என் மலர்
மதுரை
- மானாமதுரை, இளையான்குடியில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
- திருப்புவனம் அரசுமகளிர் மேல்நிலை பள்ளியில் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் கொடிஏற்றினார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. சுந்தரபுரம் தெருவில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், வைகைஆற்று பாலம் முன்பு உள்ள அரசு ஓய்வூதிய சங்கம் ஆகிய இடங்களில் மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி கொடி ஏற்றினார்.
நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி நகர்மன்ற அலுவலகம், செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி, ஆகிய இடங்களில் தேசிய கொடிஏற்றினார். வட்டாச்சியர் அலுவ லகத்தில் தாசில்தார் ராஜா, துணைகண்கா ணிப்பாளர் அலுவலகத்தில் டி.எஸ்.பி. கண்ணன் பாபாமெட்ரிக்கு லேசன் பள்ளியில் பள்ளி நிறுவனர் ராஜேஸ்வரி ஆகியோர் தேசிய கொடி ஏற்றி மரியாதை செய்தனர்.
திருப்புவனம் பகுதியில் பேரூராட்சி அலுவலகம், அரசுமேல்நிலை பள்ளி, பழையூர் அரசு தொடக்க பள்ளி ஆகிய இடங்களில் திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் தேசிய கொடியை ஏற்றினார்.
செயல் அலுவலர் ஜெயராஜ், பேரூராட்சி உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர். இளையான்குடி பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் நஜீமுதின் கொடிஏற்றினார்.
செயல் அலுவலர் கோபிநாத் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் அலுவலர்கள் கலந்து கொண்டனர். தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில், மேலநெட்டூர் சொர்ணவாரீசுவரர் சாந்தநாயகி அம்மன் கோவில் ஆகிய இடங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.
- வாடிப்பட்டியில் மரபு வழி விளையாட்டு போட்டிகள் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.
- சுதந்திர தினவிழாவையொட்டி தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு சார்பில் பல்வேறு போட்டிகள் நடந்தன.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தெத்தூர் மேட்டுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தினவிழாவையொட்டி தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு சார்பில் காலம் மாற்றத்தால் மறக்கப் பட்டு வரும் மரபு வழி விளையாட்டுகள் அறிமுக விழாவும் மற்றும் மரபு விளையாட்டு போட்டிகள் நடந்தது. இந்த போட்டியில் மாணவர்களுக்கு பச்சை குதிரை, 7-கல், கிட்டிப்புல் போன்ற விளை யாட்டுகளும், மாணவிகளுக்கு பாண்டியாட்டம் (நொண்டி), கிச்சுகிச்சு தாம்பூலம் மற்றும் பல்லாங்குழி ஆகிய விளை யாட்டு போட்டிகளும் நடத்தப் பட்டது. இந்த விளையாட்டு போட்டிக்கு தலைமையாசிரியர் சந்திரன் தலைமை தாங்கி னார். ஊராட்சி மன்றத்தலைவர் கூடம்மாள் பழனிச்சாமி, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ரெங்கநாயகி, பெற்றோர்- ஆசிரியர் கழக தலைவர் பரம சிவம், உணவுப்பொருள் பாது காப்பு அலுவலர் ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழாசிரியர் ஆறுமுகம் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்மரபு அறக்கட்டளை மதுரை கிளை பொறுப்பாளர் சுலேகா பானு தமிழ் மரபு அறக்கட்டளை அறிமுகவுரையாற்றினார். மரபு விளையாட்டுகள் குறித்து மதுரை டோக் பெருமாட்டி கல்லூரி பேராசிரியை பாப்பா விளக்கி பேசினார்.
இப்போட்டியின் நடுவர்க ளாக ஆசிரியர்கள் மற்றும் தமிழ் மரபு அறக்கட்டளை உறுப்பினர்கள் வெற்றியாளர் களை தேர்வு செய்தனர்.இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் தமிழ் மரபு அறக்கட்டளை உறுப்பினர்கள் சரவணக்குமார், மோசஸ், நஜ்மூதீன், பேராசிரியை.இறைவாணி, முத்துக்குமார், தாமரைச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உடற்கல்வி ஆசிரியர் ராஜன் நன்றி கூறினார்.
- வாடிப்பட்டி, கொண்டையம்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும்.
