search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Artist centenary celebrations"

    • நூற்றாண்டு விழா மதுரை மாநகர் பகுதிகளில் தொடர்ந்து சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற 43 மாணவர்களுக்கு கேடயம்- பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    மதுரை

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா மதுரை மாநகர் பகுதிகளில் தொடர்ந்து சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு நிகழ்வாக உலக சாதனையை நோக்கி மதுரை மாநகராட்சியில் பணிபுரியும் 2752 தூய்மை பணியாளர்களை கொண்டு 1 மணி நேரம் 20 நிமிடத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் உருவத்தை வடிவமைத்து உலக சாதனை "டிரம்ப் புத்தகத்தில்" இடம் பெற்றுள்ளது. மதுரை மாநகராட்சி பள்ளி மாணவர்களிடையே கருணாநிதி நூற்றாண்டு விழா பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது.

    போட்டிகள் முதலில் பள்ளி அளவில் நடத்தப்பட்டு ஒவ்வொரு பள்ளியிலும் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற 180 மாணவ, மாணவியர்கள் ஐந்து மண்டலங்களிலும் மண்டல அளவில் நடைபெற்ற போட்டி களில் பங்கு பெற்றனர்.

    மதுரை மாநகராட்சி 27 நடுநிலைப் பள்ளிகள், 24 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான பல்வேறு பேச்சுப் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளை நடத்துவதற்கு ஒருங்கிணைப் பாளர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டு மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டிகள் நடைபெற்றது. இந்த பேச்சுப்போட்டியில் 6 ஆம் வகுப்பு முதல் 8 வகுப்பு வரை பயிலும் 89 மாணவ, மாணவிகள், 9 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு பயிலும் 40 மாணவ, மாணவிகள், 11 ஆம் வகுப்பு மற்றும் 12 வகுப்பு பயிலும் 23 மாணவ, மாணவிகள் என மொத்தம் 152 மாணவ, மாணவிகள் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டனர். மதுரை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக் கிடையே நடைபெற்ற பேச்சு போட்டியில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பெற்ற 43 மாணவ, மாணவிகளுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மேயர் இந்திராணி ெபான்வசந்த், கலெக்டர் சங்கீதா, ஆணையாளர் பிரவீன் குமார், பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் ஞான சம்பந்தன், பேராசிரியர் ராஜா கோவிந்தசாமி, துணை ஆணையாளர் சரவணன், துணை மேயர் நாகராஜன், மண்டல தலைவர்கள் சரவண புவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, முகேஷ்சர்மா, கல்விக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர்கள் சாலிதளபதி, மகேஸ்வரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, மாநகராட்சி கல்வி அலுவலர் நாகேந்திரன், கவுன்சிலர் முருகன், ஒருங்கி ணைப்பா ளர் சண்முகதிருக்குமரன் மற்றும் ஆசிரியர்கள், மாநகராட்சி அலுவலர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×