என் மலர்
மதுரை
- 2600 ஆண்டுகளுக்கு முன்பாகவே எழுத்தறிவும், படிப்பறிவும் தமிழ் சமூகம் பெற்றுள்ளது என வெங்கடேசன் எம்.பி., பேசினார்.
- பெண் கதா பாத்திரங்கள் தமிழ் மொழியில் உள்ளன.
மதுரை
மதுரை அரசு மருத்துவக் கல்லூரி கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் சங்கீதா தலைமையில் "மாபெரும் தமிழ் கனவு" தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி நடந்தது. இதில் எழுத்தாளரும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான வெங்க டேசன் "தமிழ் – தொன் மையும், தொடர்ச்சியும்" என்ற தலைப்பில் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் கலெக்டர் சங்கீதா பேசிய தாவது:-
உலகின் பல்வேறு பகுதிகளில் செழித்தோங்கிய பண்பாடுகளில் தமிழர் பண்பாடு மிகவும் தொன்மை யானது. தமிழ் மரபின் வளமை யையும், பண் பாட்டின் செழுமையையும், காலந்தோறும் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த புரித லையும் வளரும் தலை முறையினருக்கு கொண்டு சேர்த்திடும் நோக்கில் இந்நிகழ்ச்சி நடத்தப்படு கின்றது.
மதுரை மாவட்டத்தில் கடந்த கல்வி யாண்டில் 4 மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு ஏராளமான மாணவ, மாணவியர்கள், இளைஞர்கள் பங்கேற்று பயனடைந்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக, நடப்பு கல்வியாண்டில் மதுரை மாவட்டத்தில் 8 நிகழ்ச்சிகள் நடத்திட திட்டமிடப் பட்டு ள்ளன. அதன் தொடக்க மாக, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி யில் இந்நிகழ்ச்சி சிறப்பாக தொடங்கி வைக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் பேசியதாவது:-
சங்ககாலம் தொட்டு தமிழ்நாடு மாநிலம் எழுத்தறி வும், படிப்பறிவும் கொண்ட கற்றறிந்த சமூகமாக திகழ்ந்து வருகிறது. மொழியில் உயரந்த மொழி, தாழ்ந்த மொழி என எதுவும் இல்லை. ஒவ்வொரு மொழி க்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. 1960-களில் மொழிப் பிரச்சனை தீவிர மானபோது ஒட்டுமொத்த இந்தியாவையும் தமிழ்நாடு பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர்கள் அன்றைய மாணவ, மாணவியர்கள், இளைஞர்கள். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றிய தமிழ் சங்க இலக்கியங்களில் அவற்றை உருவாக்கிய எழுத்தா ளர்களுள் 40 பெண் எழுத்தாளர்கள் இருந்து ள்ளனர்.
இது வேறு எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு. "ஆணுக்கு பணி விடை செய்வதே பெண் ணின் கடமை" என்ற நோக்கத்தை வலியுறுத்தியே சமஸ்கிருதம் போன்ற மொழிகளில் இலக்கியங்கள் உள்ளன. "நீதி தவறியது மன்னனே ஆனாலும் எதிர்த்து போராடும்" நோக்கத்தை வலியுறுத்து கின்ற கண்ணகி போன்ற தீரமான பெண் கதா பாத்திரங்கள் தமிழ் மொழியில் உள்ளன.
நமது தமிழ்ச் சமூகம் 2600 ஆண்டுகளுக்கு முன்பாகவே எழுத்தறிவும், படிப்பறிவும் பெற்று கற்றறிந்த சமூகமாக வாழ்ந்தோம் என்பதை கீழடி அகழ்வாய்வின் மூலம் கிடைக்கப்பெற்ற பொருட்களின் ஆய்வின் அடிப்படையில் நாம் அறிய முடிகிறது. சங்க இலக்கி யங்களில் பயன் படுத்தப் பட்ட பல்வேறு தமிழ் சொற்கள் இன்றளவும் சாமானிய மக்களின் பேச்சு வழக்கில் உள்ளது தமிழ்மொழியின் சிறப்பு. திருக்குறள், தொல்காப்பியம் போன்ற தமிழ் இலக்கியங்கள் மனிதனுக்கு வாழ்வியல் நெறிமுறைகளை கற்பிக்கின்றன. சங்ககாலம் முதல் நிலப்பரப்புகளாக பிரிந்திருந்தாலும் தமிழ்மொழி உணர்வால் நம்மை ஒன்றிணைத்துள்ளது. பழம்பெருமை பேசுவதற் காக அல்ல, நம்மிடம் உள்ள மேன்மைகளை நாம் கொண்டாடும் போது நம் மனதில் நம்மையும் அறியாமல் உள்ள கீழ்மைகள் தானாக ஒழியும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ- மாணவிகள் அனைவருக்கும் உயர்கல்வி தொடர்பான வழிகாட்டு கையேடு வழங்கப்பட்டது. மேலும், கல்விக் கடனுதவி பெறுதல், சுயதொழில் தொ டங்குவதற்கான வாய்ப்புகள் மற்றும் அரசு மானியத்துடன் கூடிய திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனை மாணவ, மாணவி கள் பார்வையிட்டு பயன டைந்தனர்.
