என் மலர்
மதுரை
- மதுரை முடக்குசாலை பகுதியில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
- முடக்குச்சாலை- எச்.எம்.எஸ். காலனி இடையே மேம் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது .
மதுரை
மதுரை முடக்குச் சாலை பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் முடக்குச்சாலை- எச்.எம்.எஸ். காலனி இடையே 1,190 மீட்டர் தூரத்திற்கு மேம் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது .
இதில் தற்போது முடக்குச் சாலை சந்திப்பில் கான்கிரீட் பில்லர்களில் உத்திரம் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதற்காக முடக்குச் சாலை சந்திப்பில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வருகிறது. இதுகுறித்து மதுரை போக்கு வரத்து ேபாலீஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
முடக்குச்சாலை, தேனி மெயின் ரோடு வழியாக வெளியூர் செல்லும் பஸ்கள், கனரக, இலகுரக வாக னங்கள், இருசக்கரம், ஆட்டோ, 4 சக்கர வாகனங்களுக்கு நாளை (25-ந்தேதி) முதல் போக்கு வரத்து மாற்றம் செய்யப்படு கிறது.
அதன்படி மதுரை நகரில் இருந்து ேமற்கு நோக்கி செல்லும் அரசு, தனியார் பஸ்கள், கனரக வாகனங்கள் அனைத்தும் முடக்குச்சாலை சந்திப்பில் உள்ள ஓட்டல் முன்பு பில்லர்-3, 4-க்கு இடையில் வலதுபுறமாக திரும்பி மேலக்கால் சாலையில் சென்று இடதுபுறம் திரும்பி துவரிமான் சாலை வழியாக செல்ல வேண்டும்.
மதுரை நகரில் இருந்து வெளியூர் செல்லும் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கார், மினி வேன் போன்ற இலகுரக வாகனங்கள் மற்றும் சில குறிப்பிட்ட அரசு நகர் பஸ்கள் (பஸ் ரூட் நம்பர்.21) மட்டும் காளவாசல் சந்திப்பு, சம்மட்டிபுரம், எச்.எம்.எஸ் காலனி பிரதான வீதி
எச்.எம்.எஸ் காலனி சந்திப்பு, விராட்டி பத்து, அச்சம்பத்து வழியாக செல்ல வேண்டும்.
நாகமலை புதுக்கோட்டை நான்கு வழிச்சாலையில் இருந்து அச்சம்பத்து வழி யாக நகருக்குள் வரும் இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கார், மினி வேன் போன்ற இலகுரக வாகனங்கள் வழக்கம்போல் அச்சம்பத்து, விராட்டிபத்து, டோக் நகர், முடக்குச்சாலை வழியாக நகருக்குள் வர லாம்.
நாகமலை புதுக்கோட்டை நான்கு வழிச்சாலையில் இருந்து அச்சம்பத்து வழி யாக பஸ்கள், கனரக வாகனங்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வாகனங்கள் நான்கு வழிச்சாலையில் இடதுபுறம் திரும்பி, பின்னர் துவரிமான், கோச்சடை, முடக்குச்சாலை வழியாக நகருக்குள் வர வேண்டும்.
எனவே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தி.மு.க. அரசு 100 சதவீதம் தோல்வி அடைந்து உள்ளதாக ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டி உள்ளார்.
- “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” என்ற திட்டத்திற்கு செயல் வடிவம் காண நடவடிக்கை எடுப்பீர்களா?
மதுரை
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று கூறியிருப்பதாவது-
தி.மு.க. பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில், அதனைத் தொடர்ந்து "உங்கள் தொகுதியில் முதலமைச்சர்" என்ற அந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு தொகுதியில் தீர்க்கப்படாத 10 முக்கியமான கோரிக்கை களை 15 நாட்களுக்குள் பட்டியலாக தயாரித்து அனுப்ப வேண்டும் என்று ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என அனைத்து சட்டமன்ற உறப்பினர்களுக்கும் முதல மைச்சர் கடிதம் அனுப்பி னார்.
