என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேப்பனப்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள் விபத்துகளில் 2 வாலிபர்கள் பலி
- மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதி படுகாயம் அடைந்தார்.
- மாதேஷ் உயிரிழந்தார். முரளிகிருஷ்ணன் சிகிச்சை பெற்று வருகிறார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகேயுள்ள எர்ரண்டப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 32).இவர் தனது மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி-வேப்பனப்பள்ளி சென்றார்.அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதி படுகாயம் அடைந்தார்.கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை யில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதேபோல பாகனப்பள்ளி பகுதியை சேர்ந்த மாதேஷ் (22) என்பவர் தனது நண்பர் முரளிகிருஷ்ணன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி-வேப்பனப்பள்ளி சாலையில் சென்றார்.அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியது காயமடைந்த மாதேஷ் உயிரிழந்தார். முரளிகிருஷ்ணன் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த 2 விபத்துகள் குறித்தும் வேப்பனப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