- மேற்கண்ட தகவலை சமயநல்லூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆறு முகராஜ் தெரிவித்துள்ளார்.
மதுரை
மதுரை மாவட்டம் சமய நல்லூர் மின்கோட்ட த்திற்குட்பட்ட வாடிப்பட்டி, கொண்டை யம்பட்டி, அய்யங்கோட்டை துணை மின் நிலையங்களில் நாளை (19-ந்தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வாடிப்பட்டி, பைபாஸ், பழனியாண்டவர் கோவில், பால மரத்தான் நகர், வி.எஸ்.நகர், ஜவுளி பூங்கா, பூச்சம்பட்டி, கச்சை கட்டி, குலசேகரன்கோட்டை, கோட்டைமேடு, விராலிப்பட்டி, சாணாம்பட்டி.
முருகன் கோவில் லைன், சொக்கலிங்க புரம், ராமையன்பட்டி, நரிமேடு, தாதம்பட்டி, தாதப்ப நாயக்கன்பட்டி, போடி நாயக்கன்பட்டி, ராம நாயக்கன்பட்டி, கள்ளர் மடம், வல்லபகணபதிநகர், மகாராணிநகர், ஆர்வி.நகர், பொட்டுலுபட்டி, எல்லையூர், ராமராஜபுரம், கூலாண்டிபட்டி, செம்மினி பட்டி, குட்லாடம்பட்டி. அங்கப்பண்கோட்டை, ரிஷபம், சமத்துவபுரம், தாடகநாச்சிபுரம், திருமால்நத்தம், ஆலங்கொட்டாரம், சொக்க லிங்கபுரம், மோகன் ராயபுரம், கல்லுப்பட்டி, பிளாட். மேட்டுநீரேத்தான், நெடுங்குளம், ஆண்டிப்பட்டி பங்களர் ஆகிய பகுதிகள்.
கொண்டையம்பட்டி, கள்வேலிப்பட்டி, மரியம்மாள்குளம், அமரடக்கி, சம்பக்குளம் விவேக் புளு மெட்டல்ஸ் கம்பெனி, கொண்டையம் பட்டி, அய்யனகவுண்டம் பட்டி, செம்புகுடிபட்டி, தனிச்சியம் கார்னர், வடுகப்பட்டி, கட்டக்குளம், கொண்டை யம்பட்டி, தாதகவுண்டன்பட்டி, பெரியஇலந்தைக்குளம், நடுப்பட்டி, கீழக்கரை, குட்டிமேய்க்கிப்பட்டி மற்றும் கொண்டையம்பட்டி ஆகிய பகுதிகள்.
சி.புதூர், சித்தாலங்குடி, குத்தாலக்குடி, முலக்குறிச்சி, வைரவநத்தம், யானைக் குளம், ஆர்.கே.ராக், வைகை ஆயில், கோத்தாரி, கே.எம்.ஆர். நகரி ஏரியா, தனிச்சியம் அக்ரி மற்றும் அய்யங் ே ேகாட்டை துணைமின்நிலை யத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
மேற்கண்ட தகவலை சமயநல்லூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆறு முகராஜ் தெரிவித்துள்ளார்.
- மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டிற்கு தடை விதிக்க கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
- 4 மாதத்திற்கு முன்பே மாநாட்டிற்கு அறிவிப்பு செய்து விட்டனர்.
மதுரை:
மதுரையில் வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி அதிமுக எழுச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இதற்காக கடந்த ஜூலை மாதம்முதலே முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக மதுரை வளையங்குளம் பகுதியில் மாநாட்டு மேடை மற்றும் பந்தல் பிரமாண்ட முறையில் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டிற்கு தடை விதிக்க கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. சிவகங்கையைச் சேர்ந்த சேதுமுத்துராமலிங்கம் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், மாநாட்டிற்கு விமான நிலைய அதிகாரிகளிடம் உரிய தடையில்லா சான்று பெறவில்லை. ஏராளமானோர் மாநாட்டிற்கு வருவர் என கூறப்பட்டுள்ளதால் விமானம் தரையிறங்குவதில் தாமதம் ஏற்படும். மாநாட்டிற்கு வருவோரால் அதிக அளவு போக்குவரத்து இடையூறு ஏற்படும் என்பதால் அனுமதிக்க கூடாது என கூறப்பட்டது.
