என் மலர்
உள்ளூர் செய்திகள்

பரமத்திவேலூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; 2 வாலிபர்கள் பலி
- பரமத்தி முகாம் அருகே உள்ள பாலம் அருகே அதிவேகமாக வந்த போது, மோட்டார் சைக்கிள்கள் இரண்டும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.
- பரமத்தி அகதிகள் முகாமைச் சேர்ந்த ஸ்டீபன் மற்றும் வில்லிபாளையத்தை சேர்ந்த முருகன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் ஸ்டீபன் (வயது 24), கீதன் (24). இருவரும் நேற்று இரவு பரமத்தி சென்று விட்டு மீண்டும் முகாமிற்கு திரும்புவதற்காக, பரமத்தி - திருச்செங்கோடு சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
இதேபோல் பரமத்தி அருகே வில்லிபாளையத்தை சேர்ந்த முருகன் மற்றும் வடிவேல் ஆகியோர், மோட்டார் சைக்கிளில் வில்லிபாளைத்தில் இருந்து பரமத்தி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
பரமத்தி முகாம் அருகே உள்ள பாலம் அருகே அதிவேகமாக வந்த போது, மோட்டார் சைக்கிள்கள் இரண்டும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதில் பரமத்தி அகதிகள் முகாமைச் சேர்ந்த ஸ்டீபன் மற்றும் வில்லிபாளையத்தை சேர்ந்த முருகன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
காயமடைந்த கீதன், வடிவேல் ஆகியோர் நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