இதனை தொடர்ந்து எனது திருமங்கலம் தொகுதி யில் நிறைவேற்றும் பணிக ளான மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து எய்ம்ஸ் மருத்துவ பணியை விரைந்து முடிக்க வேண்டும், கல்லுப்பட்டி பகுதியில் மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்ய டோராபாறை அணை கட்ட வேண்டும், திருமங்கலம் நகர் பகுதியில் ெரயில்வே மேம்பாலம் விரைந்து அமைக்க வேண்டும், திருமங்கலம் நகர் பகுதியில் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும்.
பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கையான கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும், உச்சப்பட்டி தோப்பூர் துணைக்கோள் நகர பணியை விரைந்து முடிக்க வேண்டும், திருமங்கலம் ஒன்றிய அலுவலகம் கட்டப்பட வேண்டும், கள்ளிக்குடி ஒன்றிய பகுதி யில் உள்ள விவசாய மற்றும் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய புதிய அணை கட்ட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2022-ம் ஆண்டு மாவட்ட கலெக்ட ருக்கு கடிதம் கொடுத்தேன்.
இதை கொடுத்த பிறகு இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை, இதிலே ஆயிரம் கோடி ஒதுக்கீடு நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக முதலமைச்சர் அறி வித்தார்கள். அப்படி பார்த்தால் நமக்கு என்ன தெரிகிறது. இந்த அரசு வெறும் அறிவிப்பு வெளியி டுகிற அரசாக தன்னை அடையாளப்படுத்தி கொண்டிருக்கிறது.அதற்காக செயல் வடிவம் கொடுப்பதிலே இந்த அரசு தோல்வியடைந்துள்ளது.
பல்வேறு துறைகளுக்கு 37 குழுக்கள் அமைக்கப் பட்டது. அந்த குழுக்கள் கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது. அந்த 37 குழுக்க ளுடைய அறிவுரைகள் என்ன, செயல்பாடு என்ன?.எந்த தீர்வு கொடுத்திருக்கி றார்கள், என்பதை அரசு ஆலோசித்தது உண்டா?
மேலும் 520 தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றி விட்டோம் என்று முதல மைச்சர் கூறி வருகிறார். இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி இதன் அர சாணை விவரம் என்ன என்பதை கேட்டு கேள்வி எழுப்பி உள்ளார்.இது குறித்து எந்த விவரமு ம் வெளியிப்படவில்லை. தேர்தல் வாக்குறுதியில் நிறைவேற்றுவதில் 100 சதவீதம் தி.மு.க. அரசு தோல்வி அடைந்திருக்கிறது.
எடுத்த காரியங்கள் எல்லாம் அறிவிப்போடு நின்று விடுகிறது அதுதான் தி.மு.க. அரசின் அடையா ளம். ஆகவே ரூ.1000 கோடி யில் அறிவிக்கப்பட்ட "உங்கள் தொகுதியில் முதல மைச்சர்" என்ற திட்டத்திற்கு செயல் வடிவம் காண நடவடிக்கை எடுப்பீர்களா?
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- மதுரையில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
- 100 வார்டுகளில் கடந்த சில மாதங்களாக சரியாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.
மதுரை
மதுரை மாநகராட்சிக் குட்பட்ட 100 வார்டுகளில் கடந்த சில மாதங்களாக சரியாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என புகார்கள் எழுந்து வருகிறது.
மதுரை நகரின் மைய பகுதியில் உள்ள 50-வது வார்டான சிம்மக்கல், காமாட்சிபுரம் அக்ரஹாரம் மற்றும் அதனை சுற்றி உள்ள தெருக்களில் கடந்த 10 நாட்களாக குடிநீர் விநி யோகம் செய்யப்படவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அவதி அடைந்தனர். வேறு பகுதிகளுக்கு சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் பணம்கொடுத்து குடம் தண்ணீரை பொது மக்கள் வாங்கி பயன்படுத்தி வந்தனர்.