இதையடுத்து இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரத சக்கரவர்த்தி, 4 மாதத்திற்கு முன்பே மாநாட்டிற்கு அறிவிப்பு செய்து விட்டனர். கடைசி நேரத்தில் தடை கோரினால் எவ்வாறு முடியும்? மாநாட்டில் எவ்வித வெடிகுண்டுகளும், பட்டாசுகளும் வெடிக்க மாட்டோம் என உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளதால் மாநாட்டிற்கு தடை விதிக்க முடியாது கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.
- தமிழகத்தில் உள்ள கண்மாய்களை முறையாக தூர்வாரி இருந்தால் விவசாயத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை இருந்திருக்காது.
- விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவு.
விவசாய பாசனத்திற்கு தாமிரபரணி ஆற்றின் முக்கிய கால்வாய்களில் இருந்து தண்ணீர் திறந்துவிடக் கோரிய வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு மீதான விசாரணை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் முன்னிலையில் வந்தது. அப்போது,
மழை காலங்களில் கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை சேமிக்க தமிழ்நாட்டில் எந்த திட்டமும் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மேலும், "தமிழகத்தில் உள்ள கண்மாய்களை முறையாக தூர்வாரி இருந்தால் விவசாயத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகள் இருந்திருக்காது" என்றனர்.
ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களுடன் சேர்க்க உத்தரவிட்ட வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- தியாகிகளின் பேரன்-பேத்திகளுக்கும் அரசு சலுகை வழங்க வேண்டும் என வாரிசுகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அவர்களது மகன்களும் 60 முதல் 70 வயதை கடந்து விட்டனர்.
மதுரை
தமிழ்நாடு சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள் அமைப்பின் தலைவர் விஜயராகவன் தமிழக முதலமைச்சரின் தனிச்செயலாளரிடம் வழங்கிய கோரிக்கை மனு வில் கூறியிருப்பதாவது-
சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சுதந்திர போ ராட்ட தியாகிகள் மற்றும் வாரிசுகளுக்கு தமிழக அரசு வழங்கிய உதவித் தொகையினை உயர்த்தி வழங்கி உத்தர விட்டதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
சுதந்திர போராட்ட தியாகிகள் மத்திய, மாநில அரசுகள் வழங்கி வரும் உதவி தொகையை தவிர வேறு எந்த சலுகையும் பெறவில்லை.
நாடு சுதந்திரம் பெற்று 77 ஆண்டுகள் நிறை வடைந்துள்ளதால் தியாகிகளுக்கு தற்போது 100 வயதை தாண்டி விட்டது. அவர்களது மகன்களும் 60 முதல் 70 வயதை கடந்து விட்டனர். மேலும் தமிழ்நாட்டில் தற்போது தியாகிகளின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது எனவே தியாகி களின் வாரிசுகளுக்கு மத்திய மாநில அரசு வழங்கும் சலுகைகளை தியாகிகளின் பேரன், பேத்திகளுக்கும் வழங்க வேண்டும்.
தியாகிகளுக்கு எண்ணற்ற நலத்திட்ட ங்களை வழங்கிய கலை ஞரின் வழியில் நல்லாட்சி நடத்தி வரும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களது வாரிசு களின் கோரிக்கையை கனிவுடன் நிறைவேற்றி தர வேண்டும்.
மேலும் மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலில் ஆலய பிரவேசம் நடத்திய தியாகி வைத்தியநாத அய்யருக்கு மதுரையில் மணிமண்டபம் அமைக்க வேண்டும்.
மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள தீரர் சத்தியமூர்த்தி மார்பளவு சிலையை முழு உருவ வெண்கல சிலையாக அமைத்து தர வேண்டும். அரசு சார்பில் நியமிக்கப் படும் வாரியங்கள் மற்றும் ஆணைய பொறுப்புகளில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். தியாகிகளுக்கு தமிழக அரசு வழங்கி வரும் மருத்துவப்படியை ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தர வேண்டும். கல்வி வேலை வாய்ப்பு ஆகியவற்றில் தியாகிகளின் வாரிசுகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- எஸ்ஸார் கோபி இல்ல திருமண விழா மதுரையில் நாளை நடக்கிறது.
