கல்வி வளர்ச்சி நாள்

கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தலைமை ஆசிரியர் சந்திரன் தலைமை தாங்கினார்.
வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் நடந்தது.
வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் நடந்தது.
Published on

வாடிப்பட்டி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் உள்ள பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப் பட்டது. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவிற்கு தலைமை ஆசிரியர் இனிகோ எட்வர்ட் ராஜா தலைமை தாங்கினார். அரிமா சங்க நிர்வாகி கள் ராமச்சந்திரன், பால சுந்தரம், பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் விஜயரங்கன் வரவேற்றார். இந்த விழாவில் புலவர் குருசாமி, மேலாண்மை குழு தலைவர் வாசுகி உறுப்பி னர்கள் சசிகுமார், அங்காள ஈஸ்வரி, பரமேஸ்வரி, பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பொட்டுலுபட்டி காந்திஜி ஆரம்பப்பள்ளியில் நடந்த விழாவிற்கு பள்ளி செயலாளர் நாகேஸ்வரன் தலைமை தாங்கினார். பள்ளி வளர்ச்சி குழு தலைவர் பொறியா ளர் தனபாலன், முன்னாள் மாண வர் பாலசரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் கிராம நிர்வாக அலுவல ர் சுப்பிரமணியன் பரிசுகள் வழங்கினார். மேட்டுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு தலைமை ஆசிரியர் சந்திரன் தலைமை தாங்கினார்.

ஊராட்சி மன்ற தலைவர் கூடம்மாள் பழனிச்சாமி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பரமசிவம், பள்ளி வளர்ச்சி குழு தலைவர் ரங்கநாயகி ஆகியோர் முன்னிலையில் விழா நடந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com