குடிநீர் பிரச்சினை தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதை கண்டித்தும், உடனே குடிநீர் விநியோகத்தை சரி செய்ய வலியுறுத்தியும் இன்று மதுரை மாவட்ட நூலகம் எதிரே உள்ள சிம்மக்கல் சந்திப்பு சாலையில் காலி குடங்களுடன் பெண்கள் திரண்டனர்.
அவர்கள் திடீரென சாலையில் நின்று கொண்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.
தகவல் அறிந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் பிரச் சினை சரி செய்யப்படும் என உறுதி கூறியதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.
- சோழவந்தானில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
- வார்டு உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சோழவந்தான்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள முள்ளிப்பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளி, சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு ஆண்கள் பள்ளியில் படிக்கும் 413 மாணவ-மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்களை ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் வழங்கினார். இதில் முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்ற தலைவர் பழனிவேல், துணைத்தலைவர் கேபிள் ராஜா, பேரூராட்சி தலைவர் ஜெயராமன், தி.மு.க. நிர்வாகிகள் சத்தியபிரகாஷ், சந்தானலட்சுமி, லதா கண்ணன், ஸ்டாலின், கொத்தாலம் செந்தில், செல்வராணி, முள்ளிப்பள்ளம் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- வாடிப்பட்டியில் புரட்டாசி சனிக்கிழமை வீதி பஜனை நடந்தது.
- பாதயாத்திரை குழுவினரும் கலந்து கொண்டனர்.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே நீரேத்தானில் நவநீத பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி முதல் வார வீதி உலா பஜனை நடந்தது. கோவில் அர்ச்சகர் நவநீத கண்ணன் தலைமையில் கோவிலில் இருந்து புறப்பட்டு தாதம்பட்டி மந்தை, சடையாண்டி கோவில், விராலிப்பட்டி பிரிவு, மேட்டு பெருமாள் நகர், நாட்டாமைக்காரர் தெரு, நடுத்தெரு, இரட்டை விநாயகர் கோவில் தெரு, மெயின் ரோடு உள்ளிட்ட முக்கிய வீதிகளில் பஜனை பாடல்கள் பாடியபடி வீதி உலா சென்று கோவிலை அடைந்தனர். இந்த ஊர்வலத்தில் திருநெல்வேலியில் இருந்து ஸ்ரீரங்கம் செல்லும் பாதயாத்திரை குழுவினரும் கலந்து கொண்டனர்.
- சதுரகிரியில் பிரசித்தி பெற்ற சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது.
- இரவில் மலைக்கோவிலில் தங்க அனுமதி இல்லை.
திருமங்கலம்:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரியில் பிரசித்தி பெற்ற சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இக்கோவில் அமைந்துள்ளதால் ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சாமிதரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி வருகிற 29-ந் தேதி புரட்டாசி பவுர்ணமியை முன்னிட்டு வருகிற 27-ந் தேதி (புதன்கிழமை) முதல் 30-ந்தேதி வரை பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
10 வயது உட்பட்டவர்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலையேற அனுமதி கிடையாது. மலை ஏறுவதற்கு காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை. மலைப் பாதைகளில் உள்ள நீரோடையில் குளிக்க கூடாது.
இரவில் மலைக்கோவிலில் தங்க அனுமதி இல்லை உள்பட பல்வேறு கட்டுப் பாடுகளை வனத்துறை அறிவித்துள்ளது. அனுமதி வழங்கப்பட்ட நாட்களில் மழை பெய்யும் அறிகுறிகள் தென்பட்டால் மலையேற பக்தர்களுக்கு தடை வைக்கப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.
- தென்னோலைக்கார தெருவில் நிரம்பி வழியும் பாதாள சாக்கடையால் நோய் பரவும் அபாயம் நிலவுகிறது.
- கடும் துர்நாற்றம் வீசுகிறது.
