என் மலர்
மதுரை
- சோழவந்தான்- உசிலம்பட்டியில் சுதந்திர தினவிழா, கிராமசபை கூட்டம் நடந்தது.
- கிராம பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சோழவந்தான்
சோழவந்தான் பேரூராட்சியில் நடந்த சுதந்திர தின விழாவி கொண்டாடப்பட்டது. செயல் அலுவலர் சகாய அந்தோணி யூசின் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் ஜெய ராமன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். சுகாதார பணி ஆய்வாளர் முருகா னந்தம், வார்டு கவுன்சிலர் கள் வக்கீல் சத்தியபிரகாஷ், ஈஸ்வரி ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தார்.இளநிலை உதவியாளர் கல்யாணசுந்தரம் வரவேற்றார். துணைத்தலைவர் லதா கண்ணன் இனிப்பு வழங்கினார். வார்டு உறுப்பினர்கள், பணியா ளர்கள் கலந்து கொண்டனர்.
நைனார் தொழுகை பள்ளிவாசல் ஜமாத் கமிட்டி சார்பாக சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது. எம்.வி.எம். கலைவாணி மெட் ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் மருது பாண்டியன் தேசியகொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். சி.எஸ்.ஐ. தொடக்கப் பள்ளி யில் தலைமை ஆசிரியர் ராபின்சன் செல்வகுமார், சத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜாத்தி ஆகி யோர் கலந்து கொண்டனர். அதேபோல் கல்வி இயக்க பகல் நேர பாதுகாப்பு மைய மாற்றுத்திறனாளிகள் மையத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு ஆசிரியை தேவிகா தலைமை தாங்கி னார்.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் தமிழ்செல்வி கலை நிகழ்ச்சி தொடங்கி வைத்து இனிப்பு வழங்கினார். அரசன் சண்முகனார் அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி, உழவர் உணவகத்தில் சேது தலைமையில் மன்னாடி மங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை பூங்கொடி, ஜெய்மா நர்சரி பள்ளியின் தாளாளர் கீதா, இரும்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியி தலைமையாசிரியர் வேல்முருகன் ஆகியோர் தலைமையில் அந்தந்த பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
முன்னாள் வர்த்த சங்க தலைவர் ஸ்ரீராமுலு அறக்கட்டளை சார்பாக 77-வது ுதந்திர தின விழாவை முன்னிட்டு திரவுபதி அம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் ஜவஹர்லால் தலைமையில் முன்னாள் சேர்மன் முருகேசன் இனிப்பு வழங்கினார்.
சோழவந்தான் அருகே குருவித்துறை சித்திர ரதவல்லப பெருமாள் கோவிலில் சுதந்திரதின விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி விருந்து நடைபெற்றது. கோவில் செயல் அலுவலர் பால முருகன் வரவேற்றார். இதில் ஒன்றிய கவுன்சிலர் பசும்பொன் மாறன் வரு வாய் அலுவலர் சதீஷ், தலைவர் ரம்யா நம்பிராஜன், கிராம நிர்வாக அலுவலர் முபாரக், கோவில் பணியாளர்கள் நாகராஜன், மணி, ஜனார்த்தனன் உள்பட பலர் கலந்து கொண்ட னர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி அலு வலகத்தில் 77-வது சுதந்திர தின விழாவில் நகராட்சி தலைவர் சகுந்தலா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். துணைத் தலைவர் தென் மொழி, நகராட்சி மேலாளர் சாந்தி, சுகாதார ஆய்வாளர் சசிகலா, நகராட்சி வார்டு உறுப்பினர்கள், நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
உசிலம்பட்டி அருகே சீமானூத்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தலைவர் அஜித்பாண்டி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். மெய்யனம் பட்டியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி செயலாளர் முருகேசன் வரவு, செலவு கணக்குகள் குறித்து பேசினார். இதில் வார்டு உறுப்பினர்கள் கிராம பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்த்த 30 குடும்பங்களின் வீட்டு வரியை ஊராட்சி மன்ற தலைவர் செலுத்தினார்.
- கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள், பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை
மதுரை அருகே உள்ள வடபழஞ்சி ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் வன்னிச்செல்வி மணி தலைமை வகித்தார். ஆனந்த வள்ளி ராஜாங்கம் முன் னிலை வகித்தார்.