இதில் அரசு மருத்தவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேல், மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) ராஜ்குமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ராஜமோகன், மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பள்ளியில் மாணவர் ஆட்சி மன்றம் தொடக்கம் என்ற விழா நடந்தது.
- போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே நகரி கல்வி சர்வதேச (சி.பி.எஸ்.இ) பொதுப்பள்ளியில் சுதந்திர தின விழா நடந்தது. துண முதல்வர்கள் அபிராமி, டயானா, துணை பொது மேலாளர் பானுபிரியா, மனிதவள மேலாளர்அனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக முன்னாள் துணை கலெக்டர் ஜான்பிரிட்டோ தேசியகொடி ஏற்றி வைத்தார்.
விழாவில் மாணவர் ஆட்சி மன்றம் தொடங்கப்பட்டது. பள்ளி மாணவ தலைவர், துணை மாணவ தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
- மதுரையில் தி.மு.க. சார்பில் நடைபெற இருந்த போராட்டம் வேறு தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- மதுரை மாவட்ட திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி தேதி மாற்றத்தை அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் நீட் தேர்வை திரும்பப் பெற வலியுறுத்தி தி.மு.க. சார்பில் நாளை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், மதுரையில் தி.மு.க. சார்பில் நடைபெற இருந்த போராட்டம் வேறு தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா நடராஜ் தியேட்டர் அருகில் நடைபெற இருந்த போராட்டம் வருகிற 23-ந்தேதி புதன்கிழமை அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
- மாநாட்டில் பங்கேற்பதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று மாலை மதுரை வருகிறார்.
- தொண்டர்களுக்கு காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை தடையின்றி உணவுகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மதுரை:
கடந்த 1972-ம் ஆண்டு தமிழக மக்களால் புரட்சித்தலைவர் என்று அழைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். தொடங்கிய அ.தி.மு.க. இன்று வரை அழியா புகழுடனும், வலுவான தொண்டர்களின் பலத்தோடும் தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கி வருகிறது.
தமிழகத்தில் சுமார் 31 ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பில் இருந்த இயக்கம் அ.தி.மு.க. மட்டுமே. எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜெயலலிதா அ.தி.மு.க.வை 1½ கோடி தொண்டர்கள் பலத்துடன் வலுவோடும், பொலிவோடும் வெற்றி நடை போட செய்தார். இந்தியாவில் 3-வது பெரிய அரசியல் இயக்கமாக அ.தி.மு.க.வை உருவாக்கி தேசிய அரசியலிலும் ஜெயலலிதா வரலாற்று சாதனை படைத்தார்.
அவரது மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. சுமார் 2 கோடி உறுப்பினர்களுடன் புதிய அரசியல் அத்தியாயத்தை எழுத தயாராகி வருகிறது. அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வானதையடுத்து முதல் முறையாக அ.தி.மு.க. எழுச்சி மாநாட்டை எடப்பாடி பழனிசாமி மதுரையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கூட்டி உள்ளார்.
அ.தி.மு.க. வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு என்ற தலைப்பில் இந்த மாநாடு மிக பிரமாண்ட முறையில் நடத்தப்படுகிறது. அ.தி.மு.க.வின் பொன்விழா ஆண்டையொட்டி நடத்தப்படும் இந்த மாநாட்டை மிகவும் சிறப்பாக நடத்த அ.தி.மு.க. தலைமை திட்டமிட்டு அதற்கான பணிகளை முழு வீச்சில் செய்து வருகிறார்கள். இதற்காக மதுரை ரிங் ரோடு வலையங்குளம் பகுதியில் சுமார் 65 ஏக்கர் நிலப்பரப்பில் பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 50 நாட்களாக இதற்கான பணிகள் இரவு, பகலாக முழு வீச்சில் நடைபெற்று மேடை மற்றும் பந்தல் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.