- அமைச்சர்கள், கட்சி பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.
மதுரை
மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி ஐடா ஸ்கட்டர் அரங்கத்தில் நாளை 18-ந் தேதி தி.மு.க. மதுரை மாநகர் மாவட்ட முன்னாள் பொறுப்புக் குழு உறுப்பினர் எஸ்ஸார் கோபி- சுப்புலட்சுமி ஆகியோரின் மகள் வெண்ணிலா என்ற மீனாவுக்கும், கோவில்பட்டி நாகஜோதி குரூப் ஆப் கம்பெனியின் இயக்குனர் காளிராஜன்- கயா கலப் ஆயுர்வேத சோப் இயக்குனர் சாந்தி தேவி ஆகியோரின் மகன் மகேஷ் கிருஷ்ணனுக்கும் காலை 9 முதல் 10.30 மணிக்குள் திருமணம் நடைபெறுகிறது.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பெரிய சாமி, நேரு , பி.டி.ஆர்.பழனிவேல் தியாக ராஜன், மூர்த்தி, கே.ஆர்.பெரிய கருப்பன், மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் தளபதி எம்.எல்.ஏ., சேடப்பட்டி மணிமாறன் உள்பட தி.மு.க. முன்னாள், இந்நாள் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் கட்சி பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த நிகழ்ச்சிக்கு வரும் அனைவரையும் வரவேற்பதற்கான ஏற்பாடுகளை வில்லாபுரம் பகுதி கழகச் செயலாளர் 84 வது வார்டு கவுன்சிலர் போஸ் முத்தையா, அவனியாபுரம் மேற்கு பகுதி தி.மு.க. செய லாளர் ஈஸ்வரன், பகுதி துணை செயலாளர் பிரபாகர், 84 வது வட்ட செயலாளர் பாலா என்ற பாலசுப்பிர மணியன், கவுன்சிலர் குட்டி என்ற ராஜா ரத்தினம், வட்ட துணை செயலாளர் வக்கீல் விஜயன் ஆகியோர் செய்துள்ளனர்.
- மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.
- ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மதுரை
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மைய துணை இயக்குநர், சண்முகசுந்தர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்விற்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் காவல் ஆய்வாளர் போட்டித் தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் தற்போது நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையம் விரைவில் நடத்த இருக்கின்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1, 2 மற்றும் குரூப் -4 போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வா ணையம் காவல் ஆய்வாளர் பணிக்கான தேர்வுகள் வருகிற 26, 27-ந் தேதிகளில் நடத்தப்பட உள்ளது.
அதன்படி தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வா ணையம் காவல் ஆய்வாளர் பணிக்கான மாதிரி தேர்வு கள் வருகிற 23-ந்தேதி வரை நடைபெற உள்ளது. சிறந்த வல்லுநர்களை கொண்டு தயாரிக்கப்படும் வினாக்களுக்கு மாதிரி தேர்வு எழுத விரும்பும் போட்டித் தேர்வாளர்கள் இந்த தேர்வில் கலந்து கொள்ள போட்டித்தேர்வு விண்ணப்பித்துள்ள விண்ணப்ப படிவம், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றின் நகலுடன் நேரில் வந்து பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இ-நாம் திட்டத்தின்கீழ் விளைபொருள்களை விற்பனை, கொள்முதல் செய்ய விவசாயிகள், வியாபாரிகள் முன்வரவேண்டும் என கலெக்டர் சங்கீதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- 4320 விவசாயிகளும் 211 வியாபாரிகளும் பதிவு செய்துள்ளனர்.
மதுரை
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் மதுரை விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் மதுரை, திருமங்கலம், உசிலம்பட்டி, வாடிப்பட்டி மற்றும் மேலூர் ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்க ளில் இ-நாம் எனும் மின்னணு தேசிய வேளாண் சந்தைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை உரிய தரப்பகுப்பாய்வு செய்து சந்தைப்படுத்திட ஆய்வக வசதி ஏற்படுத்தப்பட் டுள்ளது. இவ்வசதியினால் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை மின்னணு முறையில் தேசிய அளவில் சந்தைப்படுத்திட வாய்ப்பு ஏற்படுத்ததப் பப்பட்டுள்ளது.