கூட்டத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் வடபழஞ்சி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்தால் அவர்களின் வீட்டு வரியை ஊராட்சி மன்ற தலைவர் பயணப்படி மற்றும் அமர்வுப்படியில் இருந்து கட்டப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட் டது.
கிராம சபை சிறப்பு கூட்டத்தில் வடபழஞ்சி பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் 30 பேர் அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்த்தனர். அவ்வாறு சேர்த்த 30 குடும்பங்களின் வீட்டு வரியை ஊராட்சி மன்றம் செலுத்தியதற்கான ரசீதை பயனாளிகளுக்கு ஊராட்சி மன்ற தலைவர் வன்னிச்செல்வி மணி வழங்கினார்.
கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள், பல்வேறு துறை அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- மதுரை காளவாசல் பகுதியில் நாளை மின்தடை ஏற்படும்.
- மேற்கண்ட தகவலை மின் செயற்பொறியாளர் லதா தெரிவித்துள்ளார்.
மதுரை
மதுரை அரசரடி துணை மின் நிலையம் கூடல்பீடர் உயரழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை (18-ந்தேதி) நடக்கிறது. எனவே நாளை காலை 10 மணி முதல் 5 மணி வரை காளவாசல், பை-பாஸ், பாண்டியன் நகர், ஆரோக் கிய மாதா தெரு, குரு தியேட்டர், பாஸ்டின் நகர், சின்னச்சாமி பிள்ளை தெரு, செங்கேல் நகர், மேட்டுதெரு, ஐ.என்.டி.யு,சி. காலனி, நாகுநகர், அண்ணா மெயின் வீதி, பெத்தானியா புரம், கொன்னவாயன் சாலை, தீக்கதிர், சிங்கம் பிடாரி கோவில், டவர் லைன் தெரு, களத்து பொட்டல், இந்திரா நகர், பாத்திமா நகர், ஹார்விநகர், இ.பி. காலனி, இந்திராணி நகர், சி.ஏ.எஸ். காலனி, அன்னை தெரசா வீதி, அருள்தாஸ்புரம், பாக்கிய நாதபுரம், கே.டி.கே. தங்க மணி நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
மேற்கண்ட தகவலை மின் செயற்பொறியாளர் லதா தெரிவித்துள்ளார்.
- செப்டம்பர் 18-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
- 33 மாதங்களில் கட்டி முடிக்க திட்டம்
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், மருத்துவமனை கட்டுமானப் பணி இதுவரை தொடங்கப்படவில்லை. இந்த நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கு டெண்டர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜெய்கா நிறுவனத்திடமிருந்து கடன் தொகை பெறப்பட்டு விட்டதாக எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
33 மாதங்களில் கட்டுமான பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளது. செப்டம்பர் 18-ந்தேதிக்குள் கட்டுமான பணியை பெற விரும்பும் நிறுவனங்கள் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் தோப்பூரில் 222 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 2018-ம் ஆண்டு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இதனைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். தற்போது 150 படுக்கைகள் அதிகரிப்பு உடன் விரிவாக்கம் செய்யப்பட்டு, திட்ட மதிப்பீடு 1264 கோடி ரூபாயில் இருந்து 1977.8 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஜெய்கா நிறுவனத்திடம் இருந்து 82 சதவீத தொகை கடனாக பெற்று மருத்துவமனை கட்ட ஒப்பந்தம் போடப்பட்டது. தற்போது 1622 கோடி ரூபாய் கடன் ஜெய்கா நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டதை தொடர்ந்து, 33 மாதங்களில் கட்டி முடிக்க எய்ம்ஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
- மறைந்த பழம்பெரும் பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் உருவச்சிலை மதுரையில் நிறுவப்பட்டுள்ளது.
- இந்தச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
மதுரை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளையும், நாளை மறுநாளும் ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் இன்று மாலை சென்னையில் இருந்து விமானத்தில் மதுரை வந்தடைந்தார்.
இந்நிலையில், மறைந்த பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜனின் நூற்றாண்டு விழாவையொட்டி மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிட வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள டி.எம்.சவுந்தரராஜன் உருவச்சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்த விழாவில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், எ.வ.வேலு உள்பட பலர் பங்கேற்றனர்.
- மாநாட்டிற்காக பிரம்மாண்ட மேடை, பந்தல் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெறுகின்றன.