மாநாட்டு திடலில் 51 அடி உயர கொடிக்கம்பம், புகைப்பட கண்காட்சி அரங்கு, சமையல் கூடங்கள், உணவு பரிமாறும் கேலரிகள், வாகன நிறுத்துமிடங்கள் என்று சுமார் 300 ஏக்கர் பரப்பில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு அந்தப் பகுதி மின்னலங்காரத்தால் ஜொலித்து வருகிறது.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரது பிரமாண்ட கட் அவுட்டுகளும் பார்ப்பவர்களை கவர்ந்து வருகின்றன. வழிநெடுகிலும் கொடி, தோரணங்கள் மற்றும் மின்விளக்கு அலங்காரங்களும் செய்யப்பட்டுள்ளன.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று மாலை மதுரை வருகிறார். அவருக்கு முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தலைமைக்கழக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பளிக்கிறார்கள். இதைத் தொடர்ந்து மாநாட்டு திடல் அருகே ஆலங்குளம் பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் எடப்பாடி பழனிசாமி தங்கி ஓய்வெடுக்கிறார்.
நாளை காலை 8 மணி அளவில் அ.தி.மு.க. எழுச்சி மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. முன்னதாக மாநாட்டின் முகப்பு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள 51 அடி உயர கொடிக்கம்பத்தில் அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து எடப்பாடி பழனிசாமி மாநாட்டை தொடங்கி வைக்கிறார். அப்போது ஹெலிகாப்டரில் இருந்து பூக்களை தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கவும், ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் சீருடை அணிந்து அணிவகுப்பு மரியாதை செலுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மாநாட்டு மேடையில் கவியரங்கம், பட்டிமன்றம், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், இன்னிசை கச்சேரி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது.
இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 10 லட்சம் தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக மாநாட்டு பந்தலில் 1.50 லட்சம் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. இது தவிர மாநாடு மேடையில் இருபுறங்களிலும் தொண்டர்கள் திரளாக கூடி நின்று மாநாட்டு நிகழ்ச்சிகளை பார்ப்பதற்காக தனியாக பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
மாநாட்டு திடலில் நூற்றுக்கும் மேற்பட்ட எல்.இ.டி. திரையில் நிகழ்ச்சிகள் காட்டப்படுகின்றன. எனவே நான்கு புறங்களிலும் இருந்து ண்டர்கள் எவ்வித சிரமமும் இன்றி மாநாட்டு பந்தலுக்கு வந்து சேர பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தொண்டர்களுக்கு காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை தடையின்றி உணவுகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
காலை உணவாக இட்லி, பொங்கல், உப்புமா மற்றும் வடை, சட்னி, சாம்பார் வழங்கப்படுகிறது. மதிய உணவாக தயிர் சாதம், தக்காளி சாதம், புளி சாதம், வெஜிடபிள் சாதம் என்று தொண்டர்கள் விரும்புகிற வகையில் உணவு பரிமாற திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் காய்கறி கூட்டுகள், ஊறுகாய் வழங்கப்படுகின்றன. அதனுடன் 300 மில்லி தண்ணீர் பாட்டிலும் வழங்கப்படுகிறது. இதற்கான அரிசி, காய்கறிகள், மளிகை பொருட்கள் அனைத்தும் சமையல் நடைபெறும் இடத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளன.
சுமார் 10,000 ஊழியர்கள் சமையல் மற்றும் உணவு பரிமாறும் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். தொண்டர்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு 50-க்கும் மேற்பட்ட இடங்களில் நடமாடும் குடிநீர் லாரிகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் தொட்டிகள் அமைக்கப்படுகின்றன.
நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் சுகாதார வளாகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொண்டர்கள் காலை முதல் மாலை வரை மாநாட்டு நிகழ்ச்சிகளை கண்டு களிக்கும் வகையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
புதுக்கோட்டை செந்தில் ராஜலட்சுமி குழுவினரின் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி, பாடல்கள், மதுரை முத்துவின் காமெடி பட்டிமன்றம், திரைப்பட இசையமைப்பாளர் தேவாவின் இன்னிசை நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. மாலை 5 மணி அளவில் அ.தி.மு.க. மாநாட்டின் முத்தாய்ப்பான 32 தீர்மானம் நிறைவேற்றுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாநாட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசை பாராட்டியும், தி.மு.க. அரசை விமர்சித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. குறிப்பாக கடந்த 1989 ஆம் ஆண்டு தமிழக சட்டசபையில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா தாக்கப்பட்ட விவகாரம் மற்றும் நீட் தேர்வு உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளும் அ.தி.மு.க. மாநாட்டு தீர்மானத்தில் இடம்பெறுகின்றன.
