மதுரையில் வெவ்வேறு விபத்துகளில் 2 வாலிபர்கள் பலி

மதுரையில் வெவ்வேறு விபத்துகளில் 2 வாலிபர்கள் பலியானார்கள். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையில் வெவ்வேறு விபத்துகளில் 2 வாலிபர்கள் பலி
Published on

மதுரை

அவனியாபுரம் திருப்பரங்குன்றம் ரோட்டை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் நாகராஜ் (வயது 23). இவர் நண்பர்களுடன் ஒரு வேனில் சென்றார்.

மேலூர் மெயின்ரோடு வளர்நகர் சந்திப்பு பகுதியில் சென்ற போது வேன் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதில் வேனுக்குள் இருந்த ஒருவருடன் ஒருவர் மோதிக்கொண்டனர். இதில் 2 பேரின் தலைகள் பலமாக மோதி கொண்ட தால் நாகராஜ் மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் வேனில் உடன் சென்ற டிரைவர்கள் யாகப்பா நகர் இந்திரா காலனியைச் சேர்ந்த பழனி மகன் சந்துரு (23), அருண கிரி கோவில் தெருவை சேர்ந்த திருப்பதி மகன் மணிகண்டன் (22) ஆகியோர் மீது போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிந்தாமணி மெயின் ரோடு மேல அனுப்பானடி சந்திப்பில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்த தகவல் அறிந்த மதுரை கிழக்கு வி.ஏ.ஓ. சிவராமன் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வாலி பரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்றும் அவர் மீது மோதிய வாகனம் எது? வாகனத்தை ஓட்டி சென்ற டிரைவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com