- மாநாட்டிற்காக உரிய தடையில்லை சான்று பெறவில்லை என குற்றம்சாட்டு எழுந்துள்ளது.
மதுரையில் அ.தி.மு.க. வரலாற்றின் எழுச்சி மாநாடு வரும் 20-ம் தேதி பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. இதற்கான ஆயத்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக மதுரை ரிங் ரோடு வலையங்குளம் பகுதியில் சுமார் 65 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் விறுவிறுப்பாக இரவு பகலாக பணியாற்றி வருகிறார்கள். சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் மாநாட்டு பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வாகன நிறுத்துமிடம் மற்றும் உணவு தயாரிப்புக்கூடம், உணவு பரிமாறும் அரங்குகள் என்று சுமார் 300 ஏக்கர் பரப்பில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டுக்கு தடை விதிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மாநாட்டிற்காக மதுரை விமான நிலைய அதிகாரியிடம் உரிய தடையில்லை சான்று பெறவில்லை என குற்றம்சாட்டு எழுந்துள்ளது.
மாநாடு நடைபெற உள்ள இடம் விமான நிலையத்தின் அருகில் உள்ளதால் வான வேடிக்கை வெடிக்கும் போது அசம்பாவிதம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், மாநாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த சேதுமுத்துராமலிங்கம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
- மேடையின் பின்பகுதி டிஜிட்டல் மையமாக மாற்றப்பட்டுள்ளது.
- நவீன தொழில்நுட்பத்துடன் மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மதுரை:
மதுரையில் அ.தி.மு.க.வின் வீர வரலாற்றின் எழுச்சி மாநாடு வருகிற 20-ந்தேதி பிரமாண்டமாக நடைபெறுகிறது. இதற்கான ஆயத்த பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதற்காக மதுரை ரிங் ரோடு வலையங்குளம் பகுதியில் சுமார் 65 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் விறுவிறுப்பாக இரவு பகலாக பணியாற்றி வருகிறார்கள். சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் மாநாட்டு பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வாகன நிறுத்துமிடம் மற்றும் உணவு தயாரிப்புக்கூடம், உணவு பரிமாறும் அரங்குகள் என்று சுமார் 300 ஏக்கர் பரப்பில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
மாநாட்டின் முகப்பில் வீர வரலாற்றின் எழுச்சி மாநாடு என்ற வாசகங்களுடன் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா எடப்பாடி பழனிசாமி ஆகியோரது உருவப்படங்களும் இடம்பெற்றுள்ளன. முகப்பு பகுதியில் சுமார் 51 அடி உயர அதிமுக கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கம்பத்தில் தான் வருகிற 20-ந்தேதி காலை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றி வைத்து மாநாட்டு நிகழ்ச்சிகளை தொடங்கி வைக்கிறார்.
இதை தொடர்ந்து மாநாட்டில் இன்னிசை நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சிகள் மற்றும் அ.தி.மு.க. அரசின் சாதனைகள் குறித்த கவியரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மாலை 4 மணி அளவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாநாட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.
இந்த மாநாட்டில் இதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மாநாட்டில் சிறப்புரையாற்றுகிறார். மாநாட்டில் தமிழக முழுவதும் இருந்து சுமார் பத்து லட்சம் தொண்டர்கள் பங்கேற்க செய்யும் வகையில் அ.தி.மு.க. நிர்வாகிகளும், முன்னாள் அமைச்சர்களும் பம்பரமாக சுழன்று பணியாற்றி வருகிறார்கள்.
மாநாட்டு மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகளை முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், டாக்டர் விஜயபாஸ்கர், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் ராஜ்சத்யன் உள்ளிட்டோர் இரவு பகலாக கண்காணித்து வருகிறார்கள்.
மேலும் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் அவ்வப்போது பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்கள். மாநாட்டு பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணிகளை பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இப்போதே வந்து ஆர்வத்துடன் பார்த்து வருகிறார்கள்.