இது தவிர வருகிற பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வின் தேர்தல் வியூகம், கூட்டணி குறித்தும் தீர்மானத்தில் விளக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மாநாட்டின் தலைமை உரையாற்றுகிறார். அப்போது முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட இருக்கிறார். இரவு 8.30 மணிக்குள் மாநாட்டு நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிந்து தொண்டர்கள் ஊர் திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அ.தி.மு.க. மாநாட்டை ஒட்டி மதுரையில் பல்வேறு இடங்களில் ராட்சத பலூன்கள் பறக்க விடப்பட்டு, வரவேற்பு பதாகைகள் கட்டப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் இருந்து அ.தி.மு.க. தொண்டர்கள் மதுரையில் குவிய தொடங்கியுள்ளனர்.
வெளியூர்களில் இருந்து வந்துள்ள கட்சியினர் மதுரையில் உள்ள அனைத்து லாட்ஜூகள் மற்றும் விடுதிகளில் அறை எடுத்து தங்கி உள்ளதால் அனைத்து தங்கும் விடுதிகளும் நிரம்பியுள்ளன.
மேலும் பக்கத்து மாவட்டங்களான சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் பகுதிகளிலும் மதுரையின் புறநகர் பகுதிகளிலும் உள்ள தங்கு விடுதிகளிலும் அவர்கள் தங்கி உள்ளனர். சென்னையில் இருந்து மதுரை வந்துள்ள சிறப்பு ரெயில் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர்கள் இன்று காலை முதலே மாநாட்டுக்காக குவிந்து வருகிறார்கள்.
மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. எழுச்சி மாநாடு தமிழக அரசியலில் புதிய உற்சாகத்தையும், உத்வேகத்தையும் அ.தி.மு.க. இயக்கத்திற்கு உறுதியாக ஏற்படுத்தும்.
அடுத்து வரும் பாராளுமன்றத் தேர்தல், சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற இந்த எழுச்சி மாநாடு முதல் புள்ளியாக, அமைவதுடன், மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் அரசியல் மாநாடாக அமையும் என்று முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
- மாநாட்டு நுழைவாயிலில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுடன் கீழே இருவருக்கும் நடுவில் எடப்பாடி பழனிசாமி இருக்குமாறு முகப்பு அமைக்கப்பட்டுள்ளது.
- புளிசாதம் எப்போதும் கிடைக்கும் வகையில் பொட்டலமாக தொண்டர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.
மதுரை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதையடுத்து, தொண்டர்கள் பலத்தை நிரூபிக்கும் வகையில் மதுரையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மாநாட்டுக்கான ஏற்பாடுகள் மதுரை வலையங்குளத்தில் முழுவீச்சில் நடைபெற்று 95 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. மாநாட்டுப் பந்தல், வாகனங்கள் நிறுத்துமிடம், உணவு தயாரிக்கும் கூடம் அமைக்கும் பணிகள் 5 லட்சம் சதுர அடியில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன.
மாநாட்டு மேடை மட்டும் 20 அடி நீளம், 100 அடி அகலத்தில் டிஜிட்டல் மேடையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேடையில் தலைவர்கள் பேசும்போது, அவர்கள் பேசும் காட்சி நேரலையில் மேடையின் பின்புறம் உள்ள டிஜிட்டல் திரையில் மேடை முன் அமர்ந்திருக்கும் தொண்டர்களுக்குத் தெரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
மாநாட்டு நுழைவாயிலில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுடன் கீழே இருவருக்கும் நடுவில் எடப்பாடி பழனிசாமி இருக்குமாறு முகப்பு அமைக்கப்பட்டுள்ளது. பழமையான அரண்மனைத் தோற்றத்துடன் பின்னணியில் மலைக்குன்றுகள் இருப்பது போன்ற முகப்பை திரைப்படத் துறையைச் சேர்ந்த கலைஞர்கள் அமைத்துள்ளனர். இந்த மாநாட்டுக்கு வரும் தொண்டர்களுக்கு உணவு தயாரிப்பதற்காகவே மாநாட்டுப் பந்தல் அருகே 35 ஏக்கர் பரப்பளவில் உணவுக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டுக்கு வருகை தரும் அ.தி.மு.க. தொண்டர்களின் பசியாற்றும் வகையில், புளிசாதம் உள்ளிட்ட உணவுகள் தயாரிக்கும் பணி தொடங்கிவிட்டது. 10 லட்சம் தொண்டர்களுக்கு வழங்கும் வகையில் உணவு தயார் செய்யப்படுகிறது.
