என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 வாலிபர்கள் பலி"

    • மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதி படுகாயம் அடைந்தார்.
    • மாதேஷ் உயிரிழந்தார். முரளிகிருஷ்ணன் சிகிச்சை பெற்று வருகிறார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகேயுள்ள எர்ரண்டப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 32).இவர் தனது மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி-வேப்பனப்பள்ளி சென்றார்.அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதி படுகாயம் அடைந்தார்.கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை யில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதேபோல பாகனப்பள்ளி பகுதியை சேர்ந்த மாதேஷ் (22) என்பவர் தனது நண்பர் முரளிகிருஷ்ணன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி-வேப்பனப்பள்ளி சாலையில் சென்றார்.அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியது காயமடைந்த மாதேஷ் உயிரிழந்தார். முரளிகிருஷ்ணன் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த 2 விபத்துகள் குறித்தும் வேப்பனப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பரமத்தி முகாம் அருகே உள்ள பாலம் அருகே அதிவேகமாக வந்த போது, மோட்டார் சைக்கிள்கள் இரண்டும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.
    • பரமத்தி அகதிகள் முகாமைச் சேர்ந்த ஸ்டீபன் மற்றும் வில்லிபாளையத்தை சேர்ந்த முருகன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் ஸ்டீபன் (வயது 24), கீதன் (24). இருவரும் நேற்று இரவு பரமத்தி சென்று விட்டு மீண்டும் முகாமிற்கு திரும்புவதற்காக, பரமத்தி - திருச்செங்கோடு சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

    இதேபோல் பரமத்தி அருகே வில்லிபாளையத்தை சேர்ந்த முருகன் மற்றும் வடிவேல் ஆகியோர், மோட்டார் சைக்கிளில் வில்லிபாளைத்தில் இருந்து பரமத்தி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    பரமத்தி முகாம் அருகே உள்ள பாலம் அருகே அதிவேகமாக வந்த போது, மோட்டார் சைக்கிள்கள் இரண்டும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதில் பரமத்தி அகதிகள் முகாமைச் சேர்ந்த ஸ்டீபன் மற்றும் வில்லிபாளையத்தை சேர்ந்த முருகன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

    காயமடைந்த கீதன், வடிவேல் ஆகியோர் நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரையில் வெவ்வேறு விபத்துகளில் 2 வாலிபர்கள் பலியானார்கள்.
    • இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    அவனியாபுரம் திருப்பரங்குன்றம் ரோட்டை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் நாகராஜ் (வயது 23). இவர் நண்பர்களுடன் ஒரு வேனில் சென்றார்.

    மேலூர் மெயின்ரோடு வளர்நகர் சந்திப்பு பகுதியில் சென்ற போது வேன் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதில் வேனுக்குள் இருந்த ஒருவருடன் ஒருவர் மோதிக்கொண்டனர். இதில் 2 பேரின் தலைகள் பலமாக மோதி கொண்ட தால் நாகராஜ் மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் வேனில் உடன் சென்ற டிரைவர்கள் யாகப்பா நகர் இந்திரா காலனியைச் சேர்ந்த பழனி மகன் சந்துரு (23), அருண கிரி கோவில் தெருவை சேர்ந்த திருப்பதி மகன் மணிகண்டன் (22) ஆகியோர் மீது போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிந்தாமணி மெயின் ரோடு மேல அனுப்பானடி சந்திப்பில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்த தகவல் அறிந்த மதுரை கிழக்கு வி.ஏ.ஓ. சிவராமன் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வாலி பரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்றும் அவர் மீது மோதிய வாகனம் எது? வாகனத்தை ஓட்டி சென்ற டிரைவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சாலையோரம் நின்ற லாரி மீது வேன் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பலியானார்கள்
    • போலீசாரும் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்கள் உதவியுடன் இறந்தவர்களின் உடலை மீட்டனர்


    திருச்சி:

    தூத்துக்குடியில் இருந்து நிலக்கரி பாரம் ஏற்றிக்கொண்டு தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம் நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகே சொரியம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது லாரியை டிரைவர் சாலையோரமாக நிறுத்திவிட்டு இயற்கை உபாதையை கழிக்க சென்றுவிட்டார்.

    அப்போது திருநெல்வேலியில் இருந்து சென்னை நோக்கி கவர் கருப்பு நிற கற்களை ஏற்றி சென்ற ஈச்சர் வேன் நின்று கொண்டிருந்த லாரியின் பின்பகுதியில் பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் நெல்லையில் இருந்து வந்த வேனில் இருந்த ஒடிசா மாநிலம் பௌத் பகுதியைச் சேர்ந்த அனங்க பிரதான் (வயது 29), ஜெய் குப்தா (34) ஆகியோர் சம்பவ இடத்திலேயே இடிபாடுகளுக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    மேலும் சனங்க போய் (29) என்பவர் படுகாயமடைந்தார். காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சம்பவம் பற்றி தகவல் அறிந்த வளநாடு போலீசாரும் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்கள் உதவியுடன் இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


    • ஆண்டிபட்டி அருகே மின்சாரம் தாக்கி 2 வாலிபர்கள் பலியானார்கள்
    • இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    வருசநாடு:

    ஆண்டிபட்டி தாலுகா மயிலாடும்பாறை அருகில் உள்ள குமணன்தொழு பகுதியை சேர்ந்த தம்பித்துரை மகன் சுதாகரன் (வயது35). திருமணமாகவில்லை. ஆடு, மாடுகள் மேய்த்து வந்தார். நேற்று மாலை அதே பகுதியில் உள்ள கொடித்துரை என்பவரது தோட்டத்தில் ஆடுகளுக்கு இலை தளைகள் வெட்டிக்கொண்டிருந்தார்.

    அப்போது உயரே சென்ற மின் அழுத்த கம்பி அவர் மீது உரசியதில் தூக்கி வீசுப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து மயிலாடும்பாறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    திருச்சி மாவட்டம் சமுத்திரம் குழுமணி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (43). இவர் கடந்த 10 வருடங்களாக க.விலக்கு அரசு ஆஸ்பத்திரி எதிரில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார்.

    நேற்று இரவு இயற்கை உபாதையை கழிப்பதற்காக சென்றார். நீண்ட நேரமாக திரும்பி வராததால் ஊழியர்கள் தேடி பார்த்தபோது டிரான்ஸ்பார்மர் அருகே இறந்து கிடந்தார். இவருக்கு மது குடிக்கம் பழக்கம் இருந்துள்ளது. மின்சாரம் தாக்கி உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று க.விலக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×