தற்போது வரை 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. தற்போது மேடை வடிவமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேடையின் பின்பகுதி டிஜிட்டல் மையமாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் நவீன தொழில்நுட்பத்துடன் மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் மாநாட்டு அரங்கில் அமைய உள்ள புகைப்பட கண்காட்சி பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதில் அதிமுக அரசின் சாதனை திட்டங்கள் மற்றும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரது முக்கியத்துவம் வாய்ந்த புகைப்படங்களும் இடம்பெற உள்ளன. இந்த பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. மாநாட்டில் பங்கேற்கும் அனைவருக்கும் சுட சுட உணவு வழங்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி உணவு தயாரிப்பதற்கான ஆயத்தப் பணிகளும் தொடங்கியுள்ளன. இதற்காக பத்தாயிரம் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- பெரியாறு அணையில் 142 அடிக்கும் அதிகமான அளவில் சேரும் தண்ணீரை 13 ஷட்டர்கள் வழியாக கேரளா கடல் பகுதிக்கு திறக்கப்பட்டு வீணாகிறது.
- இரு மாநிலங்களுக்கும் இடையேயான பிரச்சனை என்றால், அது சம்பந்தமாக சுப்ரீம் கோர்ட்டில் தான் வழக்கு தொடர்ந்து உரிய பரிகாரம் தேடிக்கொள்ள முடியும்.
மதுரை:
மதுரை சர்வேயர் காலனியைச் சேர்ந்த சுந்தர்ராஜன் மற்றும் கனகசபாபதி ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு கொள்ளளவை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் எனவும், அணையை ஒட்டியுள்ள பேபி அணையை பலப்படுத்திய பின்னர், முழு கொள்ளளவான 152 அடி வரை நீரை தேக்கிக்கொள்ளலாம் எனவும் கடந்த 2014-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
இதையடுத்து அப்போதில் இருந்து பெரியாறு அணையில் 142 அடிக்கும் அதிகமான அளவில் சேரும் தண்ணீரை 13 ஷட்டர்கள் வழியாக கேரளா கடல் பகுதிக்கு திறக்கப்பட்டு வீணாகிறது. தமிழகப் பகுதிக்கு தேக்கடி ஷட்டரில் இருந்து சுரங்கப் பாதை வழியாக அதிகபட்சமாக வினாடிக்கு 2,500 கனஅடி நீர் மட்டுமே திறக்க முடியும். இதைவிட கூடுதலாக இந்த வழியாக தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை.
மேலும் ஒரு சுரங்கப்பாதை அமைத்து தமிழகத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்பட்டால், 142 அடிக்கும் அதிகமாக உள்ள தண்ணீர் வீணாக கேரள பகுதியில் வெளியேற்ற வேண்டிய அவசியம் இருக்காது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் லோயர் கேம்பில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் வரை 259 கிலோ மீட்டர் தூரத்திற்கு விவசாயம், குடிநீருக்கு பற்றாக்குறை ஏற்படாது.
எனவே முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் பெறும் வகையில் 2-வது சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.
இந்த வழக்கு பல்வேறு கட்டங்களாக விசாரணைக்கு வந்த பிறகு, தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் இன்று நீதிபதிகள் சுந்தர், பரத சக்கரவர்த்தி அமர்வு தீர்ப்பு வழங்கியது.
அதில், இரு மாநிலங்களுக்கும் இடையேயான பிரச்சனை என்றால், அது சம்பந்தமாக சுப்ரீம் கோர்ட்டில் தான் வழக்கு தொடர்ந்து உரிய பரிகாரம் தேடிக்கொள்ள முடியும் என்று பல்வேறு உத்தரவுகளில் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் இந்த வழக்கை நாங்கள் தள்ளுபடி செய்கிறோம். மனுதாரர்கள் தங்களது முறையீடு குறித்து சுப்ரீம் கோர்ட்டை அணுகலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
- நலம் விசாரிக்க வந்த பாட்டியை, பேரன் பாட்டிலால் அடித்துக்கொன்றார்.
- ஜெய்ஹிந்துபுரம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை ஜெய்ஹிந்துபுரம் பாரதியார் ரோடு ஏ.ஜி.–சுப்புராமன் முதல் தெருவை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 70). ஜீவா நகர் 2-வது தெரு அங்கையர்கன்னி இரண்டாவது தெருவை சேர்ந்தவர் ராமதாஸ் மகன் பீட்டர் டேனியல் (26). இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட் டவர் ஆவார். அதற்காக உரிய மருத்துவமும் பெற்று வந்தார்.
இந்த நிலையில் பேரனை பார்த்து நலம் விசாரிப்ப–தற்காக பாட்டி ராஜேஸ்வரி சென்றிருந்தார். அப்போது பாட்டிக்கும், பேரனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதால் பேரனை கோபித்துக்கொள்ளாமல் சாந்தமாக பேசினார்.