இதற்காக 5 ஆயிரம் சமையல் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர். 90 ஆயிரம் கிலோ அரிசி, 30 ஆயிரம் கிலோ பருப்பு மற்றும் காய்கறிகள், பலசரக்குப் பொருட்கள் தேவையான அளவுக்கு நேற்று முதல் வந்து இறக்கப்பட்டன. தொண்டர்களுக்கு உணவு பெரிய பாக்கு மட்டை தட்டுகளில் வழங்கப்பட உள்ளது. புளிசாதம், பருப்பு சாதம், ஒரு பொறியல், துவையலும் வழங்கப்படுகிறது.
இதில், புளிசாதம் எப்போதும் கிடைக்கும் வகையில் பொட்டலமாக தொண்டர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. தமிழகம் முழுவதிலும் 4 திசைகளில் இருந்தும் நிர்வாகிகள், தொண்டர்கள் வரும் வாகனங்கள் மதுரை விரகனூர் சந்திப்பு, மண்டேலா நகர் வழியாகவும், கப்பலூர் டோல்கேட், தோப்பூர் வழியாக விமான நிலையம் செல்லும் சாலை, காரியாபட்டி வழியாக வலையங்குளம் மாநாடு நடக்கும் இடத்துக்கு எளிதாக வந்து செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளன.
- புகாரின் பேரில் போலீசார் கள்ளிக்குடி-சிவரக்கோட்டை பகுதியில் பல இடங்களில் தேடினர்.
- கொலை சம்பவத்தில் மாட்டுப்பண்ணை உரிமையாளருக்கும் தொடர்பு இருக்கலாம் என மாரிச்சாமி உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
திருமங்கலம்:
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி. மகன் மாரிச்சாமி (வயது 34). இவரது மனைவி பாக்கியலட்சுமி (28). இவர்களுக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
கள்ளிக்குடி அருகேயுள்ள அகத்தாபட்டியை சேர்ந்த பாலுசாமி என்பவர் சிவரக்கோட்டையில் மாட்டுப் பண்ணை வைத்துள்ளார். இந்த பண்ணையில் கார் டிரைவராக மாரிச்சாமி வேலை பார்த்து வந்தார். இதன் காரணமாக காரியாபட்டியிலிருந்து தனது வீட்டினை சிவரக்கோட்டை சூர்யா நகருக்கு மாற்றி குடும்பத்துடன் தற்போது குடியிருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் மாரிச்சாமி மாட்டுப்பண்ணைக்கு வேலைக்காக புறப்பட்டு சென்றார். வழக்கமாக இரவு 8 மணிக்கு வீடு திரும்பிவிடுவார். ஆனால் நள்ளிரவு 12 மணி வரையிலும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதட்டம் அடைந்த அவரது மனைவி பாக்கியலட்சுமி மாரிச்சாமியின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டார்.
ஆனால் அவரது செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து மாரிச்சாமியின் மனைவி கள்ளிக்குடி போலீஸ் நிலையத்தில் கணவர் மாயமாகி விட்டதாகவும், அவரை கண்டுபிடித்து தருமாறும் புகார் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் கள்ளிக்குடி-சிவரக்கோட்டை பகுதியில் பல இடங்களில் தேடினர்.
பின்னர் சந்தேகமடைந்து அவர் வேலை பார்த்து வந்த மாட்டுப்பண்ணையில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கிருந்த இரவு நேர காவலாளி, இந்த பண்ணையில் பால்கறவை செய்யும் ஆறுமுகம் மூன்று வாலிபர்களுடன் வந்து சென்றதாக தெரிவித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் பண்ணையில் உள்ளே சென்று தேடிபார்த்த போது அங்குள்ள தண்ணீர் தொட்டியில் மாரிச்சாமி பிணமாக மிதந்தார்.
