அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வாழ்த்து

எஸ்ஸார் கோபி இல்ல திருமண விழா இன்று நடந்தது. அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு வாழ்த்தினார்.
மதுரை எஸ்ஸார் கோபி இல்ல திருமண விழாவில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாக ராஜன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியபோது எடுத்தபடம். அருகில் மணமகன், மணமகள் வீட்டார் உள்ளனர்.
மதுரை எஸ்ஸார் கோபி இல்ல திருமண விழாவில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாக ராஜன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியபோது எடுத்தபடம். அருகில் மணமகன், மணமகள் வீட்டார் உள்ளனர்.
Published on

மதுரை

மதுரை மாநகர் மாவட்ட முன்னாள் தி.மு.க. பொறுப்புக்குழு உறுப்பினர் எஸ்ஸார் கோபி இல்ல திருமண விழா மதுரை வேலம்மாள் மருத்துவ கல்லூரி ஐடா ஸ்கட்டர் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

திருமண விழாவில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு மணமக்கள் வெண்ணிலா (எ) மீனா-மகேஷ் கிருஷ்ணன் ஆகியோரை நேரில் வாழ்த்தினர். மேலும் இந்த நிகழ்ச்சியில் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

முன்னதாக நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, மூர்த்தி உள்பட தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் முக்கிய நிர்வாகிகள் வாழ்த்தினர். நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் சுப்புலட்சுமி எஸ்ஸார் கோபி, காளிராஜன், சாந்தி தேவி, முருகையா பாண்டியன், வெள்ளையம்மாள்,

வில்லாபுரம் பகுதி கழகச் செயலாளர் கவுன்சிலர் போஸ்முத்தையா, அவனியாபுரம் மேற்கு பகுதி கழக செயலாளர் ஈஸ்வரன், பகுதி துணை செயலாளர் பிரபாகர், 84-வது வட்ட செயலாளர்கள் பாலா என்ற பாலசுப்பிரமணியன், கவுன்சிலர் குட்டி என்ற ராஜரத்தினம், சுபாஷ்சந்திர போஸ், சூரியவர்மன், கௌதம்போஸ், விஷ்ணுவர்தன் ஆகியோர் வரவேற்றனர்.

திருமண விழாவில், பகவதி, ரமேஷ், 84-வது வட்ட துணைச் செயலாளர் விஜயன், அவனியாபுரம் தி.மு.க. மேற்கு பகுதி செயலாளர் ஈஸ்வரன், 84-வது வார்டு தி.மு.க. கவுன்சிலரும், வில்லாபுரம் பகுதி செயலாளருமாமன போஸ் முத்தையா, பத்ரி பாண்டியன், பத்ரி சரவணன், விக்கி சதீஷ் பிரண்ட்ஸ் கிளப், முனிச்சாலை ஆண்டவர் பைனான்ஸ் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்துெகாண்டு மணமக்களை வாழ்த்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com