ஆனால் ஆத்திரம் தீராத பீட்டர் டேனியல் பாட்டிலை எடுத்து பாட்டியை சரமாரி–யாக தாக்கினார். இதில் ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்த ராஜேஸ்வரியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பல–னின்றி ராஜேஸ்வரி பரிதாப–மாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பேரன் பீட்டர் டேனியல் மீது ஜெய்ஹிந்துபுரம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மதுரை அ.தி.மு.க. மாநாட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு அம்மா பேரவையின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படும்.
- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அம்மா பேரவை தொண்டர் படைக்கு பயிற்சியை வழங்கினார்.
மதுரை
வருகிற 20-ந் தேதி அ.தி.மு.க. வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு மதுரையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அம்மா பேரவை, இளைஞர் பாசறை, மகளிர் அணியில் உள்ள தொண்டர்கள் பல்வேறு பணிகளில் ஈடுபட உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மாநாடு நடைபெறும் நாளில் அன்று காலை அ.தி.மு.க. பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. கொடியினை ஏற்றுகிறார். அந்த இடத்தில் அம்மா பேரவை தொண்டர் படையினர் சல்யூட் அடித்து ராணுவ மரியாதை போல் அணிவகுப்பு செய்கின்றனர். அதனுடைய ஒத்திக்கைகான அணிவகுப்பு வலையங் குளம் ரிங் ரோட்டில் உள்ள மாநாட்டு திடலில் நடைபெற்றது சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், அம்மா பேரவை செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் அம்மா பேரவை தொண்டர் படைக்கு பயிற்சியை வழங்கினார். அதனைத் தொடர்ந்து அவரது தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டு மாநாடு முகப்பில் அணிவகுப்பு மரியாதை நிறைவடைந்தது. இந்த அணிவகுப்பில் முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், எஸ்.எஸ். சரவணன், தமிழரசன், சதன் பிரபாகரன், மாணிக்கம், டாக்டர் சரவணன், நிர்வாகிகள் இளங்கோவன், தனராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது:-
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடியார் தலைமையில் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டின் ஆயத்த பணிகளை தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
வருகிற 20-ந் தேதி காலை பொதுச் செயலாளர் எடப்பாடியார் மாநாட்டு முகப்பு முன்பு அமைக்கப்ப ட்டுள்ள 51அடியுள்ள கொடிக்கம்பத்தில் அ.தி.மு.க. கொடியினை ஏற்றுகிறார். அப்போது அம்மா பேரவை தொண்டர் படையின் சார்பாக ராணுவ மரியாதை போல் சல்யூட் அடித்து அவருக்கு மரியாதை செய்யப்படுகிறது.
இந்த தொண்டர் படை ராணுவ சிப்பாய் போல அணிவகுக்க உள்ளனர்.மேலும் இந்த தொண்டர் படையில் இளைஞர் பாசறை உள்ளிட்ட பல்வேறு அணிகள், பங்கேற்க உள்ளது. அதனை தொடர்ந்து மாநாட்டிற்கு வருகை தரும் தொண்டர்களுக்கு இருக்கைகள் ஏற்படுத்தித் தரவும், அவர்களுக்கு வேண்டிய குடிநீர், உணவு உள்ளிட்ட உரிய வழிகாட்டுதலை தொண்டர்படை களப்பணியாற்றும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- புகார்தாரரான தமிழிசை, தற்போது கவர்னராக பதவி வகித்து வருவதால், வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டார்.
- வழக்கில் தூத்துக்குடி போலீசார் சென்னை சிட்டி போலீஸ் பயன்படுத்தக்கூடிய சட்ட பிரிவினை பயன்படுத்தி உள்ளனர்.
மதுரை:
தூத்துக்குடியைச் சேர்த்த லூயிஸ் சோபியா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கடந்த 2018-ம் ஆண்டில் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த விமானத்தில் பயணித்தேன். அந்த விமானத்தில் அப்போதைய தமிழக பாரதிய ஜனதாவின் தலைவரும், தற்போதைய புதுச்சேரி, தெலுங்கானா மாநிலங்களின் கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜனும் பயணம் செய்தார்.