போலீசார் அவரது உடலை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த திருமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்த குமார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். பிணமாக கிடந்த மாரிச்சாமியின் நெற்றியில் காயம் இருந்ததால் சந்தேகம் அடைந்த கள்ளிக்குடி போலீசார் புலன் விசாரணை நடத்தினர்.
அதில் கள்ளிக்குடி அருகேயுள்ள வில்லூரினை சேர்ந்த ஆறுமுகம் இதே பண்ணையில் பால் கறவை செய்யும் தொழில் செய்து வருகிறார் என்பதும், அவருக்கும் மாரிச்சாமிக்குக்கும் முன்விரோதம் இருந்து வந்ததும் தெரிந்தது.
அதனால் ஏற்பட்ட தகராறில் ஆறுமுகம் தனது ஆதரவாளர்களுடன் வந்து மாரிச்சாமியை அடித்து கொலை செய்து விட்டு, அதனை மறைக்க தண்ணீர் தொட்டியில் வீசிச் சென்றதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து தலைமறைவாகியுள்ள ஆறுமுகம் மற்றும் அவரது கூட்டாளிகளை கள்ளிக்குடி போலீசார் தேடிவருகின்றனர். மாட்டுப்பண்ணையில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் திருமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே இந்த கொலை சம்பவத்தில் மாட்டுப்பண்ணை உரிமையாளருக்கும் தொடர்பு இருக்கலாம் என மாரிச்சாமி உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அந்த கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
- சென்னையில் இருந்து 50 ஆயிரம் பேர் வருவதற்கு ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
- அ.தி.மு.க. தொண்டர்கள் மாநாடு நடைபெறும் வலையங்குளம் பகுதிக்கு சென்றனர்.
மதுரை:
அ.தி.மு.க. சார்பில் மதுரையில் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு நாளை நடைபெறுகிறது. இதற்காக இந்த மாநாட்டை வரலாற்று சிறப்பு மிக்க மாநாடாக மட்டுமின்றி அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் மாநாடாக நடத்தி முடிக்க வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டார்.
அதனை தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக இதற்கான ஏற்பாடுகள் முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களிடம் பிரித்து கொடுக்கப்பட்டு இரவு-பகலாக நடந்து வருகிறது. மாநாட்டில் தொண்டர்களை பங்கேற்க செய்வது தொடர்பாக அனைத்து மாவட்டங்களிலும் ஆலோசனை கூட்டங்களும் நடத்தப்பட்டன.
அதன்படி மாநாட்டில் 15 லட்சம் தொண்டர்கள் பங்குபெற வேண்டும் என்ற இலக்கின் அடிப்படையில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் வாகனங்களை ஒழுங்கு செய்துள்ளனர். பஸ், வேன், கார்களில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 50 ஆயிரம் பேர் வருவதற்கு ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், பாலகங்கா, ஆதிராஜாராம், டி.ஜி.வெங்கடேஷ் பாபு, ஆர்.எஸ்.ராஜேஷ், தி.நகர் சத்யா, வி.என்.ரவி, அசோக் ஆகியோர் சென்னையில் இருந்து தொண்டர்களை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
சென்னை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தி.நகர் சத்யா மற்றும் ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோர் தனியாக சிறப்பு ரெயில் ஒன்று ஏற்பாடு செய்துள்ளனர். இந்த ரெயில் குளுகுளு வசதியுடன் 3-ம் வகுப்பு படுக்கை பெட்டிகளாக விடப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு அனுமதி பெற்று ஐ.ஆர்.டி.சி. மூலம் புக்கிங் செய்யப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு ரெயில் நேற்று இரவு 10 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு இன்று காலை மதுரை கூடல்நகர் ரெயில் நிலையத்திற்கு காலை 9.10 மணிக்கு வந்தடைந்தது. இந்த ரெயிலில் 1,300 பேர் பயணம் செய்தனர். 14 ஏ.சி. பெட்டிகளும், ஒரே ஒரு சாதாரண 2-ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டியுடன் மதுரைக்கு வந்தது.
ரெயிலில் வந்திறங்கியவர்களை மாநாட்டு பந்தலுக்கு அழைத்து செல்வதற்காக தயார் நிலையில் 40-க்கும் மேற்பட்ட வேன்கள் கூடல் நகர் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. அதில் ஏறி அ.தி.மு.க. தொண்டர்கள் மாநாடு நடைபெறும் வலையங்குளம் பகுதிக்கு சென்றனர்.
