காமராஜர் 121-வது பிறந்தநாள் விழா

திருப்பரங்குன்றம் ஜோதி நடுநிலைப்பள்ளியில் காமராஜர் 121-வது பிறந்தநாள் விழா நடந்தது. பள்ளி தலைமையாசிரியை மற்றும் மாணவ, மாணவிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
விழாவையொட்டி நடந்த போட்டியில் வெற்றி பெற்ற மாண–வர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்ட காட்சி.
விழாவையொட்டி நடந்த போட்டியில் வெற்றி பெற்ற மாண–வர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்ட காட்சி.
Published on

மதுரை

திருப்பரங்குன்றம் ஜோதி நடுநிலைப்பள்ளியில் கர்ம–வீரர் காமராஜரின் 121-வது பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி செயலாளர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கி காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விழாவையொட்டி கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவி–களுக்கு மதுரை ஆனந்தம் செயலாளர் செல்வராஜ் பரிசு–களை வழங்கினார். விழாவில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சந்தானகிருஷ்ணன், பள்ளி தலைமையாசிரியை மற்றும் மாணவ, மாணவிகள், ஊர் பெரியோர்கள் உள்பட ஏராள–மானோர் கலந்துகொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com