search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Revolution Day"

    • அன்னை தெரசா மகளிர் பல்கலையில் கதர் ஆடை புரட்சி தினம் கடைபிடிக்கப்பட்டது.
    • குறும்படம் திரையிடப்பட்டது.

    மதுரை

    அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் மதுரை கீழக்குயில்குடி மையத்தில் காந்திஜியின் எளிய கதர் ஆடை அணிதல் புரட்சி தினம் எளிய வாழ்க்கை முறை-உரிய வாழ்க்கை என்ற கருப்பொருளின் அடிப்படையில் அனுசரிக்கப்பட்டது.

    ஆங்கிலத் துறை உதவி பேராசிரியை ராஜலட்சுமி வரவேற்றார். மதுரை மைய இயக்குநர் புஷ்பராணி தலைமையேற்று "எளிய வாழ்க்கை முறை-உன்னதமான வாழ்க்கை முறை" என்ற தலைப்பில் பேசினார்.

    தொடர்ந்து மாணவிகள் சொற்பொழிவு, பாட்டு, நடனம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. "எளிமை, உண்மை, நல்லிணக்கம் மற்றும் மாற்றத்திற்கான காந்திஜியின் பாதை" என்ற கருப்பொருளில் மாணவிகளுக்கு குறும்படத்தை திரையிடப்பட்டது. முடிவில் உதவி பேராசிரியை கீதாஞ்சலி நன்றி கூறினார். 

    • புரட்சி தினத்தை முன்னிட்டு ரெட்டியார்பட்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.
    • கட்சி கொடியை மூத்த தலைவர் ஜெயராணி ஏற்றி வைத்தார்.

    நெல்லை:

    புரட்சி தினத்தை முன்னிட்டு ரெட்டியார் பட்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு சி.பி.எம். மாவட்ட குழு உறுப்பினர் பழனி தலைமை தாங்கினார். கட்சி கொடியை மூத்த தலைவர் ஜெயராணி ஏற்றி வைத்தார். விழாவில் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் கருமலையான், மாவட்ட செயலாளர் ஸ்ரீராம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சுடலைராஜ், பெருமாள்,துரை, மாவட்ட குழு உறுப்பினர் ஸ்ரீராம் சிவா, மேலப்பாளையம் பகுதி குழு செயலாளர் குழந்தைவேலு, இந்திய வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் அருள், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் 100 இடங்களில் கட்சியின் கொடியேற்றபட்டது.

    ×