இந்த சிறப்பு ரெயிலுக்கான முழு தொகையும் 2 மாவட்டச் செயலாளர்கள் செலுத்தியுள்ளனர். இதே போல மாநாடு முடிந்து நாளை இரவு 10 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலையில் சென்னை எழும்பூர் சென்று சேருகிறது.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வினர் அணி வகுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இதுபோன்ற சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாக கட்சியினர் தெரிவித்துள்ளனர். இந்த சிறப்பு ரெயில் தவிர பிற ரெயில்களிலும் அ.தி.மு.க.வினர் மதுரை செல்ல ஒரு மாதத்திற்கு முன்பே முன்பதிவு செய்தவர்களும் மதுரைக்கு பல்வேறு ரெயில்களில் வந்த வண்ணம் உள்ளனர்.
இதனால் மதுரையில் திரும்பிய திசையெல்லாம் அ.தி.மு.க. தொண்டர்கள் மயமாகவே காட்சி அளிக்கிறது.
- எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆகஸ்டு 19ம் தேதி மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கக்கோரி வழக்கு.
- அதிமுக தரப்பில் போராட்டம் நடத்த அனுமதி அளிக்கக்கூடாது என்று வாதாடப்பட்டது.
அதிமுக மாநாடு வரும் 20ம் தேதி அன்று மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இதற்காக, அதிமுகவினர்
இந்நிலையில், காரைக்குடி பகுதியை சேர்ந்த கணேச தேவர் என்பவர் அதிமுக மாநாட்டில் கலந்து கொள்ளும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆகஸ்டு 19ம் தேதி மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று மதுரை கிளை நீதிபதி நாகார்ஜூனா முன் வந்தது. அப்போது, அதிமுக தரப்பில் போராட்டம் நடத்த அனுமதி அளிக்கக்கூடாது என்று வாதாடப்பட்டது.
மேலும், 19ம் தேதி போராட்டம் நடத்த அனுமதி வழங்குவது குறித்து பரிசீலனையில் உள்ளதாக அரசு தரப்பு குற்றவியல் வழக்கறிஞர் தெரிவித்தார்.
இந்நிலையில், இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி " 20ம் தேதிதான் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. 19ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவதில் உங்களுக்கு என்ன பிரச்சினை" என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், மனுதாரர் காவல் துறையை அணுகி உரிய அனுமதி பெற்று 19ம் தேதி போராட்டம் நடத்தலாம் என நீதிபதி தெரிவித்தார்.
- எஸ்ஸார் கோபி இல்ல திருமண விழா இன்று நடந்தது.
- அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு வாழ்த்தினார்.
மதுரை
மதுரை மாநகர் மாவட்ட முன்னாள் தி.மு.க. பொறுப்புக்குழு உறுப்பினர் எஸ்ஸார் கோபி இல்ல திருமண விழா மதுரை வேலம்மாள் மருத்துவ கல்லூரி ஐடா ஸ்கட்டர் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
திருமண விழாவில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு மணமக்கள் வெண்ணிலா (எ) மீனா-மகேஷ் கிருஷ்ணன் ஆகியோரை நேரில் வாழ்த்தினர். மேலும் இந்த நிகழ்ச்சியில் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
முன்னதாக நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, மூர்த்தி உள்பட தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் முக்கிய நிர்வாகிகள் வாழ்த்தினர். நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் சுப்புலட்சுமி எஸ்ஸார் கோபி, காளிராஜன், சாந்தி தேவி, முருகையா பாண்டியன், வெள்ளையம்மாள்,
வில்லாபுரம் பகுதி கழகச் செயலாளர் கவுன்சிலர் போஸ்முத்தையா, அவனியாபுரம் மேற்கு பகுதி கழக செயலாளர் ஈஸ்வரன், பகுதி துணை செயலாளர் பிரபாகர், 84-வது வட்ட செயலாளர்கள் பாலா என்ற பாலசுப்பிரமணியன், கவுன்சிலர் குட்டி என்ற ராஜரத்தினம், சுபாஷ்சந்திர போஸ், சூரியவர்மன், கௌதம்போஸ், விஷ்ணுவர்தன் ஆகியோர் வரவேற்றனர்.