மதுரை
மதுரை மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை நிரம்பி வழிகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. மதுரை நகரின் மையப் பகுதியான தெற்கு கிருஷ்ணன் கோவில் தெருவில் உள்ள தென் னோலைக்கார தெருவில் கடந்த சில மாதங்களாக அடிக்கடி பாதாள சாக்கடை நிரம்பி வெளி யேறுவது வாடிக்கை யாக உள்ளது.
இதனால் தெருவில் வசிக்கும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து உள்ளனர். சாக்கடை நீர் நிரம்பி வீட்டின் வாசலில் தேங்கி கிடக்கிறது. இதன் காரணமாக அந்த தெருவில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. தற்போதும் தென்னோலைக் கார தெருவில் இதே சூழ்நிலை நிலவுகிறது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. அங்குள்ள பாதாள சாக்கடையை முழுமையாக சுத்தம் செய்யாமல் நிரம்பும்போது மட்டும் மேற்புறமாக சுத்தம் செய்துவிட்டு செல்வதால் இந்த பிரச்சனை தொடர்ந்து நீடிப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும் அந்த தெருவில் குப்பைகளும் கழிவுகளும் அதிக அளவில் தேங்கி கிடக்கின்றன. கழிவு நீர் தேக்கம், சுகாதார சீர்கேடு காரணமாக கொசு அதிகமாகி டெங்கு பரவலுக்கு வழிவகுப்பதாக அமைந்துள்ளது.
இது குறித்த அப்பகுதி மக்கள் கூறுகையில், தென்னோலை கார தெருவில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு அடிக்கடி பாதாள சாக்கடை நிரம்பி வருகிறது. இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தோம். ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் கண்டும், காணாமல் இருப்பதாக வேதனையுடன் தெரிவித்தனர்.
- மதுரை ெரயில் நிலையத்தில் தூய்மை விழிப்புணர்வு வார விழா நடந்தது.
- மருத்துவ கண்காணிப்பாளர் பாஸ்கர் தொடங்கி வைத்தார்.
மதுரை
மதுரை கோட்டத்தில் உள்ள ெரயில் நிலையங்களில் தூய்மை விழிப்புணர்வு இரு வார விழா நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மதுரை ெரயில் நிலையத்தில் தூய்மை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை ெரயில்வே மருத்துவமனை கூடுதல் முதன்மை மருத்துவ கண்காணிப்பாளர் பாஸ்கர் தொடங்கி வைத்தார்.
பேரணியில் மதுரை கல்லூரி, சரஸ்வதி நாராயணன் கல்லூரி, தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியைச் சேர்ந்த 120 தேசிய மாணவர் படைப்பிரிவு வீரர்கள் கலந்து கொண்டு தூய்மை விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். மதுரை கோட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு மேலாளர் மகேஷ் கட்கரி, உதவி சுகாதார அதிகாரி சுரேஷ், தேசிய மாணவர் படைப்பிரிவு அலுவலர்கள் மதுரை கல்லூரி கார்த்திகேயன், சரஸ்வதி நாராயணன் கல்லூரி கார்த்திகேயன், தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரி ஞானப்பிரகாசம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- மதுரை சிறைத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
- வாழ்வாதாரத்திற்காக நல உதவி செய்யப்பட்டது.
மதுரை
மதுரை மத்திய சிறையில் பிரிசன் மினிஸ்ட்ரி ஆப் இந்தியா தமிழக சிறைப்பணி என்.ஜி.ஓ. நிறுவனத்தின் மூலமாக சமீபத்தில் மதுரை மத்திய சிறையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை சிறைவாசியாக இருந்து விடுதலையான 2 நபர்களுக்கு அவர்கள் சிறையில் செய்து வந்த பணியின் அடிப்படையில் அவர்கள் வாழ்வாதாரத்திற்காக நல உதவி செய்யப்பட்டது.
