.35 மணிக் குள் திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெறும். அன்று இரவு புஷ்ப பல்லாக்கு, 2-ந்தேதி காலையில் தீர்த்த–வாரி, இரவில் சப்தா வர்ணம் புஷ்ப விமானம், 3-ந்தேதி உற்சவ சாந்தி நடக்கிறது.
அதைத் தொடர்ந்து 16-ந்தேதி ஆடி அமைவாசையை யொட்டி கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெ–றும். இத்துடன் இந்த திருவிழா நிறைவு பெறுகி–றது. ஆடிப்ெபருந்திருவிழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் வெங்கடாஜலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் கோவில் கண்கா–ணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள், பணியாளர் கள் செய்து வருகின்றனர்.
- உசிலம்பட்படி பகுதியில் நாளை மின்தடை ஏற்படும்.
- இந்த தகவலை உசிலம்பட்டி மின்பகிர்மான செயற்பொறியாளர் (பொறுப்பு) ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
உசிலம்பட்படி
உசிலம்பட்டி துணை மின்நிலையத்தில் நாளை (19-ந்தேதி) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் மின் வினியோகம் நிறுத்தப்படும். காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும்.
மின்தடை ஏற்படும் பகுதிகள் உசிலம்பட்டி நகர், கவண்டன்பட்டி, பூதிப்புரம், கள்ளபட்டி, வலையபட்டி, கே.போத்தம்பட்டி, அயன்மேட்டுப்பட்டி, மலைப்பட்டி, கரையாம்பட்டி, நல்லுத்தேவர்பட்டி, சீமானுத்து, கொங்கபட்டி, மேக்கிலார்பட்டி, கீரிபட்டி, ஒத்தபட்டி, பண்ணைப்பட்டி, சடையாள், கன்னியம்பட்டி மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகள். தும்மக்குண்டு துணை மின் நிலையம்:- சிந்துபட்டி, தும்மக்குண்டு, பெருமாள்பட்டி, காளப்பன்பட்டி, பூசலப்புரம், திடியன்; வச்சம்பட்டி, பாறைப்பட்டி, அம்பட்டையன்பட்டி, வலங்காகுளம், உச்சப்பட்டி, காங்கேயநத்தம், தங்களாச்சேரி, பொக்கம்பட்டி, இடையபட்டி துணை மின்நிலையம்:- மாதரை, தொட்டப்பநாயக்கனூர்ரூபவ் இடையபட்டி, நக்கலப்பட்டிரூபவ் பூச்சிபட்டி, செட்டியபட்டி, வில்லாணி மொண்டிக்குண்டு துணைமின்நிலையம்:- உத்தப்பநாயக்கனூர், வாடிப்பட்டி, குளத்துப்பட்டி, கல்யாணிபட்டி, கல்லூத்து, எரவார்பட்டி, மொண்டிக்குண்டு, பாப்பாபட்டி, கொப்பிலிப்பட்டி, வெள்ளைமலைப்பட்டி, வையம்பட்டி, லிங்கப்பநாயக்கனூர், புதுக்கோட்டை, சீமானுத்து, துரைச்சாமிபுரம் புதூர்.
இந்த தகவலை உசிலம்பட்டி மின்பகிர்மான செயற்பொறியாளர் (பொறுப்பு) ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
- சுடுகாட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- சிந்துப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திரு–மங்கலம் அருகேயுள்ள சிந்து–பட்டி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட த.உடையாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நமக்கோடி. இவரது மனைவி அன்னப்பெருமாயி. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ள–னர்.
இதில் நமக்கோடியின் மூத்த மகன் ஒச்சுப்பாண்டி (வயது 27). ஆடு வியாபாரி–யான இவர் ஆட்டுக்கறி வியாபாரம் பார்த்து வந் தார். இந்நிலையில் நேற்று மாலை வெளியே சென்று வருவதாக கூறிச் சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர் கள் பல்வேறு இடங்களுக்கு சென்று தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கி–டையே உடையாம்பட்டி சுடுகாட்டில் ஒச்சுப்பாண்டி தூக்கில் பிணமாக தொங்கு–வதாக தகவல் கிடைத்தது.
அதன் பேரில் சிந்துப் பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஒச்சுப்பாண்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உசிலம் பட்டி அரசு மருத்துவம–னைக்கு அனுப்பி வைத்த–னர்.
மேலும் இச்சம்ப–வம் குறித்து நமக்கோடி கொடுத்த புகாரின் பேரில் சிந்துப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது.
- விழாவிற்கு தலைமை ஆசிரியர் சந்திரன் தலைமை தாங்கினார்.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் உள்ள பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப் பட்டது. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவிற்கு தலைமை ஆசிரியர் இனிகோ எட்வர்ட் ராஜா தலைமை தாங்கினார். அரிமா சங்க நிர்வாகி கள் ராமச்சந்திரன், பால சுந்தரம், பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் விஜயரங்கன் வரவேற்றார். இந்த விழாவில் புலவர் குருசாமி, மேலாண்மை குழு தலைவர் வாசுகி உறுப்பி னர்கள் சசிகுமார், அங்காள ஈஸ்வரி, பரமேஸ்வரி, பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பொட்டுலுபட்டி காந்திஜி ஆரம்பப்பள்ளியில் நடந்த விழாவிற்கு பள்ளி செயலாளர் நாகேஸ்வரன் தலைமை தாங்கினார். பள்ளி வளர்ச்சி குழு தலைவர் பொறியா ளர் தனபாலன், முன்னாள் மாண வர் பாலசரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் கிராம நிர்வாக அலுவல ர் சுப்பிரமணியன் பரிசுகள் வழங்கினார். மேட்டுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு தலைமை ஆசிரியர் சந்திரன் தலைமை தாங்கினார்.
ஊராட்சி மன்ற தலைவர் கூடம்மாள் பழனிச்சாமி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பரமசிவம், பள்ளி வளர்ச்சி குழு தலைவர் ரங்கநாயகி ஆகியோர் முன்னிலையில் விழா நடந்தது.