திருமண விழாவில், பகவதி, ரமேஷ், 84-வது வட்ட துணைச் செயலாளர் விஜயன், அவனியாபுரம் தி.மு.க. மேற்கு பகுதி செயலாளர் ஈஸ்வரன், 84-வது வார்டு தி.மு.க. கவுன்சிலரும், வில்லாபுரம் பகுதி செயலாளருமாமன போஸ் முத்தையா, பத்ரி பாண்டியன், பத்ரி சரவணன், விக்கி சதீஷ் பிரண்ட்ஸ் கிளப், முனிச்சாலை ஆண்டவர் பைனான்ஸ் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்துெகாண்டு மணமக்களை வாழ்த்தினர்.
- தி.மு.க. உண்ணாவிரத போராட்டத்தில் திரளாக பங்கேற்க வேண்டும்.
- மாவட்ட செயலாளர் தளபதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மதுரை
மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. செயலாளர் தளபதி எம்.எல்.ஏ. இன்று வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்த லின்படி, 'தமிழ்நாட்டு மாண வர்களின் மருத்துவ கனவை சிதைத்து அவர்களின் உயிரை பறிக்கும் நீட் தேர்வை மத்திய பா.ஜ.க. அரசு திரும்ப பெற வலியுறுத்தியும், ஆளுநரை கண்டித்தும்', வருகிற 20-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி அளவில் பழங்காநத்தம் ரவுண்டானா நடராஜ் தியேட்டர் அருகில் மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. இளைஞரணி- மாணவரணி- மருத்துவரணி சார்பில் உண்ணாவிரத போ ராட்டம் நடைபெறுகிறது.
இதில் மதுரை மாநகர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞரணி- மாணவரணி, மருத்துவரணி நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதிக்கழக, வட்டக் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், ஒன்றிய, பேரூர், கிளை செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், கழக முன்னோடிகள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.
- மதுரையில் வெவ்வேறு விபத்துகளில் 2 வாலிபர்கள் பலியானார்கள்.
- இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
அவனியாபுரம் திருப்பரங்குன்றம் ரோட்டை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் நாகராஜ் (வயது 23). இவர் நண்பர்களுடன் ஒரு வேனில் சென்றார்.
மேலூர் மெயின்ரோடு வளர்நகர் சந்திப்பு பகுதியில் சென்ற போது வேன் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதில் வேனுக்குள் இருந்த ஒருவருடன் ஒருவர் மோதிக்கொண்டனர். இதில் 2 பேரின் தலைகள் பலமாக மோதி கொண்ட தால் நாகராஜ் மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் வேனில் உடன் சென்ற டிரைவர்கள் யாகப்பா நகர் இந்திரா காலனியைச் சேர்ந்த பழனி மகன் சந்துரு (23), அருண கிரி கோவில் தெருவை சேர்ந்த திருப்பதி மகன் மணிகண்டன் (22) ஆகியோர் மீது போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிந்தாமணி மெயின் ரோடு மேல அனுப்பானடி சந்திப்பில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்த தகவல் அறிந்த மதுரை கிழக்கு வி.ஏ.ஓ. சிவராமன் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வாலி பரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்றும் அவர் மீது மோதிய வாகனம் எது? வாகனத்தை ஓட்டி சென்ற டிரைவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
- பல்கலைக்கழக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணியை வளாக இயக்குநர் புஷ்பராணி நட்டு வைத்தார்.
மதுரை
அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையத்தின் மதுரை கீழக்குயில்குடி மையத்தில், 77-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
"தேச விழா முதன்மை விழா" என்ற கருப்பொருளில், "ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்" -ன் ஒருங்கிணைந்த பகுதியாக விழா கொண்டாடப்பட்டது. மதுரை வளாக இயக்குநர் பேராசிரியர் புஷ்பராணி தேசியக் கொடியை ஏற்றி வைத்து தேசிய மாணவர் வளர்ச்சியும், கடமையும் என்ற தலைப்பில் பேசினார். விழாவில் மாணவிகள் பேச்சு, பாட்டு, கட்டுரை மற்றும் குழுப் பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மூலம் தேசப்பற்றையும் அனைவரையும் அதில் தமக்குள்ள ஈடுபாட்டையும் வெளிப்படுத்தி உற்சாகப்படுத்தினர்.
மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் புத்தகங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. கணினியியல் துறை மாணவி நிலாபாரதி நன்றி கூறினார். அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணியை வளாக இயக்குநர் புஷ்பராணி நட்டு வைத்தார்.