விமானத்தில் இருந்து இறங்கும் போது மத்திய அரசை விமர்சித்து நான் கோஷம் எழுப்பினேன். இதையடுத்து கோபமடைந்த தமிழிசை, என்னை மிரட்டும் நோக்கில் தகாத வார்த்தைகளால் திட்டினார். அவரது ஆதரவாளர்களும் என்னிடம் கடுமையாக நடந்து கொண்டனர். மேலும் இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் என் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.
இந்த வழக்கு ஏற்கனவே பலமுறை விசாரணைக்கு வந்து, நிலுவையில் இருந்தது. இதற்கிடையே சோபியா மீதான வழக்கில் புகார்தாரரான தமிழிசை சவுந்தரராஜன், தற்போது கவர்னராக பதவி வகித்து வருவதால், வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டார்.
மேலும் இந்த வழக்கில் தற்போதைய தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை ஒரு தரப்பினராக சேர்க்க கோரி தாக்கல் செய்து இருந்தார் அதன் பெயரில் அவரும் ஒரு எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டு இருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி தனபால் முன் விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வக்கீல் அன்புநிதி, இந்த வழக்கில் தூத்துக்குடி போலீசார் சென்னை சிட்டி போலீஸ் பயன்படுத்தக்கூடிய சட்ட பிரிவினை பயன்படுத்தி உள்ளனர். இது சென்னை, கோவை, மதுரை காவல்துறையினர் மட்டுமே பயன்படுத்த முடியும். தூத்துக்குடி போலீசார் இந்த சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய முடியாது. அதற்கான அதிகாரம் இல்லை என வாதாடினார்.
இதனை பதிவு செய்த நீதிபதி சோபியா மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
- நூற்றாண்டு விழா மதுரை மாநகர் பகுதிகளில் தொடர்ந்து சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற 43 மாணவர்களுக்கு கேடயம்- பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
மதுரை
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா மதுரை மாநகர் பகுதிகளில் தொடர்ந்து சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு நிகழ்வாக உலக சாதனையை நோக்கி மதுரை மாநகராட்சியில் பணிபுரியும் 2752 தூய்மை பணியாளர்களை கொண்டு 1 மணி நேரம் 20 நிமிடத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் உருவத்தை வடிவமைத்து உலக சாதனை "டிரம்ப் புத்தகத்தில்" இடம் பெற்றுள்ளது. மதுரை மாநகராட்சி பள்ளி மாணவர்களிடையே கருணாநிதி நூற்றாண்டு விழா பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது.
போட்டிகள் முதலில் பள்ளி அளவில் நடத்தப்பட்டு ஒவ்வொரு பள்ளியிலும் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற 180 மாணவ, மாணவியர்கள் ஐந்து மண்டலங்களிலும் மண்டல அளவில் நடைபெற்ற போட்டி களில் பங்கு பெற்றனர்.
மதுரை மாநகராட்சி 27 நடுநிலைப் பள்ளிகள், 24 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான பல்வேறு பேச்சுப் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளை நடத்துவதற்கு ஒருங்கிணைப் பாளர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டு மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டிகள் நடைபெற்றது. இந்த பேச்சுப்போட்டியில் 6 ஆம் வகுப்பு முதல் 8 வகுப்பு வரை பயிலும் 89 மாணவ, மாணவிகள், 9 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு பயிலும் 40 மாணவ, மாணவிகள், 11 ஆம் வகுப்பு மற்றும் 12 வகுப்பு பயிலும் 23 மாணவ, மாணவிகள் என மொத்தம் 152 மாணவ, மாணவிகள் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டனர். மதுரை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக் கிடையே நடைபெற்ற பேச்சு போட்டியில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பெற்ற 43 மாணவ, மாணவிகளுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மேயர் இந்திராணி ெபான்வசந்த், கலெக்டர் சங்கீதா, ஆணையாளர் பிரவீன் குமார், பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் ஞான சம்பந்தன், பேராசிரியர் ராஜா கோவிந்தசாமி, துணை ஆணையாளர் சரவணன், துணை மேயர் நாகராஜன், மண்டல தலைவர்கள் சரவண புவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, முகேஷ்சர்மா, கல்விக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர்கள் சாலிதளபதி, மகேஸ்வரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, மாநகராட்சி கல்வி அலுவலர் நாகேந்திரன், கவுன்சிலர் முருகன், ஒருங்கி ணைப்பா ளர் சண்முகதிருக்குமரன் மற்றும் ஆசிரியர்கள், மாநகராட்சி அலுவலர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