மேலும் சொந்த மாவட்டம், பிற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள வணிகர்கள், இணைய வழியில் பங்கேற்கும் வசதி உள்ளதால் போட்டி அடிப்படையிலான லாபகரமான விலையினை விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு பெறலாம்.
விவசாயிகள் மற்றும் வியாபாரிகளிடையே எவ்வித இடைத்தரகர்களும் இன்றி விற்பனைத்துறை அலுவலர்களின் உதவியுடனான நேரடி வர்த்தகம் நடைபெறுவதால் இடைத்தரகு/கமிஷன் போன்றவை இத்திட்டத்தின் கீழ் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளது.
இ-நாம் திட்டத்தின் கீழ் விளைபொருட்களை விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு விற்பனைத்தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் 48 மணி நேரத்தில் மின்னணு முறையில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
லாபகரமான வரவு கிடைப்பதால் விவசாயிகளும் தரமான விளைபொருட்களை கொள்முதல் செய்வதால் வியாபாரிகளும் இத்திட்டடத்தினால் பயனடைந்து வருகின்றனர்.
இதுவரை மதுரை மாவட்டத்தில் 4320 விவசாயிகளும் 211 வியாபாரிகளும் பதிவு செய்துள்ளனர். இந்நிதி யாண்டில் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலத்தில் 589 விவசாயி களின் 2369 டன் அளவிலான விளைபொருட்கள் 3 கோடியே 59 லட்சம் மதிப்பில் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 589 விவசாயிகள் 79 வியாபாரிகள் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர்.
விவசாயிகள் தங்களது விளைபொருட்களுக்கு இலாபகரமான விலையினைப் பெற்றிட தத்தமது பகுதிகளில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களுக்கு சென்று தங்களைப் பதிவு செய்து கொண்டும் வியாபாரிகள் உரிய உரிமம் பெற்றும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.
மதுரை மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் இ-நாம் திட்டத்தின் கீழ் பதிவு செய்திட விவசாயிகள் தங்கள் ஆதார் நகல், வங்கிக்கணக்கு புத்தக நகல் மற்றும் அலைபேசி எண் ஆகிய விபரங்களுடன் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை அணுகலாம்.
மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
- ரெயில் பாதை இணைப்பு பணி காரணமாக ஹவுரா, புவனேசுவர் செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
மதுரை
புவனேசுவர்- மஞ்சேசுவர் மற்றும் ஹரிதாஸ்பூர்-தன்மண்டல் ரெயில் நிலையங்களுக்கு இடையே 3-ம் ரெயில் பாதை இணைப்பு பணி நடைபெறுவதால் கன்னியாகுமரி-ஹவுரா-கன்னியாகுமரி மற்றும் ராமேசுவரம்-புவனேஷ்வர்-ராமேசுவரம் இடையே இயக்கப்படும் ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
ஹவுரா-கன்னியாகுமரி செல்லக்கூடிய அதிவிரைவு ரெயிலானது (வ.எண்.12665) ஆகஸ்ட் 21, 29 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
கன்னியாகுமரி-ஹவுரா செல்லக்கூடிய அதிவிரைவு ரெயிலானது (வ.எண்.12666) ஆகஸ்ட் 19, 26 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
புவனேசுவர்-ராமேசுவரம் செல்லக்கூடிய அதிவிரைவு ரெயிலானது (வ.எண்.20896) ஆகஸ்ட் 18,25 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
ராமேசுவரம்-புவனேஷ்வர் செல்லக்கூடிய அதிவிரைவு ரெயிலானது (வ.எண்.20895) ஆகஸ்ட் 20, 27 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
மேற்கண்ட தகவலை தெற்கு ரெயில்வே தெரி வித்துள்ளது.
- மாநாட்டுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் இரவு, பகலாக மேடை அலங்காரம் மற்றும் பந்தல் அலங்கார பணிகள் நடைபெற்று வருகின்றன.
- மைதானத்தில் சுமார் 1.50 லட்சம் இருக்கைகள் போடப்பட்டு வருகின்றன.