அதன்படி அவர்கள் தொழில் செய்யும் வகையில் சலவை பெட்டி மற்றும் தள்ளுவண்டி, இனிப்பகம் நடத்துவதற்கு தேவையான அடுப்பு மற்றும் பாத்திரங்கள் அடங்கிய ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை மதுரை சரக சிறை துறை துணை தலைவர் பழனி, மத்திய சிறை கண்காணிப்பாளர் பொறுப்பு பரசுராமன் ஆகியோர் முன்னிலையில் அகில இந்திய சிறைப் பணிகள் நிறுவனத்தின் தமிழக மாநிலச் செயலாளர் ஜேசு ராஜ் மற்றும் மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெனிடிக்ஸ் ஆகியோர் வழங்கினர்.
- புரட்டாசி முதல் சனிக்கிழமையில் மதுரையில் பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
- முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டிருந்தன.
மதுரை
ஒவ்வொரு வருடமும் வரும் புரட்டாசி மாதம் பெருமாளை வழிபடுவதற்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இதனால் அந்த மாதத்தில் பலர் அசைவத்தை தவிர்த்து விரதம் இருப்பார்கள். குறிப்பாக புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை விஷேச நாளாக கருதப்படுகிறது. அன்றைய நாளில் வைணவ தலங்களில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் ஆராதனை நடைபெறும். இதன் காரணமாக புரட்டாசி சனிக்கிழமை களில் வைணவ தலங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையான இன்று மதுரை நகரின் மையப்பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றான கூடலழகர் பெருமாள் கோவில் நடை இன்று அதிகாலை திறக்கப்பட்டது. மூலவர் கூடலழகர் பெரு மாள், ஸ்ரீதேவி-பூதேவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. காலை 5 மணி முதல் மதுரை நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்பட ஏராள மானோர் குடும்பத்துடன் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகையையொட்டி கோவிலில் பாதுகாப்பு உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டிரு ந்தன.
இதேபோல் மதுரை நகரில் உள்ள மதனகோபால சுவாமி கோவில், தெற்கு கிருஷ்ணன் பிரசன்ன வேங்கடேஸ்வர பெருமாள் கோவில், தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவில் மற்றும் ஒத்தக்கடை நரசிங்க பெருமாள் கோவில், காளமேகப் பெருமாள் கோவில், கைத்தறி நகர் பாலாஜி வெங்கடேஸ்வரர் பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.
- அன்னை தெரசா மகளிர் பல்கலையில் கதர் ஆடை புரட்சி தினம் கடைபிடிக்கப்பட்டது.
- குறும்படம் திரையிடப்பட்டது.
மதுரை
அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் மதுரை கீழக்குயில்குடி மையத்தில் காந்திஜியின் எளிய கதர் ஆடை அணிதல் புரட்சி தினம் எளிய வாழ்க்கை முறை-உரிய வாழ்க்கை என்ற கருப்பொருளின் அடிப்படையில் அனுசரிக்கப்பட்டது.
ஆங்கிலத் துறை உதவி பேராசிரியை ராஜலட்சுமி வரவேற்றார். மதுரை மைய இயக்குநர் புஷ்பராணி தலைமையேற்று "எளிய வாழ்க்கை முறை-உன்னதமான வாழ்க்கை முறை" என்ற தலைப்பில் பேசினார்.
தொடர்ந்து மாணவிகள் சொற்பொழிவு, பாட்டு, நடனம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. "எளிமை, உண்மை, நல்லிணக்கம் மற்றும் மாற்றத்திற்கான காந்திஜியின் பாதை" என்ற கருப்பொருளில் மாணவிகளுக்கு குறும்படத்தை திரையிடப்பட்டது. முடிவில் உதவி பேராசிரியை கீதாஞ்சலி நன்றி கூறினார்.
- கருமாத்தூரில் மாணவர்களுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டது.
- ஆசிரியர் சகாயராஜ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
மதுரை
மதுரை மாவட்டம் கருமாத்தூர் புனித கிளாரட் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன் தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சி துணை தலைவர் முத்துராமன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் சூசை மாணிக்கம் வரவேற்றார்.
விழாவில் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை அய்யப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் முத்துராமன் வழங்கினர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் ஜான் கென்னடி நன்றி கூறினார். ஆசிரியர் சகாயராஜ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.






