என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லாரி மீது வேன் மோதி 2 வாலிபர்கள் பலி
    X

    லாரி மீது வேன் மோதி 2 வாலிபர்கள் பலி

    • திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சாலையோரம் நின்ற லாரி மீது வேன் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பலியானார்கள்
    • போலீசாரும் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்கள் உதவியுடன் இறந்தவர்களின் உடலை மீட்டனர்


    திருச்சி:

    தூத்துக்குடியில் இருந்து நிலக்கரி பாரம் ஏற்றிக்கொண்டு தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம் நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகே சொரியம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது லாரியை டிரைவர் சாலையோரமாக நிறுத்திவிட்டு இயற்கை உபாதையை கழிக்க சென்றுவிட்டார்.

    அப்போது திருநெல்வேலியில் இருந்து சென்னை நோக்கி கவர் கருப்பு நிற கற்களை ஏற்றி சென்ற ஈச்சர் வேன் நின்று கொண்டிருந்த லாரியின் பின்பகுதியில் பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் நெல்லையில் இருந்து வந்த வேனில் இருந்த ஒடிசா மாநிலம் பௌத் பகுதியைச் சேர்ந்த அனங்க பிரதான் (வயது 29), ஜெய் குப்தா (34) ஆகியோர் சம்பவ இடத்திலேயே இடிபாடுகளுக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    மேலும் சனங்க போய் (29) என்பவர் படுகாயமடைந்தார். காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சம்பவம் பற்றி தகவல் அறிந்த வளநாடு போலீசாரும் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்கள் உதவியுடன் இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


    Next Story
    ×