மதுரை:
மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. மாநாட்டிற்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் முன்னாள் அமைச்சர்கள் 12 பேர் மதுரையில் முகாமிட்டு இறுதி கட்டப்பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்கள்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதையடுத்து முதன்முறையாக மதுரையில் பிரமாண்டமாக அ.தி.மு.க. வீர வரலாற்றின் எழுச்சி மாநாடு வருகிற 20-ந்தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மதுரை ரிங் ரோடு வலையன்குளம் பகுதியில் சுமார் 65 ஏக்கர் பரப்பில் பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் சுமார் 300 ஏக்கர் நிலப்பரப்பில் வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் சமையல் கூடங்கள், உணவு பரிமாறும் இடங்கள், குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
மாநாட்டுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் இரவு, பகலாக மேடை அலங்காரம் மற்றும் பந்தல் அலங்கார பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனை முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி, செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், டாக்டர் விஜயபாஸ்கர், வளர்மதி, காமராஜ், கே.டி. ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜூ, ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., ராஜ் சத்யன் உள்ளிட்டோர் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் மதுரையில் முகாமிட்டு பணிகளை விரைவுபடுத்தி வருகிறார்கள். மாநாட்டு மைதானத்தில் இன்று காலை அதிமுக மாநாடு தொடர்பான பிரசார வாகனத்தையும் அவர்கள் கொடியசைத்து அனுப்பி வைத்தனர். அ.தி.மு.க. எழுச்சி மாநாட்டின் இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் அங்கு விழா மேடை டிஜிட்டல் முறையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
மேலும் புகைப்பட கண்காட்சி அரங்கும் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த அரங்கின் முகப்பு தோற்றத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா செங்கோலுடன் இருப்பது போன்றும், எடப்பாடி பழனிசாமி படங்களும் வைக்கப்பட்டுள்ளன. மேலும் புகைப்பட கண்காட்சியில் இதுவரை பார்த்திராத அரிய புகைப்படங்களும் இடம்பெறுகிறது. மேலும் கடந்த அதிமுக ஆட்சியின் முக்கிய திட்டங்கள் மற்றும் எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரது புகைப்படங்களும் நவீன தொழில்நுட்பத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த புகைப்பட கண்காட்சி அ.தி.மு.க. தொண்டர்களின் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருவதாக முன்னாள் அமைச்சர்கள் தெரிவித்தனர். மாநாட்டு மேடை மற்றும் பந்தல் மேற்பகுதிகள் அலங்கரிக்கப்பட்டு மின் விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும் மைதானத்தில் சுமார் 1.50 லட்சம் இருக்கைகள் போடப்பட்டு வருகின்றன. இது தவிர பந்தலின் இருபுறங்களிலும் தொண்டர்கள் திரளாக குவிந்து நிகழ்ச்சிகளை காணும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- அழுகிய நிலையில் வாசுகி, உமாதேவி, கோதண்டபாணி ஆகியோர் பிணமாக கிடந்தனர்.
- 3 பேரின் உடல்களையும் மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மதுரை:
மதுரை அண்ணாநகர் அருகே உள்ள கோமதிபுரம் மருதுபாண்டியர் நகர், ராஜராஜன் தெருவை சேர்ந்தவர் பாண்டியன். இவர் மதுரையில் சுகாதாரத்துறை அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது மனைவி வாசுகி. இவர்களுக்கு உமாதேவி (45) என்ற மகளும், கோதண்டபாணி (42) என்ற மகனும் இருந்தனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாண்டியன் குடும்பத்தை பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து கோதண்டபாணியும், உமாதேவியும் வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வந்தனர். அவர்களுடன் தாய் வாசுகியும் வசித்து வந்தார்.
கடந்த 3 நாட்களாக அவர்களது வீடு திறக்கப்படாமல் இருந்தது. இதனை அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் கவனிக்கவில்லை. இதற்கிடையே இன்று காலை வாசுகி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் இதுகுறித்து அண்ணாநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அங்கு அழுகிய நிலையில் வாசுகி, உமாதேவி, கோதண்டபாணி ஆகியோர் பிணமாக கிடந்தனர். 3 பேரின் உடல்களையும் மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வீட்டில் ஏதேனும் கடிதம் எழுதி வைத்துள்ளார்களா? என போலீசார் சோதனை செய்தனர்.
இறந்த 3 பேரும் வறுமை காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையில் ஒரே குடும்பத்தில் தாய், மகன், மகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.






